Author: Farook

Bukhari-1065

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 19

கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதுதல். 

1065. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் கிரகணத்தொழுகையில் சப்தமிட்டு ஓதினார்கள். ஓதி முடித்ததும் தக்பீர் கூறி ருகூவுச் செய்தார்கள். ருகூவிலிருந்து நிமிர்ந்ததும் ‘ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா வ லகல் ஹம்து’ என்று கூறினார்கள். பிறகு மீண்டும் ஓதினார்கள். இவ்வாறு இரண்டு ரக்அத்களில் நான்கு ருகூவுகளும் நான்கு ஸஜ்தாக்களும் செய்தார்கள்.

அத்தியாயம்: 16


جَهَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلاَةِ الخُسُوفِ بِقِرَاءَتِهِ، فَإِذَا فَرَغَ مِنْ قِرَاءَتِهِ كَبَّرَ، فَرَكَعَ وَإِذَا رَفَعَ مِنَ الرَّكْعَةِ قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الحَمْدُ، ثُمَّ يُعَاوِدُ القِرَاءَةَ فِي صَلاَةِ الكُسُوفِ أَرْبَعَ رَكَعَاتٍ فِي رَكْعَتَيْنِ وَأَرْبَعَ سَجَدَاتٍ


Bukhari-1064

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 18 கிரகணத் தொழுகையின் முதல் ருகூஉவை நீட்டுதல். 

1064. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்களில் நான்கு ருகூவுச் செய்து கிரகணத் தொழுகையை மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அதில் முதல் ருகூவை நீண்ட நேரமும் அதற்கடுத்த ருகூவை அதைவிடக் குறைந்த நேரமும் செய்தார்கள்.
Book : 16


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِهِمْ فِي كُسُوفِ الشَّمْسِ أَرْبَعَ رَكَعَاتٍ فِي سَجْدَتَيْنِ الأَوَّلُ الأَوَّلُ أَطْوَلُ»


Bukhari-1063

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1063. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் மேலாடையை இழுத்தவர்களாகப் பள்ளிக்குச் சென்றார்கள். மக்களும் அவர்களை நோக்கி விரைந்தனர். நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தினார்கள்.

கிரகணம் விலகியதும் ‘சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் இரண்டு அத்தாட்சிகளாகும். எவருடைய மரணத்திற்காகவும் அவற்றிற்குக் கிரகணம் பிடிப்பதில்லை. எனவே கிரகணம் பிடித்தால் அது விலகும்வரை தொழுங்கள்; பிரார்த்தியுங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்களின் மகன் மரணித்தபோது மக்கள் பேசியதற்கு மறுப்பாகவே இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
Book :16


خَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَرَجَ يَجُرُّ رِدَاءَهُ، حَتَّى انْتَهَى إِلَى المَسْجِدِ وَثَابَ النَّاسُ إِلَيْهِ، فَصَلَّى بِهِمْ رَكْعَتَيْنِ، فَانْجَلَتِ الشَّمْسُ، فَقَالَ: «إِنَّ الشَّمْسَ وَالقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، وَإِنَّهُمَا لاَ يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ، وَإِذَا كَانَ ذَاكَ فَصَلُّوا وَادْعُوا حَتَّى يُكْشَفَ مَا بِكُمْ» وَذَاكَ أَنَّ ابْنًا لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَاتَ يُقَالُ لَهُ إِبْرَاهِيمُ فَقَالَ النَّاسُ فِي ذَاكَ


Bukhari-1062

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 17 சந்திர கிரகணத்தின் போது தொழுவது (நபி வழியாகும்). 

1062. அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டபோது இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
Book : 16


«انْكَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّى رَكْعَتَيْنِ»


Bukhari-1061

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16 இமாம் கிரகணத் தொழுகையின் சொற்பொழிவில் அம்மா பஅத் (இறைவாழ்த்துக் குப் பின்…) என்று கூறுவது. 

1061. அஸ்மா(ரலி) அறிவித்தார்.

கிரகணம் விலகியபோது நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்து உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்பப் புகழ்ந்துவிட்டு ‘அம்மாபஃது’ என்றார்கள்.
Book : 16


فَانْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ تَجَلَّتِ الشَّمْسُ، فَخَطَبَ فَحَمِدَ اللَّهَ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ قَالَ: «أَمَّا بَعْدُ»


Bukhari-1060

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15 கிரகணத்தின் போது பிரார்த்தித்தல்.

இது குறித்து நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூமூசா (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் அறிவித்துள்ளனர். 

1060. முகீரா இப்னு ஷுஉபா(ரலி) அறிவித்தார்.

இப்ராஹீம்(ரலி) மரணித்த நேரத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது.
‘இப்ராஹீமின் மரணத்திற்காகக் கிரகணம் ஏற்பட்டது’ என்று மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் இரண்டு அத்தாட்சிகளாகும். எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே நீங்கள் கிரகணத்தைக் கண்டால் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அது விலகும் வரை தொழுங்கள்’ என்று கூறினார்கள்.
Book : 16


انْكَسَفَتِ الشَّمْسُ يَوْمَ مَاتَ إِبْرَاهِيمُ، فَقَالَ النَّاسُ: انْكَسَفَتْ لِمَوْتِ إِبْرَاهِيمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّمْسَ وَالقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ، لاَ يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمُوهُمَا، فَادْعُوا اللَّهَ وَصَلُّوا حَتَّى يَنْجَلِيَ»


Bukhari-1059

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 14

கிரகணத்தின் போது இறைவனை நினைவு கூர்தல்.

இது பற்றி இப்னுஅப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (குறிப்பு: ஹதீஸ் எண்-1052). 

1059. அபூமூஸா (ரலி) அறிவித்தார்.

சூரிய கிரகணம் ஏற்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்துவிட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள். உடனே பள்ளிக்கு வந்து தொழுதார்கள். நிற்பது, ருகூவுச் செய்வது, ஸஜ்தாச் செய்வது ஆகியவற்றை நான் அதுவரை பார்த்திராத அளவுக்கு நீட்டினார்கள்.

(பின்னர் மக்களை நோக்கி) ‘இந்த அத்தாட்சிகள் எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ ஏற்படுவதில்லை. எனினும் தன்னுடைய அடியார்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் அனுப்புகிறான். இவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் இறைவனை நினைவு கூரவும் பிரார்த்திக்கவும் பாவமன்னிப்புத் தேடவும் விரையுங்கள்’ என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 16


خَسَفَتِ الشَّمْسُ، فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَزِعًا، يَخْشَى أَنْ تَكُونَ السَّاعَةُ، فَأَتَى المَسْجِدَ، فَصَلَّى بِأَطْوَلِ قِيَامٍ وَرُكُوعٍ وَسُجُودٍ رَأَيْتُهُ قَطُّ يَفْعَلُهُ، وَقَالَ: «هَذِهِ الآيَاتُ الَّتِي يُرْسِلُ اللَّهُ، لاَ تَكُونُ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، وَلَكِنْ يُخَوِّفُ اللَّهُ بِهِ عِبَادَهُ، فَإِذَا رَأَيْتُمْ شَيْئًا مِنْ ذَلِكَ، فَافْزَعُوا إِلَى ذِكْرِهِ وَدُعَائِهِ وَاسْتِغْفَارِهِ»


Bukhari-1058

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1058. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்கள் எழுந்து மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள். நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தி மீண்டும் நீண்ட நேரம் ஓதினார்கள். இது முதலில் ஓதியதை விடக்குறைவானதாக இருந்தது. பிறகு மீண்டும் நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு தலையை உயர்த்தி இரண்டு ஸஜ்தாக்கள் செய்தார்கள். பின்னர் எழுந்து இரண்டாம் ரக்அத்திலும் இவ்வாறே செய்தார்கள்.

பின்னர் எழுந்து (மக்களை நோக்கி) ‘சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ கிரகணம் பிடிப்பதில்லை. அவ்விரண்டும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். அவற்றைத் தன்னுடைய அடியார்களுக்கு அல்லாஹ் காட்டுகிறான். எனவே கிரகணத்தை நீங்கள் காணும்போது தொழுகைக்கு நீங்கள் விரையுங்கள்’ என்று கூறினார்கள்.
Book :16


كَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّى بِالنَّاسِ، فَأَطَالَ القِرَاءَةَ، ثُمَّ رَكَعَ، فَأَطَالَ الرُّكُوعَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، فَأَطَالَ القِرَاءَةَ وَهِيَ دُونَ قِرَاءَتِهِ الأُولَى، ثُمَّ رَكَعَ، فَأَطَالَ الرُّكُوعَ دُونَ رُكُوعِهِ الأَوَّلِ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ، فَسَجَدَ سَجْدَتَيْنِ، ثُمَّ قَامَ، فَصَنَعَ فِي الرَّكْعَةِ الثَّانِيَةِ مِثْلَ ذَلِكَ، ثُمَّ قَامَ فَقَالَ: «إِنَّ الشَّمْسَ وَالقَمَرَ لاَ يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، وَلَكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ يُرِيهِمَا عِبَادَهُ، فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ، فَافْزَعُوا إِلَى الصَّلاَةِ»


Bukhari-1057

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பகுதி 13 எவருடைய மரணத்திற்காகவோ வாழ்விற்காகவோ சூரிய கிரகணம் ஏற்படுவதில்லை.

இது பற்றி அபூ பக்ரா(ரலி) மூகீரா(ரலி), அபூ மூஸா(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி), இப்னு உமர்(ரலி) ஆகியோர் அறிவித்துள்ளனர்.

1057. அபூ மஸ்ஊத் (ரலி) அறிவித்தார்.

சூரியனும் சந்திரனும் எவருடைய மரணத்திற்காகவும் கிரகணம் பிடிப்பதில்லை. மாறாக அவை அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகள். எனவே நீங்கள் கிரகணத்தைக் கண்டால் (அது விலகும்)வரை தொழுங்கள்’ என்று நபி (ஸல்) கூறினார்கள்.
Book : 16


«الشَّمْسُ وَالقَمَرُ لاَ يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، وَلَكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَصَلُّوا»


Bukhari-1055

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12 கிரகணத் தொழுகையை பள்ளிவாசலில் தொழுவது. 

1055. & 1056. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஒரு யூதப் பெண்மணி என்னிடம் யாசிக்க வந்தாள். அப்போது அவள் ‘கப்ருடைய வேதனையிலிருந்து உன்னை அல்லாஹ் காப்பானாக! என்று கூறினாள். நான் நபி(ஸல்) அவர்களிடம் மனிதர்கள் கப்ருகளிலும் வேதனை செய்யப்படுவார்களா? என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘கப்ருடைய வேதனையைவிட்டும் நானும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என்றார்கள்.

பின்னர் ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் வாகனத்தில் புறப்பட்டார்கள். அப்போது சூரிய கிரகணம் ஏற்பட்டது. முற்பகல் நேரத்தில் இல்லம் திரும்பினார்கள். பின்னர் தொழலானார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் நின்றார்கள். (அத்தொழுகையில்) நீண்ட நேரம் நின்றார்கள். பின்னர் நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். (ருகூவிலிருந்து) நிமிர்ந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையைவிடக் குறைவானதாக இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ஸஜ்தாச் செய்தார்கள். இது முதல் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ;நின்றார்கள். இது முதல் ரக்அத்தின் நிலையை விடக் குறைவானதாக இருந்தது. பிறகு ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைவானதாக இருந்தது. ஸஜ்தாச் செய்தார்கள். அது முதல் ஸஜ்தாவை விடக் குறைவானதாக

أَنَّ يَهُودِيَّةً جَاءَتْ تَسْأَلُهَا، فَقَالَتْ: أَعَاذَكِ اللَّهُ مِنْ عَذَابِ القَبْرِ، فَسَأَلَتْ عَائِشَةُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُعَذَّبُ النَّاسُ فِي قُبُورِهِمْ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَائِذًا بِاللَّهِ مِنْ ذَلِكَ»

1056. ثُمَّ رَكِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ غَدَاةٍ مَرْكَبًا، فَكَسَفَتِ الشَّمْسُ، فَرَجَعَ ضُحًى، فَمَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ ظَهْرَانَيِ الحُجَرِ، ثُمَّ قَامَ، فَصَلَّى وَقَامَ النَّاسُ وَرَاءَهُ، فَقَامَ قِيَامًا طَوِيلًا، ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا، ثُمَّ رَفَعَ، فَقَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ القِيَامِ الأَوَّلِ، ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الأَوَّلِ، ثُمَّ رَفَعَ، فَسَجَدَ سُجُودًا طَوِيلًا، ثُمَّ قَامَ، فَقَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ القِيَامِ الأَوَّلِ، ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الأَوَّلِ، ثُمَّ قَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ القِيَامِ الأَوَّلِ، ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الأَوَّلِ، ثُمَّ سَجَدَ وَهُوَ دُونَ السُّجُودِ الأَوَّلِ، ثُمَّ انْصَرَفَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ

ثُمَّ «أَمَرَهُمْ أَنْ يَتَعَوَّذُوا مِنْ عَذَابِ القَبْرِ»


Next Page » « Previous Page