Author: Farook

Bukhari-593

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

593. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் அஸருக்குப் பின் எந்த நாளில் என்னிடம் வந்தாலும் இரண்டு ரக்அத்கள் தொழாமல் இருந்ததில்லை.
Book :9

 


«مَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِينِي فِي يَوْمٍ بَعْدَ العَصْرِ، إِلَّا صَلَّى رَكْعَتَيْنِ»


Bukhari-592

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

592. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இரண்டு தொழுகைகளை இரகசியமாகவோ பகிரங்கமாகவோ நபி(ஸல்) அவர்கள் விட்டதேயில்லை. அவை ஸுப்ஹுத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள், அஸர் தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத்கள்.
Book :9


رَكْعَتَانِ لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَعُهُمَا سِرًّا وَلاَ عَلاَنِيَةً: رَكْعَتَانِ قَبْلَ صَلاَةِ الصُّبْحِ، وَرَكْعَتَانِ بَعْدَ العَصْرِ


Bukhari-591

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

591. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

என் சகோதரியின் மகனே! அஸருக்குப் பின் இரண்டு ரக்அத்களை நபி(ஸல்) அவர்கள் என்னிடம் (தங்கும் போது) ஒருபோதும் விட்டதில்லை.
Book :9


«مَا تَرَكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ السَّجْدَتَيْنِ بَعْدَ العَصْرِ عِنْدِي قَطُّ»


Bukhari-590

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 33

விடுபட்ட தொழுகைகள் போன்றவற்றை அஸ்ர் தொழுகைக்குப் பின்பு தொழுவது.

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். லுஹ்ருக்குப் பின்னுள்ள (சுன்னத்தான) தொழுகை இரண்டு ரக்அத்களைத் தொழ இடங்கொடுக்காமல் அப்துல் கைஸ் (தூதுக்) குழுவினர் என் கவனத்தை ஈர்த்துவிட்டனர். (அதையே இப்போது நான் தொழுதேன்) என்றும் கூறினார்கள். 

590. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களைக் கொண்டு சென்றவன் மேல் ஆணையாக! அஸருக்குப் பின் இரண்டு ரக்அத்களை இறைவனைச் சந்திக்கும் வரை நபி(ஸல்) அவர்கள்விட்டு விடவில்லை. தொழுவதற்குச் சிரமப்படும் நிலையை அடைந்த பிறகே மரணம் அடைந்தார்கள். அஸருக்கு பின்னுள்ள இரண்டு ரக்அத்களை பெரும்பாலும் உட்கார்ந்தே தொழுபவர்களாக இருந்தனர். தம் உம்மத்தினருக்குச் சிரமத்தை ஏற்படுத்துவதை அஞ்சிப் பள்ளியில் அந்த இரண்டு ரக்அத்களை தொழ மாட்டார்கள். தம் உம்மத்தினருக்கு இலேசானதையே நபி(ஸல்) அவர்கள் விரும்புவார்கள்.
Book : 9


وَالَّذِي ذَهَبَ بِهِ، مَا تَرَكَهُمَا حَتَّى لَقِيَ اللَّهَ، وَمَا لَقِيَ اللَّهَ تَعَالَى حَتَّى ثَقُلَ عَنِ الصَّلاَةِ، وَكَانَ يُصَلِّي كَثِيرًا مِنْ صَلاَتِهِ قَاعِدًا – تَعْنِي الرَّكْعَتَيْنِ بَعْدَ العَصْرِ – «وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّيهِمَا، وَلاَ يُصَلِّيهِمَا فِي المَسْجِدِ، مَخَافَةَ أَنْ يُثَقِّلَ عَلَى أُمَّتِهِ، وَكَانَ يُحِبُّ مَا يُخَفِّفُ عَنْهُمْ»


Bukhari-589

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 32

ஃபஜ்ர், அஸ்ர் ஆகிய தொழுகைகளுக்குப் பின்பு தவிர மற்ற எந்த நேரத்திலும் தொழலாம்.

இது குறித்து உமர் (ரலி), இப்னு உமர் (ரலி), அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் அறிவித்துள்ளனர். 

589. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தோழர்களை தொழக்கண்டது போன்றே நான் தொழுகிறேன். இரவிலும் பகலிலும் விரும்பியதைத் தொழும் எவரையும் தடுக்க மாட்டேன். எனினும் சூரியன் உதிக்கும் நேரத்தையோ மறையும் நேரத்தையோ (தொழுகைக்காக) வேண்டுமென்றே நாடாதீர்கள்!

அத்தியாயம்: 9


أُصَلِّي كَمَا رَأَيْتُ أَصْحَابِي يُصَلُّونَ: لاَ أَنْهَى أَحَدًا يُصَلِّي بِلَيْلٍ وَلاَ نَهَارٍ مَا شَاءَ، غَيْرَ أَنْ لاَ تَحَرَّوْا طُلُوعَ الشَّمْسِ وَلاَ غُرُوبَهَا


Bukhari-588

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

588. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஃபஜ்ருக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரை அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரை ஆகிய இரண்டு தொழுகைகளைவிட்டும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
Book :9


نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَلاَتَيْنِ: بَعْدَ الفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَبَعْدَ العَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ


Bukhari-587

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

587. முஆவியா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் தோழமை கொண்டிருந்தோம். அவர்கள் தொழுது நாங்கள் பார்க்காத ஒரு தொழுகையை நீங்கள் தொழுகிறீர்கள். நபி(ஸல்) அவர்கள் அதைத் தடுத்துமிருக்கிறார்கள். அதுதான் அஸருக்குப் பின் இரண்டு ரக்அத்கள்.
Book :9


«إِنَّكُمْ لَتُصَلُّونَ صَلاَةً لَقَدْ صَحِبْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا رَأَيْنَاهُ يُصَلِّيهَا، وَلَقَدْ نَهَى عَنْهُمَا»، يَعْنِي: الرَّكْعَتَيْنِ بَعْدَ العَصْرِ


Bukhari-586

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

586. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘ஸுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உயரும் மறையும் வரை எந்தத் தொழுகையும் இல்லை.’ என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
Book :9


«لاَ صَلاَةَ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَرْتَفِعَ الشَّمْسُ، وَلاَ صَلاَةَ بَعْدَ العَصْرِ حَتَّى تَغِيبَ الشَّمْسُ»


Bukhari-585

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 31 (அஸ்ர் தொழுகைக்குப் பின்) சூரியன் மறைவதற்கு முன்னுள்ள நேரத்தை தொழுவதற்காகத் தேர்வு செய்யலாகாது. 

585. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘சூரியன் உதிக்கும் போதும் சூரியன் மறையும் போதும் உங்களில் ஒருவர் தொழுவதை (வேண்டுமென்றே) நாட வேண்டாம்!’ என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 9


«لاَ يَتَحَرَّى أَحَدُكُمْ، فَيُصَلِّي عِنْدَ طُلُوعِ الشَّمْسِ وَلاَ عِنْدَ غُرُوبِهَا»


Bukhari-584

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

584. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இரண்டு வியாபாரங்களைவிட்டும் ஆடை அணியும் இரண்டு முறைகளைவிட்டும் இரண்டு தொழுகைகளைவிட்டும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

(இரண்டு தொழுகைகளாவன) ஃபஜ்ருக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரை தொழுவதையும், அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரை தொழுவதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

(ஆடை அணியும் இரண்டு முறைகளாவன) ஓர் ஆடை மட்டும் உள்ளபோது தம் கைகள் உள்ளே இருக்குமாறு சுற்றி அதை அணிந்து கொள்வதையும் மர்ம உறுப்பு வானுக்குத் தெரியுமாறு ஓர் ஆடையை முழங்காலைச் சுற்றிக் கட்டிக் கொள்வதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

‘முனாபதா’, ‘முலாமஸா’ என்ற இரண்டு வியாபாரங்களைவிட்டும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

(குறிப்பு: இந்தக் கல் எந்தப் பொருளின் மீது விழுகிறதோ அந்தப் பொருளை இவ்வளவு விலைக்குத் தருகிறேன் என்று கூறி விற்பது முனாபதா எனப்படும். குவிக்கப்பட்ட பொருட்களைப் பிரித்துப் பார்க்கவிடாமல் அதைத் தொட்டுப் பார்க்க மட்டுமே அனுமதிக்கும் வியாபாரம் முலாமஸா எனப்படும்)
Book :9


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعَتَيْنِ، وَعَنْ لِبْسَتَيْنِ وَعَنْ صَلاَتَيْنِ: نَهَى عَنِ الصَّلاَةِ بَعْدَ الفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَبَعْدَ العَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ، وَعَنِ اشْتِمَالِ الصَّمَّاءِ، وَعَنْ الِاحْتِبَاءِ فِي ثَوْبٍ وَاحِدٍ، يُفْضِي بِفَرْجِهِ إِلَى السَّمَاءِ، وَعَنِ المُنَابَذَةِ، وَالمُلاَمَسَةِ


Next Page » « Previous Page