Author: Farook

Bukhari-923

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

923. அம்ர் இப்னு தக்லீபு(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் சில பொருள்கள் அல்லது கைது செய்யப் பட்டவர்கள் கொண்டு வரப்பட்டுப் பங்கிட்டுக் கொடுத்தபோது சிலருக்குக் கொடுத்தும் வேறு சிலருக்குக் கொடுக்காமலும்விட்டுவிட்டனர்.

யாருக்குக் கொடுக்காமல்விட்டுவிட்டார்களோ அவர்கள் குறை கூறுவதாக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்தபோது, ‘அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு ‘அம்மாபஃது’ எனக் கூறி ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் சிலருக்குக் கொடுக்கிறேன். (கொடுக்காமல்) யாரைவிட்டு விடுகிறேனோ அவர் நான் கொடுப்பவரை விட எனக்கு விருப்பமானவர். அவர்களின் உள்ளத்தில் அதிர்ச்சியும் பயமும் இருப்பதை நான் அறிந்த காரணத்தினாலேயே நான் சிலருக்குக் கொடுக்கிறேன். வேறு சிலரின் உள்ளங்களில் போதுமென்ற பண்பையும் நல்ல குணத்தையும் (கண்டு) அவர்களை விட்டு விடுகிறேன். இவர்களில் அம்ர் இப்னு தக்லீபும் ஒருவராவார்’ என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக, நபி(ஸல்) அவர்கள் என்னைப் பற்றிக் கூறிய இந்த வார்த்தை சிகப்பு நிற ஒட்டகம் எனக்குக் கிடைப்பதை விட விருப்பமானதாக அமைந்தது.
Book :11


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِمَالٍ – أَوْ سَبْيٍ – فَقَسَمَهُ، فَأَعْطَى رِجَالًا وَتَرَكَ رِجَالًا، فَبَلَغَهُ أَنَّ الَّذِينَ تَرَكَ عَتَبُوا، فَحَمِدَ اللَّهَ، ثُمَّ أَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: «أَمَّا بَعْدُ فَوَاللَّهِ إِنِّي لَأُعْطِي الرَّجُلَ، وَأَدَعُ الرَّجُلَ، وَالَّذِي أَدَعُ أَحَبُّ إِلَيَّ مِنَ الَّذِي  أُعْطِي، وَلَكِنْ أُعْطِي أَقْوَامًا لِمَا أَرَى فِي قُلُوبِهِمْ مِنَ الجَزَعِ وَالهَلَعِ، وَأَكِلُ أَقْوَامًا إِلَى مَا جَعَلَ اللَّهُ فِي قُلُوبِهِمْ مِنَ الغِنَى وَالخَيْرِ، فِيهِمْ عَمْرُو بْنُ تَغْلِبَ» فَوَاللَّهِ مَا أُحِبُّ أَنَّ لِي بِكَلِمَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حُمْرَ النَّعَمِ


Bukhari-922

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 29 உரை நிகழ்த்தும் போது இறைவனைப் புகழ்ந்தபின் அம்மா பஅத் (இறை வாழ்த்துக்குப் பின்…) என்று கூறுவது.

நபி (ஸல்) அவர்கள் (இவ்வாறு கூறியது) குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து இக்ரிமா (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (குறிப்பு: காண்க பின்வரும் ஹதீஸ்-927) 

922. அஸ்மா(ரலி) அறிவித்தார்.

மக்கள் (கிரகணத் தொழுகை) தொழுது கொண்டிருந்தபோது நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று மக்களுக்கு என்ன என்று அவர்களிடம் கேட்டேன். ஆயிஷா(ரலி) தம் தலையால் வானை நோக்கிச் சைகை செய்தார்கள். இது ஏதாவது அடையாளமா? என்று கேட்டேன். ‘ஆம்’ எனத் தலையால் சைகை செய்தார்கள்.

எனக்கு மயக்கம் ஏற்படும் அளவுக்குத் தொழுகையை நபி(ஸல்) அவர்கள் நன்கு நீட்டினார்கள். என் விலாப் புறத்தில் தண்ணீர் நிரம்பிய தோல்பை ஒன்றிருந்தது. அதைத் திறந்து (மயக்கம் நீங்க) என் தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டேன். கிரகணம் நீங்கியபோது நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்தார்கள். பின்னர் மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். பிறகு ‘அம்மாபஃது’ என்று கூறினார்கள்.

அன்ஸாரிப் பெண்களில் சிலர் கூச்சலிட்டனர். அவர்களை அமைதிப் படுத்துவதற்காக நான் சென்றேன். பின்னர் ஆயிஷா(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் என்ன உரையாற்றினார்கள் என்று கேட்டேன்.

دَخَلْتُ عَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، وَالنَّاسُ يُصَلُّونَ، قُلْتُ: مَا شَأْنُ النَّاسِ، فَأَشَارَتْ بِرَأْسِهَا: إِلَى السَّمَاءِ، فَقُلْتُ: آيَةٌ؟ فَأَشَارَتْ بِرَأْسِهَا: أَيْ نَعَمْ، قَالَتْ: فَأَطَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جِدًّا حَتَّى تَجَلَّانِي الغَشْيُ، وَإِلَى جَنْبِي قِرْبَةٌ فِيهَا مَاءٌ، فَفَتَحْتُهَا، فَجَعَلْتُ أَصُبُّ مِنْهَا عَلَى رَأْسِي، فَانْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ تَجَلَّتِ الشَّمْسُ، فَخَطَبَ النَّاسَ، وَحَمِدَ اللَّهَ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ قَالَ: «أَمَّا بَعْدُ» قَالَتْ: – وَلَغَطَ نِسْوَةٌ مِنَ الأَنْصَارِ، فَانْكَفَأْتُ إِلَيْهِنَّ لِأُسَكِّتَهُنَّ، فَقُلْتُ لِعَائِشَةَ: مَا قَالَ؟ قَالَتْ: قَالَ -: ” مَا مِنْ شَيْءٍ لَمْ أَكُنْ أُرِيتُهُ إِلَّا قَدْ رَأَيْتُهُ فِي مَقَامِي هَذَا، حَتَّى الجَنَّةَ وَالنَّارَ، وَإِنَّهُ قَدْ أُوحِيَ إِلَيَّ أَنَّكُمْ تُفْتَنُونَ فِي القُبُورِ، مِثْلَ – أَوْ قَرِيبَ مِنْ – فِتْنَةِ المَسِيحِ الدَّجَّالِ، يُؤْتَى أَحَدُكُمْ فَيُقَالُ لَهُ: مَا عِلْمُكَ بِهَذَا الرَّجُلِ؟ فَأَمَّا المُؤْمِنُ – أَوْ قَالَ: المُوقِنُ شَكَّ هِشَامٌ – فَيَقُولُ: هُوَ رَسُولُ اللَّهِ، هُوَ مُحَمَّدٌ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، جَاءَنَا بِالْبَيِّنَاتِ وَالهُدَى، فَآمَنَّا وَأَجَبْنَا وَاتَّبَعْنَا وَصَدَّقْنَا، فَيُقَالُ لَهُ: نَمْ صَالِحًا قَدْ كُنَّا نَعْلَمُ إِنْ كُنْتَ لَتُؤْمِنُ بِهِ، وَأَمَّا المُنَافِقُ – أَوْ قَالَ: المُرْتَابُ، شَكَّ هِشَامٌ – فَيُقَالُ لَهُ: مَا عِلْمُكَ بِهَذَا الرَّجُلِ؟ فَيَقُولُ: لاَ أَدْرِي، سَمِعْتُ النَّاسَ يَقُولُونَ شَيْئًا فَقُلْتُ


Bukhari-921

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 28 இமாம் சொற்பொழிவாற்றும் போது அவர் மக்களையும் மக்கள் அவரையும் முன்னோக்க வேண்டும்.

இப்னு உமர் (ரலி), அனஸ் (ரலி) ஆகியோர் இமாமை முன்னோக்குபவர்களாக இருந்தனர். 

921. அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் மிம்பர் மீது அமர்ந்தனர். நாங்கள் (கீழே) அவர்களைச் சுற்றி அமர்ந்தோம்.
Book : 11


«إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَلَسَ ذَاتَ يَوْمٍ عَلَى المِنْبَرِ وَجَلَسْنَا حَوْلَهُ»


Bukhari-920

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 27 நின்று கொண்டு சொற்பொழிவாற்றுவது.

நபி (ஸல்) அவர்கள் (ஜுமுஆவில்) நின்று கொண்டு உரையாற்றினார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். (குறிப்பு: காண்க: பின்வரும் ஹதீஸ்-1013, 1014) 

920. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நீங்கள் இப்போது செய்து வருவது போன்றே நபி(ஸல்) அவர்கள் நின்ற நிலையில் உரை நிகழ்த்திவிட்டுப் பிறகு உட்கார்ந்து, பிறகு எழக்கூடியவர்களாக இருந்தனர்.
Book : 11


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ قَائِمًا، ثُمَّ يَقْعُدُ، ثُمَّ يَقُومُ كَمَا تَفْعَلُونَ الآنَ»


Bukhari-919

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

919. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

‘ஜும்ஆவுக்கு வருபவர் குளித்துக் கொள்ளட்டும்’ என்று மிம்பரில் நின்று உரையாற்றும்போது நபி(ஸல்) கூறினார்கள்.
Book :11


«مَنْ جَاءَ إِلَى الجُمُعَةِ، فَلْيَغْتَسِلْ»


Bukhari-918

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

918. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்  (ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் நின்று கொள்வதற்காகப் பேரீச்ச மரத்தின் கட்டை ஒன்று இருந்தது. மிம்பர் செய்யப்பட்ட பின் அந்தப் பேரீச்ச மரக்கட்டையிலிருந்து சூல் கொண்ட ஒட்டகத்தின் சப்தம் போன்றதை நாங்கள் செவியுற்றோம். நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்கி அதன் மீது தம் கையை வைக்கும் வரை (அந்தச் சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது).
Book :11


«كَانَ جِذْعٌ يَقُومُ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا وُضِعَ لَهُ المِنْبَرُ سَمِعْنَا لِلْجِذْعِ مِثْلَ أَصْوَاتِ العِشَارِ حَتَّى نَزَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَوَضَعَ يَدَهُ عَلَيْهِ»


Bukhari-917

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26 சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது நின்று உரை நிகழ்த்துவது.

நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது (நின்றபடி) உரையாற்றினார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். 

917. அபூ ஹாஸிம் இப்னு தீனார் அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் மிம்பர் எந்த மரத்தினாலானது என்று சர்ச்சை செய்த நிலையில் சில மனிதர்கள் ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அவர்களிடம் வந்து இது பற்றிக் கேட்டனர். அதற்கு ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக அது எந்த மரத்தினாலானது என்பதை அறிவேன். அது தயாரிக்கப் பட்ட முதல் நாளிலேயே அதை நான் பார்த்துள்ளேன். நபி(ஸல்) அவர்கள் முதன் முதலில் அதில் அமர்ந்த நாளிலும் அதை நான் பார்த்திருக்கிறேன்’ என்று கூறிவிட்டுப் பின்வரும் நிகழ்ச்சியைக் கூறலானார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு பெண்மணியிடம் — அப்பெண்மணியின் பெயரையும் ஸஹ்ல் குறிப்பிட்டார்கள். ஆளனுப்பி ‘நான் மக்களிடம் பேசும்போது அமர்ந்து கொள்வதற்காகத் ‘தச்சு வேலை தெரிந்த உன்வேலைக்காரரிடம் எனக்கொரு மேடை செய்து தரச் சொல்!’ எனச் சொல்லியனுப்பினார்கள். அப்பெண்மணி அவ்வாறே தம் ஊழியரிடம் கூறினார். மதீனாவின் சமீபத்தில் காபா எனும் பகுதியிலுள்ள கருவேல மரத்திலிருந்து அதைச் செய்து அவர் அப்பெண்ணிடம் கொண்டு

أَنَّ رِجَالًا أَتَوْا سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ، وَقَدْ امْتَرَوْا فِي المِنْبَرِ مِمَّ عُودُهُ، فَسَأَلُوهُ عَنْ ذَلِكَ، فَقَالَ: وَاللَّهِ إِنِّي لَأَعْرِفُ مِمَّا هُوَ، وَلَقَدْ رَأَيْتُهُ أَوَّلَ يَوْمٍ وُضِعَ، وَأَوَّلَ يَوْمٍ جَلَسَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَرْسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى فُلاَنَةَ – امْرَأَةٍ مِنَ الأَنْصَارِ قَدْ سَمَّاهَا سَهْلٌ – «مُرِي غُلاَمَكِ النَّجَّارَ، أَنْ يَعْمَلَ لِي أَعْوَادًا، أَجْلِسُ عَلَيْهِنَّ إِذَا كَلَّمْتُ النَّاسَ» فَأَمَرَتْهُ فَعَمِلَهَا مِنْ طَرْفَاءِ الغَابَةِ، ثُمَّ جَاءَ بِهَا، فَأَرْسَلَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَ بِهَا فَوُضِعَتْ هَا هُنَا، ثُمَّ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَيْهَا وَكَبَّرَ وَهُوَ عَلَيْهَا، ثُمَّ رَكَعَ وَهُوَ عَلَيْهَا، ثُمَّ نَزَلَ القَهْقَرَى، فَسَجَدَ فِي أَصْلِ المِنْبَرِ ثُمَّ عَادَ، فَلَمَّا فَرَغَ أَقْبَلَ عَلَى النَّاسِ، فَقَالَ: «أَيُّهَا النَّاسُ، إِنَّمَا صَنَعْتُ هَذَا لِتَأْتَمُّوا وَلِتَعَلَّمُوا صَلاَتِي»


Bukhari-916

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 25

சொற்பொழிவு (குத்பா) நிகழ்த்தும் போது பாங்கு சொல்வது. 

916. ஸாயிப் இப்னு யஸீத் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) காலங்களிலும் ஜும்ஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான் (ரலி) காலத்தில் மக்கள் பெருகியபோது கடை வீதியில் (பாங்கு இகாமத் தவிர) மூன்றாவது அழைப்பு அதிகமானது. இந்த நிலைபெற்றுவிட்டது.

அத்தியாயம்: 11


«إِنَّ الأَذَانَ يَوْمَ الجُمُعَةِ كَانَ أَوَّلُهُ حِينَ يَجْلِسُ الإِمَامُ، يَوْمَ الجُمُعَةِ عَلَى المِنْبَرِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فَلَمَّا كَانَ فِي خِلاَفَةِ عُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، وَكَثُرُوا، أَمَرَ عُثْمَانُ يَوْمَ الجُمُعَةِ بِالأَذَانِ الثَّالِثِ، فَأُذِّنَ بِهِ عَلَى الزَّوْرَاءِ، فَثَبَتَ الأَمْرُ عَلَى ذَلِكَ»


Bukhari-915

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24 பாங்கு சொல்லும் போது இமாம் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்திருப்பது. 

915. ஸாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.

மக்கள் பெருகியபோது ஜும்ஆ நாளின் இரண்டாம் அறிவிப்பை உஸ்மான்(ரலி) ஏற்படுத்தினார்கள். (அதற்கு முன்னர்) இமாம் அமரும்போது பாங்கு சொல்வது மட்டுமே இருந்தது.
Book : 11


أَنَّ «التَّأْذِينَ الثَّانِيَ يَوْمَ الجُمُعَةِ، أَمَرَ بِهِ عُثْمَانُ بْنُ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، حِينَ كَثُرَ أَهْلُ المَسْجِدِ، وَكَانَ التَّأْذِينُ يَوْمَ الجُمُعَةِ حِينَ يَجْلِسُ الإِمَامُ»


Bukhari-914

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 23

பாங்கைக் கேட்கும் போது சொற்பொழிவு மேடையில் அமர்ந்துள்ள இமாமும் அதற்கு பதில் கூறவேண்டும். 

914. அபூஉமாமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஆவியா (ரலி) மிம்பரில் அமர்ந்திருந்தபோது முஅத்தின் பாங்கு சொன்னார். அவர் ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்’ என்று கூறியதும் முஆவியா (ரலி)வும் ‘அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்’ என்றார்கள். முஅத்தின் ‘அஷ்ஹது அல் லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறியதும் ‘நானும் (அவ்வாறே நம்புகிறேன்)’ எனக் கூறினார்கள். முஅத்தின் ‘அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ்’ எனக் கூறியதும் ‘நானும்’ என்றார்கள்.

பாங்கு சொல்லி முடித்தும், ‘மக்களே! முஅத்தின் பாங்கு சொன்னபோது நான் கூறிய இதே வார்த்தையை இதே இடத்தில் நபி (ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்’ என்று முஆவியா (ரலி) குறிப்பிட்டார்கள்.

அத்தியாயம்: 11


سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ، وَهُوَ جَالِسٌ عَلَى المِنْبَرِ، أَذَّنَ المُؤَذِّنُ، قَالَ: اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ، قَالَ مُعَاوِيَةُ: «اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ»، قَالَ: أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، فَقَالَ مُعَاوِيَةُ: «وَأَنَا»، فَقَالَ: أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَقَالَ مُعَاوِيَةُ: «وَأَنَا»، فَلَمَّا أَنْ قَضَى التَّأْذِينَ، قَالَ: يَا أَيُّهَا النَّاسُ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى هَذَا المَجْلِسِ، «حِينَ أَذَّنَ المُؤَذِّنُ، يَقُولُ مَا سَمِعْتُمْ مِنِّي مِنْ مَقَالَتِي»


Next Page » « Previous Page