Author: Farook

Bukhari-743

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 89

முதல் தக்பீர் கூறிய பின் ஓத வேண்டியவை. 

743. அனஸ் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) உமர் (ரலி) ஆகியோரும் ‘அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்’ என்றே தொழுகையைத் துவக்குபவர்களாக இருந்தனர்.

அத்தியாயம்: 10


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ، وَعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا كَانُوا يَفْتَتِحُونَ الصَّلاَةَ بِ {الحَمْدُ لِلَّهِ رَبِّ العَالَمِينَ} [الفاتحة: 2]


Bukhari-742

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

742. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘அல்லாஹ்வின் மேல் ஆணையாக ருகூவையும் ஸஜ்தாவையும் ஒழுங்காகச் செய்யுங்கள்! நான் எனக்குப் பின்புறமாக – அல்லது என் முதுகுக்குப் பின் நீங்கள் ருகூவு செய்யும் போதும் ஸஜ்தாச் செய்யும் போதும் உங்களைப் பார்க்கிறேன்.’ என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
Book :10


أَقِيمُوا الرُّكُوعَ وَالسُّجُودَ فَوَ اللَّهِ إِنِّي لَأَرَاكُمْ مِنْ بَعْدِي – وَرُبَّمَا قَالَ: مِنْ بَعْدِ ظَهْرِي – إِذَا رَكَعْتُمْ وَسَجَدْتُمْ


Bukhari-741

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 88 தொழுகையில் உள்ளச்சத்துடனும் பணிவுடனும் இருக்கவேண்டும். 

741. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘கிப்லாத் திசையில் மட்டும் தான் கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? அல்லாஹ்வின் மேல் ஆணையாக உங்களின் ருகூவும் பணிவும் எனக்குத் தெரியாமல் போவதில்லை. என் முதுகுக்குப் பின் புறமாகவும் நான் உங்களைப் பார்க்கிறேன்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 10


«هَلْ تَرَوْنَ قِبْلَتِي هَا هُنَا، وَاللَّهِ مَا يَخْفَى عَلَيَّ رُكُوعُكُمْ وَلاَ خُشُوعُكُمْ، وَإِنِّي لأَرَاكُمْ وَرَاءَ ظَهْرِي»


Bukhari-740

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 87 வலக் கையை இடக் கையின் மீது வைப்பது. 

740. ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவித்தார்.

தொழும்போது ஒருவர் தம் வலக் கையை இடது குடங்கை மீது வைக்க வேண்டுமெனக் கட்டளையிடப் பட்டிருந்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ ஹாஸிம் ‘இவ்வாறு ஏவியது நபி(ஸல்) அவர்கள் என்று கருதுகிறேன்’ என்றார்.
Book : 10


«كَانَ النَّاسُ يُؤْمَرُونَ أَنْ يَضَعَ الرَّجُلُ اليَدَ اليُمْنَى عَلَى ذِرَاعِهِ اليُسْرَى فِي الصَّلاَةِ»

قَالَ أَبُو حَازِمٍ لاَ أَعْلَمُهُ إِلَّا يَنْمِي ذَلِكَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-739

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 86

இரண்டாவது ரக்அத்திலிருந்து எழும் போது கைகளை உயர்த்துவது. 

739. இப்னு உமர் (ரலி) தொழுகையைத் ஆரம்பிக்கும்போது தக்பீர் கூறித் தம் கைகளை உயர்த்துவார்கள். ருகூவுக்குச் செல்லும் போதும் தம் கைகளை உயர்த்துவார்கள். ‘ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்’ எனக் கூறும் போதும் தம் கைகளை உயர்த்துவார்கள். இரண்டாம் ரக்அத் முடித்து எழும் போதும் தம் கைகளை உயர்த்துவார்கள். நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததாகவும் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: நாஃபிஃ (ரஹ்)

அத்தியாயம்: 10


أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ  إِذَا دَخَلَ فِي الصَّلاَةِ كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ، وَإِذَا رَكَعَ رَفَعَ يَدَيْهِ، وَإِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَفَعَ يَدَيْهِ، وَإِذَا قَامَ مِنَ الرَّكْعَتَيْنِ رَفَعَ يَدَيْهِ ، وَرَفَعَ ذَلِكَ ابْنُ عُمَرَ إِلَى نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-738

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 85 கைகளை எந்த அளவு உயர்த்த வேண்டும்?

அபூஹுமைத் (அப்துர் ரஹ்மான் பின் சஅத் அஸ்ஸாஇதீ-ரலி) அவர்கள் தம் தோழர்களிடையே இருந்த போது நபி (ஸல்) அவர்கள் (தொழும் போது)தம் தோள்களுக்கு நேராகத் தம் கைகளை உயர்த்தினார்கள் என்று கூறினார்கள். 

738. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் தக்பீர் கூறினார்கள். தக்பீர் கூறும் போதே தம் கைகளைத் தம் தோள் புஜங்களுக்கு நேராக உயர்த்தினார்கள். ருகூவுக்குத் தக்பீர் கூறிய போதும் இவ்வாறு செய்தார்கள். ‘ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ்’ என்று கூறிய போதும் இவ்வாறு செய்தார்கள். ‘ரப்பனா வலகல் ஹம்து’ என்றும் கூறினார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும் போதும் ஸஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் இவ்வாறு செய்ய மாட்டார்கள்.
Book : 10


رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ افْتَتَحَ التَّكْبِيرَ فِي الصَّلاَةِ، فَرَفَعَ يَدَيْهِ حِينَ يُكَبِّرُ حَتَّى يَجْعَلَهُمَا حَذْوَ مَنْكِبَيْهِ، وَإِذَا كَبَّرَ لِلرُّكُوعِ فَعَلَ مِثْلَهُ، وَإِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَعَلَ مِثْلَهُ، وَقَالَ: رَبَّنَا وَلَكَ الحَمْدُ، وَلاَ يَفْعَلُ ذَلِكَ حِينَ يَسْجُدُ، وَلاَ حِينَ يَرْفَعُ رَأْسَهُ مِنَ السُّجُودِ


Bukhari-737

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

737. அபூ கிலாபா கூறினார்:

மாலிக் இப்னு அல் ஹுவைரிஸ்(ரலி) தொழும்போது தக்பீர் கூறித் தம் கைகளை உயர்த்தினார்கள். ருகூவுக்குச் செல்லும் போதும் தம் கைகளை உயர்த்தினார்கள். ருகூவிலிருந்து தம் கைகளை உயர்த்தினார்கள். நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

Book :10


أَنَّهُ رَأَى مَالِكَ بْنَ الحُوَيْرِثِ «إِذَا صَلَّى كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ، وَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ رَفَعَ يَدَيْهِ» وَحَدَّثَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَنَعَ هَكَذَا


Bukhari-736

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 84 ஆரம்பத் தக்பீரின்போதும், ருகூஉவிற்குச் செல்லும் போதும், (ருகூவிலிருந்து) உயரும் போதும் இருகைகளையும் உயர்த்துவது. 

736. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தொழுகையைத் ஆரம்பிக்கும்போது தம் தோள் புஜங்களுக்கு நேராக இரண்டு கைகளையும் உயர்த்துவதை பார்த்திருக்கிறேன். ருகூவுக்காகத் தக்பீர் கூறும் போதும் இவ்வாறு செய்ததை பார்த்திருக்கிறேன். ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் இவ்வாறு செய்வார்கள். ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்றும் அப்போது கூறுவார்கள். ஸஜ்தாவின்போது இவ்வாறு செய்யமாட்டார்கள்.
Book : 10


رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ فِي الصَّلاَةِ رَفَعَ يَدَيْهِ حَتَّى يَكُونَا حَذْوَ مَنْكِبَيْهِ، وَكَانَ يَفْعَلُ ذَلِكَ حِينَ يُكَبِّرُ لِلرُّكُوعِ، وَيَفْعَلُ ذَلِكَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، وَيَقُولُ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، وَلاَ يَفْعَلُ ذَلِكَ فِي السُّجُودِ


Bukhari-735

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 83

சரியாக, ஆரம்பத் தக்பீர் கூறித் தொழுகையைத் துவக்கும் போது இரு கைகளையும் உயர்த்துவது. 

735. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பிக்கும் போதும், ருகூவுக்காகத் தக்பீர் கூறும் போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும், தம் தோள்களுக்கு நேராகத் தம் கைகளை உயர்த்துவார்கள். ருகூவிலிருந்து உயரும்போது ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா வலகல் ஹம்து’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான். எங்கள் இறைவா! புகழனைத்தும் உனக்கே உரியது) என்று கூறுவார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும்போது இவ்வாறு செய்ய மாட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 10


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَرْفَعُ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ إِذَا افْتَتَحَ الصَّلاَةَ، وَإِذَا كَبَّرَ لِلرُّكُوعِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، رَفَعَهُمَا كَذَلِكَ أَيْضًا، وَقَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الحَمْدُ، وَكَانَ لاَ يَفْعَلُ ذَلِكَ فِي السُّجُودِ


Bukhari-734

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

734. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘இமாம் ஏற்படுத்தப் பட்டிருப்பது பின்பற்றப் படுவதற்கே. எனவே அவர் தக்பீர் கூறும்போது நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் ருகூவு செய்யும்போது நீங்களும் ருகூவு செய்யுங்கள். அவர் ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ் எனக் கூறும்போது நீங்கள் ரப்பனா வலக்கல் ஹம்து எனக் கூறுங்கள். அவர் ஸஜ்தாச் செய்யுங்கள். அவர் உட்கார்ந்து தொழுகை நடத்தும்போது நீங்களும் அவரோடு சேர்ந்து உட்கார்ந்து தொழுங்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :10


إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: رَبَّنَا وَلَكَ الحَمْدُ، وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا ، وَإِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا أَجْمَعُونَ


Next Page » « Previous Page