Author: Farook

Bukhari-663

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 38

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் கடமையான (ஃபர்ள்) தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை. 

663. அப்துல்லாஹ் பின் மாலிக் (ரலி) அறிவித்தார்:

இகாமத் சொல்லப்பட்ட பின்னர் ஒருவர் இரண்டு ரக்அத்கள் தொழுவதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த பின்னர் மக்கள் அம்மனிதரைச் சூழ்ந்தனர். ‘ஸுப்ஹு நான்கு ரக்அத்களா? ஸுப்ஹு நான்கு ரக்அத்களா?’ என்று அம்மனிரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் (கோபமாகக்) கேட்டார்கள்.


அத்தியாயம்: 10


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا وَقَدْ أُقِيمَتِ الصَّلاَةُ يُصَلِّي رَكْعَتَيْنِ، فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَثَ بِهِ النَّاسُ، وَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الصُّبْحَ أَرْبَعًا، الصُّبْحَ أَرْبَعًا»


Bukhari-662

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 37

பள்ளிவாசலுக்குச் சென்று வரும் மனிதர் அடையப் பெறும் சிறப்பு. 

662. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பள்ளிவாசலுக்கு ஒருவர் காலையிலோ மாலையிலோ சென்றால், அவர் காலையிலும் மாலையிலும் செல்லும் போதெல்லாம் சுவர்க்கத்தில் அவருக்கு உரிய இடத்தை அல்லாஹ் தயார் செய்கிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 10


«مَنْ غَدَا إِلَى المَسْجِدِ وَرَاحَ، أَعَدَّ اللَّهُ لَهُ نُزُلَهُ مِنَ الجَنَّةِ كُلَّمَا غَدَا أَوْ رَاحَ»


Bukhari-661

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

661. ஹுமைத் கூறினார்:

‘நபி(ஸல்) அவர்கள் மோதிரம் அணிந்திருந்தார்களா?’ என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‘ஆம்! ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை இரவின் நடுப்பகுதி வரை தாமதப் படுத்தினார்கள். அவர்கள் தொழுது முடித்த பின்னர் எங்கள் பக்கம் வந்து ‘மக்கள் தொழுதுவிட்டுத் தூங்கிவிட்டனர். நீங்கள் தொழுகையை எதிர் பார்த்து இருக்கும் போதெல்லாம் தொழுகையில் இருந்தவர்களாகவே கருதப்படுவீர்கள்’ எனக் கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்களின் மோதிரம் மின்னியதை நான் இப்பொழுது பார்ப்பதுபோல் இருக்கிறது’ என்று அனஸ் (ரலி) கூறினார்.
Book :10


سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ هَلِ اتَّخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا؟ فَقَالَ: نَعَمْ أَخَّرَ لَيْلَةً صَلاَةَ العِشَاءِ إِلَى شَطْرِ اللَّيْلِ، ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ بَعْدَ مَا صَلَّى، فَقَالَ: «صَلَّى النَّاسُ وَرَقَدُوا وَلَمْ تَزَالُوا فِي صَلاَةٍ مُنْذُ انْتَظَرْتُمُوهَا»

قَالَ: فَكَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ خَاتَمِهِ


Bukhari-660

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

660. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான்.

அவர்கள்;

  1. நீதியை நிலை நாட்டும் தலைவர்,

2. அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர்,

3. பள்ளிவாசல்களுடன் தம் உள்ளத்தைத் தொடர்பு படுத்திய ஒருவர்,

4. அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகிற இரண்டு நண்பர்கள்,

5. உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கிறபோது, ‘நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்’ என்று சொல்லும் மனிதர்,

6. தம் வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாகச் செய்பவர்,

7. தனிமையில் இருந்து அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர்’ என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
Book :10


سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ، يَوْمَ لاَ ظِلَّ إِلَّا ظِلُّهُ: الإِمَامُ العَادِلُ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ، فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ، أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ


Bukhari-659

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 36 தொழுகையை எதிர்பார்த்துப் பள்ளிவாசலில் உட்கார்ந்திருப்பதும், பள்ளிவாசல்களின் சிறப்பும். 

659. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘உங்களில் ஒருவர் தாம் தொழுமிடத்தில் உளூவுடன் இருக்கும் போதெல்லாம் அவருக்காக வானவர்கள் பிரார்த்திக்கிறார்கள். தங்கள் பிரார்த்தனையில், ‘இறைவா! இவரை மன்னித்து விடு! இவருக்கு நீ கருணை புரி!’ என்றும் கூறுவார்கள்.

உங்களில் ஒருவர் தொழுவதற்காகக் காத்திருந்து தொழுகைதான் அவரைத் தம் மனைவி மக்களிடம் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியிருக்குமானால் அவர் தொழுகையில் இருப்பவராகவே கருதப்படுவார்.’ என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
Book : 10


المَلاَئِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلَّاهُ، مَا لَمْ يُحْدِثْ: اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ، لاَ يَزَالُ أَحَدُكُمْ فِي صَلاَةٍ مَا دَامَتِ الصَّلاَةُ تَحْبِسُهُ ، لاَ يَمْنَعُهُ أَنْ يَنْقَلِبَ إِلَى أَهْلِهِ إِلَّا الصَّلاَةُ


Bukhari-658

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 35 இரண்டு பேரும் அதற்கு மேற்பட்டோரும் ஜமாஅத்’ ஆவர். 

658. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘தொழுகை நேரம் வந்ததும் நீங்கள் பாங்கு, இகாமத் சொல்லுங்கள். உங்களில் மூத்தவர் உங்களுக்கு இமாமத் செய்யட்டும்.’ என மாலிக் இப்னு ஹுவைரிஸ் (ரலி) அறிவித்தார்.
Book : 10


«إِذَا حَضَرَتِ الصَّلاَةُ، فَأَذِّنَا وَأَقِيمَا، ثُمَّ لِيَؤُمَّكُمَا أَكْبَرُكُمَا»


Bukhari-657

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 34 இஷாத் தொழுகையை கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவதன் சிறப்பு. 

657. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஸுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட முனாஃபிக் (வேடதாரி)களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரண்டு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதிலுள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்.

இகாமத் சொல்லுமாறு முஅத்தினுக்கு நான் கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுகை நடத்துமாறு கூறி, அதன் பின்பு எவரேனும் தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன்.’ என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
Book : 10


«لَيْسَ صَلاَةٌ أَثْقَلَ عَلَى المُنَافِقِينَ مِنَ الفَجْرِ وَالعِشَاءِ، وَلَوْ يَعْلَمُونَ مَا فِيهِمَا لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا، لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ المُؤَذِّنَ، فَيُقِيمَ، ثُمَّ آمُرَ رَجُلًا يَؤُمُّ النَّاسَ، ثُمَّ آخُذَ شُعَلًا مِنْ نَارٍ، فَأُحَرِّقَ عَلَى مَنْ لاَ يَخْرُجُ إِلَى الصَّلاَةِ بَعْدُ»


Bukhari-656

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

656. அனஸ்(ரலி) அறிவித்தார்.

பனூ ஸலமா கூட்டத்தினர் தங்கள் இல்லங்களை நபி(ஸல்) அவர்களின் சமீபத்தில் அமைத்துத் தங்க நினைத்தனர். மதீனாவில் வீடுகளைக் காலி செய்வதை நபி(ஸல்) அவர்கள் வெறுத்தார்கள். ‘நீங்கள் அதிகமாகக் காலடிகள் எடுத்து வைத்து(த் தொழ வருவதன் மூலம்) நன்மையைப் பெற வேண்டாமா?’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
Book :10


أَنَّ بَنِي سَلِمَةَ أَرَادُوا أَنْ يَتَحَوَّلُوا عَنْ مَنَازِلِهِمْ فَيَنْزِلُوا قَرِيبًا مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَكَرِهَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُعْرُوا المَدِينَةَ، فَقَالَ: «أَلاَ تَحْتَسِبُونَ آثَارَكُمْ»


Bukhari-655

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 33 (கூட்டுத் தொழுகை முதலிய நற்செயல்கள் புரிவதற்காக எடுத்து வைக்கும்) கால் எட்டுகளின் அளவுக்கு நன்மையை எதிர் பார்க்கலாம். 

655. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஸலமாவின் மக்களே! காலடிகளை அதிகம் வைப்பதன் மூலம் நன்மையை நீங்கள் நாட வேண்டாமா?’ என அனஸ்(ரலி) அறிவித்தார்.

‘அவர்கள் செய்த செயல்களையும் அவர்களின் (விட்டுச் சென்ற) அடையாளங்களையும் நாம் எழுதுவோம்’ (திருக்குர்ஆன் 36:12) என அல்லாஹ் குறிப்பிடுவது காலடிகளைத்தான் என முஜாஹித் கூறுகிறார்.
Book : 10


«يَا بَنِي سَلِمَةَ أَلاَ تَحْتَسِبُونَ آثَارَكُمْ»


Bukhari-654

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

654. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவதன் சிறப்பை மக்கள் அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுப்ஹ் தொழுகையிலும் அதமா(இஷா)த் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவர்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :10


وَلَوْ يَعْلَمُونَ مَا فِي التَّهْجِيرِ لاَسْتَبَقُوا إِلَيْهِ وَلَوْ يَعْلَمُونَ مَا فِي العَتَمَةِ وَالصُّبْحِ لَأَتَوْهُمَا وَلَوْ حَبْوًا


Next Page » « Previous Page