Author: Farook

Bukhari-1075

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 8

ஓதுபவர் சஜ்தாச் செய்யும் போது கேட்பவரும் சஜ்தாச் செய்ய வேண்டும்.

சிறுவரான தமீம் பின் ஹத்லம், இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சஜ்தா வசனத்தை ஓதிக் காட்டினார்கள். அவரிடம் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் சஜ்தாச் செய்வீராக! ஏனெனில் இந்த விஷயத்தில் நீரே நமக்கு வழிகாட்டியாக இருக்கிறீர் என்று கூறினார்கள். 

1075. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும் வசனத்தை எங்களுக்கு ஓதிக் காட்டும்போது அவர்கள் ஸஜ்தாச் செய்வார்கள். எங்களுக்கு நெற்றியை வைக்க இடமில்லாத அளவுக்கு நாங்கள் அனைவரும் ஸஜ்தாச் செய்வோம்.

அத்தியாயம்: 17


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ عَلَيْنَا السُّورَةَ، فِيهَا السَّجْدَةُ فَيَسْجُدُ وَنَسْجُدُ، حَتَّى مَا يَجِدُ أَحَدُنَا مَوْضِعَ جَبْهَتِهِ»


Bukhari-1074

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7

இதஸ்ஸமாவுன் ஷக்கத் எனும் (84ஆவது) அத்தியாயத்தை ஓதும் போது சஜ்தாச் செய்தல். 

1074. அபூ ஸலமா அறிவித்தார்.

அபூ ஹுரைரா (ரலி) இதஸ்ஸமாவுன் ஷக்கத் அத்தியாயத்தை ஓதி ஸஜ்தாச் செய்தார்கள். நான் அவர்களிடம் நீங்கள் ஸஜ்தாச் செய்ததை நான் பார்த்தேனே என்றேன். அதற்கு அபூ ஹுரைரா(ரலி) நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்ததை நான் பார்த்திருக்காவிட்டால் நானும் ஸஜ்தாச் செய்திருக்க மாட்டேன்’ என்று விடையளித்தார்கள்.
Book : 17


رَأَيْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَرَأَ: إِذَا السَّمَاءُ انْشَقَّتْ، فَسَجَدَ بِهَا، فَقُلْتُ: يَا أَبَا هُرَيْرَةَ أَلَمْ أَرَكَ تَسْجُدُ؟ قَالَ: «لَوْ لَمْ أَرَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْجُدُ لَمْ أَسْجُدْ»


Bukhari-1073

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1073. ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களிடம் நஜ்மு அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். அப்போது அவர்கள் ஸஜ்தாச் செய்யவில்லை.
Book :17


«قَرَأْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّجْمِ فَلَمْ يَسْجُدْ فِيهَا»


Bukhari-1072

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 6

சஜ்தா வசனத்தை ஓதி சஜ்தாச் செய்யாமல் இருத்தல். 

1072. ஸைத் இப்னு ஸாயித் (ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களிடம் நஜ்மு அத்தியாயத்தை ஓதிக் காட்டினேன். அப்போது அவர்கள் ஸஜ்தாச் செய்யவில்லை.

அத்தியாயம்: 17


«أَنَّهُ قَرَأَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّجْمِ فَلَمْ يَسْجُدْ فِيهَا»


Bukhari-1071

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 முஸ்லிம்கள் இணைவைப்பாளர்களுடன் சேர்ந்து (ஒதலுக்கான) சஜ்தாச் செய்தல்.

இணைவைப்பாளர் அசுத்தமானவர் என்பதால் அவர் உளூச் செய்ய முடியாது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் உளூவுடன் (ஓதலுக்கான) சஜ்தாச் செய்வார்கள். 

1071. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் நஜ்மு அத்தியாயத்தை ஓதி ஸஜ்தாச் செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும் இணைவைப்பவர்களும் ஏனைய மக்களும் ஜின்களும் ஸஜ்தாச் செய்தனர்.
Book : 17


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَجَدَ بِالنَّجْمِ، وَسَجَدَ مَعَهُ المُسْلِمُونَ وَالمُشْرِكُونَ وَالجِنُّ وَالإِنْسُ»


Bukhari-1070

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 அந்நநஜ்ம் (எனும் 53ஆவது) அத்தியாயத்தை ஓதும் போது சஜ்தாச் செய்தல். 

1070. இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்மு அத்தியாயத்தை ஓதும்போது ஸஜ்தாச் செய்தார்கள். அக்கூட்டத்தில் ஒருவரைத் தவிர அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அவர் ஒரு கையில் சிறிய கற்களையோ மண்ணையோ எடுத்துத் தம் நெற்றிக்குக் கொண்டு சென்று ‘இவ்வாறு செய்வது எனக்குப் போதும்’ என்று கூறினார். பின்னர் அவர் இறைமறுப்பாளராகக் கொல்லப்பட்டதை பார்த்தேன்.
Book : 17


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ سُورَةَ النَّجْمِ، فَسَجَدَ بِهَا فَمَا بَقِيَ أَحَدٌ مِنَ القَوْمِ إِلَّا سَجَدَ، فَأَخَذَ رَجُلٌ مِنَ القَوْمِ كَفًّا مِنْ حَصًى – أَوْ تُرَابٍ – فَرَفَعَهُ إِلَى وَجْهِهِ، وَقَالَ: يَكْفِينِي هَذَا ، قَالَ عَبْدُ اللَّهِ: فَلَقَدْ رَأَيْتُهُ بَعْدُ قُتِلَ كَافِرًا


Bukhari-1069

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 3

ஸாத் (எனும் 38ஆவது) அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தாச் செய்தல். 

1069. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘ஸாத்’ அத்தியாயத்தில் உள்ள (38:24) வது வசனம் கட்டாயமாக (ஓதலுக்கான) ஸஜ்தா செய்ய வேண்டிய வசனங்களில் ஒன்றல்ல. ஆயினும், நபி (ஸல்) அவர்கள் (ஸாத் அத்தியாயத்தின்) அந்த (வசனம் வரும்) இடத்தில் ஸஜ்தா செய்வதை நான் பார்த்திருக்கிறேன்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம்: 17


ص لَيْسَ مِنْ عَزَائِمِ السُّجُودِ، وَقَدْ «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْجُدُ فِيهَا»


Bukhari-1068

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 தன்ஸீல் அஸ்ஸஜ்தா (எனும்) 32ஆவதுஅத்தியாயத்தை ஓதும் போது சஜ்தாச் செய்தல். 

1068. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் அலிஃப் லாம் மீம் தன்ஸீல் என்ற ஸஜ்தா அத்தியாயத்தையும் ஹல்அத்தா அலல் இன்ஸான் என்ற அத்தியாயத்தையும் ஓதினார்கள்.
Book : 17


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الجُمُعَةِ فِي صَلاَةِ الفَجْرِ الم تَنْزِيلُ السَّجْدَةُ وَهَلْ أَتَى عَلَى الإِنْسَانِ»


Bukhari-1067

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

குர்ஆனிலுள்ள ஸஜ்தா வசனங்கள்.

பாடம்: 1

குர்ஆனில் உள்ள ஸஜ்தா வசனங்களை ஓதியதற்காக ஸஜ்தா செய்வதும், அதன் வழிமுறையும்.

1067. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்காவில் (குர்ஆனின்) ‘அந்நஜ்ம்’ எனும் (53 வது) அத்தியாயத்தை (அல்குர்ஆன் 53:62) ஓதி சிரவணக்கம் (ஸஜ்தா) செய்தார்கள். அவர்களுடன் இருந்த (முஸ்லிம்கள், இணைவைப்பாளர்கள்) அனைவரும் சிரவணக்கம் செய்தனர்; அங்கிருந்த ஒரு வயோதிகர் மட்டும் ஒரு கையளவு சிறு கற்களையோ மண்ணையோ அள்ளித் தமது நெற்றிவரை கொண்டுசென்றுவிட்டு, “இது எனக்குப் போதும்” என்று (பரிகாசத்துடன்) கூறினார். பின்னர் அவர் இறைமறுப்பாளராகவே (பத்ர் போரில்) கொல்லப்பட்டதை நான் பார்த்தேன்.

அத்தியாயம்: 17


 قَرَأَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّجْمَ بِمَكَّةَ فَسَجَدَ فِيهَا وَسَجَدَ مَنْ مَعَهُ غَيْرَ شَيْخٍ أَخَذَ كَفًّا مِنْ حَصًى – أَوْ تُرَابٍ – فَرَفَعَهُ إِلَى جَبْهَتِهِ، وَقَالَ: يَكْفِينِي هَذَا “، فَرَأَيْتُهُ بَعْدَ ذَلِكَ قُتِلَ كَافِرًا


Bukhari-1066

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1066. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது தொழுகைக்கு தயாராகுங்கள்’ என்று அழைப்பதற்காக ஒருவரை நபி(ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். (மக்கள் கூடியதும்) முன்னே சென்று இரண்டு ரக்அத்களில் நான்கு ருகூவுகளும் நான்கு ஸஜ்தாக்களும் செய்து தொழுகை நடத்தினார்கள்.

உங்கள் சகோதரர் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் மதீனாவில் கிரகணத் தொழுகை தொழும்போது ஸுப்ஹுத் தொழுகை போல் இரண்டு ரக்அத்கள் தொழுததைத் தவிர வேறு எதையும் செய்ய வில்லையே என உர்வாவிடம் கேட்டேன். அதற்கவர் ‘ஆம்’ அவர் நபிவழிக்கு மாறுசெய்துவிட்டார்’ என்று கூறினார் என ஸுஹ்ரி குறிப்பிட்டார்.
Book :16


أَنَّ الشَّمْسَ خَسَفَتْ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَعَثَ مُنَادِيًا: بالصَّلاَةُ جَامِعَةٌ، فَتَقَدَّمَ فَصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ فِي رَكْعَتَيْنِ، وَأَرْبَعَ سَجَدَاتٍ، وَأَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ نَمِرٍ، سَمِعَ ابْنَ شِهَابٍ مِثْلَهُ قَالَ الزُّهْرِيُّ: فَقُلْتُ: ” مَا صَنَعَ أَخُوكَ ذَلِكَ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ مَا صَلَّى إِلَّا رَكْعَتَيْنِ مِثْلَ الصُّبْحِ، إِذْ صَلَّى بِالْمَدِينَةِ، قَالَ: أَجَلْ إِنَّهُ أَخْطَأَ السُّنَّةَ


Next Page » « Previous Page