Author: Farook

Bukhari-903

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16 ஜுமுஆத் தொழுகையின் நேரம் சூரியன் உச்சி சாய்ந்ததும் (ஆரம்பிக்கிறது). இவ்வாறுதான் உமர் பின் அல்கத்தாப் (ரலி), அலீ (ரலி), நுஅமான் பின் பஷீர் (ரலி), அம்ர் பின் ஹுரைஸ் (ரலி) ஆகியோரிடமிருந்து அறிவிக்கப்படுகிறது. 

903. யஹ்யா இப்னு ஸயீத் அறிவித்தார்.

ஜும்ஆ நாளில் குளிப்பது பற்றி நான் அம்ராவிடம் கேட்டேன். அதற்கு அம்ரா ‘அன்றைய மக்கள் உழைப்பாளர்களாக இருந்தனர். அவர்கள் ஜும்ஆவுக்கு வரும்போது அதே கோலத்துடனேயே வந்து விடுவார்கள். இதனால்தான் நீங்கள் குளித்துக் கொள்ளலாமே என்று கூறப்பட்டது’ என ஆயிஷா(ரலி) கூறினார் என விடையளித்தார்.
Book : 11


كَانَ النَّاسُ مَهَنَةَ أَنْفُسِهِمْ، وَكَانُوا إِذَا رَاحُوا إِلَى الجُمُعَةِ، رَاحُوا فِي هَيْئَتِهِمْ فَقِيلَ لَهُمْ: لَوِ اغْتَسَلْتُمْ


Bukhari-902

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15 எவ்வளவு தொலைவிலிருந்தால் ஜுமுஆத் தொழுகைக்கு வரவேண்டும்? யார்மீது (ஜுமுஆத் தொழுகை) கடமையாகும்?

ஏனெனில் அல்லாஹ் கூறுகின்றான்: (இறை நம்பிக்கை கொண்டவர்களே!) ஜுமுஆவுடைய நாளில் தொழுகைக்காக (நீங்கள்) அழைக் கப்பட்டால், வியாபாரத்தை விட்டு அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிகளுக்கு) விரைந்து செல்லுங்கள். (63:9)

ஜுமுஆத் தொழுகை நடைபெறும் ஊரில் நீ இருந்து அந்த ஜுமுஆ நாளில் தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் அதில் கட்டாயம் நீ கலந்து கொள்ள வேண்டும். பாங்கு சப்தத்தை நீ கேட்டாலும் சரி,அதை நீ கேட்காவிட்டாலும் சரி என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் சில நாட்களில் தமது மாளிகையில் (தங்கி) இருக்கும் போது (தம்முடன் இருப்பவர்களுக்கு) ஜுமுஆத் தொழுவிப்பார்கள். சில நாட்களில் ஜுமுஆத் தொழுவிக்க மாட்டார்கள். அனஸ் (ரலி) அவர்களது அந்த மாளிகை (பஸ்ரா நகரிலிருந்து) இரண்டு பர்ஸக் (சுமார் ஆறு மைல்) தொலைவிலிருந்த ஸாவியா எனும் இடத்தில் இருந்தது. 

902. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(மதீனாவுக்கு நான்கு மைல் தொலைவிலுள்ள) மேட்டுப் பகுதியிலிருந்தும் தங்கள் இல்லங்களிலிருந்தும் மக்கள் ஜும்ஆ நாளில் முறை வைத்து (மதீனாவுக்கு) வந்து கொண்டிருந்தார்கள்.

كَانَ النَّاسُ يَنْتَابُونَ يَوْمَ الجُمُعَةِ مِنْ مَنَازِلِهِمْ وَالعَوَالِيِّ، فَيَأْتُونَ فِي الغُبَارِ يُصِيبُهُمُ الغُبَارُ وَالعَرَقُ، فَيَخْرُجُ مِنْهُمُ العَرَقُ، فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْسَانٌ مِنْهُمْ وَهُوَ  عِنْدِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ أَنَّكُمْ تَطَهَّرْتُمْ لِيَوْمِكُمْ هَذَا»


Bukhari-901

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 14 மழையின் போது ஜுமுஆத் தொழுகைக்குச் செல்லாமலிருக்க அனுமதி. 

901. அப்துல்லாஹ் இப்னு அல் ஹாரிஸ் அறிவித்தார்.

பாங்கு சொல்பவரிடம் ஒரு மழை நாளில் ‘அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்’ என்று (பாங்கில்) கூறிய பிறகு ஹய்ய அலஸ்ஸலாஹ் (தொழுகைக்கு வாருங்கள்) என்பதைக் கூறாமல் உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுகள் என்று கூறும்’ என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். (இவ்வாறு கூறியதை) மக்கள் வெறுப்பது போல் இருந்தபோது ‘என்னை விட மிகவும் சிறந்தவ(ரான நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர்’ என்று நிச்சயமாக ஜும்ஆ அவசியமானது தான்; எனினும், நீங்கள் சேற்றிலும் சகதியிலும் நடந்து வந்து அதனால் உங்களுக்குச் சிரமம் தருவதை நான் விரும்பவில்லை’ என்றும் குறிப்பிட்டார்கள்.

Book : 11


قَالَ: ابْنُ عَبَّاسٍ لِمُؤَذِّنِهِ فِي يَوْمٍ مَطِيرٍ: إِذَا قُلْتَ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَلاَ تَقُلْ حَيَّ عَلَى الصَّلاَةِ، قُلْ: «صَلُّوا فِي بُيُوتِكُمْ»، فَكَأَنَّ النَّاسَ اسْتَنْكَرُوا، قَالَ: فَعَلَهُ مَنْ هُوَ خَيْرٌ مِنِّي، إِنَّ الجُمْعَةَ عَزْمَةٌ وَإِنِّي كَرِهْتُ أَنْ أُحْرِجَكُمْ فَتَمْشُونَ فِي الطِّينِ وَالدَّحَضِ


Bukhari-900

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

900. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

உமர் (ரலி) உடைய மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ், இஷாத் தொழுகைகளைப் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழச் செல்வார். அவரிடம் ‘உங்கள் கணவர்) உமர் (ரலி) ரோஷக்காரராகவும் இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்’ என்று கேட்கப் பட்டது.

அதற்கு ‘அவர் என்னைத் தடுக்க முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள் என்று நபி (ஸல்) கூறியுள்ளனர்’ என்று பதிலுரைத்தார்.

அத்தியாயம்: 11


كَانَتِ امْرَأَةٌ لِعُمَرَ تَشْهَدُ صَلاَةَ الصُّبْحِ وَالعِشَاءِ فِي الجَمَاعَةِ فِي المَسْجِدِ، فَقِيلَ لَهَا: لِمَ تَخْرُجِينَ وَقَدْ تَعْلَمِينَ أَنَّ عُمَرَ يَكْرَهُ ذَلِكَ وَيَغَارُ؟ قَالَتْ: وَمَا يَمْنَعُهُ أَنْ يَنْهَانِي؟ قَالَ: يَمْنَعُهُ قَوْلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَمْنَعُوا إِمَاءَ اللَّهِ مَسَاجِدَ اللَّهِ»


Bukhari-899

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13 

899. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘பெண்கள் இரவில் பள்ளிக்குச் செல்வதற்கு நீங்கள் அனுமதியுங்கள்.’ இதை இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 11


«ائْذَنُوا لِلنِّسَاءِ بِاللَّيْلِ إِلَى المَسَاجِدِ»


Bukhari-898

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

898. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஏழு நாள்களுக்கு ஒரு முறை குளிப்பது அல்லாஹ்வுக்காக ஒவ்வொரு முஸ்லிமும் செய்ய வேண்டிய கடமையாகும்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :11


«لِلَّهِ تَعَالَى عَلَى كُلِّ مُسْلِمٍ حَقٌّ، أَنْ يَغْتَسِلَ فِي كُلِّ سَبْعَةِ أَيَّامٍ يَوْمًا»


Bukhari-897

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

897. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஏழு நாள்களுக்கு ஒரு முறை தலையையும் மேனியையும் கழுவிக் குளிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :11


«حَقٌّ عَلَى كُلِّ مُسْلِمٍ، أَنْ يَغْتَسِلَ فِي كُلِّ سَبْعَةِ أَيَّامٍ يَوْمًا يَغْسِلُ فِيهِ رَأْسَهُ وَجَسَدَهُ»


Bukhari-896

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

896. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘நாம் (பிறப்பால்) பிந்தியவர்கள் மறுமையில் முந்தியவர்களாவோம். எனினும் அவர்கள் நமக்கு முன்பே வேதம் கொடுக்கப் பட்டார்கள். அவர்களுக்குக் கடமையாக்கப் பட்ட இந்த நாளில் அவர்கள் முரண்பட்டனர். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான். மக்கள் நம்மையே பின்தொடர்கிறார்கள். (எவ்வாறெனில், நமக்கு இன்று ஜும்ஆ என்றால்) நாளைக்கு யூதர்களுக்கு அதற்கு மறுநாள் கிறித்தவர்களும் வார வழிபாடு நடத்துகின்றனர். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :11


نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ يَوْمَ القِيَامَةِ، أُوتُوا الكِتَابَ مِنْ قَبْلِنَا وَأُوتِينَاهُ مِنْ بَعْدِهِمْ، فَهَذَا اليَوْمُ الَّذِي اخْتَلَفُوا فِيهِ، فَهَدَانَا اللَّهُ فَغَدًا لِلْيَهُودِ، وَبَعْدَ غَدٍ لِلنَّصَارَى فَسَكَتَ


Bukhari-895

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

895. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும்.’
என அபூஸயீதுல் குத்ரி (ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 11


«غُسْلُ يَوْمِ الجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ»


Bukhari-894

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 12

ஜுமுஆவுக்கு வராத பெண்கள் சிறுவர்கள் போன்றோர் மீது குளியல் கடமையா?

யாருக்கு ஜுமுஆத் தொழுகை கடமையோ அவர் மீதே குளியலும் கடமை என்று இப்னு உமர் (ரலி) குறிப்பிட்டுள்ளார்கள். 

894. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘உங்களில் எவரும் ஜும்ஆவுக்கு வந்தால் குளித்துக் கொள்ளட்டும்.’
என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 11


«مَنْ جَاءَ مِنْكُمُ الجُمُعَةَ فَلْيَغْتَسِلْ»


Next Page » « Previous Page