Author: Farook

Bukhari-703

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 62

தனித்துத் தொழுபவர் விரும்பிய அளவுக்குத் தொழுகையை நீட்டிக் கொள்ளலாம். 

703. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மற்றவர்களுக்குத் தொழுகை நடத்துபவர் சுருக்கமாகவே நடத்தட்டும்! ஏனெனில் பலவீனர்கள், நோயாளிகள், முதியவர்கள் அவர்களில் உள்ளனர்.

தனித்துத் தொழும்போது அவர் விரும்பும் அளவுக்கு நீட்டிக் கொள்ளலாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 10


«إِذَا صَلَّى أَحَدُكُمْ لِلنَّاسِ، فَلْيُخَفِّفْ، فَإِنَّ مِنْهُمُ الضَّعِيفَ وَالسَّقِيمَ وَالكَبِيرَ، وَإِذَا صَلَّى أَحَدُكُمْ لِنَفْسِهِ فَلْيُطَوِّلْ مَا شَاءَ»


Bukhari-702

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 61

இமாம் தொழுகையின் நிலையில் சிறிது நேரமே நிற்பதும் (அதே சமயம்) குனிவு, சிரவணக்கம் (ருகூஉ,சஜ்தா) ஆகியவற்றை பூரணமாக நிறைவேற்றுவதும். 

702. அபூமஸ்வூத் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களே! இன்ன மனிதர் எங்களுக்குத் தொழுகையை நீட்டுவதால் நான் ஃபஜ்ருத் தொழுகையின் ஜமாஅத்துக்குச் செல்வதில்லை’ என்று ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். இதைக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள் முன் எப்போதும் அடைந்திராத கோபத்தை அன்றைய தினம் அடைந்தார்கள். ‘(வணக்க வழிபாடுகளில்) வெறுப்பை ஏற்படுத்துபவர்களும் உங்களிலுள்ளனர். உங்களில் எவரேனும் மக்களுக்குத் தொழுகை நடத்தினால் சுருக்கமாக நடத்தட்டும்! ஏனெனில் மக்களில் பலவீனர்கள், முதியோர், அலுவல்கள் உள்ளவர்கள் இருக்கிறார்கள்’ என்று அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம்: 10


أَنَّ رَجُلًا، قَالَ: وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لَأَتَأَخَّرُ عَنْ صَلاَةِ الغَدَاةِ مِنْ أَجْلِ فُلاَنٍ مِمَّا يُطِيلُ بِنَا، فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَوْعِظَةٍ أَشَدَّ غَضَبًا مِنْهُ يَوْمَئِذٍ، ثُمَّ قَالَ: «إِنَّ مِنْكُمْ مُنَفِّرِينَ، فَأَيُّكُمْ مَا صَلَّى بِالنَّاسِ فَلْيَتَجَوَّزْ، فَإِنَّ فِيهِمُ الضَّعِيفَ وَالكَبِيرَ وَذَا الحَاجَةِ»


Bukhari-701

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

701. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்.

முஆத் இப்னு ஜபல் (ரலி) நபி (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தம் குழுவினரிடம் சென்று அவர்களுக்கு இமாமாகத் தொழுகை நடத்துவது வழக்கம். (ஒரு முறை) இஷாத் தொழுகை நடத்தும்போது ‘அல்பகரா’ அத்தியாயத்தை ஓதினார்கள்.

அப்போது ஒருவர்(தொழுகையை)விட்டும் விலகிச் சென்றார். (தொழுது முடித்ததும்) முஆத் இப்னு ஜபல் (ரலி) அவரைக் கண்டித்தார்கள். இச்செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்தபோது ‘(நீரென்ன) குழப்பவாதியா?’ என்று மும்முறை நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி)ஜ நோக்கிக் கூறினார்கள். மேலும், நடுத்தரமான இரண்டு அத்தியாயங்களை ஓதித் தொழுமாறு அவருக்குக் கட்டளையிட்டார்கள்.


ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்து இதை அறிவிக்கும் அம்ர் ‘அந்த இரண்டு அத்தியாயங்களை எவையென ஜாபிர் (ரலி) குறிப்பிட்டார்கள். அது எனக்கு நினைவில் இல்லை’ என்றும் குறிப்பிட்டார்கள்.

அத்தியாயம்: 10


كَانَ مُعَاذُ بْنُ جَبَلٍ يُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يَرْجِعُ، فَيَؤُمُّ قَوْمَهُ، فَصَلَّى العِشَاءَ، فَقَرَأَ بِالْبَقَرَةِ، فَانْصَرَفَ الرَّجُلُ، فَكَأَنَّ مُعَاذًا تَنَاوَلَ مِنْهُ، فَبَلَغَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «فَتَّانٌ، فَتَّانٌ، فَتَّانٌ» ثَلاَثَ مِرَارٍ – أَوْ قَالَ: «فَاتِنًا، فَاتِنًا، فَاتِنًا» – وَأَمَرَهُ بِسُورَتَيْنِ مِنْ أَوْسَطِ المُفَصَّلِ،

قَالَ عَمْرٌو: لاَ أَحْفَظُهُمَا


Bukhari-700

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 60 இமாம் தொழுகையை நீட்டித் தொழுது கொண்டிருக்கும் போது (அவசியத்) தேவை ஏதும் ஒருவருக்கு இருந்தால் அவர் (கூட்டுத் தொழுகையிலிருந்து விலகிச்) சென்று தனியே தொழுதுகொள்வது (செல்லும்.) 

700. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

முஆத் இப்னு ஜபல்(ரலி) நபி(ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தம் சமுதாயத்தினரிடம் சென்று அவர்களுக்கு இமாமாகத் தொழுகை நடத்துபவர்களாக இருந்தனர்.
Book : 10


«أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ، كَانَ يُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يَرْجِعُ، فَيَؤُمُّ قَوْمَهُ»


Bukhari-699

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 59 தலைமை தாங்கித் தொழுவிக்கும் எண்ணமில்லாமல் (தனியாகத்) தொழுது கொண்டிருப்பவரை மற்றவர்கள் பின்பற்றித் தொழுதால் (தொழுகை நிறைவேறும்). 

699. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

என்னுடைய சிறிய தாயார் (மைமூனா(ரலி)) வீட்டில் நான் இரவு தங்கினேன். நபி(ஸல்) அவர்கள் இரவில் எழுந்து தொழலானார்கள். அவர்களோடு நானும் தொழுவதற்காக அவர்களின் இடப்பக்கம் நின்றேன். அப்போது (தொழுகையில் நின்றவாறே) என் தலையைப் பிடித்து அவர்களின் வலப்பக்கம் நிறுத்தினார்கள்.
Book : 10


بِتُّ عِنْدَ خَالَتِي «فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنَ اللَّيْلِ، فَقُمْتُ أُصَلِّي مَعَهُ، فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَأَخَذَ بِرَأْسِي، فَأَقَامَنِي عَنْ يَمِينِهِ»


Bukhari-698

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 58 ஒரு மனிதர் இமாமுக்கு இடப் பக்கம் (போய்) நிற்க, இமாம் (தொழுகையில் இருந்தவாறே) அந்த மனிதரைத் (தமது கையால் இழுத்து) வலப் பக்கத்தில் நிறுத்துவதால் இருவரின் தொழுகையும் பாழாகிவிடாது. 

698. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

(என்னுடைய சிறிய தாயார்) மைமூனா(ரலி)வுடைய வீட்டில் நபி(ஸல்) அவர்கள் இருந்த இரவில் நான் தூங்கினேன். அவர்கள் உளூச் செய்து தொழுவதற்காக நின்றார்கள். நான் சென்று அவர்களின் இடப்பக்கமாக நின்றேன். அப்போது அவர்கள் என்னைப் பிடித்து அவர்களின் வலப்பக்கமாக நிறுத்தினார்கள். பின்னர் பதின்மூன்று ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் அவர்கள் குறட்டை வெளியாகும் அளவிற்குத் தூங்கிவிட்டார்கள். அவர்கள் தூக்கத்தில் குறட்டை விடும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். பின்னர் முஅத்தின் வந்தபோது பள்ளிக்குச் சென்று தொழுகை நடத்தினார்கள். அவர்கள் உளூச் செய்யவில்லை.
Book : 10


نِمْتُ عِنْدَ مَيْمُونَةَ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَهَا تِلْكَ اللَّيْلَةَ «فَتَوَضَّأَ، ثُمَّ قَامَ يُصَلِّي، فَقُمْتُ عَلَى يَسَارِهِ، فَأَخَذَنِي، فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّى ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً، ثُمَّ نَامَ حَتَّى نَفَخَ، وَكَانَ إِذَا نَامَ نَفَخَ، ثُمَّ أَتَاهُ المُؤَذِّنُ، فَخَرَجَ، فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»


Bukhari-697

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 57 இரண்டுபேர் (மட்டும் சேர்ந்து) ஜமாஅத்தாக தொழும் போது பின்பற்றித் தொழுபவர் தலைமைத் தாங்கித் தொழுபவருக்குச் சமமாக அவருக்கு நேராக வலப் பக்கத்தில் நிற்க வேண்டும். 

697. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

என் சிறிய தாயார் மைமூனா(ரலி) வீட்டில் நான் தங்கியிருந்த இரவில் நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுதார்கள். பின்னர் (வீட்டிற்கு) வந்து நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் தூங்கி எழுந்தார்கள். நான் சென்று அவர்களின் இடப்புறம் நின்றேன். என்னைத் தம் வலப்புறமாக்கினார்கள். ஐந்து ரக்அத்கள் தொழுது, பின்னர் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவர்களின் குறட்டையொலியை நான் கேட்குமளவுக்கு (ஆழ்ந்து) உறங்கினார்கள். பின்னர் (ஸுபுஹ்) தொழுகைக்குச் சென்றார்கள்.
Book : 10


بِتُّ فِي بَيْتِ خَالَتِي مَيْمُونَةَ ” فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ العِشَاءَ، ثُمَّ جَاءَ، فَصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ، ثُمَّ نَامَ، ثُمَّ قَامَ، فَجِئْتُ، فَقُمْتُ عَنْ يَسَارِهِ فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّى خَمْسَ رَكَعَاتٍ، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ نَامَ حَتَّى سَمِعْتُ غَطِيطَهُ – أَوْ قَالَ: خَطِيطَهُ – ثُمَّ خَرَجَ إِلَى الصَّلاَةِ


Bukhari-696

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

696. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

‘உங்களுக்குத் தலைவராக நியமிக்கப் படுபவர் கருப்பு நிறமுடைய (நீக்ரோவான) உலர்ந்த திராட்சைப் பழம் போன்ற தலையை உடையவராக இருந்தாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள். அவர் சொல்வதைக் கேட்டு நடங்கள். என அனஸ்(ரலி) அறிவித்தார்.

Book :10


قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي ذَرٍّ: «اسْمَعْ وَأَطِعْ وَلَوْ لِحَبَشِيٍّ كَأَنَّ رَأْسَهُ زَبِيبَةٌ»


Bukhari-695

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 56 குழப்பக்காரர், (மார்க்க அடிப்படையற்ற) நூதனக் கருத்துக்கள் உடையவர் (பித்அத் வாதி) ஆகியோர் தலைமை தாங்கித் தொழுகை நடத்துவது.

நீ (அவன் பின்னால்) தொழுதுகொள்! அவனுடைய நூதனக் கொள்கை (பித்அத்) அவனுக்கே பாதகமாகும்என்று ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். 

695. உபைதுல்லா இப்னு அதீ கூறினார்:

உஸ்மான்(ரலி) முற்றுகையிடப் பட்டிருந்தபோது, நான் அவர்களிடம் சென்று ‘நீங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துகிற இமாமாக இருக்கின்றீர்கள். உங்களின் மீது சோதனை ஏற்பட்டிருப்பதை காண்கிறோம். இந்நிலையில் எங்களுக்குக் குழப்பம் விளைவிக்கிறவர் இமாமாகத் தொழுகை நடத்துகிறார். அதனால் நாங்கள் மனவேதனை அடைகிறோம்’ என்று கூறினேன். அதற்குத் தொழுகை, மக்கள் செய்கிற செயல்களில் மிகச் சிறந்த செயலாகும். மக்கள் அதை அழகான முறையில் செய்யும்போது நீயும் அவர்களோடு தொழு. அவர்கள் அதில் தவறிழைக்கிறபோது அத்தவறுகளைவிட்டும் நீ ஒதுங்கிக் கொள்’ என உஸ்மான்(ரலி) கூறினார்.

‘பேடியை (ஆணும் பெண்ணுமற்றவர்) பின்பற்றி அவசியமேற்பட்டால் தவிர தொழக் கூடாது’ என ஸுஹ்ரி கூறுகிறார்.
Book : 10


أَنَّهُ دَخَلَ عَلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ رَضِيَ اللَّهُ عَنْهُ، – وَهُوَ مَحْصُورٌ – فَقَالَ: إِنَّكَ إِمَامُ عَامَّةٍ، وَنَزَلَ بِكَ مَا نَرَى، وَيُصَلِّي لَنَا إِمَامُ فِتْنَةٍ، وَنَتَحَرَّجُ؟ فَقَالَ: «الصَّلاَةُ أَحْسَنُ مَا يَعْمَلُ النَّاسُ، فَإِذَا أَحْسَنَ النَّاسُ، فَأَحْسِنْ مَعَهُمْ، وَإِذَا أَسَاءُوا فَاجْتَنِبْ إِسَاءَتَهُمْ»


Bukhari-694

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 55

தலைமைத் தாங்கித் தொழுவித்துக் கொண்டிருப்பவர் (தொழுகையை) முழுமைப் படுத்தாவிட்டாலும் அவருக்கு பின்னால் இருப்பவர்கள் (அதை) முழுமைப்படுத்த வேண்டும். 

694. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘(இமாமாக நியமிக்கப் படுகின்ற) அவர்கள் உங்களுக்குத் தொழுகை நடத்துவார்கள்; அவர்கள் சரியாகத் தொழுவார்களானால் உங்களுக்கும் அதன் நன்மை கிடைக்கும்; அவர்கள் தவறு செய்வார்களானால் அதற்குரிய தீமை அவர்களுக்கு உண்டு. உங்களுக்கு நீங்கள் செய்ததற்குரிய நன்மை கிடைக்கும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 10


«يُصَلُّونَ لَكُمْ، فَإِنْ أَصَابُوا فَلَكُمْ، وَإِنْ أَخْطَئُوا فَلَكُمْ وَعَلَيْهِمْ»


Next Page » « Previous Page