Author: Farook

Bukhari-713

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 68

இமாமைப் பின்பற்றி ஒருவர் தொழ, அவரைப் பின்பற்றி மக்கள் தொழுவது.

நபி (ஸல்) அவர்கள், (கூட்டுத் தொழுகையில் முதல் வரிசையில் இருந்தவர்களிடம்) “நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் உங்களைப் பின்பற்றட்டும்” என்று சொன்னதாக கூறப்படுகிறது.

713. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நோய் அதிகமானபோது, அவர்களிடம் பிலால் (ரலி) அவர்கள் தொழுகை பற்றி அறிவிக்க வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அபூபக்ர் அவர்களிடம் மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் வேகமாகத் துக்கப்படுகின்ற மனிதராவார்கள்; (தொழுவதற்காக) நீங்கள் நிற்கும் இடத்தில் அவர்கள் நின்றால், (மனம் நெகிழ்ந்து அழுவதால்) அவர்களால் மக்களுக்குக் கேட்கும் விதமாக (குர்ஆனை) ஓத முடியாது. உமர் (ரலி) அவர்களிடம் நீங்கள் தொழுவிக்கச் சொல்லலாமே!” என்று சொன்னேன்.

அப்போது (மீண்டும்) “அபூபக்ர் அவர்களை மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்” என்று நபியவர்கள் சொன்னார்கள். நான் (அருகில் இருந்த) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம், “அபூபக்ர் வேகமாகத் துக்கப்படுகின்ற மனிதராவார்கள். நீங்கள் நிற்கும் இடத்தில் அவர்கள் நின்றால் மக்களுக்குக்

لَمَّا ثَقُلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَ بِلاَلٌ يُوذِنُهُ بِالصَّلاَةِ، فَقَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ»، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ وَإِنَّهُ مَتَى مَا يَقُمْ مَقَامَكَ لاَ يُسْمِعُ النَّاسَ، فَلَوْ أَمَرْتَ عُمَرَ، فَقَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ يُصَلِّي بِالنَّاسِ» فَقُلْتُ لِحَفْصَةَ: قُولِي لَهُ: إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ، وَإِنَّهُ مَتَى يَقُمْ مَقَامَكَ لاَ يُسْمِعُ النَّاسَ، فَلَوْ أَمَرْتَ عُمَرَ، قَالَ: «إِنَّكُنَّ لَأَنْتُنَّ صَوَاحِبُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ» فَلَمَّا دَخَلَ فِي الصَّلاَةِ وَجَدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَفْسِهِ خِفَّةً، فَقَامَ يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ، وَرِجْلاَهُ يَخُطَّانِ فِي الأَرْضِ، حَتَّى دَخَلَ المَسْجِدَ، فَلَمَّا سَمِعَ أَبُو بَكْرٍ حِسَّهُ، ذَهَبَ أَبُو بَكْرٍ يَتَأَخَّرُ، فَأَوْمَأَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى جَلَسَ عَنْ يَسَارِ أَبِي بَكْرٍ، فَكَانَ أَبُو بَكْرٍ يُصَلِّي قَائِمًا، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي قَاعِدًا، يَقْتَدِي أَبُو بَكْرٍ بِصَلاَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسُ مُقْتَدُونَ بِصَلاَةِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ


Bukhari-712

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 67

இமாம் தக்பீர் சொல்வதை மக்களுக்குக் கேட்கும் விதமாக ஒருவர் (உரத்த குரலில்) கூறுவது. 

712. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் நோய்வாய்ப் பட்டிருந்தபோது பிலால் (ரலி) வந்து தொழுகை பற்றி அவர்களிடம் அறிவித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘அபூபக்ரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்’ என்றார்கள். அதற்கு நான் அவர் இளகிய மனம் படைத்தவர். உங்கள் இடத்தில் அவர் நின்றால் அழுதுவிடுவார். அவரால் ஓத இயலாது என்று கூறினேன். ‘அபூபக்ரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்’ என்று மீண்டும் கூறினார்கள். நானும் முன் போன்றே கூறினேன். நானும் முன் போன்றே கூறினேன். மூன்றாவது அல்லது நான்காவது முறை ‘நீங்கள் யூஸுஃப் நபியின் தோழியராக இருக்கிறீர்கள். அபூபக்ரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்’ என்றனர்.

(அதன் பின்னர்) அபூபக்ர் தொழுகை நடத்தினார். நபி (ஸல்) அவர்கள் கால்கள் தரையில் இழுபடுமாறு இரண்டு மனிதர்களுக்கிடையே தொங்கியவர்களாக (ப்பள்ளிக்குச்) சென்றனர். அவர்களைக் கண்ட அபூபக்ர் (ரலி) பின்வாங்க முயன்றார்கள். தொழுகையை நடத்துமாறு அவருக்கு நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள். அபூபக்ர் (ரலி)யின் வலப்புறமாக நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்தனர். நபி (ஸல்) அவர்கள் கூறும் தக்பீரை அபூபக்ர்

لَمَّا مَرِضَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَضَهُ الَّذِي مَاتَ فِيهِ أَتَاهُ بِلاَلٌ يُوذِنُهُ بِالصَّلاَةِ، فَقَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ»، قُلْتُ: إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ إِنْ يَقُمْ مَقَامَكَ يَبْكِي، فَلاَ يَقْدِرُ عَلَى القِرَاءَةِ، فَقَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ»، فَقُلْتُ: مِثْلَهُ، فَقَالَ فِي الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ: «إِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ  فَلْيُصَلِّ»، فَصَلَّى وَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَخُطُّ بِرِجْلَيْهِ الأَرْضَ، فَلَمَّا رَآهُ أَبُو بَكْرٍ ذَهَبَ يَتَأَخَّرُ، فَأَشَارَ إِلَيْهِ أَنْ صَلِّ، فَتَأَخَّرَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، وَقَعَدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى جَنْبِهِ، وَأَبُو بَكْرٍ يُسْمِعُ النَّاسَ التَّكْبِيرَ


Bukhari-711

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 66 (இமாமுக்குப் பின்னால்) தொழுதவர், பிறகு (அதே தொழுகையை அவரே இமாமாக நின்று) மற்றவர்களுக்குத் தொழுவிப்பது. 

711. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

முஆத் இப்னு ஜபல்(ரலி) நபி(ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தம் சமுதாயத்தினரிடம் சென்று அவர்களுக்கு இமாமாகத் தொழுகை நடத்துபவர்களாக இருந்தனர்.
Book : 10


«كَانَ مُعَاذٌ يُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يَأْتِي قَوْمَهُ، فَيُصَلِّي بِهِمْ»


Bukhari-710

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

710. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்துவிடுகிறேன்’.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book :10


«إِنِّي لَأَدْخُلُ فِي الصَّلاَةِ، فَأُرِيدُ إِطَالَتَهَا، فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ، فَأَتَجَوَّزُ مِمَّا أَعْلَمُ مِنْ شِدَّةِ وَجْدِ أُمِّهِ مِنْ بُكَائِهِ»


Bukhari-709

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

709. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்’. என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book :10


«إِنِّي لَأَدْخُلُ فِي الصَّلاَةِ وَأَنَا أُرِيدُ إِطَالَتَهَا، فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ، فَأَتَجَوَّزُ فِي صَلاَتِي مِمَّا أَعْلَمُ مِنْ شِدَّةِ وَجْدِ أُمِّهِ مِنْ بُكَائِهِ»


Bukhari-708

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

708. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களை விடத்தொழுகையைச் சுருக்கமாகவும் (அதே சமயம்) பூரணமாகவும் தொழுகை நடத்தக் கூடிய வேறு எந்த இமாமின் பின்னாலும் நான் தொழுதது கிடையாது. ஒரு குழந்தையின் அழுகுரலை அவர்கள் கேட்க நேர்ந்தால், அக்குழந்தையின் தாயாருக்குச் சஞ்சலம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் தொழுகையைச் சுருக்கமாகவே முடித்துக் கொள்வார்கள்.

அத்தியாயம்: 10


«مَا صَلَّيْتُ وَرَاءَ إِمَامٍ قَطُّ أَخَفَّ صَلاَةً، وَلاَ أَتَمَّ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِنْ كَانَ لَيَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ، فَيُخَفِّفُ مَخَافَةَ أَنْ تُفْتَنَ أُمُّهُ»


Bukhari-707

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 65

(தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டி ருப்போரின்) குழந்தை அழுவதைக் கேட்டு (தலைமை தாங்கித் தொழுவித்துக் கொண்டி ருப்பவர்) தொழுகையைச் சுருக்கமாகத் தொழுது முடிப்பது. 

707. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்’. என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 10


«إِنِّي لَأَقُومُ فِي الصَّلاَةِ أُرِيدُ أَنْ أُطَوِّلَ فِيهَا، فَأَسْمَعُ بُكَاءَ الصَّبِيِّ، فَأَتَجَوَّزُ فِي صَلاَتِي كَرَاهِيَةَ أَنْ أَشُقَّ عَلَى أُمِّهِ»


Bukhari-706

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 64 தொழுகையைச் சுருக்கமாகவும் (அதே சமயம்) பூரணமாகவும் தொழுவிப்பது. 

706. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தொழுகையைச் சுருக்கமாகவும் (எந்த ஒன்றும் விடுபடாமல்) பூரணமாகவும் தொழுபவர்களாக இருந்தனர்.
Book : 10


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوجِزُ الصَّلاَةَ وَيُكْمِلُهَا»


Bukhari-705

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

705. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் (தண்ணீர் இறைப்பதற்குரிய) இரண்டு கமலைகளை எடுத்துக் கொண்டு இருள் சூழ்ந்த நேரத்தில் வந்தார். முஆத்(ரலி) (இஷாத்) தொழுகை நடத்திக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் தம் கமலைகளை வைத்துவிட்டு முஆத்(ரலி) உடன் தொழுகையில் சேர்ந்தார். முஆத்(ரலி) ‘பகரா’ அல்லது ‘நிஸா’ அத்தியாயத்தை ஓதலானார்கள். உடனே அந்த மனிதர் (தொழுகையை)விட்டுவிட்டுச்) சென்றார்.
இது பற்றி முஆத்(ரலி) குறை கூறியது அந்த மனிதருக்குத் தெரியவந்தபோது, நபி(ஸல்) அவர்களிடம் வந்து இது பற்றி முறையிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘முஆதே! நீர் குழப்பம் ஏற்படுத்துபவரா?’ என்று மும்முறை கேட்டார்கள். ‘ஸப்பிஹிஸ்மரப்பி’, வஷ்ஷம்ஸி வளுஹாஹா வல்லைலி இதா யக்‌ஷா’ ஆகிய அத்தியாயங்களை ஓதி நீர் தொழுகை நடத்தக் கூடாதா? நிச்சயமாக உமக்குப் பின்னால் முதியவர்கள், பலவீனர்கள், அலுவலுடையவர்கள் உள்ளனர்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book :10


أَقْبَلَ رَجُلٌ بِنَاضِحَيْنِ وَقَدْ جَنَحَ اللَّيْلُ، فَوَافَقَ مُعَاذًا يُصَلِّي، فَتَرَكَ نَاضِحَهُ وَأَقْبَلَ إِلَى مُعَاذٍ، فَقَرَأَ بِسُورَةِ البَقَرَةِ – أَوِ النِّسَاءِ – فَانْطَلَقَ الرَّجُلُ وَبَلَغَهُ أَنَّ مُعَاذًا نَالَ مِنْهُ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَشَكَا إِلَيْهِ مُعَاذًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا مُعَاذُ، أَفَتَّانٌ أَنْتَ» – أَوْ «أَفَاتِنٌ» – ثَلاَثَ مِرَارٍ: «فَلَوْلاَ صَلَّيْتَ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ، وَالشَّمْسِ وَضُحَاهَا، وَاللَّيْلِ إِذَا يَغْشَى، فَإِنَّهُ يُصَلِّي وَرَاءَكَ الكَبِيرُ وَالضَّعِيفُ وَذُو الحَاجَةِ»


Bukhari-704

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 63 நீண்ட நேரம் தொழுவிக்கும் தம் இமாமைப் பற்றி ஒருவர் (தலைவரிடம்) முறையிடுவது.

தொழுகையை நீட்டித் தொழுவித்த தம் புதல்வர் முன்திர் என்பவரிடம்) அபூஉசைத் மாலிக் பின் ரபீஆ அல்அன்சாரி (ரலி) அவர்கள், அருமை மகனே! எங்களுக்கு நீண்ட நேரம் தொழுவித்துவிட்டீரே! என்று (கடிந்து) கூறினார்கள். 

704. அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

‘இறைத்தூதர்! இன்ன மனிதர் எங்களுக்குத் தொழுகையை நீட்டுவதால் நான் ஃபஜ்ருத் தொழுகையின் ஜமாஅத்துக்குச் செல்வதில்லை’ என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார். இதைக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள் முன் எப்போதும் அடைந்திராத கோபத்தை அன்றைய தினம் அடைந்தார்கள். (வணக்க வழிபாடுகளில்) வெறுப்பை ஏற்படுத்துபவர்களும் உங்களிலுள்ளனர். உங்களில் எவரேனும் மக்களுக்குத் தொழுகை நடத்தினால் சுருக்கமாக நடத்தட்டும்! ஏனெனில், மக்களில் பலவீனர்கள், முதியோர், அலுவல்கள் உள்ளவர்கள் இருக்கின்றனர்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
Book : 10


قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَأَتَأَخَّرُ عَنِ الصَّلاَةِ فِي الفَجْرِ مِمَّا يُطِيلُ بِنَا فُلاَنٌ فِيهَا، فَغَضِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا رَأَيْتُهُ غَضِبَ فِي مَوْضِعٍ كَانَ أَشَدَّ غَضَبًا مِنْهُ يَوْمَئِذٍ، ثُمَّ قَالَ: «يَا أَيُّهَا النَّاسُ، إِنَّ مِنْكُمْ مُنَفِّرِينَ، فَمَنْ أَمَّ النَّاسَ فَلْيَتَجَوَّزْ، فَإِنَّ خَلْفَهُ الضَّعِيفَ وَالكَبِيرَ وَذَا الحَاجَةِ»


Next Page » « Previous Page