Author: Farook

Bukhari-733

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

733. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் குதிரையிலிருந்து விழுந்ததால் சுளுக்கு ஏற்பட்டது. அப்போது எங்களுக்கு உட்கார்ந்து தொழுகை நடத்தினார்கள். நாங்களும் அவர்களுடன் உட்கார்ந்து தொழுதோம். தொழுது முடித்ததும் நபி(ஸல்) அவர்கள் ‘இமாம் ஏற்படுத்தப் படுவது பின்பற்றப் படுவதற்கே. எனவே தக்பீர் கூறுங்கள். அவர் ருகூவு செய்யும்போது நீங்களும் ருகூவு செய்யுங்கள். அவர் (ருகூவிலிருந்து) நிமிரும்போது நீங்களும் நிமிருங்கள். அவர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் எனக் கூறும்போது ரப்பனா லகல் ஹம்து எனக் கூறுங்கள். அவர் ஸஜ்தாச் செய்யும்போது நீங்களும் ஸஜ்தாச் செய்யுங்கள்’ எனக் கூறினார்கள்.
Book :10


خَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ فَرَسٍ، فَجُحِشَ، فَصَلَّى لَنَا قَاعِدًا فَصَلَّيْنَا مَعَهُ قُعُودًا، ثُمَّ انْصَرَفَ، فَقَالَ:  إِنَّمَا الإِمَامُ – أَوْ إِنَّمَا جُعِلَ الإِمَامُ – لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا رَفَعَ فَارْفَعُوا، وَإِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: رَبَّنَا لَكَ الحَمْدُ، وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا


Bukhari-732

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 82

தொழுகையைத் துவக்கும் போது தக்பீர் கூறுவது கட்டாயம். 

732. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் குதிரையில் ஏறிச் சென்றபோது அவர்களின் வலப்பக்கம் பிசகிக் கொண்டது. அன்று ஏதோ ஒரு தொழுகையை உட்கார்ந்து தொழுகை நடத்தினார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் உட்கார்ந்து தொழுதோம். ஸலாம் கொடுத்ததும், ‘இமாம் ஏற்படுத்தப்பட்டிருப்பது அவர் பின்பற்றப்பட வேண்டும் என்பதற்காகவே, எனவே அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள். அவர் ருகூவு செய்யும் பொழுது நீங்களும் ருகூவு செய்யுங்கள். அவர் (ருகூவிலிருந்து) நிமிரும்போது நீங்களும் நிமிருங்கள். அவர் ஸஜ்தாச் செய்யும் போது நிங்களும் ஸஜ்தா செய்யுங்கள். அவர் ஸமியல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறும்போது ரப்பனா வலகல் ஹம்து எனக் கூறுங்கள்’ என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அத்தியாயம்: 10


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكِبَ فَرَسًا فَجُحِشَ شِقُّهُ الأَيْمَنُ – قَالَ أَنَسٌ رَضِيَ اللَّهُ عَنْهُ – فَصَلَّى لَنَا يَوْمَئِذٍ صَلاَةً مِنَ الصَّلَوَاتِ وَهُوَ قَاعِدٌ، فَصَلَّيْنَا وَرَاءَهُ قُعُودًا، ثُمَّ قَالَ لَمَّا سَلَّمَ:   إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا رَفَعَ فَارْفَعُوا، وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا، وَإِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: رَبَّنَا وَلَكَ الحَمْدُ


Bukhari-731

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

731. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் பாயால் ஒரு சிறிய அறையை அமைத்துக்கொண்டார்கள்.  சில இரவுகள் (அதனைத் தடுப்பாக வைத்துக்கொண்டு) அதனுள் தொழுதார்கள். அப்போது அவர்களுடைய தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழுதனர். அவர்கள் (தம்மைப் பின் பற்றித் தொடர்ந்து தொழுவது) பற்றி நபி (ஸல்) அவர்கள் அறிந்தபோது (அந்த இடத்திற்கு வராமல் தம் இல்லத்திலேயே) அமர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள். பின்பு (மக்களை நோக்கி) அவர்கள் புறப்பட்டு வந்து உங்களது செயல்களை நான் கண்டறிந்தேன்.

மக்களே! (உபரியானத் தொழுகைகளை) உங்கள் வீடுகளிலேயே தொழுதுகொள்ளுஙகள்.ஒரு மனிதர் தம் வீட்டில் தொழும் தொழுகையே தொழுகையில் சிறந்ததாகும். ஆனால் கடமையாக்கப்ட்ட தொழுகையைத் தவிர! என்று கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

அத்தியாயம்: 10


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اتَّخَذَ حُجْرَةً – قَالَ: حَسِبْتُ أَنَّهُ قَالَ مِنْ حَصِيرٍ – فِي رَمَضَانَ، فَصَلَّى فِيهَا لَيَالِيَ، فَصَلَّى بِصَلاَتِهِ نَاسٌ مِنْ أَصْحَابِهِ، فَلَمَّا عَلِمَ بِهِمْ جَعَلَ يَقْعُدُ، فَخَرَجَ إِلَيْهِمْ فَقَالَ: «قَدْ عَرَفْتُ الَّذِي رَأَيْتُ مِنْ صَنِيعِكُمْ، فَصَلُّوا أَيُّهَا النَّاسُ فِي بُيُوتِكُمْ، فَإِنَّ أَفْضَلَ الصَّلاَةِ صَلاَةُ المَرْءِ فِي بَيْتِهِ إِلَّا المَكْتُوبَةَ»


Bukhari-730

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 81 இரவுத் தொழுகை. 

730. ஆயிஷா(ரலி) கூறினார்;

நபி(ஸல்) அவர்களிடம் பாய் ஒன்று இருந்தது. பகலில் அதை விரித்துக் கொள்வார்கள். இரவில் அதையே அறை போன்று அமைத்துக் கொண்டு தொழுவார்கள். மக்கள் அவர்களருகே விரைந்து வந்து அவர்களைப் பின்பற்றித் தொழுவார்கள்.
Book : 10


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَهُ حَصِيرٌ، يَبْسُطُهُ بِالنَّهَارِ، وَيَحْتَجِرُهُ بِاللَّيْلِ، فَثَابَ إِلَيْهِ نَاسٌ، فَصَلَّوْا وَرَاءَهُ»


Bukhari-729

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 80 இமாமுக்கும் மக்களுக்குமிடையே ஏதேனும் சுவரோ அல்லது தடுப்போ இருந்தால் (கூட்டுத் தொழுகையைப் பாதிக்குமா?)

ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: உனக்கும் உன் இமாமுக்குமிடையே ஓர் ஆறு ஓடிக் கொண்டிருந்தாலும் (அவரைப் பின் பற்றி) நீ தொழுவதில் தவறில்லை.

அபூமிஜ்லஸ் லாஹிக் பின் ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இமாமுடைய தக்பீர் செவியில் விழுமானால்  இருவருக்கிடையே சுவரோ நடைபாதையோ இருந்தால்கூட அந்த இமாமைப் பின்பற்றலாம். 

729. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் இரவில் தம் அறையில் தொழுபவர்களாக இருந்தனர். அவர்களின் தலையை மக்கள் பார்க்கும் அளவுக்கு அந்த அறையின் சுவர் குட்டையாக இருந்தது. மக்கள் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். மறுநாள் காலையில் மக்கள் இது பற்றிப் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். இரண்டாம் நாளில் நபி(ஸல்) அவர்கள் தொழுதபோது மக்களும் அவர்களைப் பின்பற்றித் தொழலானார்கள். இவ்வாறு இரண்டு மூன்று இரவுகள் செய்யலானார்கள். அதன்பின்னர் நபி(ஸல்) அவர்கள் தொழவராமல் உட்கார்ந்துவிட்டார்கள். காலையில் மக்கள் இது பற்றிப் பேசிக் கொள்ளலானார்கள். ‘இரவுத் தொழுகை உங்களின் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சினேன்; (அதனாலேயே வரவில்லை.)’

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ فِي حُجْرَتِهِ، وَجِدَارُ الحُجْرَةِ قَصِيرٌ، فَرَأَى النَّاسُ شَخْصَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَامَ أُنَاسٌ يُصَلُّونَ بِصَلاَتِهِ، فَأَصْبَحُوا فَتَحَدَّثُوا بِذَلِكَ، فَقَامَ اللَّيْلَةَ الثَّانِيَةَ، فَقَامَ مَعَهُ أُنَاسٌ يُصَلُّونَ بِصَلاَتِهِ، صَنَعُوا ذَلِكَ لَيْلَتَيْنِ – أَوْ ثَلاَثًا – حَتَّى إِذَا كَانَ بَعْدَ ذَلِكَ، جَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمْ يَخْرُجْ، فَلَمَّا أَصْبَحَ ذَكَرَ ذَلِكَ النَّاسُ فَقَالَ: «إِنِّي خَشِيتُ أَنْ تُكْتَبَ عَلَيْكُمْ صَلاَةُ اللَّيْلِ»


Bukhari-728

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 79

பள்ளிவாசலின் வலப் புறத்தையும் இமாமின் வலப் புறத்தையும் தேர்ந்தெடுப்பது. 

728. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

ஓர் இரவு நான் நபி (ஸல்) அவர்களின் இடப்புறம் நின்று தொழுதேன். அவர்கள் பின்புறமாக என்னுடைய கையைப் பிடித்து தம் வலப்புறத்தில் என்னை நிறுத்தினார்கள்.

அத்தியாயம்: 10


«قُمْتُ لَيْلَةً أُصَلِّي عَنْ يَسَارِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخَذَ بِيَدِي – أَوْ بِعَضُدِي – حَتَّى أَقَامَنِي عَنْ يَمِينِهِ، وَقَالَ بِيَدِهِ مِنْ وَرَائِي»


Bukhari-727

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 78

(ஆண்கள் வரிசையில் சேராமல்) தனியாக நிற்கும் பெண்கூட ஒருவரிசை என்றே கருதப்படுவார். 

727. அனஸ் (ரலி) அறிவித்தார்.

எங்களின் வீட்டில் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி நானும் மற்றொரு சிறுவரும் தொழுதோம். என் தாயார் உம்முஸுலைம் (ரலி) எங்களுக்குப் பின் நின்று தொழுதார்கள்.

அத்தியாயம்: 10


«صَلَّيْتُ أَنَا وَيَتِيمٌ، فِي بَيْتِنَا خَلْفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأُمِّي أُمُّ سُلَيْمٍ خَلْفَنَا»


Bukhari-726

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 77 இமாம் தமக்கு இடப் பக்கத்தில் நிற்பவரை தமக்குப் பின்புறமாக இழுத்து வலப் பக்கத்தில் நிறுத்தினால் அ(வ்விரு)வருடைய தொழுகை நிறைவேறவே செய்யும். 

726. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஓர் இரவு நான் நபி(ஸல்) அவர்களுடன் தொழும்போது அவர்களின் இடப்புறமாக நின்றேன். அப்போது அவர்கள் என் தலையின் பின்புறத்தைப் பிடித்துத் தம் வலப்புறத்தில் என்னை நிறுத்தினார்கள். தொழுததும் உறங்கிவிட்டார்கள். முஅத்தின் வந்ததும் எழுந்து உளூச் செய்யாமலே தொழுதார்கள்.
Book : 10


«صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ، فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَأَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَأْسِي مِنْ وَرَائِي، فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّى وَرَقَدَ، فَجَاءَهُ المُؤَذِّنُ، فَقَامَ وَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»


Bukhari-725

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 76 தோள் புஜத்துடன் தோள் புஜத்தையும் பாதத்துடன் பாதத்தையும் சேர்த்துக் கொண்டு (தொழுகை) வரிசையில் நிற்பது.

(தொழுகையில் நிற்கும் போது) எங்களில் ஒருவர் தமது கணுக்காலை தம் அருகிலிருப்பவரின் கணுக்காலுடன் சேர்த்துக்கொள்வதை நான் பார்த்துள்ளேன் என நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்: 

725. அனஸ்(ரலி) கூறினார்: ‘உங்கள் வரிசைகளை ஒழுங்கு படுத்திக் கொள்ளுங்கள்! நிச்சயமாக நான் என்னுடைய முதுகுக்குப் பின்புறமும் உங்களைக் காண்கிறேன்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும் எங்களில் ஒருவர் தம் தோள் புஜத்தை மற்றவரின் தோள் புஜத்துடனும் தம் பாதத்தை மற்றவரின் பாதத்துடனும் சேர்த்துக் கொள்ளலானார்கள்.
Book : 10


«أَقِيمُوا صُفُوفَكُمْ، فَإِنِّي أَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِي، وَكَانَ أَحَدُنَا يُلْزِقُ مَنْكِبَهُ بِمَنْكِبِ صَاحِبِهِ، وَقَدَمَهُ بِقَدَمِهِ»


Bukhari-724

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 75

தொழுகை வரிசைகளை நிறைவு செய்யாமலிருப்பது குற்றம். 

724. பஷீர் பின் யஸார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் (ரலி) மதீனா வந்தபோது, ‘நபி (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் அறிந்துள்ள நடைமுறைக்கு மாற்றமாக எங்களிடம் எதையேனும் காண்கிறீர்களா?’ என்று கேட்கப்பட்டது. ‘நீங்கள் வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்வதில்லை என்பதைத் தவிர வேறு எந்தத் தவறையும் உங்களிடம் நான் காணவில்லை’ என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்.

அத்தியாயம்: 10


أَنَّهُ قَدِمَ المَدِينَةَ فَقِيلَ لَهُ: مَا أَنْكَرْتَ مِنَّا مُنْذُ يَوْمِ عَهِدْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «مَا أَنْكَرْتُ شَيْئًا إِلَّا أَنَّكُمْ لاَ تُقِيمُونَ الصُّفُوفَ»


Next Page » « Previous Page