Author: Farook

Bukhari-1259

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1259. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு அல்லது நீங்கள் தேவையெனக் கருதினால் அதற்கும் அதிகமான முறை குளிப்பாட்டுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அந்த மய்யித்தின் தலையில் மூன்று சடைகளை முடிந்தோம்’ என உம்மு அதிய்யா(ரலி) கூறினார் என ஹஃப்ஸா(ரலி) குறிப்பிடுகிறார்கள்.
Book :23


«اغْسِلْنَهَا ثَلاَثًا، أَوْ خَمْسًا أَوْ سَبْعًا، أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ، إِنْ رَأَيْتُنَّ» قَالَتْ حَفْصَةُ: قَالَتْ أُمُّ عَطِيَّةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: وَجَعَلْنَا رَأْسَهَا ثَلاَثَةَ قُرُونٍ


Bukhari-1258

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13 (சடலத்தை நீராட்டும் போது) கடைசியில் கற்பூரத்தைப் பயன்படுத்துதல். 

1258. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்)அவர்களின் ஒரு மகள் மரணித்துவிட்டதும் நபி(ஸல்) அவர்கள் (எங்களிடம்) வந்து ‘அவரை மூன்று அல்லது ஐந்து அல்லது தேவையென நீங்கள் கருதினால் அதற்கும் அதிகமான முறை இலந்தை இலை கலந்த நீரால் குளிப்பாட்டுங்கள்; கடைசியில் சிறிது கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள்; குளிப்பாட்டி முடித்ததும் எனக்குத் தெரிவியுங்கள்’ எனக் கூறினார்கள். குளிப்பாட்டிய பின் நாங்கள் அவர்களுக்குத் தெரிவித்ததும் தம் கீழாடையைத் தந்து, ‘இதை அவரின் உடம்பில் சுற்றுங்கள்’ என்று கூறினார்கள்.
Book : 23


تُوُفِّيَتْ إِحْدَى بَنَاتِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «اغْسِلْنَهَا ثَلاَثًا، أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ، إِنْ رَأَيْتُنَّ بِمَاءٍ وَسِدْرٍ، وَاجْعَلْنَ فِي الآخِرَةِ كَافُورًا – أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ – فَإِذَا فَرَغْتُنَّ، فَآذِنَّنِي» قَالَتْ: فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ، فَأَلْقَى إِلَيْنَا حِقْوَهُ، فَقَالَ: «أَشْعِرْنَهَا إِيَّاهُ»


Bukhari-1257

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12 பெண் சடலம், ஆணின் கீழாடையால் கஃபனிடப்படலாமா? 

1257. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்)அவர்களின் மகள் மரணித்ததும் அவர்கள், ‘அவரை மூன்று அல்லது ஐந்து அல்லது நீங்கள் தேவையெனக் கருதினால் அதற்கும் அதிகமான முறை குளிப்பாட்டுங்கள்; குளிப்பாட்டி முடித்ததும் எனக்குத் தெரிவியுங்கள்’ எனக் கூறினார்கள். குளிப்பாட்டி முடித்து அவர்களுக்குத் தெரிவித்ததும் தம் இடுப்பிலிருந்து கீழாடையைக் களைந்து ‘இதை அவரின் உடம்பில் சுற்றுங்கள்’ என்று கூறினார்கள்.
Book : 23


تُوُفِّيَتْ بِنْتُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَنَا: «اغْسِلْنَهَا ثَلاَثًا، أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ، إِنْ رَأَيْتُنَّ، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي»، فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ فَنَزَعَ مِنْ حِقْوِهِ إِزَارَهُ، وَقَالَ: «أَشْعِرْنَهَا إِيَّاهُ»


Bukhari-1256

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11 சடலத்தை நீராட்டும் போது உளூச் செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்து ஆரம்பித்தல். 

1256. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்)அவர்களின் மகளை நாங்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோது, ‘மய்யித்தின் வலப்புறத்திலிருந்தும் அதன் உளூச் செய்யவேண்டிய பகுதிகளிலிருந்தும் ஆரம்பியுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book : 23


لَمَّا غَسَّلْنَا بِنْتَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ لَنَا وَنَحْنُ نَغْسِلُهَا: «ابْدَءُوا بِمَيَامِنِهَا، وَمَوَاضِعِ الوُضُوءِ مِنْهَا»


Bukhari-1255

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10 (நீராட்டுதலை) சடலத்தின் வலப் புறத்திலிருந்து ஆரம்பித்தல். 

1255. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்)அவர்களின் மகளைக் குளிப்பாட்டும்போது, ‘அவரின் வலப்புறத்திலிருந்தும் உளூச் செய்யவேண்டிய பகுதியிலிருந்தும் ஆரம்பியுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book : 23


قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَسْلِ ابْنَتِهِ «ابْدَأْنَ بِمَيَامِنِهَا، وَمَوَاضِعِ الوُضُوءِ مِنْهَا»


Bukhari-1254

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9 ஒற்றைப் படையாகத் தண்ணீர் ஊற்றி நீராட்டுவது விரும்பத் தக்கது. 

1254. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்)அவர்களின் மகளை நாங்கள் குளிப்பாட்டிக் கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்த நபி(ஸல்) அவர்கள், ‘அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து அல்லது அதற்கும் அதிகமான முறை குளிப்பாட்டுங்கள்; கடைசியில் கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிப்பாட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங்கள்’ எனக் கூறினார்கள். முடிந்ததும் நாங்கள் அவர்களுக்கு அறிவித்தோம். அப்போது அவர்கள் தங்களின் கீழாடையைத் தந்து, ‘இதை அவரின் உடலில் சுற்றுங்கள்’ எனக் கூறினார்கள்.

மற்றொரு அறிவிப்பில், ‘ஒற்றைப் படையாக (த் தண்ணீர் ஊற்றி)க் குறிப்பாட்டுங்கள்; மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு முறை (தண்ணீர் ஊற்றுங்கள்); அவரின் வலப்புறத்திலிருந்தும் உளூச் செய்ய வேண்டிய பகுதிகளிலிருந்தும் துவங்குங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும்

‘நாங்கள் அவர்களுக்கு தலைவாரி மூன்று சடைகள் பின்னினோம்’ என உம்மு அதிய்யா(ரலி) கூறினார் என்றும் உள்ளது என அய்யூப் குறிப்பிடுகிறார்.
Book : 23


دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نَغْسِلُ ابْنَتَهُ، فَقَالَ: «اغْسِلْنَهَا ثَلاَثًا، أَوْ خَمْسًا، أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ، بِمَاءٍ وَسِدْرٍ، وَاجْعَلْنَ فِي الآخِرَةِ كَافُورًا، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي»، فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ، فَأَلْقَى إِلَيْنَا حِقْوَهُ، فَقَالَ: «أَشْعِرْنَهَا إِيَّاهُ»

فَقَالَ أَيُّوبُ، وَحَدَّثَتْنِي حَفْصَةُ بِمِثْلِ حَدِيثِ مُحَمَّدٍ، وَكَانَ فِي حَدِيثِ حَفْصَةَ: «اغْسِلْنَهَا وِتْرًا»، وَكَانَ فِيهِ: «ثَلاَثًا أَوْ خَمْسًا أَوْ سَبْعًا» وَكَانَ فِيهِ أَنَّهُ قَالَ: «ابْدَءُوا بِمَيَامِنِهَا، وَمَوَاضِعِ الوُضُوءِ مِنْهَا»، وَكَانَ فِيهِ: أَنَّ أُمَّ عَطِيَّةَ قَالَتْ: وَمَشَطْنَاهَا ثَلاَثَةَ قُرُونٍ


Bukhari-1253

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8 இலந்தையிலை கலந்த நீரால் சடலத்தை நீராட்டி அங்கசுத்தி (உளூ) செய்வித்தல்.

சயீத் பின் ஸைத் (ரலி) அவர்களுடைய மகன் மரணமடைந்ததும் சடலத்துக்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் நறுமணம் பூசி அவரைச் சுமந்து சென்றார். (இதன் காரணமாக உளூ முறிந்துவிடாததால்) உளூச் செய்யாமலேயே ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்.

முஸ்லிம் உயிருடனிருக்கும் போதும் இறந்துவிட்டாலும் அசுத்தமாவதில்லை என இப்னு அப்பாஸ் (ரலி) கூறியுள்ளார்கள்.

(இறந்துவிட்ட முஸ்லிம்) அசுத்தம் என்றிருந்தால் நான் அந்த சடலத்தைத் தொட்டிருக்க மாட்டேன் என சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

மேலும் இறைநம்பிக்கையாளர் (மூமின்) அசுத்தமாவதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

1253. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தங்களின் மகள் மரணித்துவிட்டபோது எங்களிடம் வந்து, ‘அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து, தேவையெனக் கருதினால் அதற்கதிகமான முறை குளிப்பாட்டுங்கள்; இறுதியில் கற்பூரத்தைச் சிறிது சேர்த்துக் கொள்ளுங்கள்; குளிப்பாட்டி முடிந்ததும் அவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் வந்து தம் கீழாடையைத் தந்து, ‘இதை அவரின் உடலில் சுற்றுங்கள்’ எனக்

دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ تُوُفِّيَتِ ابْنَتُهُ، فَقَالَ: «اغْسِلْنَهَا ثَلاَثًا، أَوْ خَمْسًا، أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ إِنْ رَأَيْتُنَّ ذَلِكَ، بِمَاءٍ وَسِدْرٍ، وَاجْعَلْنَ فِي الآخِرَةِ كَافُورًا – أَوْ شَيْئًا مِنْ كَافُورٍ – فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي»، فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ ، فَأَعْطَانَا حِقْوَهُ، فَقَالَ: «أَشْعِرْنَهَا إِيَّاهُ» تَعْنِي إِزَارَهُ


Bukhari-1252

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7 அடக்கவிடம் அருகிலிருக்கும் பெண்ணிடம் நீ பொறுமையாயிரு என ஒருவர் கூறுவது. 

1252. அனஸ்(ரலி) அறிவித்தார்.

அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கடந்து சென்ற நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம், ‘அல்லாஹ்வைப் பயந்து கொள்! பொறுமையாயிரு!’ எனக் கூறினார்கள்.
Book : 23


مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِامْرَأَةٍ عِنْدَ قَبْرٍ وَهِيَ تَبْكِي، فَقَالَ: «اتَّقِي اللَّهَ وَاصْبِرِي»


Bukhari-1251

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1251. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிமுடைய மூன்று குழந்தைகள் இறந்துவிட்டால் எல்லோருமே நரகைக் கடந்து சென்றாக வேண்டும் என்ற அடிப்படையில், அந்த நேரம் மட்டுமே தவிர அவர் நரகின் பக்கம் செல்லவே மாட்டார். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நரகத்தைக் கடந்து சென்றதாக வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியது.)

‘அதனை (நரகை)க் கடக்காமல் செல்பவர் உங்களில் யாரும் இல்லை’ என்ற (திருக்குர்ஆன் 19:71) இறைவசனத்தின் அடிப்படையில்தான் என்று புகாரி ஆகிய நான் கூறுகிறேன்.
Book :23


«لاَ يَمُوتُ لِمُسْلِمٍ ثَلاَثَةٌ مِنَ الوَلَدِ، فَيَلِجَ النَّارَ، إِلَّا تَحِلَّةَ القَسَمِ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: {وَإِنْ مِنْكُمْ إِلَّا وَارِدُهَا} [مريم: 71]


Bukhari-1250

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1250. மேற்கூறிய ஹதீஸில் அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பில், ‘பருவமடையாத (குழந்தைகள்)’ என்ற வாசகம் அதிகப்படியாக உள்ளது.

அத்தியாயம்: 23


«لَمْ يَبْلُغُوا الحِنْثَ»


Next Page » « Previous Page