Author: Farook

Bukhari-673

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

673. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘உங்களில் ஒருவரின் இரவு உணவை வைக்கப்பட்டு (மஃரிபுத்) தொழுகைக்கு இகாமத்தும் சொல்லப்பட்டு விடுமானால் முதலில் உணவை அருந்துங்கள். உணவை உண்டு முடிவது வரை (தொழுகைக்காக) அவசரப்பட வேண்டாம்.) என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

இப்னுஉமர்(ரலி), உணவுவைக்கப் பட்டுத் தொழுகைக்கு இகாமத்தும் சொல்லப்படுமானால் உணவு அருந்தி முடிவது வரை தொழுகைக்கு வர மாட்டார்கள். அவர்கள் உணவு அருந்திக் கொண்டிருக்கும்போது இமாம் ஓதுவதைச் செவியுறுவார்கள் என நாஃபிவு கூறுகிறார்.
Book :10


«إِذَا وُضِعَ عَشَاءُ أَحَدِكُمْ وَأُقِيمَتِ الصَّلاَةُ، فَابْدَءُوا بِالعَشَاءِ وَلاَ يَعْجَلْ حَتَّى يَفْرُغَ مِنْهُ»

وَكَانَ ابْنُ عُمَرَ: «يُوضَعُ لَهُ الطَّعَامُ، وَتُقَامُ الصَّلاَةُ، فَلاَ يَأْتِيهَا حَتَّى يَفْرُغَ، وَإِنَّهُ لَيَسْمَعُ قِرَاءَةَ الإِمَامِ»


Bukhari-672

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

672. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘இரவு நேர உணவு தயாராகி விடுமானால் மஃரிபுத் தொழுகையைத் தொழுவதற்கு முன்னால் இரவு உணவை அருந்துங்கள். உங்கள் உணவை(த் தொழுகையை விட) முற்படுத்துங்கள்.’ என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book :10


«إِذَا قُدِّمَ العَشَاءُ، فَابْدَءُوا بِهِ قَبْلَ أَنْ تُصَلُّوا صَلاَةَ المَغْرِبِ، وَلاَ تَعْجَلُوا عَنْ عَشَائِكُمْ»


Bukhari-671

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 42

உணவு (முன்னே) வந்துவிட்ட நிலையில் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் (முதலில் சாப்பிடுவதா? அல்லது தொழுவதா?)

(இத்தகைய நிலையில்) இப்னு உமர் (ரலி) அவர்கள் முதலில் சாப்பிடுவார்கள் (பிறகு தொழுவார்கள்).

ஒருவர் தமது (அத்தியாவசியத்) தேவைகளை நோக்கிச் சென்று (அவற்றை முடித்துவிட்டு) தமது உள்ளம் ஓய்வாக இருக்கும் நிலையில் தொழுகையில் ஈடுபடுவதே புத்திசாலித்தனமாகும் என அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். 


671. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவு நேர உணவு வைக்கப்பட்டுத் தொழுகைக்காக இகாமத்தும் சொல்லப்படுமானால் நீங்கள் உணவை முதலில் சாப்பிடுங்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 10


«إِذَا وُضِعَ العَشَاءُ وَأُقِيمَتِ الصَّلاَةُ، فَابْدَءُوا بِالعَشَاءِ»


Bukhari-670

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

670. அனஸ்(ரலி) அறிவித்தார்.

அன்ஸாரிகளில் ஒருவர் தம் உடல் பருமனாக இருந்த காரணத்தினால், ‘என்னால் உங்களுடன் தொழ முடியவில்லை’ எனக் கூறி, நபி(ஸல்) அவர்களுக்காக உணவு சமைத்து அவர்களைத் தம் வீட்டிற்கு அழைத்தார். நபி(ஸல்) அவர்கள் அவரின் வீட்டிற்கு வந்தபோது, ஒரு பாயை விரித்து அதில் சிறிது தண்ணீர் தெளித்துப் பதப்படுத்தினார். அப்பாயில் நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
ஜாருத் குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் ‘நபி(ஸல்) அவர்கள் லுஹா தொழுகை தொழுதார்களா?’ என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு ‘அன்றைய தினத்தைத் தவிர அவர்கள் லுஹா தொழுததை நான் பார்க்கவில்லை’ என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book :10


قَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ: إِنِّي لاَ أَسْتَطِيعُ الصَّلاَةَ مَعَكَ، وَكَانَ رَجُلًا ضَخْمًا، «فَصَنَعَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ طَعَامًا، فَدَعَاهُ إِلَى مَنْزِلِهِ، فَبَسَطَ لَهُ حَصِيرًا، وَنَضَحَ طَرَفَ الحَصِيرِ فَصَلَّى عَلَيْهِ رَكْعَتَيْنِ»، فَقَالَ رَجُلٌ مِنْ آلِ الجَارُودِ لِأَنَسِ بْنِ مَالِكٍ: أَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الضُّحَى؟ قَالَ: مَا رَأَيْتُهُ صَلَّاهَا إِلَّا يَوْمَئِذٍ


Bukhari-669

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

669. அபூ ஸயீதுல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.

ஒரு நாள் மழை பெய்து, அதனால் பள்ளிவாசலின் முகடு ஒழுக ஆரம்பித்தது. பேரீச்ச மட்டையினால் பள்ளிவாசல் முகடு வேயப்பட்டிருந்தது. தொழுகைக்காக இகாமத் சொல்லப் பட்டு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தும்போது தண்ணீரும் மண்ணும் கலந்த இடத்தில் ஸுஜூது செய்வதை பார்த்தேன். அவர்களின் நெற்றியில் மண் படிந்திருந்ததையும் கண்டேன்.
Book :10


جَاءَتْ سَحَابَةٌ، فَمَطَرَتْ حَتَّى سَالَ السَّقْفُ، وَكَانَ مِنْ جَرِيدِ النَّخْلِ، فَأُقِيمَتِ الصَّلاَةُ، «فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْجُدُ فِي المَاءِ وَالطِّينِ، حَتَّى رَأَيْتُ أَثَرَ الطِّينِ فِي جَبْهَتِهِ»


Bukhari-668

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 41 (மழை குளிர் போன்ற நேரங்களில்) வந்திருப்பவர்களுக்கு மட்டும் இமாம் தொழுகை நடத்தலாமா?

வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) தினத்தில் மழையிருந்தாலும் (குத்பா) உரை நிகழ்த்தவேண்டுமா? 

668. அப்துல்லாஹ் இப்னு ஹாரிஸ் கூறினார்:

மழையினால் சேறு ஏற்பட்டிருந்த ஒரு நாளில் இப்னு அப்பாஸ்(ரலி) ஜும்ஆப் பிரசங்கம் செய்தார்கள். பாங்கு சொல்பவர் ‘ஹய்ய அலஸ் ஸலாஹ்’ என்று சொல்ல ஆரம்பித்தபோது

‘உங்கள் கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்’ என்று மக்களுக்கு அறிவிக்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் ஒருவருக்கொருவர் ஆச்சரியமாகப் பார்த்தனர். ‘இந்த பாங்கு சொல்பவரை விடவும் சிறந்தவர்களான நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ கட்டாயமானதாக இருந்தும் கூட அவ்வாறு செய்திருக்கிறார்கள்’ என இப்னு அப்பாஸ் கூறினார்கள்.

‘(மழைக் காலங்களில் பள்ளியில் தொழுமாறு உங்களுக்கு நான் கூறிக்) கஷ்டம் கொடுத்து நீங்களும் பள்ளிக்கு வந்து உங்களுடைய கால் மூட்டுகளால் மண்ணை மிதிக்கச் செய்வதை நான் வெறுக்கிறேன்’ என்றும் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.
Book : 10


خَطَبَنَا ابْنُ عَبَّاسٍ فِي يَوْمٍ ذِي رَدْغٍ، فَأَمَرَ المُؤَذِّنَ لَمَّا بَلَغَ حَيَّ عَلَى الصَّلاَةِ، قَالَ: قُلْ: «الصَّلاَةُ فِي الرِّحَالِ»، فَنَظَرَ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ، فَكَأَنَّهُمْ أَنْكَرُوا، فَقَالَ: كَأَنَّكُمْ أَنْكَرْتُمْ هَذَا، «إِنَّ هَذَا فَعَلَهُ مَنْ هُوَ خَيْرٌ مِنِّي»، – يَعْنِي النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – إِنَّهَا عَزْمَةٌ، وَإِنِّي كَرِهْتُ أَنْ أُحْرِجَكُمْ “

وَعَنْ حَمَّادٍ، عَنْ عَاصِمٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الحَارِثِ، عَنْ ابْنِ عَبَّاسٍ، نَحْوَهُ، غَيْرَ أَنَّهُ قَالَ: «كَرِهْتُ أَنْ أُؤَثِّمَكُمْ فَتَجِيئُونَ تَدُوسُونَ الطِّينَ إِلَى رُكَبِكُمْ»


Bukhari-667

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

667. மஹ்மூத் இப்னு ரபீஃ கூறினார்:

பார்வையற்ற இத்பான்பின் மாலிக் தம் சமுதாயத்திற்கு இமாமத் செய்பவராக இருந்தார். (ஒரு நாள்) நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! இருட்டும் வெள்ளமுமாக இருக்கிறது! நானோ பார்வையற்றவன். எனவே நீங்கள் என் வீட்டில் வந்து தொழுங்கள். அவ்விடத்தை நான் தொழுமிடமாக்கிக் கொள்கிறேன்’ என்றார். நபி(ஸல்) அவர்கள் அவரிடம் சென்று ‘நான் எங்கே தொழ வேண்டும் என விரும்புகிறீர்?’ என்று கேட்டார்கள். அவர் வீட்டில் ஓர் இடத்தைக் காட்டினார். அவ்விடத்தில் நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள்.
Book :10


أَنَّ عِتْبَانَ بْنَ مَالِكٍ، كَانَ يَؤُمُّ قَوْمَهُ وَهُوَ أَعْمَى، وَأَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهَا تَكُونُ الظُّلْمَةُ وَالسَّيْلُ، وَأَنَا رَجُلٌ ضَرِيرُ البَصَرِ، فَصَلِّ يَا رَسُولَ اللَّهِ فِي بَيْتِي مَكَانًا أَتَّخِذُهُ مُصَلَّى، فَجَاءَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَيْنَ تُحِبُّ أَنْ أُصَلِّيَ؟» فَأَشَارَ إِلَى مَكَانٍ مِنَ البَيْتِ، فَصَلَّى فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-666

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 40 மழை மற்றும் (கடுங்காற்று போன்ற) வேறு காரணங்களை முன்னிட்டு ஒருவர் (ஜமாஅத்திற்கு வராமல்) தம் இருப்பிடத்திலேயே தொழுதுகொள்ள அனுமதி உண்டு. 

666. நாஃபிவு கூறினார்:

குளிரும் காற்றும் நிறைந்த ஓர் இரவில் தொழுகைக்காக இப்னு உமர்(ரலி) பாங்கு சொன்னார்கள். பின்னர் ‘உங்கள் கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்’ என்றார்கள். ‘குளிரும் மழையுமுள்ள இரவுகளில் கூடாரங்களிலே தொழுங்கள் என்று கூறுமாறு நபி(ஸல்) அவர்கள் முஅத்தினுக்கு உத்தரவிடுவார்கள்’ என்றும் கூறினார்கள்.
Book : 10


أَذَّنَ بِالصَّلاَةِ فِي لَيْلَةٍ ذَاتِ بَرْدٍ وَرِيحٍ، ثُمَّ قَالَ: أَلاَ صَلُّوا فِي الرِّحَالِ، ثُمَّ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُ المُؤَذِّنَ إِذَا كَانَتْ لَيْلَةٌ ذَاتُ بَرْدٍ وَمَطَرٍ، يَقُولُ: «أَلاَ صَلُّوا فِي الرِّحَالِ»


Bukhari-665

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

665. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களின் நோய் அதிகமாகி அதனால் வேதனை கடுமையானபோது, என்னுடைய வீட்டில் தங்கிச் சிகிச்சை பெறுவதற்காக மற்ற மனைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களும் அனுமதி வழங்கினர். அவர்கள் வெளியில் வரும்பொழுது இரண்டு பேர்களுக்கிடையில் தொங்கியவாறு வந்தார்கள். அப்போது அவர்களின் கால் விரல்கள் பூமியில் கோடிட்டுக் கொண்டிருந்தன. நபி(ஸல்) அவர்கள் அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்கும் இடையில்தான் தொங்கிக் கொண்டு வந்தார்கள்.

இந்த விஷயத்தை உபைதுல்லாஹ், இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கூறியபோது, ‘ஆயிஷா(ரலி) பெயர் குறிப்பிடாத அந்த இரண்டாவது மனிதர் யார் என்று உமக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். ‘இல்லை’ என உபைதுல்லாஹ் பதிலளித்தார். ‘அவர் தாம் அலீ இப்னு அபீ தாலிப்’ என இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்.
Book :10


«لَمَّا ثَقُلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَاشْتَدَّ وَجَعُهُ اسْتَأْذَنَ أَزْوَاجَهُ أَنْ يُمَرَّضَ فِي بَيْتِي، فَأَذِنَّ لَهُ، فَخَرَجَ بَيْنَ رَجُلَيْنِ تَخُطُّ رِجْلاَهُ الأَرْضَ، وَكَانَ بَيْنَ العَبَّاسِ وَرَجُلٍ آخَرَ»

قَالَ عُبَيْدُ اللَّهِ: فَذَكَرْتُ ذَلِكَ لِابْنِ عَبَّاسٍ مَا قَالَتْ عَائِشَةُ، فَقَالَ لِي: وَهَلْ تَدْرِي مَنِ الرَّجُلُ الَّذِي لَمْ تُسَمِّ عَائِشَةُ؟ قُلْتُ: لاَ، قَالَ: هُوَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ


Bukhari-664

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 39

ஜமாஅத்தை விட்டுவிடுவதற்குரிய நோயாளியின் நோயின் அளவு. 

664. அஸ்வத் கூறினார்:

ஒரு முறை நாங்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் தொழுகையை விடாமல் தொழுவது பற்றியும் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுப்பது பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஆயிஷா (ரலி), ‘நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்குச் சில நாள்களுக்கு முன் நோய்வாய்ப் பட்டிருந்தார்கள். தொழுகையின் நேரம் வந்த பொழுது பாங்கும் சொல்லப்பட்டது. அப்பொழுது ‘மக்களுக்குத் தொழுகை நடத்தும்படி அபூபக்கரிடம் சொல்லுங்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அதற்கு அபூபக்ர் மென்மையான உள்ளமுடையவர்; உங்களுடைய இடத்தில் நின்று தொழுகை நடத்த அவரால் முடியாது’ என்று சொல்லப்பட்டது. திரும்பவும் நபி (ஸல்) அவர்கள் முதலில் கூறியவாறே கூறினார்கள். திரும்பவும் அவர்களுக்கு அதே பதிலே சொல்லப்பட்டது. மூன்றாவது முறையும் அவ்வாறே நடந்தது.

அப்போது, ‘நீங்கள் நபி யூஸுபின் (அழகைக் கண்டு கையை அறுத்த) பெண்களைப் போன்று இருக்கிறீர்கள். மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு அபூபக்ரிடம் சொல்லுங்கள்!’ என நபி (ஸல்) அவர்கள் மீண்டும் கூறினார்கள். அபூபக்ர் (ரலி) வெளியே வந்து தொழுகை நடத்தினார்கள். நபி (ஸல்) அவர்கள் தமக்குச் சிறிது சுகம் கிடைத்ததை

كُنَّا عِنْدَ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَذَكَرْنَا المُوَاظَبَةَ عَلَى الصَّلاَةِ وَالتَّعْظِيمَ لَهَا، قَالَتْ: لَمَّا مَرِضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَضَهُ الَّذِي مَاتَ فِيهِ ، فَحَضَرَتِ الصَّلاَةُ، فَأُذِّنَ فَقَالَ: «مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ» فَقِيلَ لَهُ: إِنَّ أَبَا بَكْرٍ رَجُلٌ أَسِيفٌ إِذَا قَامَ فِي مَقَامِكَ لَمْ يَسْتَطِعْ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ، وَأَعَادَ فَأَعَادُوا لَهُ، فَأَعَادَ الثَّالِثَةَ، فَقَالَ: «إِنَّكُنَّ صَوَاحِبُ يُوسُفَ مُرُوا أَبَا بَكْرٍ فَلْيُصَلِّ بِالنَّاسِ»، فَخَرَجَ أَبُو بَكْرٍ فَصَلَّى فَوَجَدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ نَفْسِهِ خِفَّةً، فَخَرَجَ يُهَادَى بَيْنَ رَجُلَيْنِ، كَأَنِّي أَنْظُرُ رِجْلَيْهِ تَخُطَّانِ مِنَ الوَجَعِ، فَأَرَادَ أَبُو بَكْرٍ أَنْ يَتَأَخَّرَ، فَأَوْمَأَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ مَكَانَكَ، ثُمَّ أُتِيَ بِهِ حَتَّى جَلَسَ إِلَى جَنْبِهِ،

قِيلَ لِلْأَعْمَشِ: وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَأَبُوبَكْرٍ يُصَلِّي بِصَلاَتِهِ، وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلاَةِ أَبِي بَكْرٍ، فَقَالَ: بِرَأْسِهِ نَعَمْ رَوَاهُ أَبُو دَاوُدَ، عَنْ شُعْبَةَ، عَنِ الأَعْمَشِ بَعْضَهُ،

وَزَادَ أَبُو مُعَاوِيَةَ جَلَسَ عَنْ يَسَارِ أَبِي بَكْرٍ، فَكَانَ أَبُو بَكْرٍ يُصَلِّي قَائِمًا


Next Page » « Previous Page