Author: Farook

Bukhari-693

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

693. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘உங்களுக்குத் தலைவராக நியமிக்கப் படுபவர் கருப்பு நிறமுடைய (நீக்ரோவான) உலர்ந்த திராட்சைப் பழம் போன்ற தலையை உடையவராக இருந்தாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள். அவர்சொல்வதைக் கேட்டு நடங்கள்.’ என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book :10


«اسْمَعُوا وَأَطِيعُوا وَإِنِ اسْتُعْمِلَ حَبَشِيٌّ كَأَنَّ رَأْسَهُ زَبِيبَةٌ»


Bukhari-692

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 54 அடிமையும், விடுதலை செய்யப்பட்ட அடிமையும் தலைமை தாங்கித் தொழுகை நடத்துவது.

ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அவர்களுடைய அடிமையான தக்வான் என்பார் (தலைமை தாங்கித் தொழுவித்தால்) குர்ஆனைப் பார்த்தே ஓதுவார்.

தவறான உறவில் பிறந்தவன், கிராமவாசி, பருவடையாத சிறுவன் ஆகியோரும் (தலைமை தாங்கித் தொழுவித்தால் தொழுகை செல்லும்.) ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், (யார் தலைமை தாங்கித் தொழுவிக்க வேண்டும் என்பது குறித்துக் கூறுகையில்) அல்லாஹ்வுடைய வேதத்தை நன்றாக ஓதக் கூடியவர்கள் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும் என்று (பொதுப்படையாகவே) கூறியுள்ளார்கள். 

692. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

முதன் முறையாக மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்ய வந்தவர்கள், குபா என்ற பகுதியிலுள்ள உஸ்பா என்ற இடத்தில் தங்கினார்கள். நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வருவதற்கு முன்புவரை அபூ ஹுதைபா(ரலி) அவர்களின், அடிமை, ஸாலிம் தாம் மக்களுக்கு இமாமாகத் தொழுகை நடத்தினார். அவர் குர்ஆனை அதிகம் ஓதியவராக இருந்தார்.
Book : 10


«لَمَّا قَدِمَ المُهَاجِرُونَ الأَوَّلُونَ العُصْبَةَ – مَوْضِعٌ بِقُبَاءٍ – قَبْلَ مَقْدَمِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَؤُمُّهُمْ سَالِمٌ مَوْلَى أَبِي حُذَيْفَةَ، وَكَانَ أَكْثَرَهُمْ قُرْآنًا»


Bukhari-691

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 53

(ருகூஉ, சஜ்தாவில்) இமாமுக்கு முந்தித் தலையை உயர்த்துவது குற்றமாகும். 

691. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘உங்களில் ஒருவர் தொழுகையில் இமாமை முந்தித் தம் தலையை உயர்த்துவதால் அவரின் தலையைக் கழுதையுடைய தலையாகவோ அல்லது அவரின் உருவத்தைக் கழுதையுடைய உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்ச வேண்டாமா?.’ என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 10


أَمَا يَخْشَى أَحَدُكُمْ – أَوْ: لاَ يَخْشَى أَحَدُكُمْ – إِذَا رَفَعَ رَأْسَهُ قَبْلَ الإِمَامِ، أَنْ يَجْعَلَ اللَّهُ رَأْسَهُ رَأْسَ حِمَارٍ، أَوْ يَجْعَلَ اللَّهُ صُورَتَهُ صُورَةَ حِمَارٍ


Bukhari-690

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 52 இமாமுக்குப் பின்னால் தொழுபவர் எப்போது சஜ்தா செய்ய வேண்டும்?

இமாம் சிரவணக்கம் (சஜ்தா) செய்தால் நீங்களும் சிரவணக்கம் செய்யுங்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். 

690. பராவு (ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஸமி அல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று சொல்லி முடித்து ஸுஜூதுக்குச் சென்று தலையைப் பூமியில் வைப்பது வரை எங்களில் யாரும் ஸுஜூதுக்காகத் தம் முதுகை வளைக்க மாட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ஸுஜூதுக்குச் சென்ற பின்புதான் நாங்கள் ஸுஜூது செய்வோம்.
Book : 10


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، لَمْ يَحْنِ أَحَدٌ مِنَّا ظَهْرَهُ، حَتَّى يَقَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَاجِدًا، ثُمَّ نَقَعُ سُجُودًا بَعْدَهُ


Bukhari-689

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

689. அனஸ் (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை குதிரையின் மீது ஏறியபோது கீழே விழுந்துவிட்டார்கள். அதனால் அவர்களின் வலது விலாப் புறத்தில் அடிபட்டது. எனவே அவர்கள் ஒரு தொழுகையை உட்கார்ந்தவாறே தொழுதார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் உட்கார்ந்தவாறு தொழுதோம்.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் இமாம் பின்பற்றப் படுவதற்ககாகவே நியமிக்கப்பட்டுள்ளார். அவர்கள் நின்று தொழுதால் நின்று நீங்களும் நின்று தொழுங்கள். அவர் ருகூவு செய்தால் நீங்களும் ருகூவு செய்யுங்கள். அவர் தலையை உயர்த்தினால் நீங்களும் தலையை உயர்த்துங்கள். அவர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று சொன்னால் நீங்கள் ரப்பனா வலகல் ஹம்து என்று செல்லுங்கள். அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள். அவர் உட்கார்ந்தது தொழுதால் நீங்கள் எல்லோரும் உட்கார்ந்து தொழுங்கள் என்று கூறினார்கள்.


இமாம் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள் என்று கூறியது நபி (ஸல்) அவர்களுக்கு விபத்தின்போது ஏற்பட்ட முந்தைய நோயின்போது ஆகும். மரணநோயின்போது நபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுதபோது அவர்களுக்கு பின்னால் மக்கள் நின்று தொழுதார்கள். அவர்களை உட்காருமாறு நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. கடைசியாக உள்ளதைதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكِبَ فَرَسًا، فَصُرِعَ عَنْهُ فَجُحِشَ شِقُّهُ الأَيْمَنُ، فَصَلَّى صَلاَةً مِنَ الصَّلَوَاتِ وَهُوَ قَاعِدٌ، فَصَلَّيْنَا وَرَاءَهُ قُعُودًا، فَلَمَّا انْصَرَفَ  قَالَ: ” إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا صَلَّى قَائِمًا، فَصَلُّوا قِيَامًا، فَإِذَا رَكَعَ، فَارْكَعُوا وَإِذَا رَفَعَ، فَارْفَعُوا، وَإِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، فَقُولُوا: رَبَّنَا وَلَكَ الحَمْدُ، وَإِذَا صَلَّى قَائِمًا، فَصَلُّوا قِيَامًا، وَإِذَا صَلَّى جَالِسًا، فَصَلُّوا جُلُوسًا أَجْمَعُونَ


Bukhari-688

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

688. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோயுற்றபோது, தங்கள் வீட்டிலேயே உட்கார்ந்து தொழுதார்கள். அவர்களின் பின்னால் சிலர் நின்றவாறே தொழுதார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அமரும் படி சைகை செய்தார்கள். அவர்கள் தொழுது முடித்த பின்னர், “இமாம் பின்பற்றப்படுவதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ருகூவு செய்தால் நீங்களும் ருகூவு செய்யுங்கள்; அவர் தலையை உயர்த்தினால் நீங்களும் தலையை உயர்த்துங்கள்; அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்” எனக் கூறினார்கள்.

அத்தியாயம்: 10


صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِهِ وَهُوَ شَاكٍ، فَصَلَّى جَالِسًا وَصَلَّى وَرَاءَهُ قَوْمٌ قِيَامًا، فَأَشَارَ إِلَيْهِمْ أَنِ اجْلِسُوا، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا رَكَعَ، فَارْكَعُوا وَإِذَا رَفَعَ، فَارْفَعُوا، وَإِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا»


Bukhari-687

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 51

மக்கள் பின்பற்ற வேண்டுமென்பதற்காகவே இமாம் நியமிக்கப்படுகிறார்.

நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோய்விட்டார்களோ அந்த நோயின் போது உட்கார்ந்தவாறே மக்களுக்கு தொழுகை நடத்தினார்கள்.

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: இமாம் (குனிவு, சிரவணக்கம் போன்றவற்றிலிருந்து) தலையை உயர்த்துவதற்கு முன் (பின்பற்றித் தொழும்) ஒருவர் (தமது தலையை) உயர்த்திவிட்டால், தாம் (தலையை) உயர்த்திய அளவு நேரம் (மீண்டு சென்று பொறுத்து இருந்துவிட்டு பிறகு இமாமைப் பின்தொடர வேண்டும்.

இமாமுடன் இரண்டு ரக்அத்கள் தொழும் ஒருவர் (நெரிசல் முதலிய காரணங்களால்) (முதல் ரக்அத்தில்) சிரவணக்கம் (சஜ்தா) செய்ய முடியாமற் போய்விடுகிறது. இவரைப் பற்றிக் கூறுகையில் ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள், அவர் இரண்டாவது ரக்அத்திற்குரிய இரு சஜ்தாக்களை செய்வார். பிறகு முதல் ரக்அத்தையும் அதன் சஜ்தாவையும் (எழுந்து) மீண்டும் நிறைவேற்றுவார் என்று சொன்னார்கள். ஒரு சஜ்தா செய்யாமல் மறந்து எழுந்துவிட்டால் உடனே சஜ்தாவுக்கு சென்று விட வேண்டும் என்றும் கூறினார்கள். 


687. உபைதுல்லாஹ் கூறினார்:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று ‘நபி (ஸல்) அவர்கள் நோயுற்றபோது நடந்த நிகழ்ச்சியை

دَخَلْتُ عَلَى عَائِشَةَ فَقُلْتُ: أَلاَ تُحَدِّثِينِي عَنْ مَرَضِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَتْ: بَلَى، ثَقُلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَصَلَّى النَّاسُ؟» قُلْنَا: لاَ، هُمْ يَنْتَظِرُونَكَ، قَالَ: «ضَعُوا لِي مَاءً فِي المِخْضَبِ». قَالَتْ: فَفَعَلْنَا، فَاغْتَسَلَ، فَذَهَبَ لِيَنُوءَ فَأُغْمِيَ عَلَيْهِ، ثُمَّ أَفَاقَ، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَصَلَّى النَّاسُ؟» قُلْنَا: لاَ، هُمْ يَنْتَظِرُونَكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «ضَعُوا لِي مَاءً فِي المِخْضَبِ» قَالَتْ: فَقَعَدَ فَاغْتَسَلَ، ثُمَّ ذَهَبَ لِيَنُوءَ فَأُغْمِيَ عَلَيْهِ، ثُمَّ أَفَاقَ، فَقَالَ: «أَصَلَّى النَّاسُ؟» قُلْنَا: لاَ، هُمْ يَنْتَظِرُونَكَ يَا رَسُولَ اللَّهِ، فَقَالَ: «ضَعُوا لِي مَاءً فِي المِخْضَبِ»، فَقَعَدَ، فَاغْتَسَلَ، ثُمَّ ذَهَبَ لِيَنُوءَ فَأُغْمِيَ عَلَيْهِ، ثُمَّ أَفَاقَ فَقَالَ: «أَصَلَّى النَّاسُ؟» فَقُلْنَا: لاَ، هُمْ يَنْتَظِرُونَكَ يَا رَسُولَ اللَّهِ، وَالنَّاسُ عُكُوفٌ فِي المَسْجِدِ، يَنْتَظِرُونَ النَّبِيَّ عَلَيْهِ السَّلاَمُ لِصَلاَةِ العِشَاءِ الآخِرَةِ، فَأَرْسَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أَبِي بَكْرٍ بِأَنْ يُصَلِّيَ بِالنَّاسِ، فَأَتَاهُ الرَّسُولُ فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُكَ أَنْ تُصَلِّيَ بِالنَّاسِ، فَقَالَ أَبُو بَكْرٍ – وَكَانَ رَجُلًا رَقِيقًا -: يَا عُمَرُ صَلِّ بِالنَّاسِ، فَقَالَ لَهُ عُمَرُ: أَنْتَ أَحَقُّ بِذَلِكَ، فَصَلَّى أَبُو بَكْرٍ تِلْكَ الأَيَّامَ، ثُمَّ إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَدَ مِنْ نَفْسِهِ خِفَّةً، فَخَرَجَ بَيْنَ رَجُلَيْنِ أَحَدُهُمَا العَبَّاسُ لِصَلاَةِ الظُّهْرِ وَأَبُو بَكْرٍ يُصَلِّي بِالنَّاسِ، فَلَمَّا رَآهُ أَبُو بَكْرٍ ذَهَبَ لِيَتَأَخَّرَ، فَأَوْمَأَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَنْ لاَ يَتَأَخَّرَ، قَالَ: أَجْلِسَانِي إِلَى جَنْبِهِ، فَأَجْلَسَاهُ إِلَى جَنْبِ أَبِي بَكْرٍ، قَالَ: فَجَعَلَ أَبُو بَكْرٍ يُصَلِّي وَهُوَ يَأْتَمُّ بِصَلاَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالنَّاسُ بِصَلاَةِ أَبِي بَكْرٍ، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدٌ،

قَالَ عُبَيْدُ اللَّهِ: فَدَخَلْتُ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ فَقُلْتُ لَهُ: أَلاَ أَعْرِضُ عَلَيْكَ مَا حَدَّثَتْنِي عَائِشَةُ عَنْ مَرَضِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: هَاتِ، فَعَرَضْتُ عَلَيْهِ حَدِيثَهَا، فَمَا أَنْكَرَ مِنْهُ شَيْئًا غَيْرَ أَنَّهُ قَالَ: أَسَمَّتْ لَكَ الرَّجُلَ الَّذِي كَانَ مَعَ العَبَّاسِ قُلْتُ: لاَ، قَالَ: هُوَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ


Bukhari-686

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 50 இமாம் ஒரு கூட்டத்தாரைச் சந்திக்கச் சென்றால் அவர்களுக்குத் தலைமை தாங்கித் தொழுகை நடத்தலாம். 

686. இத்பான் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (என் வீட்டிற்குள் நுழைய) அனுமதி கேட்டார்கள். நான் அனுமதி கொடுத்தேன். ‘உம் வீட்டில் எங்கே நான் தொழ வேண்டுமென நீர் விரும்புகிறீர்’ என்றார்கள். நான் விரும்பிய இடத்தை அவர்களுக்குக் காட்டினேன். அவர்கள் நின்றதும் நாங்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தோம். அவர்கள் ஸலாம் கொடுத்தார்கள். நாங்களும் ஸலாம் கொடுத்தோம்.
Book : 10


اسْتَأْذَنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَذِنْتُ لَهُ فَقَالَ: «أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ مِنْ بَيْتِكَ؟» فَأَشَرْتُ لَهُ إِلَى المَكَانِ الَّذِي أُحِبُّ، فَقَامَ وَصَفَفْنَا خَلْفَهُ، ثُمَّ سَلَّمَ وَسَلَّمْنَا


Bukhari-685

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 49 குர்ஆனை (மனனமிட்டு) ஓதுவதில் பலர் சமமாக இருப்பார்களானால் அவர்களில் (வயதில்) பெரியவர் தலைமை தாங்கித் தொழுகை நடத்தட்டும். 

685. மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார்.

இளைஞர்களான நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். அவர்களுடன் ஏறத்தாழ இருபது நாள்கள் தங்கியிருந்தோம். நபி(ஸல்) அவர்கள் இரக்க குணமுடையவர்களாக இருந்ததால் ‘நீங்கள் உங்கள் ஊர்களுக்குச் சென்று அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்!’ என்றும் இன்னின்ன தொழுகையை இன்னின்ன நேரத்தில் தொழுங்கள் என்றும் ‘தொழுகை நேரம் வந்ததும் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லி, மூத்தவர் இமாமத் செய்ய வேண்டும்’ என்றும் கூறினார்கள்.
Book : 10


قَدِمْنَا عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ شَبَبَةٌ، فَلَبِثْنَا عِنْدَهُ نَحْوًا مِنْ عِشْرِينَ لَيْلَةً، وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَحِيمًا فَقَالَ: «لَوْ رَجَعْتُمْ إِلَى بِلاَدِكُمْ، فَعَلَّمْتُمُوهُمْ مُرُوهُمْ، فَلْيُصَلُّوا صَلاَةَ كَذَا فِي حِينِ كَذَا، وَصَلاَةَ كَذَا فِي حِينِ كَذَا، وَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ، فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ»


Bukhari-684

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 48 ஒருவர் மக்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்க ஆரம்பித்துவிட, (வழக்கமாகத் தொழுவிக்கும்) முதலாவது இமாம் வந்து விட்டால், தொழுவித்துக் கொண்டிருக்கும் அவர் பின்வாங்கினாலும் பின்வாங்கா விட்டாலும் அவருடைய தொழுகை நிறைவேறிவிடும். 

684. ஸஹ்ல் இப்னு ஸஃது அஸ்ஸாயிதி(ரலி) அறிவித்தார்.

அம்ர் இப்னு அவ்ப் குடும்பத்தாரிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் சென்றிருந்தபோது, அங்கு தொழுகையின் நேரம் வந்துவிட்டது. அப்போது முஅத்தின்,அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் சென்று, ‘நான் இகாமத் சொல்லட்டுமா! நீங்கள் தொழுகை நடத்துகிறீர்களா?’ என்று கேட்டதற்கு அபூ பக்ர்(ரலி) ‘ஆம்!’ என்று கூறிவிட்டுத் தொழுகை நடத்த ஆரம்பித்தார்கள். மக்கள் தொழுது கொண்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் வந்துவிட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் வரிசைகளை விலக்கிக் கொண்டு முன் வரிசையில் வந்து நின்றார்கள்.

இதைக் கண்ட மக்கள் (இமாமுக்கு நினைவூட்டுவதற்காக) கை தட்டினார்கள். இமாமாக நின்ற அபூ பக்ர்(ரலி) தம் தொழுகையில் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். மக்கள் அதிகமாகக் கை தட்டியபோது திரும்பிப் பார்த்தார்கள். அங்கே நபி(ஸல்) அவர்களைக் கண்டார்கள். நபி(ஸல்) அவர்கள், அபூ பக்ர்(ரலி)யைப் பார்த்து, ‘உங்களுடைய இடத்திலேயே நில்லுங்கள்’

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَهَبَ إِلَى بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ لِيُصْلِحَ بَيْنَهُمْ، فَحَانَتِ الصَّلاَةُ، فَجَاءَ المُؤَذِّنُ إِلَى أَبِي بَكْرٍ، فَقَالَ: أَتُصَلِّي لِلنَّاسِ فَأُقِيمَ؟ قَالَ: نَعَمْ فَصَلَّى أَبُو بَكْرٍ، فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسُ فِي الصَّلاَةِ، فَتَخَلَّصَ حَتَّى وَقَفَ فِي الصَّفِّ، فَصَفَّقَ النَّاسُ وَكَانَ أَبُو بَكْرٍ لاَ يَلْتَفِتُ فِي صَلاَتِهِ، فَلَمَّا أَكْثَرَ النَّاسُ التَّصْفِيقَ التَفَتَ، فَرَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَشَارَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنِ امْكُثْ مَكَانَكَ»، فَرَفَعَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَدَيْهِ، فَحَمِدَ اللَّهَ عَلَى مَا أَمَرَهُ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ذَلِكَ، ثُمَّ اسْتَأْخَرَ أَبُو بَكْرٍ حَتَّى اسْتَوَى فِي الصَّفِّ، وَتَقَدَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّى، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «يَا أَبَا بَكْرٍ مَا مَنَعَكَ أَنْ تَثْبُتَ إِذْ أَمَرْتُكَ» فَقَالَ أَبُو بَكْرٍ: مَا كَانَ لِابْنِ أَبِي قُحَافَةَ أَنْ يُصَلِّيَ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا لِي رَأَيْتُكُمْ أَكْثَرْتُمُ التَّصْفِيقَ، مَنْ رَابَهُ شَيْءٌ فِي صَلاَتِهِ، فَلْيُسَبِّحْ فَإِنَّهُ إِذَا سَبَّحَ التُفِتَ إِلَيْهِ، وَإِنَّمَا التَّصْفِيقُ لِلنِّسَاءِ»


Next Page » « Previous Page