Author: Farook

Bukhari-1269

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22 தைக்கப்பட்ட அல்லது தைக்கப்படாத மேல் சட்டையால் பிரேத உடை (கஃபன்) அணிவித்தலும் மேல்சட்டையின்றிக் பிரேத உடை அணிவிக்கப்பட்டவரின் நிலையும். 

1269. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

(நயவஞ்சகர்களின்தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்துவிட்டான். அப்போது அவனுடைய (முஸ்லிமான) மகன், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! உங்கள் சட்டையைத் தாருங்கள். அவரை அதில் கஃபன் செய்யவேண்டும்; மேலும் நீங்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுது. அவருக்காகப் பாவமன்னிப்பும் கேட்கவேண்டும்’ என்று கூறினார்.

உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் சட்டையை அவருக்குக் கொடுத்துவிட்டு, ‘(ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள்; நான் ஜனாஸாத் தொழுகை நடத்துவேன்’ என்றார்கள். பிறகு அறிவிக்கப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள் அவனுக்கு ஜனாஸாத் தொழ நாடியபோது,

உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களை இழுத்து, ‘நயவஞ்சகர்களுக்கு ஜனாஸாத் தொழக்கூடாது என அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லையா?’ எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘(ஜனாஸாத் தொழுவது, தொழாமலிருப்பது என) இரண்டில் எதையும் தேர்ந்ததெடுத்துக் கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது’ எனக் கூறிவிட்டு, ‘நீர் நயவஞ்சகர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லது தேடாமலிருந்தாலும் சமமே! நீர் அவர்களுக்காக

أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ أُبَيٍّ لَمَّا تُوُفِّيَ، جَاءَ ابْنُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَعْطِنِي قَمِيصَكَ أُكَفِّنْهُ فِيهِ، وَصَلِّ عَلَيْهِ، وَاسْتَغْفِرْ لَهُ، فَأَعْطَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَمِيصَهُ، فَقَالَ: «آذِنِّي أُصَلِّي عَلَيْهِ»، فَآذَنَهُ، فَلَمَّا أَرَادَ أَنْ يُصَلِّيَ عَلَيْهِ جَذَبَهُ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: أَلَيْسَ اللَّهُ نَهَاكَ أَنْ تُصَلِّيَ عَلَى المُنَافِقِينَ؟

فَقَالَ:  أَنَا بَيْنَ خِيَرَتَيْنِ، قَالَ: {اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لاَ تَسْتَغْفِرْ لَهُمْ إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً، فَلَنْ يَغْفِرَ اللَّهُ لَهُمْ} [التوبة: 80]  فَصَلَّى عَلَيْهِ، فَنَزَلَتْ: {وَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا، وَلاَ تَقُمْ عَلَى قَبْرِهِ} [التوبة: 84]


Bukhari-1268

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1268. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

(இஹ்ராம் அணிந்திருந்த ஒருவர் அரஃபாவில் நபி(ஸல்) அவர்களுடன் தங்கியிருந்தபோது தன்னுடைய வாகனத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார்.

அது அவரின் கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. என அய்யூப் என்பவர் கூறுகிறார்.

வாகனம் அவரைக் கீழே வீழ்த்தியதால் அவரின் எலும்புகள் முறிந்துவிட்டன என அம்ர் கூறுகிறார்.

எனவே, அவர் இறந்துவிட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அவரின் உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரண்டு ஆடைகளில் கஃபனிடுங்கள்; அவருக்கு நறுமணம் பூச வேண்டாம்; அவரின் தலையை மறைக்கவும் வேண்டாம்; ஏனெனில் அவர் மறுமை நாளில் தல்பியாக் கூறிக்கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்’ எனக் கூறினார்கள்.
Book :23


كَانَ رَجُلٌ وَاقِفٌ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَفَةَ، فَوَقَعَ عَنْ رَاحِلَتِهِ –

قَالَ أَيُّوبُ: فَوَقَصَتْهُ، وَقَالَ عَمْرٌو: فَأَقْصَعَتْهُ – فَمَاتَ

فَقَالَ: ” اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ، وَلاَ تُحَنِّطُوهُ، وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ القِيَامَةِ،

قَالَ أَيُّوبُ: يُلَبِّي، وَقَالَ عَمْرٌو: مُلَبِّيًا


Bukhari-1267

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 21 இஹ்ராம் கட்டியவர் இறந்தால் அவரது உடல் கஃபனிடப்படுவது எப்படி? 

1267. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

(இஹ்ராம் அணிந்திருந்த ஒருவர் நபி(ஸல்) அவர்களுடன் (அரஃபாவில்) இருந்தபோது அவரின் ஒட்டகம் கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. (எனவே, அவர் இறந்துவிட்டார்). அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அவரின் உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரண்டு ஆடைகளால் கஃபனிடுங்கள்; நறுமணம் பூச வேண்டாம். அவரின் தலையை மூடவும் வேண்டாம்; ஏனெனில் அவரை அல்லாஹ் மறுமை நாளில் தல்பியா சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்புவான்’ எனக் கூறினார்கள்.
Book : 23


أَنَّ رَجُلًا وَقَصَهُ بَعِيرُهُ وَنَحْنُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ مُحْرِمٌ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ، وَلاَ تُمِسُّوهُ طِيبًا، وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، فَإِنَّ اللَّهَ يَبْعَثُهُ يَوْمَ القِيَامَةِ مُلَبِّيًا»


Bukhari-1266

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 20 சடலத்திற்கு நறுமணமிடல் 

1266. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

(இஹ்ராம் அணிந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில் அல்லாஹ்வின் தூதருடன் தம் வாகனத்தின் மீதிருந்தார். திடீரென அவர், தன்னுடைய வாகனத்திலிருந்து கீழே விழுந்துவிட்டார்; அது அவரின் கழுத்தை முறித்துவிட்டார். (அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அவரின் உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரண்டு ஆடைகளால் கஃபனிடுங்கள்; அவரின் உடலுக்கு நறுமணம் பூச வேண்டாம்; அவரின் தலையை மறைக்கவும் வேண்டாம்: ஏனெனில் (இஹ்ராம் அணிந்திருந்த) அவர் கியாமத் நாளில் தல்பியா (லப்பைக் அல்லஹும்ம லப்பைக்…) சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்’ எனக் கூறினார்கள்.
Book : 23


بَيْنَمَا رَجُلٌ وَاقِفٌ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَرَفَةَ، إِذْ وَقَعَ مِنْ رَاحِلَتِهِ، فَأَقْصَعَتْهُ – أَوْ قَالَ: فَأَقْعَصَتْهُ – فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ، وَلاَ تُحَنِّطُوهُ، وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، فَإِنَّ اللَّهَ يَبْعَثُهُ يَوْمَ القِيَامَةِ مُلَبِّيًا»


Bukhari-1265

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 19 இரு ஆடைகளில் கஃபனிடுதல். 

1265. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

(இஹ்ராம் அணிந்த) ஒருவர் அரஃபா மைதானத்தில் தம் வாகனத்தின் மீதிருந்தார். திடீரென தன்னுடைய வாகனத்திலிருந்து அவர் கீழே விழுந்துவிட்டார். அது அவரின் கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அவரின் உடலை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டி இரண்டு ஆடைகளால் கஃபனிடுங்கள்; அவரின் உடலுக்கு நறுமணம் பூசவேண்டாம்; அவரின் தலையை மறைக்கவும் வேண்டாம்; ஏனெனில் (இஹ்ராம் அணிந்திருந்த) அவர் கியாமத் நாளில் தல்பியா சொல்லிக் கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்’ எனக் கூறினார்.
Book : 23


بَيْنَمَا رَجُلٌ وَاقِفٌ بِعَرَفَةَ ، إِذْ وَقَعَ عَنْ رَاحِلَتِهِ، فَوَقَصَتْهُ – أَوْ قَالَ: فَأَوْقَصَتْهُ – قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْنِ، وَلاَ تُحَنِّطُوهُ، وَلاَ تُخَمِّرُوا رَأْسَهُ، فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ القِيَامَةِ مُلَبِّيًا»


Bukhari-1264

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 18

கஃபனுக்கு வெண்மையான ஆடையைப் பயன்படுத்துதல். 

1264. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யமன் தேசத்தின் பருத்தியாலான வெண்ணிறமுள்ள மூன்று துணிகளால் கஃபன் இடப்பட்டார்கள். அம்மூன்றில் மேலங்கியோ தலைப்பாகையோ இருக்கவில்லை.

அத்தியாயம்: 23


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُفِّنَ فِي ثَلاَثَةِ أَثْوَابٍ يَمَانِيَةٍ بِيضٍ، سَحُولِيَّةٍ مِنْ كُرْسُفٍ لَيْسَ فِيهِنَّ قَمِيصٌ وَلاَ عِمَامَةٌ»


Bukhari-1263

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 17 பெண் சடலத்தின் முடி அதன் பின்புறம் தொங்கவிடப்படுதல். 

1263. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்)அவர்களின் மகள்களில் ஒருவர் மரணமாகிவிட்டதும் நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ‘மய்யித்தை இலந்தை இலை கலந்த நீரால் மூன்ற அல்லது ஐந்து அல்லது நீங்கள் தேவையெனக் கருதினால் அதற்கும் அதிகமாக ஒற்றைப் படையாகக் குளிப்பாட்டுங்கள். கடைசியில் சிறிது கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிப்பாட்டி முடிந்ததும் எனக்குத் தெரிவியுங்கள்’ எனக் கூறினார்கள்.

குளிப்பாடடி முடிந்து தெரிவித்ததும் தம் கீழாடையை (மய்யித்தில் சுற்றுவதற்கு)த் தந்தார்கள். மேலும், நாங்கள் மய்யித்தின் முடியை மூன்று சடைகளாகப் பின்னி அதை மய்யித்தின் முதுகுப்புறமாகப் போட்டு வைத்தோம்.
Book : 23


تُوُفِّيَتْ إِحْدَى بَنَاتِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَانَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «اغْسِلْنَهَا بِالسِّدْرِ وِتْرًا ثَلاَثًا، أَوْ خَمْسًا، أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ، إِنْ رَأَيْتُنَّ ذَلِكَ، وَاجْعَلْنَ فِي الآخِرَةِ كَافُورًا – أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ – فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي»، فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ، فَأَلْقَى إِلَيْنَا حِقْوَهُ، فَضَفَرْنَا شَعَرَهَا ثَلاَثَةَ قُرُونٍ، وَأَلْقَيْنَاهَا خَلْفَهَا


Bukhari-1262

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16 பெண் சடலத்தின் முடி மூன்று சடைகளாகப் பின்னலிடப்படுதல் 

1262. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் மகளின் முடியை மூன்று சடைகளாகப் பின்னினோம்.
சடைகள் என்பது முன் நெற்றிப் பகுதியில் ஒன்றும் பிடரிப்பகுதியில் இரண்டுமாகும்’ என சுஃப்யான் குறிப்பிட்டுள்ளார்.
Book : 23


«ضَفَرْنَا شَعَرَ بِنْتِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» تَعْنِي ثَلاَثَةَ قُرُونٍ، وَقَالَ وَكِيعٌ: قَالَ سُفْيَانُ: نَاصِيَتَهَا وَقَرْنَيْهَا


Bukhari-1261

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15 (பெண்)சடலத்தின் உடம்பில் துணியைச் சுற்றுவது எப்படி?

(கஃபனுடைய) ஐந்து துணிகளில் ஒன்றைக் கொண்டு மேலாடைக்கு உள்ளே தொடைகளையும் இடுப்பையும் சுற்றிக் கட்ட வேண்டும் என ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். 

1261. இப்னு ஸிரின் அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம்) உடன் படிக்கை செய்திருந்த அன்ஸாரிப் பெண்மணியான உம்மு அதிய்யா(ரலி) தம் மகனைத் தேடி பஸராவுக்குச் வந்தார். மகனைச் சந்திக்க முடியவில்லை. அப்போது அவர் எங்களிடம் சொன்னதாவது. ‘நபி(ஸல்) அவர்களின் மகளை நாங்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த நபி(ஸல்) அவர்கள், ‘மய்யித்தை மூன்று அல்லது ஐந்து அல்லது நீங்கள் தேவையெனக் கருதினால் அதற்கும் அதிகமான முறை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டுங்கள்; மேலும் கடைசியில் கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள்; குளிப்பாட்டி முடித்ததும் எனக்குத் தெரிவியுங்கள்’ எனக் கூறினார்கள். குளிப்பாட்டி முடித்ததும் தம் கீழாடையைத் தந்து. ‘இதை அவரின் உடலில் சுற்றுங்கள்’ என்றும் கூறினார்கள். எதையும் கூறவில்லை.
நபி(ஸல்) அவர்களின் புதல்விகளுள் இவர் யார் என்று எனக்குத் தெரியவில்லை’ என்று அய்யூப் கூறுகிறார்.

மய்யித்துக்கு இடுப்பில் துணியைக் கட்டத் தேவையில்லை; ஆயினும்

جَاءَتْ أُمُّ عَطِيَّةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، امْرَأَةٌ مِنَ الأَنْصَارِ مِنَ اللَّاتِي بَايَعْنَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَدِمَتِ البَصْرَةَ تُبَادِرُ ابْنًا لَهَا، فَلَمْ تُدْرِكْهُ، فَحَدَّثَتْنَا، قَالَتْ: دَخَلَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَنَحْنُ نَغْسِلُ ابْنَتَهُ، فَقَالَ: «اغْسِلْنَهَا ثَلاَثًا، أَوْ خَمْسًا، أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ، إِنْ رَأَيْتُنَّ ذَلِكَ بِمَاءٍ وَسِدْرٍ، وَاجْعَلْنَ فِي الآخِرَةِ كَافُورًا، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي» قَالَتْ: فَلَمَّا فَرَغْنَا أَلْقَى إِلَيْنَا حِقْوَهُ، فَقَالَ: «أَشْعِرْنَهَا إِيَّاهُ» وَلَمْ يَزِدْ عَلَى ذَلِكَ، وَلاَ أَدْرِي أَيُّ بَنَاتِهِ، وَزَعَمَ أَنَّ الإِشْعَارَ: الفُفْنَهَا فِيهِ، وَكَذَلِكَ كَانَ ابْنُ سِيرِينَ يَأْمُرُ بِالْمَرْأَةِ أَنْ تُشْعَرَ، وَلاَ تُؤْزَرَ


Bukhari-1260

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 14 பெண் சடலம் நீராட்டப்படும் போது பின்னல்களை அவிழ்த்துவிடல்.

நீராட்டப்படும் போது சடலத்தின் பின்னல் அவிழ்க்கப்படுவது தவறில்லை என இப்னு சீரீன் குறிப்பிட்டுள்ளார்கள். 

1260. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்)அவர்களின் மகளின் மய்யித்திற்குத் தலை(முடி)யில் பெண்கள் மூன்று சடைகளைப் பின்னியிருந்தார்கள். பிறகு அவற்றைப் பிரித்துக் கழுவிவிட்டுப் பிறகு மீண்டும் மூன்று சடைகள் பின்னினார்கள்.
Book : 23


«أَنَّهُنَّ جَعَلْنَ رَأْسَ بِنْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثَلاَثَةَ قُرُونٍ نَقَضْنَهُ، ثُمَّ غَسَلْنَهُ، ثُمَّ جَعَلْنَهُ ثَلاَثَةَ قُرُونٍ»


Next Page » « Previous Page