Author: Farook

Bukhari-683

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 47

ஒரு காரணத்தை முன்னிட்டு ஒருவர் இமாமுக்குப் பக்கவாட்டில் நின்று தொழுவது. 

683. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் தங்களின் நோயின்போது அபூபக்ர் (ரலி) அவர்களை, தொழுகை நடத்தக் கட்டளையிட்டார்கள். அபூபக்ர் (ரலி) சில நாள்கள் தொழுகை நடத்தினார்கள். நபி (ஸல்) அவர்கள் தங்களின் நோய் சற்றுக் குறைந்ததை உணர்ந்து வெளியே வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) மக்களுக்குத் தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களை அபூபக்ர் (ரலி) பார்த்ததும் பின்வாங்கலானார்கள். ‘அப்படியே இருங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) உடைய விலாப் புறத்தை ஒட்டி அமர்ந்தார்கள். அபூபக்ர் (ரலி) நபி (ஸல்) அவர்களையும், மக்கள் அபூபக்ர் (ரலி) அவர்களையும் பின்பற்றித் தொழுதனர்.

அத்தியாயம்: 10


«أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَا بَكْرٍ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ فِي مَرَضِهِ»، فَكَانَ يُصَلِّي بِهِمْ، قَالَ عُرْوَةُ: فَوَجَدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَفْسِهِ خِفَّةً، فَخَرَجَ، فَإِذَا أَبُو بَكْرٍ يَؤُمُّ النَّاسَ، فَلَمَّا رَآهُ أَبُو بَكْرٍ اسْتَأْخَرَ، فَأَشَارَ إِلَيْهِ: «أَنْ كَمَا أَنْتَ»، فَجَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِذَاءَ أَبِي بَكْرٍ إِلَى جَنْبِهِ، فَكَانَ أَبُو بَكْرٍ يُصَلِّي بِصَلاَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلاَةِ أَبِي بَكْرٍ


Bukhari-682

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

682. அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுக்கு வேதனை அதிகமானபோது தொழுகையைப் பற்றி அவர்களிடம் கூறப்பட்டது. ‘அபூ பக்ரை மக்களுக்குத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்’ என்றார்கள். ஆயிஷா(ரலி), ‘அபூ பக்ர் இளகிய உள்ளம் படைத்தவர்; அவர் (குர்ஆனை) ஓதினால் அழுகை அவரை மிகைத்து விடும்’ என்றார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘அவரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்’ என்றார்கள். ஆயிஷா(ரலி) தம் பதிலையே திரும்பச் சொன்னார்கள். நபி(ஸல்) அவர்கள் மீண்டும் ‘அபூ பக்ரைத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள். நீங்கள் யூஸுஃப் நபியின் தோழிகளாக இருக்கிறீர்கள்’ என்றார்கள்.
Book :10


لَمَّا اشْتَدَّ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَعُهُ قِيلَ لَهُ فِي الصَّلاَةِ، فَقَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ» قَالَتْ عَائِشَةُ: إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ رَقِيقٌ، إِذَا قَرَأَ غَلَبَهُ البُكَاءُ، قَالَ: «مُرُوهُ فَيُصَلِّي» فَعَاوَدَتْهُ، قَالَ: «مُرُوهُ فَيُصَلِّي، إِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ»


Bukhari-681

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

681. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மூன்று நாள்களாக வெளியில் வரவில்லை. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் அபூ பக்ர்(ரலி) தொழுகை நடத்துவதற்கு முன் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் தங்களின் அறையின் திரையை உயர்த்திப் பார்த்தார்கள். நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தோற்றமளித்தபோது அவர்களின் முகத்தை விடவும் மகிழ்ச்சியான எந்த ஒரு காட்சியையும் நாங்கள் பார்த்ததில்லை. நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களைப் பார்த்துத் தொழுகை நடத்துமாறு தங்கள் கையினால் சைகை செய்து, திரையைப் போட்டு (விட்டு உள்ளே சென்று)விட்டார்கள். பின்னர் அவர்கள் மரணமடைந்துவிட்டார்கள்.
Book :10


«لَمْ يَخْرُجِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلاَثًا»، فَأُقِيمَتِ الصَّلاَةُ، فَذَهَبَ أَبُو بَكْرٍ يَتَقَدَّمُ، فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بِالحِجَابِ فَرَفَعَهُ، فَلَمَّا وَضَحَ وَجْهُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا نَظَرْنَا مَنْظَرًا كَانَ أَعْجَبَ إِلَيْنَا مِنْ وَجْهِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ وَضَحَ لَنَا، فَأَوْمَأَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ إِلَى أَبِي بَكْرٍ أَنْ يَتَقَدَّمَ، وَأَرْخَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الحِجَابَ، فَلَمْ يُقْدَرْ عَلَيْهِ حَتَّى مَاتَ»


Bukhari-680

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

680. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் மரண நோயின்போது அபூ பக்ர்(ரலி) மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். திங்கட்கிழமை அன்று தொழுகையில் வரிசையாக நின்று தொழுது கொண்டிருந்தபோது, நபி(ஸல்) அவர்கள் நின்றவாறு தங்கள் அறையின் திரையை நீக்கி எங்களைப் பார்த்தார்கள். அப்போது அவர்களின் முகம் புத்தகத்தின் காகிதம் போன்று பிரகாசித்தது. பின்னர் அவர்கள் புன்னகை செய்து சிரித்தார்கள். நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததனால் ஏற்பட்ட மகிழ்ச்சியின் காரணமாக நாங்கள் சோதிக்கப்பட்டு விடுவோமோ என்று அஞ்சினோம். நபியைப் பார்த்த அபூ பக்ர்(ரலி), நபியவர்கள் தொழுகைக்கு வருகிறார்கள் எனக் கருதித் தமக்குப் பின்னாலுள்ள வரிசையில் சேர்வதற்காகப் பின் வாங்கினார்கள்.

அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘உங்களுடைய தொழுகையைப் பூர்த்தி செய்யுங்கள்’ என்று சைகை செய்துவிட்டு அறையின் உள்ளே சென்று திரையைப் போட்டுவிட்டார்கள். அன்றைய தினத்தில்தான் நபி(ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள்.
Book :10


أَنَّ أَبَا بَكْرٍ كَانَ يُصَلِّي لَهُمْ فِي وَجَعِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي تُوُفِّيَ فِيهِ، حَتَّى إِذَا كَانَ يَوْمُ الِاثْنَيْنِ وَهُمْ صُفُوفٌ فِي الصَّلاَةِ، فَكَشَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سِتْرَ الحُجْرَةِ يَنْظُرُ إِلَيْنَا وَهُوَ قَائِمٌ كَأَنَّ وَجْهَهُ وَرَقَةُ مُصْحَفٍ، ثُمَّ تَبَسَّمَ يَضْحَكُ، فَهَمَمْنَا أَنْ نَفْتَتِنَ مِنَ الفَرَحِ بِرُؤْيَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَنَكَصَ أَبُو بَكْرٍ عَلَى عَقِبَيْهِ لِيَصِلَ الصَّفَّ، وَظَنَّ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَارِجٌ إِلَى الصَّلاَةِ «فَأَشَارَ إِلَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَتِمُّوا صَلاَتَكُمْ وَأَرْخَى السِّتْرَ فَتُوُفِّيَ مِنْ يَوْمِهِ»


Bukhari-679

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

679. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோயுற்றிருந்தபோது ‘மக்களுக்குத் தொழுகை நடத்தும் படி அபூபக்ரிடம் கூறுங்கள்’ எனக் கூறினார்கள். அதற்கு, அபூபக்ர் உங்களுடைய இடத்தில் நின்று தொழுகை நடத்துவார்களானால், அவர்கள் அழுவதன் காரணத்தினால் மக்களுக்குக் குர்ஆனைக் கேட்கச் செய்ய அவர்களால் முடியாது. எனவே, உமர் மக்களுக்குத் தொழுகை நடத்தட்டும் என நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன்.

மேலும், ‘அபூபக்ர் உங்கள் இடத்தில் நின்று தொழுகை நடத்தினால் அதிகம் அவர் அழுவதனால் மக்களுக்குக் குர்ஆனைக் கேட்கச் செய்ய அவரால் முடியாது. எனவே, தொழுகை நடத்தும்படி உமருக்குக் கட்டளையிடுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறும் படி ஹப்ஸா (ரலி) விடமும் கூறினேன்.

அவ்வாறே ஹப்ஸா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் கூறியபோது, ‘நிறுத்து! நிச்சயமாக நீங்கள் தாம் நபி யூஸுஃபின் (அழகைக் கண்டு கையை அறுத்த) தோழிகள் போன்றவர்கள்; மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு அபூபக்ரிடம் கூறுங்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஹப்ஸா (ரலி) என்னிடம் ‘உன்னால் நான் எந்த நன்மையும் அடையவில்லை’ எனக் கூறினார்கள்.

அத்தியாயம்: 10


إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي مَرَضِهِ: «مُرُوا أَبَا بَكْرٍ يُصَلِّي بِالنَّاسِ» قَالَتْ عَائِشَةُ: قُلْتُ إِنَّ أَبَا بَكْرٍ إِذَا قَامَ فِي مَقَامِكَ لَمْ يُسْمِعِ النَّاسَ مِنَ البُكَاءِ، فَمُرْ عُمَرَ فَلْيُصَلِّ لِلنَّاسِ، فَقَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ لِحَفْصَةَ: قُولِي لَهُ: إِنَّ أَبَا بَكْرٍ إِذَا قَامَ فِي مَقَامِكَ لَمْ يُسْمِعِ النَّاسَ مِنَ البُكَاءِ، فَمُرْ عُمَرَ فَلْيُصَلِّ لِلنَّاسِ، فَفَعَلَتْ حَفْصَةُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَهْ إِنَّكُنَّ لَأَنْتُنَّ صَوَاحِبُ يُوسُفَ، مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ لِلنَّاسِ» فَقَالَتْ حَفْصَةُ لِعَائِشَةَ: مَا كُنْتُ لِأُصِيبَ مِنْكِ خَيْرًا


Bukhari-678

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 46 கல்வியும் சிறப்பும் உடையவரே தலைமை தாங்கித் தொழுவிக்க மிகவும் தகுதியுடையவராவார். 

678. அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் நோயுற்றார்கள். அவர்களின் நோய் கடுமையானபோது, ‘அபூ பக்ரை மக்களுக்குத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்’ என்றார்கள். அப்போது ஆயிஷா(ரலி) ‘அவர் இளகிய மனதுடையவர். நீங்கள் நின்ற இடத்தில் அவர் நின்றால், அவரால் மக்களுக்குத் தொழுகை நடத்த முடியாது’ என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் மீண்டும் ‘அபூ பக்ரை மக்களுக்குத் தொழுகை நடத்தச் சொல்லுங்கள்’ என்றார்கள். ஆயிஷா(ரலி) தாம் கூறியதைத் திரும்பவும் கூறினார்கள். ‘அபூ பக்ரை மக்களுக்குத் தொழுகை நடத்தச் சொல்! நிச்சயமாகப் பெண்களாகிய நீங்கள் யூஸுஃப் நபியின் தோழிகளாக இருக்கிறீர்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அபூ பக்ரிடம் ஒருவர் வந்து (தொழ வைக்க) சொன்னார்.

நபி(ஸல்) அவர்கள் உயிருடனிருக்கும்போது அபூ பக்ர்(ரலி) (இமாமாக நின்று) தொழுகை நடத்தினார்கள்.
Book : 10


مَرِضَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاشْتَدَّ مَرَضُهُ، فَقَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ» قَالَتْ عَائِشَةُ: إِنَّهُ رَجُلٌ رَقِيقٌ، إِذَا قَامَ مَقَامَكَ لَمْ يَسْتَطِعْ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ، قَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ» فَعَادَتْ، فَقَالَ: «مُرِي أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ، فَإِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ»

فَأَتَاهُ الرَّسُولُ، فَصَلَّى بِالنَّاسِ فِي حَيَاةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-677

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 45 நபி (ஸல்) அவர்களின் தொழுகையையும் அவர்களின் வழி முறையையும் கற்றுக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கத்தில் மக்களுக்குத் தொழுகை நடத்துவது. 

677. அபூ கிலாபா கூறினார்:

எங்களுடைய பள்ளி வாசலுக்கு மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) வந்து ‘இப்போது நான் தொழ விரும்பாவிட்டாலும்) நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு தொழக் கண்டேனோ அவ்வாறு உங்களுக்கு நான் தொழுகை நடத்துகிறேன்’ என்று கூறினார்கள்.

நான் அபூ கிலாபாவிடம் ‘நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுதார்கள்’ என்று கேட்டேன். ‘(அதற்கு அம்ர் இப்னு ஸலமா என்ற) இந்த முதியவர் தொழுதது போன்று தொழுதார்கள்’ எனக் கூறினார்கள். அந்த மனிதர் வயதானவராக இருந்தார். முதல் ரக்அத்திலிருந்து இரண்டாவது ரக்அத்திற்காக ஸுஜுதிலிருந்து எழும்போது இருப்பில் அமர்ந்து பின்னர் நிலைக்கு வருவார் என்று அய்யூப் அறிவித்தார்.
Book : 10


جَاءَنَا مَالِكُ بْنُ الحُوَيْرِثِ – فِي مَسْجِدِنَا هَذَا – فَقَالَ: إِنِّي لَأُصَلِّي بِكُمْ وَمَا أُرِيدُ الصَّلاَةَ، أُصَلِّي كَيْفَ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي، فَقُلْتُ لِأَبِي قِلاَبَةَ: كَيْفَ كَانَ يُصَلِّي؟ قَالَ: مِثْلَ شَيْخِنَا هَذَا، قَالَ: وَكَانَ شَيْخًا، «يَجْلِسُ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ السُّجُودِ، قَبْلَ أَنْ يَنْهَضَ فِي الرَّكْعَةِ الأُولَى»


Bukhari-676

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 44

வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போது தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் தொழுகைக்குப் புறப்பட்டுச் சென்றுவிட வேண்டும். 

676. அஸ்வத் கூறினார்:

நபி (ஸல்) அவர்கள் தங்களின் வீட்டில் என்ன செய்வார்கள் என ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்குத் தம் குடும்பத்திற்கு வீட்டு வேலைகளில் ஒத்தாசை செய்வார்கள்; தொழுகை நேரம் வந்ததும் தொழுகைக்காக வெளியே செல்வார்கள்’ என ஆயிஷா (ரலி) கூறினார்.
Book : 10


سَأَلْتُ عَائِشَةَ مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ فِي بَيْتِهِ؟ قَالَتْ: «كَانَ يَكُونُ فِي مِهْنَةِ أَهْلِهِ – تَعْنِي خِدْمَةَ أَهْلِهِ – فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ خَرَجَ إِلَى الصَّلاَةِ»


Bukhari-675

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 43 இமாமின் கையில் உணவு இருக்கும் நிலையில் அவரைத் தொழுகைக்காக அழைக்கப்பட்டால்… 

675. அம்ர் இப்னு உமய்யா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஆட்டுத் தொடைக் கறியை வெட்டித் துண்டாக்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். தொழுகைக்கு அழைக்கப்பட்டதும் கத்தியை எறிந்துவிட்டு எழுந்து உளூச் செய்யாமல் தொழுதார்கள்.
Book : 10


«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ ذِرَاعًا يَحْتَزُّ مِنْهَا، فَدُعِيَ إِلَى الصَّلاَةِ، فَقَامَ، فَطَرَحَ السِّكِّينَ، فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ»


Bukhari-674

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

674. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘உங்களில் ஒருவர் உணவு அருந்திக் கொண்டு இருக்கும்போது தொழுகைக்கு இகாமத்தும் சொல்லப்பட்டால், தம் தேவைகளை முடிப்பதற்கு முன்பாக அவசரப் பட்டு எழுந்து விட வேண்டாம்.’ என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :10


«إِذَا كَانَ أَحَدُكُمْ عَلَى الطَّعَامِ، فَلاَ يَعْجَلْ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ مِنْهُ، وَإِنْ أُقِيمَتِ الصَّلاَةُ»


Next Page » « Previous Page