Author: Farook

Bukhari-1003

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1003. அனஸ்(ரலி) அறிவித்தார்.

ரிஃல், தக்வான் ஆகிய கூட்டத்தினருக்கு எதிராக நபி(ஸல்) அவர்கள் ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்.
Book :14


«قَنَتَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا يَدْعُو عَلَى رِعْلٍ وَذَكْوَانَ»


Bukhari-1002

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1002. குனூத் பற்றி அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘குனூத் (நபி (ஸல்) அவர்கள் காலத்தில்) நடைமுறையில் இருந்தது தான்’ என்று விடையளித்தார்கள். ருகூவுக்கு முன்பா? பின்பா? என்று கேட்டேன். அதற்கு ‘ருகூவுக்கு முன்பு தான்’ என்று கூறினார்கள். ருகூவுக்குப் பிறகு என்று நீங்கள் கூறினீர்கள் என ஒருவர் எனக்குக் கூறினாரே என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன்.

‘அவர் பொய் சொல்லி இருக்கிறார். நபி (ஸல்) அவர்கள் ருகூவுக்குப் பிறகு ஒரு மாதம்தான் குனூத் ஓதினார்கள். நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை இணை வைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அந்த முஷ்ரீகீன்களை விடக் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர். அவர்களுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமிடையே ஓர் உடன்படிக்கையும் இருந்தது. (அந்த முஷ்ரிகீன்கள் எழுபது நபர்களையும் கொன்றுவிட்டனர்.) அப்போது நபி (ஸல்) அவர்கள் முஷ்ரீகீன்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள் என்று அனஸ் (ரலி) விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆஸிம் பின் ஸுலைமான் அல்அஹ்வல் (ரஹ்)

Book :14


سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنِ القُنُوتِ، فَقَالَ: قَدْ كَانَ القُنُوتُ قُلْتُ: قَبْلَ الرُّكُوعِ أَوْ بَعْدَهُ؟ قَالَ: قَبْلَهُ، قَالَ: فَإِنَّ فُلاَنًا أَخْبَرَنِي عَنْكَ أَنَّكَ قُلْتَ بَعْدَ الرُّكُوعِ، فَقَالَ: «كَذَبَ إِنَّمَا قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ الرُّكُوعِ شَهْرًا، أُرَاهُ كَانَ بَعَثَ قَوْمًا يُقَالُ لَهُمْ القُرَّاءُ، زُهَاءَ سَبْعِينَ رَجُلًا، إِلَى قَوْمٍ مِنَ المُشْرِكِينَ دُونَ أُولَئِكَ، وَكَانَ بَيْنَهُمْ وَبَيْنَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَهْدٌ، فَقَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا يَدْعُو عَلَيْهِمْ»


Bukhari-1001

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7

(தொழுகையில்) ருகூஉவுக்கு முன்பும் பின்பும் குனூத் (எனும் சிறப்பு துஆ) ஓதுதல். 

1001. முஹம்மது பின் ஸீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஸுப்ஹில் குனூத் ஓதி இருக்கிறார்களா? என்று அனஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ‘ஆம்’ என்றனர்.

‘ருகூவுக்கு முன்பு குனூத் ஓதி இருக்கிறார்களா?’ என்று மீண்டும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு ‘ருகூவுக்குப் பின்பு சிறிது காலம் (அதாவது ஒரு மாத காலம்) நபி (ஸல்) அவர்கள் குனூத் ஓதினார்கள் என விடையளித்தார்கள்.

அத்தியாயம்: 14


سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ: أَقَنَتَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصُّبْحِ؟ قَالَ: نَعَمْ، فَقِيلَ لَهُ: أَوَقَنَتَ قَبْلَ الرُّكُوعِ؟ قَالَ: «بَعْدَ الرُّكُوعِ يَسِيرًا»


Bukhari-1000

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 6

பயணத்தில் வித்ருத் தொழுவது. 

1000. இப்னு உமர் (ரலி) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பயணத்தின்போது வாகனத்தின் மீதமர்ந்து தொழுவார்கள். கடமையான தொழுகை தவிர. (உபரியான) இரவுத் தொழுகைகளை வாகனம் எத்திசையில் சென்றாலும் தொழுது கொண்டிருப்பார்கள். தம் வாகனத்தின் மீதமர்ந்தே வித்ரும் தொழுவார்கள்.

அத்தியாயம்: 14


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  يُصَلِّي فِي السَّفَرِ عَلَى رَاحِلَتِهِ، حَيْثُ تَوَجَّهَتْ بِهِ يُومِئُ إِيمَاءً صَلاَةَ اللَّيْلِ، إِلَّا الفَرَائِضَ وَيُوتِرُ عَلَى رَاحِلَتِهِ»


Bukhari-999

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5

வாகனப் பிராணியின் மீது அமர்ந்தவாறு வித்ருத் தொழுகை தொழுவது. 

999. ஸயீத் இப்னு யஸார் அறிவித்தார்

நான் மக்கா செல்லும் வழியில் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) உடன் இரவு பயணம் மேற்கொண்டுடிருந்தேன் ஸுப்ஹை (நெருங்குவதை) அஞ்சிய நான் வாகனத்திலிருந்து இறங்கி வித்ருத் தொழுதுவிட்டுப் பின்னர் அவர்களுடன் சேர்ந்து கொண்டேன் அப்போது அவர்கள் எங்கே சென்றிருந்தீர் என்று கேட்டனர் நான் ஸுப்ஹை அஞ்சி வாகனத்திலிருந்து இறங்கி வித்ருத் தொழுதேன் என்றேன் அதற்கவர்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உமக்கு அழகிய முன்மாதிரி இல்லையா? என்று கேட்டார்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக இருக்கிறது என்றேன் அப்போது இப்னு உமர்(ரலி) நபி(ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து வித்ருத் தொழுதிருக்கிறார்கள் எனக் கூறினார்கள்.
Book : 14


كُنْتُ أَسِيرُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بِطَرِيقِ مَكَّةَ، فَقَالَ سَعِيدٌ: فَلَمَّا خَشِيتُ الصُّبْحَ نَزَلْتُ، فَأَوْتَرْتُ، ثُمَّ لَحِقْتُهُ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ: أَيْنَ كُنْتَ؟ فَقُلْتُ: خَشِيتُ الصُّبْحَ، فَنَزَلْتُ، فَأَوْتَرْتُ، فَقَالَ عَبْدُ اللَّهِ: أَلَيْسَ لَكَ فِي رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِسْوَةٌ حَسَنَةٌ؟ فَقُلْتُ: بَلَى وَاللَّهِ، قَالَ: «فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُوتِرُ عَلَى البَعِيرِ»


Bukhari-998

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 4

ஒருவர் தமது நாளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளட்டும். 

998. நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்:

இரவுகளின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 14


«اجْعَلُوا آخِرَ صَلاَتِكُمْ بِاللَّيْلِ وِتْرًا»


Bukhari-997

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3 நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாரை வித்ருத் தொழுகைக்காக உறக்கத்திலிருந்து எழுப்பியது. 

997. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களின் விரிப்பில் குறுக்கே உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது நபி(ஸல்) அவர்கள் வித்ரு தொழ எண்ணும்போது என்னை எழுப்புவார்கள். நானும் தொழுவேன்.
Book : 14


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَأَنَا رَاقِدَةٌ مُعْتَرِضَةً عَلَى فِرَاشِهِ، فَإِذَا أَرَادَ أَنْ يُوتِرَ أَيْقَظَنِي، فَأَوْتَرْتُ»


Bukhari-996

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

996. ஆயிஷா (ரலி) அறிவித்தார்:

இரவின் எல்லா நேரங்களிலும் நபி(ஸல்) அவர்கள் வித்ருத் தொழுகிறார்கள். (சில சமயம்) அவர்களின் வித்ரு ஸஹர் வரை நீண்டுவிடும்.

அத்தியாயம்: 14


«كُلَّ اللَّيْلِ أَوْتَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَانْتَهَى وِتْرُهُ إِلَى السَّحَرِ»


Bukhari-995

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 2

வித்ருத் தொழுகையின் நேரம்.

தூங்குவதற்கு முன் வித்ருத் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். 

995. அனஸ் இப்னு ஸீரின் அறிவித்தார்.

ஃபஜ்ருத் தொழுகைக்கு முன்னுள்ள (ஸுன்னத்) இரண்டு ரக்அத்களில் நீண்ட அத்தியாயங்களை நாங்கள் ஓதலாமா? என்று இப்னு உமர்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு ‘நபி(ஸல்) அவர்கள் இரவில் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுவார்கள். ஒரு ரக்அத்தைக் கொண்டு அவற்றை ஒற்றையாக்குவார்கள். பாங்கு சொல்லி முடித்தவுடன் விரைந்து இரண்டு ரக்அத்களைத் தொழுவார்கள்’ என இப்னு உமர்(ரலி) கூறினார்.

அத்தியாயம்:14


قُلْتُ لِابْنِ عُمَرَ: أَرَأَيْتَ الرَّكْعَتَيْنِ قَبْلَ صَلاَةِ الغَدَاةِ أُطِيلُ فِيهِمَا القِرَاءَةَ، فَقَالَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، وَيُوتِرُ بِرَكْعَةٍ، وَيُصَلِّي الرَّكْعَتَيْنِ قَبْلَ صَلاَةِ الغَدَاةِ، وَكَأَنَّ الأَذَانَ بِأُذُنَيْهِ»


Bukhari-994

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

994. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத்கள் தொழுபவர்களாக இருந்தனர். அதுவே அவர்களின் இரவுத் தொழுகையாக இருந்தது. அத்தொழுகையில் ஒரு ஸஜ்தாவை உங்களில் ஒருவர் ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் நீட்டுவார்கள். ஃபஜ்ருத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். முஅத்தின் (ஃபஜர்) தொழுகைக்கு (அழைக்க) அவர்களிடம் வரும் வரை வலப்புறம் சாய்ந்து படுத்திருப்பார்கள்.
Book :14


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي إِحْدَى عَشْرَةَ رَكْعَةً، كَانَتْ تِلْكَ صَلاَتَهُ – تَعْنِي بِاللَّيْلِ – فَيَسْجُدُ السَّجْدَةَ مِنْ ذَلِكَ قَدْرَ مَا يَقْرَأُ أَحَدُكُمْ خَمْسِينَ آيَةً قَبْلَ أَنْ يَرْفَعَ رَأْسَهُ، وَيَرْكَعُ رَكْعَتَيْنِ قَبْلَ صَلاَةِ الفَجْرِ، ثُمَّ يَضْطَجِعُ عَلَى شِقِّهِ الأَيْمَنِ حَتَّى يَأْتِيَهُ المُؤَذِّنُ لِلصَّلاَةِ»


Next Page » « Previous Page