Author: Farook

Bukhari-1095

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1095. நாஃபிவு அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) தம் வாகனத்தில் அமர்ந்து உபரியான தொழுகைகளையும் வித்ருத் தொழுகைகளையும் தொழுதுவிட்டு நபி(ஸல்) அவர்கள் அவ்வாறு செய்ததாகவும் குறிப்பிட்டார்கள்.
Book :18


وَكَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا «يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ، وَيُوتِرُ عَلَيْهَا»، وَيُخْبِرُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْعَلُهُ


Bukhari-1094

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1094. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் வாகனத்தில் செல்லும்போது கிப்லா அல்லாத திசையை நோக்கி உபரியான தொழுகைகளைத் தொழுதிருக்கிறார்கள்.
Book :18


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي التَّطَوُّعَ وَهُوَ رَاكِبٌ فِي غَيْرِ القِبْلَةِ»


Bukhari-1093

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7 வாகனம் எத்திசையில் சென்றாலும் அதன் மீதமர்ந்து உபரியான தொழுகைகளைத் தொழுதல். 

1093. ஆமிர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களை வாகனம் எத்திசையில் கொண்டு சென்றாலும் அவர்கள் வாகனத்தின் மீதமர்ந்து தொழுவதை பார்த்திருக்கிறேன்.
Book : 18


«رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ حَيْثُ تَوَجَّهَتْ بِهِ»


Bukhari-1092

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1092. ஸாலிம் அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) முஸ்தலிஃபா-வில் மஃரிபையும் இஷாவையும் ஜம்உச் செய்து தொழுவார்கள். ஒரு முறை இப்னு உமர்(ரலி) மஃரிபைத் தாமதப் படுத்தினார்கள். அவர்களின் மனைவி ஸஃபியா(ரலி) உடல் நலம் குன்றி இருந்தார்கள். (அவர்களைப் பார்க்கச் சென்று கொண்டிருந்தார்கள்) அவர்களிடம் தொழுகை என்று நினைவு படுத்தினேன். அப்போதும் ‘நட’ என்றார்கள். இரண்டு அல்லது மூன்று மைல்கள் நடந்ததும வாகனத்தில் இருந்து இறங்கித் தொழுதார்கள்.

பின்னர் ‘நபி(ஸல்) அவர்கள் அவசரமாகப் புறப்பட நேர்ந்தால் இப்படித்தான் தொழுவார்கள்’ என்று குறிப்பிட்டார்கள். மேலும் ‘நபி(ஸல்) அவர்கள் அவசரமாகப் புறப்பட நேர்ந்தால் மஃரிபைத் தாமதப் படுத்தி மூன்றுரக்அத்கள் தொழுது ஸலாம் கொடுப்பார்கள். பின்னர் பெரிய இடைவெளி ஏதுமின்றி இஷாவுக்கு இகாமத் சொல்லி இரண்டு ரக்அத்களாகத் தொழுவார்கள். பின்னர் ஸலாம் கொடுப்பார்கள். இஷாவிலிருந்து நள்ளிரவில் எழுவது வரை உபரியான தொழுகைகள் தொழ மாட்டார்கள்.’ எனக் குறிப்பிட்டார்கள்.
Book :18


كَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: يَجْمَعُ بَيْنَ المَغْرِبِ وَالعِشَاءِ بِالْمُزْدَلِفَةِ ” قَالَ سَالِمٌ: وَأَخَّرَ ابْنُ عُمَرَ المَغْرِبَ، وَكَانَ اسْتُصْرِخَ عَلَى امْرَأَتِهِ صَفِيَّةَ بِنْتِ أَبِي عُبَيْدٍ، فَقُلْتُ لَهُ: الصَّلاَةَ، فَقَالَ: سِرْ، فَقُلْتُ: الصَّلاَةَ، فَقَالَ: سِرْ، حَتَّى سَارَ مِيلَيْنِ أَوْ ثَلاَثَةً، ثُمَّ نَزَلَ فَصَلَّى، ثُمَّ قَالَ: «هَكَذَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي إِذَا أَعْجَلَهُ السَّيْرُ» وَقَالَ عَبْدُ اللَّهِ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَعْجَلَهُ السَّيْرُ يُؤَخِّرُ المَغْرِبَ، فَيُصَلِّيهَا ثَلاَثًا، ثُمَّ يُسَلِّمُ، ثُمَّ قَلَّمَا يَلْبَثُ حَتَّى يُقِيمَ العِشَاءَ، فَيُصَلِّيهَا رَكْعَتَيْنِ، ثُمَّ يُسَلِّمُ وَلاَ يُسَبِّحُ بَعْدَ العِشَاءِ حَتَّى يَقُومَ مِنْ جَوْفِ اللَّيْلِ»


Bukhari-1091

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 6

மஃக்ரிப் தொழுகையைப் பயணத்திலும் மூன்று ரக்அத்களாகவே தொழவேண்டும். 

1091. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் அவசரமாகப் புறப்படுவதாக இருந்தால் மஃரிபைத் தாமதப் படுத்தி இஷாவுடன் சேர்த்துத் தொழுவார்கள்.

இப்னு உமர் (ரலி) இவ்வாறே செய்வார்கள் என்று ஸாலிம் கூறுகிறார்.

அத்தியாயம்: 18


«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَعْجَلَهُ السَّيْرُ فِي السَّفَرِ يُؤَخِّرُ المَغْرِبَ، حَتَّى يَجْمَعَ بَيْنَهَا وَبَيْنَ العِشَاءِ»

قَالَ سَالِمٌ: وَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَفْعَلُهُ إِذَا أَعْجَلَهُ السَّيْرُ


Bukhari-1090

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1090. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

தொழுகை ஆரம்பத்தில் இரண்டு ரக்அத்களாகத்தான் கடமையாக்கப்பட்டது. பயணத் தொழுகை அவ்வாறே நீடித்தது. (சொந்த) ஊரில் தொழும் தொழுகை (நான்கு ரக்அத்களாக) முழுமை படுத்தப்பட்டது.

ஸுஹ்ரீ கூறுகிறார்

நான் உர்வாவிடம் ஆயிஷா(ரலி) ஏன் முழுமையாக தொழுதனர் என்று கேட்டேன். அதற்கவர், ‘உஸ்மான்(ரலி) விளங்கியது போல் அவரும் விளங்கிவிட்டார். (அதாவது மக்காவைச் சொந்த ஊராக இருவரும் கருதிவிட்டனர்) என்று விடையளித்தார்.
Book :18


«الصَّلاَةُ أَوَّلُ مَا فُرِضَتْ رَكْعَتَيْنِ، فَأُقِرَّتْ صَلاَةُ السَّفَرِ، وَأُتِمَّتْ صَلاَةُ الحَضَرِ»

قَالَ الزُّهْرِيُّ: فَقُلْتُ لِعُرْوَةَ: مَا بَالُ عَائِشَةَ تُتِمُّ؟ قَالَ: «تَأَوَّلَتْ مَا تَأَوَّلَ عُثْمَانُ»


Bukhari-1089

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 5

(பயணத் திட்டத்துடன்) ஒருவர் தமது இல்லத்தை விட்டுப் புறப்பட்டதும் கஸ்ர் செய்து தொழலாம்.

அலீ (ரலி) அவர்கள் (கூஃபா நகரிலிருந்து பயணம்) புறப்பட்டுச் செல்லும் போது (உள்ளூரிலுள்ள) வீடுகள் கண்களுக்குத் தெரியும்போதே சுருக்கி (கஸ்ர் செய்து) தொழுதார்கள். திரும்பி வந்த போது இதோ கூஃபா (தெரிகிறது. இனி தொழுகையை சுருக்குவீர்களா? அல்லது முழுமையாக்குவிர்களா?) என்று அவர்களிடம் வினவப்பட்டது. அப்போது அவர்கள் இல்லை! நாம் ஊருக்குள் நுழையும் வரை (சுருக்கியே தொழுவோம்) என்று பதிலளித்தார்கள். 

1089. அனஸ் (ரலி) அறிவித்தார்

நான் நபி (ஸல்) அவர்களுடன் லுஹர்த் தொழுகையை மதீனாவில் நான்கு ரக்அத்களாகத் தொழுதேன். துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்களாகத் தொழுதேன்.

அத்தியாயம்: 18


«صَلَّيْتُ الظُّهْرَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ أَرْبَعًا، وَبِذِي الحُلَيْفَةِ رَكْعَتَيْنِ»


Bukhari-1088

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1088. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினர் இல்லாமல் மேற்கொள்வது கூடாது.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

Book :18


«لاَ يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ أَنْ تُسَافِرَ مَسِيرَةَ يَوْمٍ وَلَيْلَةٍ لَيْسَ مَعَهَا حُرْمَةٌ»


Bukhari-1087

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1087. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர முன்று நாள்களுக்கான பயணத்தை மேற்கொள்ளக்கூடாது’. என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :18


«لاَ تُسَافِرِ المَرْأَةُ ثَلاَثًا إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ»


Bukhari-1086

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 எவ்வளவு தொலைவு பயணம் செய்யும் போது சுருக்கித் தொழலாம்?

நபி (ஸல்) அவர்கள் (குறைந்த பட்சம்) ஒரு பகல் ஒரு இரவைப் பயணம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் 4 பரீத் அதாவது 16 பர்ஸக் (அதாவது 48மைல்) தொலைவிற்குப் பயணம் செய்யும் போது சுருக்கி (கஸ்ர் செய்து) தொழுவார்கள்; நோன்பை விட்டுவிடுவார்கள்.

(குறிப்பு: 1 பரீத் என்பது 12 மைல். இதன்படி 4 பரீத் என்பது 48 மைல்கள் ஆகும். 1 பர்ஸக் என்பது 3 மைல். இதன்படி 16 பர்ஸக் என்பது 48 மைல்கள் ஆகும்) 

1086. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘எந்தப் பெண்ணும் மணம் முடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர மூன்று நாள்களுக்கான பயணத்தை மேற்கொள்ளக் கூடாது’. என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 18


«لاَ تُسَافِرِ المَرْأَةُ ثَلاَثَةَ أَيَّامٍ إِلَّا مَعَ ذِي مَحْرَمٍ»


Next Page » « Previous Page