Author: Farook

Bukhari-583

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

583. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘சூரியன் உதிக்கத் துவங்கும்போது அது (முழுமையாக) உயரும் வரை தொழுவதைத் தாமதப்படுத்துங்கள்! சூரியன் மறையத் துவங்கும்போது அது முழுமையாக மறையும் வரை தொழுகையைப் பிற்படுத்துங்கள்!’ என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :9


إِذَا طَلَعَ حَاجِبُ الشَّمْسِ فَأَخِّرُوا الصَّلَاةَ حَتَّى تَرْتَفِعَ ، وَإِذَا غَابَ حَاجِبُ الشَّمْسِ فَأَخِّرُوا الصَّلَاةَ حَتَّى تَغِيبَ تَابَعَهُ عَبْدَةُ


Bukhari-582

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

582. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள:

‘சூரியன் உதிக்கும் நேரத்தையோ மறையும் நேரத்தையோ உங்கள் தொழுகைக்காக நாடாதீர்கள்.’ என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :9


لَا تَحَرَّوْا بِصَلَاتِكُمْ طُلُوعَ الشَّمْسِ وَلَا غُرُوبَهَا


Bukhari-581

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 30

ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் சூரியன் உயரும் வரை தொழுவது (கூடாது). 

581. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

ஸுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரை தொழுவதையும் அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரை தொழுவதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என நம்பிக்கைக்குரிய பலர் என்னிடம் கூறியுள்ளனர். அவர்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர் உமர் (ரலி) ஆவார்.

அத்தியாயம்: 9


شَهِدَ عِنْدِي رِجَالٌ مَرْضِيُّونَ وَأَرْضَاهُمْ عِنْدِي عُمَرُ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الصَّلاَةِ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَشْرُقَ الشَّمْسُ، وَبَعْدَ العَصْرِ حَتَّى تَغْرُبَ»


Bukhari-580

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 29

பொதுவாகத் தொழுகையில் ஒரு ரக்அத்தை (அதற்குரிய நேரத்தில்) அடைந்து கொண்டவர் (தமது தொழுகையை முழுமையாக்கட்டும்). 

580. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகையில் ஒரு ரக்அத்தை (அதற்குரிய நேரத்தில்) அடைந்து கொள்பவர் அந்தத் தொழுகையை அடைந்து கொள்கிறார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 9


«مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصَّلاَةِ، فَقَدْ أَدْرَكَ الصَّلاَةَ»


Bukhari-579

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 28

ஃபஜ்ர் தொழுகையில் ஒரு ரக்அத்தை (அதற்குரிய நேரத்தில்) அடைந்து கொண்டவர் (தமது தொழுகையை முழுமையாக்கட்டும்). 

579. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

சூரியன் உதிப்பதற்கு முன் ஸுப்ஹுடைய ஒரு ரக்அத்தை அடைந்து கொள்பவர் ஸுப்ஹை அடைந்து கொள்கிறார். சூரியன் மறைவதற்கு முன் அஸருடைய ஒரு ரக்அத்தை அடைந்து கொள்பவர் அஸர் தொழுகையை அடைந்து கொள்கிறார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 9


«مَنْ أَدْرَكَ مِنَ الصُّبْحِ رَكْعَةً قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ، فَقَدْ أَدْرَكَ الصُّبْحَ، وَمَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ العَصْرِ قَبْلَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ، فَقَدْ أَدْرَكَ العَصْرَ»


Bukhari-578

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

578. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

இறைநம்பிக்கையுள்ள பெண்கள் தங்களின் ஆடைகளால் போர்த்திக் கொண்டு நபி (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகை முடிந்ததும் தங்களின் இல்லங்களுக்குத் திரும்புவார்கள். இருட்டின் காரணமாக அவர்களை ஒருவரும் அறிந்து கொள்ளமுடியாது.

அத்தியாயம்: 9


«كُنَّ نِسَاءُ المُؤْمِنَاتِ يَشْهَدْنَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلاَةَ الفَجْرِ مُتَلَفِّعَاتٍ بِمُرُوطِهِنَّ، ثُمَّ يَنْقَلِبْنَ إِلَى بُيُوتِهِنَّ حِينَ يَقْضِينَ الصَّلاَةَ، لاَ يَعْرِفُهُنَّ أَحَدٌ مِنَ الغَلَسِ»


Bukhari-577

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

577. ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவித்தார்.

நான் என் இல்லத்தில் ஸஹர் செய்துவிட்டு, நபி(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ருத் தொழுகையில் கலந்து கொள்வதற்காக அவசரமாகப் புறப்படுபவனாக இருந்தேன்.
Book :9


«كُنْتُ أَتَسَحَّرُ فِي أَهْلِي، ثُمَّ يَكُونُ سُرْعَةٌ بِي، أَنْ أُدْرِكَ صَلاَةَ الفَجْرِ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-576

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

576. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) ஸைத் இப்னு ஸாபித்(ரலி) இருவரும் ஸஹ்ர் செய்தனர். நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்குத் தயாராகித் தொழுதார்கள்.

ஸஹர் முடிப்பதற்கும் தொழுகையைத் துவக்குவதற்கும் எவ்வளவு இடைவெளி இருக்கும்? என்று நாங்கள் அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டோம். ‘ஒரு மனிதா ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு நேரம்’ என்று கூறினார்கள் என கதாதா கூறுகிறார்கள்.
Book :9


أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَزَيْدَ بْنَ ثَابِتٍ: «تَسَحَّرَا فَلَمَّا فَرَغَا مِنْ سَحُورِهِمَا، قَامَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الصَّلاَةِ، فَصَلَّى»، قُلْنَا لِأَنَسٍ: كَمْ كَانَ بَيْنَ فَرَاغِهِمَا مِنْ سَحُورِهِمَا وَدُخُولِهِمَا فِي الصَّلاَةِ؟ قَالَ: «قَدْرُ مَا يَقْرَأُ الرَّجُلُ خَمْسِينَ آيَةً»


Bukhari-575

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 27

ஃபஜ்ர் தொழுகையின் நேரம். 

575. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

“ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஸஹர் செய்துவிட்டுப் பின்னர் (ஃபஜ்ர்) தொழுகைக்குத் தயாரானோம்” என்று கூறினார்கள்.

அப்போது நான், “ஸஹருக்கும் தொழுகைக்குமிடையே எவ்வளவு இடைவெளி இருக்கும்?” என்று கேட்டேன். அதற்கு ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், “ஐம்பது அல்லது அறுபது வசனங்கள் (ஓதும்) நேரம்” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம்: 9


أَنَّهُمْ تَسَحَّرُوا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَامُوا إِلَى الصَّلاَةِ، قُلْتُ: كَمْ بَيْنَهُمَا؟ قَالَ: قَدْرُ خَمْسِينَ أَوْ سِتِّينَ ، يَعْنِي آيَةً


Bukhari-574

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

574. ‘பகலின் வெப்பம் குறைந்த இரண்டு நேரத் தொழுகைகளை (அதாவது பஜ்ரு, அஸர்)தொழுகைகளை முறையாகத் தொழுகிறவர் சுவர்க்கத்தில் நுழைவார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.
Book :9


«مَنْ صَلَّى البَرْدَيْنِ دَخَلَ الجَنَّةَ»


Next Page » « Previous Page