Author: Farook

Bukhari-763

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 98 மஃக்ரிப் தொழுகையிலும் (குர்ஆன் வசனங்களை) ஓதவேண்டும். 

763. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நான் ‘வல்முர்ஸலாதி உர்பன்’ என்ற அத்தியாயத்தை ஓதும்போது அதனைச் செவியுற்ற (என் தாயார்) உம்முல் ஃபழ்லு(ரலி), ‘அருமை மகனே! அல்லாஹ்வின் மீது ஆணையாக, மக்ரிப் தொழுகையில் நபி(ஸல்) அவர்கள் இந்த அத்தியாயத்தை ஓதியதுதான் நான் அவர்களிடமிருந்து கடைசியாக செவியுற்றதாகும். நீ அதை ஓதியதன் மூலம் எனக்கு நினைவுபடுத்திவிட்டாய்’ என்று கூறினார்.
Book : 10


إِنَّ أُمَّ الفَضْلِ سَمِعَتْهُ وَهُوَ يَقْرَأُ: {وَالمُرْسَلاَتِ عُرْفًا} [المرسلات: 1] فَقَالَتْ: يَا بُنَيَّ، وَاللَّهِ لَقَدْ ذَكَّرْتَنِي بِقِرَاءَتِكَ «هَذِهِ السُّورَةَ، إِنَّهَا لَآخِرُ  مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ بِهَا فِي المَغْرِبِ»


Bukhari-762

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

762. அபூகதாதா (ரலி) அறிவித்தார்.

லுஹர் தொழுகையின் முதலிரண்டு ரக்அத்களில் ‘அல்ஹம்து’ அத்தியாயத்தையும் வேறு இரண்டு அத்தியாயங்களையும் நபி(ஸல்) அவர்கள் ஓதுவார்கள். சில நேரம் சில வசனங்களை எங்களுக்கு கேட்குமாறு ஓதுவார்கள்.
Book :10


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ مِنَ الظُّهْرِ وَالعَصْرِ بِفَاتِحَةِ الكِتَابِ، وَسُورَةٍ سُورَةٍ، وَيُسْمِعُنَا الآيَةَ أَحْيَانًا»


Bukhari-761

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 97

அஸ்ர் தொழுகையிலும் (குர்ஆன் வசனங்களை) ஓத வேண்டும். 

761. அபூமஃமர் கூறினார்:

‘நபி (ஸல்) அவர்கள் லுஹரிலும் அஸரிலும் (எதையேனும்) ஓதுவார்களா?’ என்று கப்பாப் (ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கவர் ‘ஆம்’ என்றார். ‘நீங்கள் அதை எப்படி அறிந்து கொண்டீர்கள்?’ என்று நாங்கள் கேட்டோம். ‘நபி (ஸல்) அவர்களின் தாடி அசைவதிலிருந்து இதை அறிந்து கொள்வோம்’ என்று கப்பாப் (ரலி) பதிலளித்தார்.

அத்தியாயம்: 10


قُلْتُ لِخَبَّابِ بْنِ الأَرَتِّ: أَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالعَصْرِ؟ قَالَ: نَعَمْ، قَالَ: قُلْتُ: بِأَيِّ شَيْءٍ كُنْتُمْ تَعْلَمُونَ قِرَاءَتَهُ؟ قَالَ: «بِاضْطِرَابِ لِحْيَتِهِ»


Bukhari-760

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

760. அபூமஃமர் கூறினார்:

‘நபி (ஸல்) அவர்கள் லுஹரிலும் அஸரிலும் (எதையேனும்) ஓதுவார்களா?’ என்று கப்பாப் (ரலி) அவர்களிடம் கேட்டோம். அதற்கவர் ‘ஆம்’ என்றார். ‘நீங்கள் அதை எப்படி அறிந்து கொண்டீர்கள்?’ என்று நாங்கள் கேட்டோம். ‘நபி (ஸல்) அவர்களின் தாடி அசைவதிலிருந்து இதை அறிந்து கொள்வோம்’ என்று கப்பாப் (ரலி) பதிலளித்தார்.

அத்தியாயம்: 10


سَأَلْنَا خَبَّابًا أَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الظُّهْرِ وَالعَصْرِ؟ قَالَ: نَعَمْ، قُلْنَا: بِأَيِّ شَيْءٍ كُنْتُمْ تَعْرِفُونَ؟ قَالَ: «بِاضْطِرَابِ لِحْيَتِهِ»


Bukhari-759

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 96

லுஹ்ர் தொழுகையில் (குர்ஆன் வசனங்களை) ஓத வேண்டும். 

759. அபூகதாதா (ரலி) அறிவித்தார்:

லுஹர் தொழுகையின் முதலிரண்டு ரக்அத்களில் ‘அல்ஹம்து’ அத்தியாயத்தையும் வேறு இரண்டு அத்தியாயங்களையும் நபி (ஸல்) அவர்கள் ஓதுவார்கள். (அந்த இரண்டு ரக்அத்களில்) முதல் ரக்அத்தில் நீண்ட அத்தியாயத்தையும் இரண்டாம் ரக்அத்தில் சிறிய அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.

சில சயமங்களில் சில வசனங்களை எங்களுக்குக் கேட்குமாறும் ஓதுவார்கள்.

அஸர் தொழுகையில் (முதல் இரண்டு ரக்அத்களில்) ‘அல்ஹம்து’ அத்தியாயத்தையும் வேறு இரண்டு அத்தியாயங்களையும் ஓதுவார்கள்.

ஸுபுஹ் தொழுகையின் முதல் ரக்அத்தில் நீண்ட நேரம் ஓதுவார்கள். இரண்டாம் ரக்அத்தில் குறைந்த நேரம் ஓதுவார்கள்.

அத்தியாயம்: 10


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ مِنْ صَلاَةِ الظُّهْرِ بِفَاتِحَةِ الكِتَابِ، وَسُورَتَيْنِ يُطَوِّلُ فِي الأُولَى، وَيُقَصِّرُ فِي الثَّانِيَةِ وَيُسْمِعُ الآيَةَ أَحْيَانًا، وَكَانَ يَقْرَأُ فِي العَصْرِ بِفَاتِحَةِ الكِتَابِ وَسُورَتَيْنِ، وَكَانَ يُطَوِّلُ فِي الأُولَى، وَكَانَ يُطَوِّلُ فِي الرَّكْعَةِ الأُولَى مِنْ صَلاَةِ الصُّبْحِ، وَيُقَصِّرُ فِي الثَّانِيَةِ»


Bukhari-758

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

758. ஜாபிர் இப்னு ஸமுரா (ரலி) அறிவித்தார்.

ஸஃது (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களிடம் ‘நபி (ஸல்) அவர்கள் தொழுதது போல் நான் அவர்களுக்கு (மக்களுக்கு)  மஃரிபு, இஷாத் தொழுகைகளை நடத்தினேன். அதில் நான் எந்தக் குறைவும் செய்யவில்லை. முதலிரண்டு ரக்அத்களில் நீளமாகவும் பிந்திய இரண்டு ரக்அத்துகளில் சுருக்கமாகவும் ஓதுவேன்’ என்றார்கள். இதைக் கேட்ட உமர் (ரலி) ‘நாமும் உம்மைப் பற்றி அவ்வாறே எண்ணுகிறோம்’ என்றார்கள்.

அத்தியாயம்: 10


قَالَ سَعْدٌ: «كُنْتُ أُصَلِّي بِهِمْ صَلاَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، صَلاَتَيِ العَشِيِّ لاَ أَخْرِمُ عَنْهَا، أَرْكُدُ فِي الأُولَيَيْنِ، وَأَحْذِفُ فِي الأُخْرَيَيْنِ» فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: ذَلِكَ الظَّنُّ بِكَ


Bukhari-757

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

757. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது மற்றொரு மனிதரும் பள்ளிவாசலுக்கு வந்து தொழுதார். (தொழுது முடித்ததும்) நபி (ஸல்) அவர்களுக்கு அவர் முகமன் (ஸலாம்) சொன்னார். நபி (ஸல்) அவர்கள் பதில் (ஸலாம்) சொல்லிவிட்டு, “திரும்பச் சென்று தொழுவீராக! ஏனெனில், நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று கூறினார்கள். அந்த மனிதர் திரும்பிச் சென்று முன்பு போன்றே தொழுதுவிட்டு வந்து (மீண்டும்) நபி (ஸல்) அவர்களுக்கு ‘ஸலாம்’ சொன்னார்.

அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “திரும்பிச் சென்று தொழுவீராக! ஏனெனில், நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. அதன் பிறகு அந்த மனிதர், “சத்திய(மார்க்க)த்துடன் உங்களை அனுப்பியவன் மீதாணையாக! இதைவிட அழகாக எனக்கு (தொழ)த்தெரியாது. எனவே, நீங்களே எனக்குக் கற்றுத்தாருங்கள்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

நீர் தொழுகைக்காக நின்றதும், ‘தக்பீர்’ (அல்லாஹு அக்பர் என்று) கூறுவீராக! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதுவீராக! பின்னர் ருகூஉவில் (குனிந்ததும் நிமிர்ந்துவிடாமல்) நன்கு நிலை கொள்ளும் அளவுக்கு நீர் ருகூஉ செய்வீராக! பிறகு (நின்றதும்

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ المَسْجِدَ فَدَخَلَ رَجُلٌ، فَصَلَّى، فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَرَدَّ وَقَالَ: «ارْجِعْ فَصَلِّ، فَإِنَّكَ لَمْ تُصَلِّ»، فَرَجَعَ يُصَلِّي كَمَا صَلَّى، ثُمَّ جَاءَ، فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «ارْجِعْ فَصَلِّ، فَإِنَّكَ لَمْ تُصَلِّ» ثَلاَثًا، فَقَالَ: وَالَّذِي بَعَثَكَ بِالحَقِّ مَا أُحْسِنُ غَيْرَهُ، فَعَلِّمْنِي، فَقَالَ: «إِذَا قُمْتَ إِلَى الصَّلاَةِ فَكَبِّرْ، ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنَ القُرْآنِ، ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْدِلَ قَائِمًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا، وَافْعَلْ ذَلِكَ فِي صَلاَتِكَ كُلِّهَا»


Bukhari-756

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

756. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘திருக்குர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து சூராவை) ஓதாதவருக்குத் தொழுகை கூடாது.’ இதை உபாதா இப்னு ஸாமித் (ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 10


«لاَ صَلاَةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِفَاتِحَةِ الكِتَابِ»


Bukhari-755

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 95 ஊரிலிருக்கும் போதும் பயணத்தின்போதும் நிறைவேற்றப்படும் எல்லாத் தொழுகைகளிலும் தலைமை தாங்கித் தொழுவிப்பவரும் , பின்பற்றித் தொழுபவரும் கட்டாயமாக (குர்ஆன் வசனங்களை) ஓதியாக வேண்டும் என்பதும், எந்தெந்தத் தொழுகையில் சப்தமிட்டு ஓத வேண்டும்? எந்தெந்தத் தொழுகைகளில் (சப்தமின்றி) மெதுவாக ஓதவேண்டும்? என்பதும். 

755. ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) அறிவித்தார்.

(கூஃபாவில் அதிகாரியாக இருந்த) ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) மீது கூபா வாசிகளில் சிலர் உமர்(ரலி) அவர்களிடம் புகார் கூறினார்கள். அவர் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்பதும் அவர்களின் புகார்களில் ஒன்றாக இருந்தது. உடனே உமர்(ரலி) அவரை நீக்கிவிட்டு அம்மார்(ரலி)ஜ அதிகாரியாக நியமித்தார்கள். ஸஃதை (மதீனாவுக்கு) வரவழைத்து ‘அபூ இஸ்ஹாக்! நீங்கள் முறையாகத் தொழுகை நடத்துவதில்லை என்று கூஃபா வாசிகளில் சிலர் கூறுகின்றனரே! என்று கேட்டார்கள்.

அதற்கு ஸஃது(ரலி) ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப்படியே தொழுகை நடத்தினேன். அதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. இஷாவுடைய முதல் இரண்டு ரக்அத்களில் நீண்ட நேரம் ஓதியும் பின் இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதியும் தொழுகை நடத்துகிறேன்’ என்று பதிலளித்தார்கள். ‘உம்மைப் பற்றி

شَكَا أَهْلُ الكُوفَةِ سَعْدًا إِلَى عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَعَزَلَهُ، وَاسْتَعْمَلَ عَلَيْهِمْ عَمَّارًا، فَشَكَوْا حَتَّى ذَكَرُوا أَنَّهُ لاَ يُحْسِنُ يُصَلِّي، فَأَرْسَلَ إِلَيْهِ، فَقَالَ: يَا أَبَا إِسْحَاقَ إِنَّ هَؤُلاَءِ يَزْعُمُونَ أَنَّكَ لاَ تُحْسِنُ تُصَلِّي، قَالَ أَبُو إِسْحَاقَ: أَمَّا أَنَا وَاللَّهِ «فَإِنِّي كُنْتُ أُصَلِّي بِهِمْ صَلاَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَخْرِمُ عَنْهَا، أُصَلِّي صَلاَةَ العِشَاءِ، فَأَرْكُدُ فِي الأُولَيَيْنِ وَأُخِفُّ فِي الأُخْرَيَيْنِ»، قَالَ: ذَاكَ الظَّنُّ بِكَ يَا أَبَا إِسْحَاقَ، فَأَرْسَلَ مَعَهُ رَجُلًا أَوْ رِجَالًا إِلَى الكُوفَةِ، فَسَأَلَ عَنْهُ أَهْلَ الكُوفَةِ وَلَمْ يَدَعْ مَسْجِدًا إِلَّا سَأَلَ عَنْهُ، وَيُثْنُونَ مَعْرُوفًا، حَتَّى دَخَلَ مَسْجِدًا لِبَنِي عَبْسٍ، فَقَامَ رَجُلٌ مِنْهُمْ يُقَالُ لَهُ أُسَامَةُ بْنُ قَتَادَةَ يُكْنَى أَبَا سَعْدَةَ قَالَ: أَمَّا إِذْ نَشَدْتَنَا فَإِنَّ سَعْدًا كَانَ لاَ يَسِيرُ بِالسَّرِيَّةِ، وَلاَ يَقْسِمُ بِالسَّوِيَّةِ، وَلاَ يَعْدِلُ فِي القَضِيَّةِ، قَالَ سَعْدٌ: أَمَا وَاللَّهِ لَأَدْعُوَنَّ بِثَلاَثٍ: اللَّهُمَّ إِنْ كَانَ عَبْدُكَ هَذَا كَاذِبًا، قَامَ رِيَاءً وَسُمْعَةً، فَأَطِلْ عُمْرَهُ، وَأَطِلْ فَقْرَهُ، وَعَرِّضْهُ بِالفِتَنِ، وَكَانَ بَعْدُ إِذَا سُئِلَ يَقُولُ: شَيْخٌ كَبِيرٌ مَفْتُونٌ، أَصَابَتْنِي دَعْوَةُ سَعْدٍ، قَالَ عَبْدُ المَلِكِ: فَأَنَا رَأَيْتُهُ بَعْدُ، قَدْ سَقَطَ حَاجِبَاهُ عَلَى عَيْنَيْهِ مِنَ الكِبَرِ، وَإِنَّهُ لَيَتَعَرَّضُ لِلْجَوَارِي فِي الطُّرُقِ يَغْمِزُهُنَّ


Bukhari-754

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

754. அனஸ்(ரலி) கூறினார்

(அபூ பக்ர்(ரலி) இமாமாக நிற்க) முஸ்லிம்கள் ஃபஜ்ருத் தொழுது கொண்டிருந்தபோது, நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி)வின் அறையிலுள்ள திரையை விலக்கி மக்கள் அணிவகுத்து நிற்பதைப் பார்த்தார்கள். அது மக்களுக்குத் திடுக்கத்தை ஏற்படுத்தியது.

நபி(ஸல்) அவர்கள் புன்னகை செய்தார்கள். நபி(ஸல்) அவர்கள் பள்ளிக்கு வரப்போகிறார்கள் என்று எண்ணி அபூ பக்ர்(ரலி) பின்னால் நகர்ந்து வரிசையில் சேர்ந்து கொள்ள முற்பட்டார்கள். தங்கள் தொழுகைகளே குழம்பிப் போகுமோ என்று முஸ்லிம்கள் எண்ணலானார்கள். உங்கள் தொழுகையைப் பூரணமாக்குங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் சைகை செய்துவிட்டுத் திரையைத் தொங்கவிட்டார்கள். அன்றைய தினத்தின் இறுதியில் நபி(ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள்.
Book :10


بَيْنَمَا المُسْلِمُونَ فِي صَلاَةِ الفَجْرِ لَمْ يَفْجَأْهُمْ إِلَّا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَشَفَ سِتْرَ حُجْرَةِ عَائِشَةَ، فَنَظَرَ إِلَيْهِمْ وَهُمْ صُفُوفٌ، فَتَبَسَّمَ يَضْحَكُ، وَنَكَصَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى عَقِبَيْهِ لِيَصِلَ لَهُ الصَّفَّ، فَظَنَّ أَنَّهُ يُرِيدُ الخُرُوجَ وَهَمَّ المُسْلِمُونَ أَنْ يَفْتَتِنُوا فِي صَلاَتِهِمْ، فَأَشَارَ إِلَيْهِمْ أَتِمُّوا صَلاَتَكُمْ، فَأَرْخَى السِّتْرَ وَتُوُفِّيَ مِنْ آخِرِ ذَلِكَ اليَوْمِ»


Next Page » « Previous Page