ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி ✅
பாடம்: 10
(ஒதலுக்கான) சஜ்தாவை அல்லாஹ் கடமையாக்கவில்லை என்று கருதுவோரின் கூற்று.
இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களிடம், ஒரு மனிதர் மற்றொருவர் ஓதும் சஜ்தா வசனத்தை உட்காராமல் (போகிற போக்கில்) செவியுற்றால்… (அவர் சஜ்தாச் செய்ய வேண்டுமா?) என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அவர் உட்கார்ந்து கேட்டால்தான் என்ன? என்று திருப்பிக் கேட்டார்கள். இதன் மூலம் சஜ்தாச் செய்வது கடமையில்லை என்று அவர்கள் கருதுகிறார்கள்.
(சிலர் ஓரிடத்தில் அமர்ந்து சஜ்தா வசனத்தை ஓதி சஜ்தாச் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களைக் கடந்து சென்ற) சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் (சஜ்தாச் செய்யவில்லை. அது குறித்து அவர்களிடம் வினவப்பட்ட போது), இதற்காக நாம் இங்கு வரவில்லை என்று பதிலளித்தார்கள். யார் (திட்டமிட்டு) அதைச் செவி தாழ்த்திக் கேட்கிறாரோ அவர் மீதே சஜ்தாக் கடமையாகும் என்று உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், தூய்மையுடன் இருந்தால்தான் சஜ்தாச் செய்ய வேண்டும். நீ உள்ளூரிலிருக்கும் போது சஜ்தாச் செய்ய நேர்ந்தால் கிப்லாவை முன்னோக்கிக் கொள். நீ பயணத்திலிருக்கும் போது (சஜ்தா வசனத்தை ஓதினால்) உனது முகம் எந்தத் திசையில் இருந்தாலும் குற்றமில்லை
قَرَأَ يَوْمَ الجُمُعَةِ عَلَى المِنْبَرِ بِسُورَةِ النَّحْلِ حَتَّى إِذَا جَاءَ السَّجْدَةَ نَزَلَ، فَسَجَدَ وَسَجَدَ النَّاسُ حَتَّى إِذَا كَانَتِ الجُمُعَةُ القَابِلَةُ قَرَأَ بِهَا، حَتَّى إِذَا جَاءَ السَّجْدَةَ، قَالَ: «يَا أَيُّهَا النَّاسُ إِنَّا نَمُرُّ بِالسُّجُودِ، فَمَنْ سَجَدَ، فَقَدْ أَصَابَ وَمَنْ لَمْ يَسْجُدْ، فَلاَ إِثْمَ عَلَيْهِ وَلَمْ يَسْجُدْ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ»
وَزَادَ نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، «إِنَّ اللَّهَ لَمْ يَفْرِضِ السُّجُودَ إِلَّا أَنْ نَشَاءَ»
சமீப விமர்சனங்கள்