Author: Farook

Bukhari-913

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் 22 ஜுமுஆ நாளில் ஒரேயொரு தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்)தாம் பாங்கு சொல்லவேண்டும். 

913. ஸாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.

ஜும்ஆ நாளில் மூன்றாவது அறிவிப்பை அதிகப் படுத்தியவர் உஸ்மான்(ரலி) ஆவார். மதீனாவாசிகள் பெருகியபோது (இவ்வாறு செய்தார்கள்) நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு முஅத்தின் மட்டுமே இருந்தார். இமாம் மிம்பரில் அமர்ந்த நேரத்தில் ஜும்ஆவின் பாங்கு அமைந்திருந்தது.
Book : 11


«أَنَّ الَّذِي زَادَ التَّأْذِينَ الثَّالِثَ يَوْمَ الجُمُعَةِ عُثْمَانُ بْنُ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، حِينَ كَثُرَ أَهْلُ المَدِينَةِ وَلَمْ يَكُنْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُؤَذِّنٌ غَيْرَ وَاحِدٍ، وَكَانَ التَّأْذِينُ يَوْمَ الجُمُعَةِ حِينَ يَجْلِسُ الإِمَامُ» يَعْنِي عَلَى المِنْبَرِ


Bukhari-912

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 21 ஜுமுஆவின் பாங்கு. 

912. ஸாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் காலத்திலும் அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) காலங்களிலும் ஜும்ஆ நாளில் இமாம் மிம்பரில் அமர்ந்த பின் பாங்கு சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான்(ரலி) காலத்தில் மக்கள் பெருகியபோது கடை வீதியில் (பாங்கு, இகாமத் தவிர) மூன்றாவது அழைப்பு அதிகமானது.
Book : 11


«كَانَ النِّدَاءُ يَوْمَ الجُمُعَةِ أَوَّلُهُ إِذَا جَلَسَ الإِمَامُ عَلَى المِنْبَرِ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فَلَمَّا كَانَ عُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُ، وَكَثُرَ النَّاسُ زَادَ النِّدَاءَ الثَّالِثَ عَلَى الزَّوْرَاءِ»


Bukhari-911

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 20 ஜுமுஆ நாளில் ஒருவர் தம் சகோதரரை எழுப்பிவிட்டு அந்த இடத்தில் தாம் அமரக் கூடாது. 

911. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் தம் சகோதரரை அவரின் இடத்திலிருந்து கிளப்பிவிட்டு அவ்விடத்தில் உட்கார்வதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளனர்.

ஜும்ஆவிலா? என்று நாஃபிவு இடம் தாம் கேட்டபோது, ஜும்ஆவிலும் ஜும்ஆ அல்லாத மற்ற சமயங்களிலும் தான்’ என்று நாஃபிவு விடையளித்ததாக இப்னு ஜுரைஜ் குறிப்பிடுகிறார்.
Book : 11


«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُقِيمَ الرَّجُلُ أَخَاهُ مِنْ مَقْعَدِهِ، وَيَجْلِسَ فِيهِ»، قُلْتُ لِنَافِعٍ: الجُمُعَةَ؟ قَالَ: الجُمُعَةَ وَغَيْرَهَا


Bukhari-910

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 19

ஜுமுஆ நாளில் (பள்ளிக்குள் நுழையும் போது சேர்ந்து அமர்ந்திருக்கும்) இருவரைப் பிரிக்கக் கூடாது. 

910. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜும்ஆ நாளில் ஒருவர் குளித்து, இயன்றவரை தூய்மையாகிப் பிறகு எண்ணெய் தேய்த்து நறுமணம் பூசி, (ஜும்ஆவுக்குப்) புறப்பட்டு (அமர்ந்திருக்கும்) இருவரைப் பிரிக்காமல் அவருக்கு விதிக்கப் பட்டதைத் தொழுது, பிறகு இமாம் வந்ததும் மவுனம் காத்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடைப் பட்ட குற்றங்கள் மன்னிக்கப்படும்.

அறிவிப்பவர்: ஸல்மான் ஃபாரிஸீ (ரலி)

அத்தியாயம்: 11


«مَنِ اغْتَسَلَ يَوْمَ الجُمُعَةِ، وَتَطَهَّرَ بِمَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ، ثُمَّ ادَّهَنَ أَوْ مَسَّ مِنْ طِيبٍ، ثُمَّ رَاحَ فَلَمْ يُفَرِّقْ بَيْنَ اثْنَيْنِ، فَصَلَّى مَا كُتِبَ لَهُ، ثُمَّ إِذَا خَرَجَ الإِمَامُ أَنْصَتَ، غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الجُمُعَةِ الأُخْرَى»


Bukhari-909

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

909. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘என்னை நீங்கள் காணும் வரை (தொழுவதற்காக) எழாதீர்கள்! நிதானத்தைப் கடைப்பிடியுங்கள்.’ என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.
Book :11


«لاَ تَقُومُوا حَتَّى تَرَوْنِي، وَعَلَيْكُمُ السَّكِينَةُ»


Bukhari-908

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

908. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் ஓடி வராதீர்கள். நடந்தே வாருங்கள். நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். கிடைத்ததைத் தொழுங்கள். தவறியதைப் பூர்த்தி செய்யுங்கள்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :11


«إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ ، فَلاَ تَأْتُوهَا تَسْعَوْنَ، وَأْتُوهَا تَمْشُونَ، عَلَيْكُمُ السَّكِينَةُ، فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا، وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا»


Bukhari-907

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 18 ஜுமுஆத் தொழுகைக்காக நடந்து வருவதும்,

ஜுமுஆவுடைய நாளில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் நீங்கள் விரைந்து செல்லுங்கள் எனும் (63:9ஆவது) இறை வசனமும்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) விரைவு (அஸ்ஸஃயு) எனும் சொல்லுக்கு ஜுமுஆவுக்காக தயாராகிச் செல்வது என்று பொருள் என சிலர் (விளக்கம்) கூறுகின்றனர்.

(இதே கருத்தில்தான்) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அந்த நேரத்தில் (தொழுகைக்காகத் தயாராகிச் செல்லாமல்) வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது விலக்கப்பட்டதாகும் (ஹராம்) என்று கூறினார்கள்.

அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் (அந்த நேரத்தில்) எல்லாவிதமான தொழில்களும் தடைசெய்யப்பட்டதாகும் என்று கூறியுள்ளார்கள்.

இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: ஜுமுஆவுடைய நாளில் ஒருவர் பயணம் செய்து கொண்டிருக்கும் போது தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) பாங்கு சொன்னால் ஜுமுஆவில் கலந்து கொள்வது (அதைச் செவியுற்ற) அந்தப் பயணியின் மீது அவசியமாகும். 

907. அபாயா இப்னு ரிஃபாஆ அறிவித்தார்.

நான் ஜும்ஆவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது அபூ அபஸ்(ரலி) என்னைச் சந்தித்தார்கள். அப்போது ‘இறைவழியில் எவருடைய பாதங்களில் புழுதி படிகிறதோ

أَدْرَكَنِي أَبُو عَبْسٍ وَأَنَا أَذْهَبُ إِلَى الجُمُعَةِ، فَقَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنِ اغْبَرَّتْ قَدَمَاهُ فِي سَبِيلِ اللَّهِ حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ»


Bukhari-906

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் 17 ஜுமுஆ நாளில் வெப்பம் கடுமையாக இருந்தால் (என்ன செய்ய வேண்டும்?) 

906. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் குளிர் கடுமையாக இருக்கும்போது ஜும்ஆத் தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவார்கள். கோடை கடுமையாக இருக்கும்போது ஜும்ஆவைத் தாமதமாக்குவார்கள்.

யூனுஸ் இப்னு புகைர் அறிவிக்கும் ஹதீஸில் ஜும்ஆ என்று கூறாமல் தொழுகை என்று கூறுகிறார்.

பிஷ்ரு இப்னு ஸாபித் அறிவிக்கும் ஹதீஸில் ‘எங்களுக்கு அமீர் ஜும்ஆத் தொழுகை நடத்தினார். பிறகு ஜும்ஆத் தொழுகை நடத்தினார். பிறகு அனஸ்(ரலி) அவர்களிடம் ‘நபி(ஸல்) அவர்கள் எப்போது லுஹர் தொழுவார்கள்’ என்று விசாரித்தார். (அதற்குத்தான் அனஸ்(ரலி) மேற்கண்டவாறு விடையளித்தார்கள்)’ எனக் குறிப்பிடுகிறார்.
Book : 11


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اشْتَدَّ البَرْدُ بَكَّرَ بِالصَّلاَةِ، وَإِذَا اشْتَدَّ الحَرُّ أَبْرَدَ بِالصَّلاَةِ»، يَعْنِي الجُمُعَةَ

قَالَ يُونُسُ بْنُ بُكَيْرٍ: أَخْبَرَنَا أَبُو خَلْدَةَ، فَقَالَ: بِالصَّلاَةِ وَلَمْ يَذْكُرِ الجُمُعَةَ، وَقَالَ بِشْرُ بْنُ ثَابِتٍ: حَدَّثَنَا أَبُو خَلْدَةَ، قَالَ: صَلَّى بِنَا أَمِيرٌ الجُمُعَةَ، ثُمَّ قَالَ لِأَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: كَيْفَ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الظُّهْرَ؟


Bukhari-905

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

905. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் ஜும்ஆவை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவோம். ஜும்ஆவுக்குப் பிறகு (கைலூலா எனும்) நண்பகல் உறக்கம் கொள்வோம்.

அத்தியாயம்: 11


«كُنَّا نُبَكِّرُ بِالْجُمُعَةِ وَنَقِيلُ بَعْدَ الجُمُعَةِ»


Bukhari-904

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

904. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

சூரியன் சாயும் நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆத் தொழுபவர்களாக இருந்தனர்.

அத்தியாயம்:11


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الجُمُعَةَ حِينَ تَمِيلُ الشَّمْسُ»


Next Page » « Previous Page