Author: Farook

Bukhari-723

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

723. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வரிசையை ஒழுங்கு படுத்துங்கள்! வரிசைகளை ஒழுங்கு படுத்துவது தொழுகையை நிலை பெறச் செய்வதாகும்.’ என அனஸ் (ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 10


سَوُّوا صُفُوفَكُمْ، فَإِنَّ تَسْوِيَةَ الصُّفُوفِ مِنْ إِقَامَةِ الصَّلاَةِ


Bukhari-722

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 74

வரிசையை நேராக்குவதும் தொழுகையை பூரணமாக்குவதேயாம். 

722. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

பின்பற்றப்படுவதற்காகவே இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு முரண்படாதீர்கள்! அவர் ருகூவு செய்யும்போது நீங்களும் ருகூவு செய்யுங்கள்! அவர் ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ என்று கூறும்போது நீங்கள் ‘ரப்பனா லகல் ஹம்து’ எனக் கூறுங்கள்! அவர் ஸஜ்தாச் செய்யும்போது நீங்களும் ஸஜ்தாச் செய்யுங்கள்!

அவர் உட்கார்ந்து தொழும்போது நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்! தொழுகையில் வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள்! ஏனெனில், வரிசையை ஒழுங்கு படுத்துவது தொழுகையை அழகுறச் செய்வதாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 10


إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَلاَ تَخْتَلِفُوا عَلَيْهِ، فَإِذَا رَكَعَ، فَارْكَعُوا، وَإِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: رَبَّنَا لَكَ الحَمْدُ، وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا، وَإِذَا صَلَّى جَالِسًا، فَصَلُّوا جُلُوسًا أَجْمَعُونَ، وَأَقِيمُوا الصَّفَّ فِي الصَّلاَةِ، فَإِنَّ إِقَامَةَ الصَّفِّ مِنْ حُسْنِ الصَّلاَةِ


Bukhari-721

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

721. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஜமாஅத் தொழுகைக்கு) முந்தி வருவதில் உள்ளதை (சிறப்பு) மக்கள் அறிந்தால் அதற்காகப் போட்டி போடுவார்கள். ஸுபுஹ், இஷாத் தொழுகைகளின் சிறப்பை மக்கள் அறிந்தால் தவழ்ந்தேனும் அதற்காக வந்து சேர்வார்கள். முதல் வரிசையின் சிறப்பை அவர்கள் அறிந்தால் (போட்டி ஏற்படும் போது) சீட்டுக் குலுக்கி (யார் முதல் வரிசையில் நிற்பது என்பதை)த் தீர்மானிப்பார்கள்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :10


«وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لاَسْتَبَقُوا، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي العَتَمَةِ وَالصُّبْحِ، لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا، وَلَوْ يَعْلَمُونَ مَا فِي الصَّفِّ المُقَدَّمِ لاَسْتَهَمُوا»


Bukhari-720

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 73 முதல் வரிசை(யின் சிறப்பு). 

720. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘மூழ்கி இறந்தவர்களும் காலராவில் இறந்தவர்களும் வயிற்றோட்டத்தில் இறந்தவர்களும் கட்டிடம் இடிந்து விழுந்து இறந்தவர்களும் ஷஹீத்களாவர்.’
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 10


الشُّهَدَاءُ: الغَرِقُ، وَالمَطْعُونُ، وَالمَبْطُونُ، وَالهَدِمُ


Bukhari-719

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 72 வரிசைகளை ஒழுங்குபடுத்தும் போது இமாம் மக்களை நோக்கித் திரும்புவது. 

719. அனஸ்(ரலி) அறிவித்தார்.

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் எங்கள் பக்கம் முன்னோக்கி, ‘வரிசைகளை நேராக்குங்கள்! நெருக்கமாக நில்லுங்கள்! ஏனெனில் என் முதுகுக்குப் பின் புறமாகவும் உங்களை நான் காணுகிறேன்’ என்றார்கள்.
Book : 10


أُقِيمَتِ الصَّلاَةُ فَأَقْبَلَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِوَجْهِهِ، فَقَالَ: «أَقِيمُوا صُفُوفَكُمْ، وَتَرَاصُّوا، فَإِنِّي أَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِي»


Bukhari-718

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

718. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘வரிசைகளை நேராக்கிக் கொள்ளுங்கள்! நிச்சயமாக நான் என்னுடைய முதுகுக்குப் பின்புறமும் உங்களைக் காணுகிறேன்.’ என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book :10


«أَقِيمُوا الصُّفُوفَ، فَإِنِّي أَرَاكُمْ خَلْفَ ظَهْرِي»


Bukhari-717

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 71

இகாமத்’ கூறும் போதும் அதன் பின்னரும் தொழுகை வரிசைகளை ஒழுங்குபடுத்துவது. 

717. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களின் வரிசைகளை நேராக அமைத்துக் கொள்ளுங்கள்! இல்லையெனில் அல்லாஹ் உங்கள் முகங்களை மாற்றி விடுவான்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)

அத்தியாயம்: 10


«لَتُسَوُّنَّ صُفُوفَكُمْ، أَوْ لَيُخَالِفَنَّ اللَّهُ بَيْنَ وُجُوهِكُمْ»


Bukhari-716

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 70 தொழுகையில் இமாம் அழுதால்… (தொழுகை பாழாகிவிடுமா?)

அப்துல்லாஹ் பின் ஷத்தாத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: தொழுகையின் கடைசி வரிசையில் நின்று கொண்டிருந்த நான், என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகின்றேன் எனும் (12:86ஆவது) வசனத்தை (தொழுகையில்) ஓதியபடி உமர் (ரலி) அவர்கள் தேம்பியழுவதை செவியுற்றேன். 

716. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் நோயுற்றிருந்தபோது ‘மக்களுக்குத் தொழுகை நடத்தும் படி  அபூ பக்ரிடம் கூறுங்கள்’ எனக் கூறினார்கள். அதற்கு, ‘அபூ பக்ர் உங்களுடைய இடத்தில் நின்று தொழுகை நடத்துவார்களானால், அவர்கள் அழுவதன் காரணத்தினால் மக்களுக்குக் குர்ஆனைக் கேட்கச் செய்ய அவர்களால் முடியாது. எனவே உமர் மக்களுக்குத் தொழுகை நடத்தட்டும்’ என நான் நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன்.
மேலும், அபூ பக்ர் உங்கள் இடத்தில் நின்று தொழுகை நடத்தினால் அதிகம் அவர் அழுவதனால் மக்களுக்குக் குர்ஆனைக் கேட்கச் செய்ய அவரால் முடியாது. எனவே தொழுகை நடத்தும் படி உமருக்குக் கட்டளையிடுங்கள் என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறும் படி ஹப்ஸா(ரலி) அவர்களிடம் கூறினேன்.

அவர்களிடம் கூறியபோது, ‘நிறுத்து, நிச்சயமாக நீங்கள் தாம் நபி யூஸுஃபின் (அழகைக் கண்டு கையை அறுத்த) தோழிகள்

قَالَ فِي مَرَضِهِ: «مُرُوا أَبَا بَكْرٍ يُصَلِّي بِالنَّاسِ» قَالَتْ عَائِشَةُ: قُلْتُ: إِنَّ أَبَا بَكْرٍ إِذَا قَامَ فِي مَقَامِكَ لَمْ يُسْمِعِ النَّاسَ مِنَ البُكَاءِ، فَمُرْ عُمَرَ فَلْيُصَلِّ، فَقَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ لِلنَّاسِ» قَالَتْ عَائِشَةُ لِحَفْصَةَ: قُولِي لَهُ: إِنَّ أَبَا بَكْرٍ إِذَا قَامَ فِي مَقَامِكَ لَمْ يُسْمِعِ النَّاسَ مِنَ البُكَاءِ، فَمُرْ عُمَرَ فَلْيُصَلِّ لِلنَّاسِ، فَفَعَلَتْ حَفْصَةُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَهْ إِنَّكُنَّ لَأَنْتُنَّ صَوَاحِبُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ، فَلْيُصَلِّ لِلنَّاسِ» قَالَتْ حَفْصَةُ لِعَائِشَةَ: مَا كُنْتُ لِأُصِيبَ مِنْكِ خَيْرًا


Bukhari-15

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

715. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையை இரண்டு ரக்அத்தாகத் தொழுகை நடத்தினார்கள். ‘இரண்டு ரக்அத்கள் தானே தொழுகை நடத்தினீர்கள்?’ என்று கூறப்பட்டது. பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்தியப் பின்பு ஸலாம் கூறி, இரண்டு ஸஜ்தாக்கள் செய்தார்கள்.
Book :10


صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ رَكْعَتَيْنِ، فَقِيلَ: صَلَّيْتَ رَكْعَتَيْنِ، فَصَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ


Bukhari-714

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 69 இமாமுக்கு (தம் தொழுகை பற்றி) சந்தேகம் ஏற்பட்டால் (பின்பற்றித் தொழுத) மக்களின் கூற்றை ஏற்றுக்கொள்ளலாமா? 

714. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (நான்கு ரக்அத் தொழுகையை) இரண்டு ரக்அத்களில் முடித்துவிட்டார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! தொழுகை(யின் ரக்அத்கள்) குறைந்து விட்டனவா? அல்லது நீங்கள் மறந்து விட்டீர்களா? என்று துல்யதைன் கேட்டார். ‘துல்யதைன் கூறுவது உண்மையா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க, மக்கள், ‘ஆம்’ என்றனர். உடன், மற்றும் இரண்டு ரக்அத்களை நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தி ஸலாம் கொடுத்தார்கள். பின்பு தக்பீர் கூறி முன்பு செய்தது போன்று, அல்லது அதை விடவும் நீண்ட ஸஜ்தாச் செய்தார்கள்.
Book : 10


انْصَرَفَ مِنَ اثْنَتَيْنِ، فَقَالَ لَهُ ذُو اليَدَيْنِ: أَقَصُرَتِ الصَّلاَةُ، أَمْ نَسِيتَ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَصَدَقَ ذُو اليَدَيْنِ» فَقَالَ النَّاسُ: نَعَمْ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّى اثْنَتَيْنِ أُخْرَيَيْنِ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ كَبَّرَ، فَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ


Next Page » « Previous Page