Author: Farook

Bukhari-993

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

993. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களே! நீ முடித்துக் கொள்ள நாடினால் ஒரு ரக்அத்தைத் தொழு! அது முன்னர் தொழுததை ஒற்றையாக ஆக்கி விடும்.’
என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

(இரண்டாவது அறிவிப்பாளராகிய) காஸிம், ‘மக்கள் மூன்று ரக்அத்களை வித்ராகத் தொழுவதை நாம் காண்கிறோம். எல்லாமே அனுமதிக்கப் பட்டது தாம். இதில் எப்படிச் செய்தாலும் குற்றமில்லை என கருதுகிறேன்’ என்று குறிப்பிட்டார்கள்.
Book :14


«صَلاَةُ اللَّيْلِ مَثْنَى  مَثْنَى، فَإِذَا أَرَدْتَ أَنْ تَنْصَرِفَ، فَارْكَعْ رَكْعَةً تُوتِرُ لَكَ مَا صَلَّيْتَ» قَالَ القَاسِمُ: «وَرَأَيْنَا أُنَاسًا مُنْذُ أَدْرَكْنَا يُوتِرُونَ بِثَلاَثٍ، وَإِنَّ كُلًّا لَوَاسِعٌ أَرْجُو أَنْ لاَ يَكُونَ بِشَيْءٍ مِنْهُ بَأْسٌ»


Bukhari-992

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

992. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

என்னுடைய சிறிய தாயார் மைமூனா(ரலி) அவர்களின் வீட்டில் நான் ஒரு நாள் இரவு தங்கினேன். நான் தலையணையின் பக்கவாட்டில் சாய்ந்து தூங்கினேன். நபி(ஸல்) அவர்களும் அவர்களின் மனைவியும் தூங்கினார்கள். இரவின் பாதி வரை கொஞ்சம் முன் பின்னாக இருக்கலாம். நபி(ஸல்) தூங்கினார்கள். பின்னர் விழித்து தங்களின் கையால் முகத்தைத் தடவித் தூக்கக் கலக்கத்தைப் போக்கினார்கள்.

பின்னர் ஆலு இம்ரான் என்ற அத்தியாயத்தின் இறுதியிலுள்ள பத்து வசனங்களை ஓதினார்கள். பின்னர் எழுந்து சென்று தொங்கவிடப் பட்டிருந்த பழைய தோல் பையிலிருந்து (தண்ணீர்) எடுத்து உளூச் செய்தார்கள். அவர்களின் உளூவை நல்ல முறையில் செய்தார்கள். பின்னர் தொழுவதற்காக எழுந்தார்கள். நானும் எழுந்து நபி(ஸல்) அவர்கள் செய்தது போன்று (உளூச்) செய்துவிட்டு நபி(ஸல்) அவர்களின் அருகில் போய் நின்றேன். அவர்கள் தங்கள் வலக்கரத்தை என் தலை மீது வைத்தார்கள். என்னுடைய காதைப் பிடித்து (அவர்களின் வலப்பக்கம்) நிறுத்தினார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும் இரண்டு ரக்அத்கள், மீண்டும் இரண்டு ரக்அத்கள், இன்னும் இரண்டு ரக்அத்கள் மறுபடியும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு வித்ருத் தொழுதார்கள். பின்னர் பாங்கு சொல்பவர் வரும் வரை சாய்ந்து படுத்தார்கள்.

أَنَّهُ بَاتَ عِنْدَ مَيْمُونَةَ وَهِيَ خَالَتُهُ فَاضْطَجَعْتُ فِي عَرْضِ وِسَادَةٍ «وَاضْطَجَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَهْلُهُ فِي طُولِهَا، فَنَامَ حَتَّى انْتَصَفَ اللَّيْلُ – أَوْ قَرِيبًا مِنْهُ – فَاسْتَيْقَظَ يَمْسَحُ النَّوْمَ عَنْ وَجْهِهِ، ثُمَّ قَرَأَ عَشْرَ آيَاتٍ مِنْ آلِ عِمْرَانَ، ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى شَنٍّ مُعَلَّقَةٍ، فَتَوَضَّأَ، فَأَحْسَنَ الوُضُوءَ، ثُمَّ قَامَ يُصَلِّي»، فَصَنَعْتُ مِثْلَهُ، فَقُمْتُ إِلَى جَنْبهِ، «فَوَضَعَ يَدَهُ اليُمْنَى عَلَى رَأْسِي وَأَخَذَ بِأُذُنِي يَفْتِلُهَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ أَوْتَرَ، ثُمَّ اضْطَجَعَ حَتَّى جَاءَهُ المُؤَذِّنُ، فَقَامَ، فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ خَرَجَ، فَصَلَّى الصُّبْحَ»


Bukhari-991

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

991. நாஃபிவு அறிவித்தார்.

இப்னு உமர்(ரலி) (மூன்று ரக்அத்களில்) இரண்டு ரக்அத்களுக்கும் ஒரு ரக்அத்துக்குமிடையே ஸலாம் கொடுப்பார்கள். (அவ்விடைவெளியில்) தம் சில தேவைகள் பற்றியும் (குடும்பத்தினருக்குக்) கட்டளையிடுவார்கள்.
Book :14


«كَانَ يُسَلِّمُ بَيْنَ الرَّكْعَةِ وَالرَّكْعَتَيْنِ فِي الوِتْرِ حَتَّى يَأْمُرَ بِبَعْضِ حَاجَتِهِ»


Bukhari-990

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

வித்ருத் தொழுகை

பாடம்:1

வித்ருத் தொழுகை பற்றி வந்துள்ளவை.

990. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்:

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகை பற்றிக் கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகை பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்’ என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 14


أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَلاَةِ اللَّيْلِ، فَقَالَ رَسُولُ اللَّهِ عَلَيْهِ السَّلاَمُ: «صَلاَةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيَ أَحَدُكُمُ الصُّبْحَ صَلَّى رَكْعَةً وَاحِدَةً تُوتِرُ لَهُ مَا قَدْ صَلَّى»


Bukhari-989

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26 பெரு நாள் தொழுகைக்கு முன்பும் பின்பும் (வேறு தொழுகைகள்) தொழலாமா?

பெரு நாள் தொழுகைக்கு முன் (வேறு தொழுகைகள்) தொழுவதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வெறுப்பவர்களாக இருந்தனர் என சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

989. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அவர்களுடன் பிலாலும் சென்றனர்.
Book : 13


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ يَوْمَ الفِطْرِ، فَصَلَّى رَكْعَتَيْنِ لَمْ يُصَلِّ قَبْلَهَا وَلاَ بَعْدَهَا وَمَعَهُ بِلاَلٌ»


Bukhari-988

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

988. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

அபிஸீனிய வீரர்கள் பள்ளியில் வீர விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது நான் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் என்னை மறைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வீரர்களை உமர்(ரலி) விரட்டலானார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘(உமரே!) அவர்களை விட்டு விடும்’ என்று கூறிவிட்டு அபீ ஸீனியர்களை நோக்கி ‘அர்பிதாவின் மக்களே! அச்சமின்றி விளையாடுங்கள்!’ என்று கூறினார்கள்.
Book :13


رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتُرُنِي وَأَنَا أَنْظُرُ إِلَى الحَبَشَةِ وَهُمْ يَلْعَبُونَ فِي المَسْجِدِ فَزَجَرَهُمْ عُمَرُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْهُمْ أَمْنًا بَنِي أَرْفِدَةَ» يَعْنِي مِنَ الأَمْنِ


Bukhari-987

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25 பெரு நாள் தொழுகை தவறிவிட்டால் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும்.

(பெரு நாள் தொழுகை தொழச் செல்லா)பெண்களும், வீடுகளிலும் குக்கிராமங்களில் இருப்போரும் இவ்வாறே செயல்படவேண்டும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், இது இஸ்லாமியர்களான நமது பெரு நாளாகும் என்று கூறியுள்ளார்கள்.

(பெரு நாள் தொழுகை தவறிவிட்ட போது) அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் தம்முடைய அடிமை இப்னு அபீஉத்பாவுக்கு ஆணையிட்டு (பஸ்ராவிலிருந்து ஆறுமைல் தொலைவிலிருந்த) ஸாவியா எனும் இடத்தில் தம் மனைவி மக்களைத் திரட்டி நகரவாசிகள் தொழுவது போன்று (இரண்டு ரக்அத்கள்) தொழு(வித்)தார்கள்; அவர்கள் தக்பீர் சொல்வது போன்றே தக்பீர் சொன்னார்கள்.

கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் பெரு நாள் தினத்தில் ஒன்று கூடி இமாம் செய்வது போன்றே இரண்டு ரக்அத்கள் தொழவேண்டும் என இக்ரிமா (ரஹ்)அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஒருவருக்கு பெரு நாள் தொழுகை தவறி விட்டால் அவர் (தனியாக) இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும் என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். 

987. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

என் அருகே இரண்டு சிறுமியர் ‘தஃப்’ எனும் ‘கொட்டு’ அடித்துக் கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள் தம் ஆடையால் போர்த்திக் கொண்டிருந்தனர்.

أَنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا جَارِيَتَانِ فِي أَيَّامِ مِنَى تُدَفِّفَانِ، وَتَضْرِبَانِ، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَغَشٍّ بِثَوْبِهِ، فَانْتَهَرَهُمَا أَبُو بَكْرٍ، فَكَشَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ وَجْهِهِ، فَقَالَ: «دَعْهُمَا يَا أَبَا بَكْرٍ، فَإِنَّهَا أَيَّامُ عِيدٍ، وَتِلْكَ الأَيَّامُ أَيَّامُ مِنًى»


Bukhari-986

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24 பெரு நாள் தொழுகை தொழச் சென்றவர் தொழுது விட்டு திரும்பும் போது வேறு பாதையில் வருவது. 

986. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

பெருநாள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள்.
Book : 13


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ يَوْمُ عِيدٍ خَالَفَ الطَّرِيقَ»


Bukhari-985

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

985. ஜுன்தப்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். பிறகு பலியிட்டார்கள். ‘தொழுகைக்கு முன் அறுத்தவர் மற்றொன்றை அறுக்கட்டும்! அறுக்காதவர் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கட்டும்’ என்றார்கள்.
Book :13


صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ النَّحْرِ، ثُمَّ خَطَبَ، ثُمَّ ذَبَحَ، فَقَالَ: «مَنْ ذَبَحَ قَبْلَ أَنْ يُصَلِّيَ، فَلْيَذْبَحْ أُخْرَى مَكَانَهَا، وَمَنْ لَمْ يَذْبَحْ، فَلْيَذْبَحْ بِاسْمِ اللَّهِ»


Bukhari-984

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

984. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை தொழுகை நடத்திவிட்டு உரை நிகழ்த்தினார்கள். தொழுகைக்கு முன் (குர்பானிப் பிராணிகளை) அறுத்தவர் மீண்டும் அறுக்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது அன்ஸார்களைச் சேர்ந்த ஒருவர் எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! எனக்கு வறுமை நிறைந்த அண்டை வீட்டார் உள்ளனர். (அவர்களுக்கு முன்பே நான் அறுத்து விட்டேன் என்னிடம் கொழுத்த இரண்டு ஆடுகளை விட விருப்பமான ஆறு மாதக் குட்டி ஒன்று உள்ளது. (அதை அறுக்கலாமா?) என்று கேட்டார். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.
Book :13


«إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى يَوْمَ النَّحْرِ، ثُمَّ خَطَبَ، فَأَمَرَ مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ أَنْ يُعِيدَ ذَبْحَهُ»، فَقَامَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، جِيرَانٌ لِي – إِمَّا قَالَ: بِهِمْ خَصَاصَةٌ، وَإِمَّا قَالَ: بِهِمْ فَقْرٌ – وَإِنِّي ذَبَحْتُ قَبْلَ الصَّلاَةِ، وَعِنْدِي عَنَاقٌ لِي أَحَبُّ إِلَيَّ مِنْ شَاتَيْ لَحْمٍ، «فَرَخَّصَ لَهُ فِيهَا»


Next Page » « Previous Page