Author: Farook

Bukhari-523

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 நீங்கள் அவன் பக்கமே (பாவமன்னிப்புக் கோரி) திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்துகொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகிவிடாதீர்கள் எனும் (30:31ஆவது) இறைவசனம். 

523. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

அப்துல் கைஸ் குழுவினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ‘நாங்கள் ரபீஆ எனும் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். (போரிடுதல்) விலக்கப்பட்ட மாதத்தில் தவிர (ஏனைய மாதங்களில்) உங்களிடம் நாங்கள் வர இயலாது. எனவே உங்களிடமிருந்து பெற்றுச் சென்று எங்களுக்குப் பின்னாலுள்ளவர்களையும் அதன் பால் அழைக்கக்கூடிய விஷயங்களை எங்களுக்குக் கட்டளையிடுங்கள்!’ என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘நான்கு காரியங்களை உங்களுக்கு ஏவுகிறேன். அவையாவன:

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதராவேன் என்று உறுதியாக நம்புவது, தொழுகையை நிலைநாட்டுவது, ஸகாத் கொடுத்து வருவது, கனீமத் (போரில் வென்ற பின் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட) பொருட்களில் ஐந்தில் ஒரு பகுதியை பொதுமக்கள் நன்மைக்காக) என்னிடம் ஒப்படைத்து விடுதல்,

நான்கு காரியங்களைவிட்டு உங்களை நான் தடுக்கிறேன். அவையாவன: (மது பானங்கள் வைத்திருந்த) சுரைக்குடுக்கை,

قَدِمَ وَفْدُ عَبْدِ القَيْسِ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: إِنَّا مِنْ هَذَا الحَيِّ مِنْ رَبِيعَةَ وَلَسْنَا نَصِلُ إِلَيْكَ إِلَّا فِي الشَّهْرِ الحَرَامِ، فَمُرْنَا بِشَيْءٍ نَأْخُذْهُ عَنْكَ وَنَدْعُو إِلَيْهِ مَنْ وَرَاءَنَا، فَقَالَ: ” آمُرُكُمْ بِأَرْبَعٍ وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ الإِيمَانِ بِاللَّهِ، ثُمَّ فَسَّرَهَا لَهُمْ: شَهَادَةُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ، وَإِقَامُ الصَّلاَةِ، وَإِيتَاءُ الزَّكَاةِ، وَأَنْ تُؤَدُّوا إِلَيَّ خُمُسَ مَا غَنِمْتُمْ، وَأَنْهَى عَنْ: الدُّبَّاءِ وَالحَنْتَمِ وَالمُقَيَّرِ وَالنَّقِيرِ “


Bukhari-522

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

522. ஆயிஷா (ரலி) அறிவித்தார்:

எனது அறையிலிருந்து சூரிய ஒளி (முழுவதும்) அகலாத நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையை நடத்துவார்கள்.

அறிவிப்பவர்: உர்வா பின் ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 9


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي العَصْرَ، وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا قَبْلَ أَنْ تَظْهَرَ»


Bukhari-521

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

தொழுகை நேரங்கள்.

பாடம்: 1

தொழுகையின் சிறப்பும் அவற்றின் நேரங்களும்.

அல்லாஹ் கூறுகின்றான்:
நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது நம்பிக்கையாளர்களுக்கு விதியாக்கப்பெற்றுள்ளது.
(அல்குர்ஆன்: 4:103)

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள மவ்கூத்’ எனும் சொற்றொடரும்) மவக்கத்’ எனும் சொல்லும் தவ்கீத்’எனும் வேர்ச் சொல்லிலிருந்து பிரிந்தவையேயாகும். இதன் கருத்தாவது: நம்பிக்கையாளர்கள் மீது அவற்றிற்கான நேரத்தை அல்லாஹ் வரையுறுத்துள்ளான்.

521. ஸுஹ்ரீ (ரஹ்) அறிவித்தார்:

உமர் பின் அப்துல்அஸீஸ் ஒரு நாள் தொழுகையைத் தாமதப் படுத்திவிட்டார்கள். அப்போது உர்வா பின் ஸுபைர் அவரிடம் வந்து பின்வரும் நிகழ்ச்சியைக் கூறி (அவரின் செயலைக் கண்டிக்கலா)னார்கள்.

இராக்கில் இருக்கும்போது ஒரு நாள் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) தொழுகையைத் தாமதப் படுத்திவிட்டார்கள். அப்போது அபூமஸ்ஊத் அன்ஸாரி (ரலி), அவரிடம் வந்து, ‘முஃகீராவே! இது என்ன? ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி (ஃபஜ்ருத்) தொழ, நபி (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (லுஹர்) தொழ, நபி (ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (அஸர்) தொழ நபி (ஸல்) அவர்களும் தொழுதார்கள்.

أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ العَزِيزِ أَخَّرَ الصَّلاَةَ يَوْمًا فَدَخَلَ عَلَيْهِ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، فَأَخْبَرَهُ أَنَّ المُغِيرَةَ بْنَ شُعْبَةَ أَخَّرَ الصَّلاَةَ يَوْمًا وَهُوَ بِالعِرَاقِ، فَدَخَلَ عَلَيْهِ أَبُو مَسْعُودٍ الأَنْصَارِيُّ، فَقَالَ: مَا هَذَا يَا مُغِيرَةُ أَلَيْسَ قَدْ عَلِمْتَ أَنَّ جِبْرِيلَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَزَلَ فَصَلَّى، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ صَلَّى، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ صَلَّى، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ صَلَّى، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ صَلَّى، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: «بِهَذَا أُمِرْتُ»، فَقَالَ عُمَرُ لِعُرْوَةَ: اعْلَمْ مَا تُحَدِّثُ، أَوَأَنَّ جِبْرِيلَ هُوَ أَقَامَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقْتَ الصَّلاَةِ؟ قَالَ عُرْوَةُ: كَذَلِكَ كَانَ بَشِيرُ بْنُ أَبِي مَسْعُودٍ يُحَدِّثُ، عَنْ أَبِيهِ،


Bukhari-520

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 109 தொழுது கொண்டிருப்பவர் மீது விழுந்துள்ள அசுத்தத்தை ஒரு பெண் அப்புறப்படுத்துவது.

 520. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் கஅபாவினருகில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது குரைஷிகள் தங்கள் சபையில் குழுமியிருந்தனர். ‘இந்த முகஸ்துதி விரும்பியை நீங்கள் பார்க்கவில்லையா?’ என்று அவர்களில் ஒருவன் கேட்டான். இன்னாருடைய (அறுக்கப்பட்ட) ஒட்டகத்தினருகில் சென்று அதன் சாணத்தையும் இரத்தத்தையும் மற்றும் கருப்பையையும் எடுத்து வந்து இவர் ஸஜ்தாச் செய்யும் வரை காத்திருந்து அதை இவரின் இரண்டு தோள் புஜத்திலும் போட்டுவிட உங்களில் யார் தயார்?’ என்று அவன் கேட்டான்.

அவர்களில் மிக மோசமான ஒருவன் அதற்கு முன் வந்தான். நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்தபோது அதை அவர்களின் தோள் புஜத்தில் போட்டான். நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாவிலேயே கிடந்தார்கள். ஒருவரின் மீது ஒருவர் சாய்ந்து விடும் அளவுக்குக் குரைஷிகள் சிரிக்கலானார்கள். சிறுமியாக இருந்த ஃபாத்திமா(ரலி) அவர்களிடம் ஒருவர் சென்று இதைத் தெரிவித்ததும் அவர்கள் ஓடோடி வந்தார்கள். அவர்கள் வந்து அசுத்தங்களை அகற்றும் வரை ஸஜ்தாவிலேயே நபி(ஸல்) அவர்கள் கிடந்தார்கள். பின்பு குரைஷிகளை ஃபாத்திமா(ரலி) ஏச ஆரம்பித்தார்கள்.

நபி(ஸல்)

بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَائِمٌ يُصَلِّي عِنْدَ الكَعْبَةِ وَجَمْعُ قُرَيْشٍ فِي مَجَالِسِهِمْ، إِذْ قَالَ قَائِلٌ مِنْهُمْ: أَلاَ تَنْظُرُونَ إِلَى هَذَا المُرَائِي أَيُّكُمْ يَقُومُ إِلَى جَزُورِ آلِ فُلاَنٍ، فَيَعْمِدُ إِلَى فَرْثِهَا وَدَمِهَا وَسَلاَهَا، فَيَجِيءُ بِهِ، ثُمَّ يُمْهِلُهُ حَتَّى إِذَا سَجَدَ وَضَعَهُ بَيْنَ كَتِفَيْهِ، فَانْبَعَثَ أَشْقَاهُمْ، فَلَمَّا سَجَدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَضَعَهُ بَيْنَ كَتِفَيْهِ؟ وَثَبَتَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَاجِدًا، فَضَحِكُوا حَتَّى مَالَ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ مِنَ الضَّحِكِ، فَانْطَلَقَ مُنْطَلِقٌ إِلَى فَاطِمَةَ عَلَيْهَا السَّلاَمُ – وَهِيَ جُوَيْرِيَةٌ -، فَأَقْبَلَتْ تَسْعَى وَثَبَتَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَاجِدًا حَتَّى أَلْقَتْهُ عَنْهُ، وَأَقْبَلَتْ عَلَيْهِمْ تَسُبُّهُمْ، فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلاَةَ، قَالَ: «اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ، اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ، اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ»، ثُمَّ سَمَّى: «اللَّهُمَّ عَلَيْكَ بِعَمْرِو بْنِ هِشَامٍ، وَعُتْبَةَ بْنِ رَبِيعَةَ، وَشَيْبَةَ بْنِ رَبِيعَةَ، وَالوَلِيدِ بْنِ عُتْبَةَ، وَأُمَيَّةَ بْنِ خَلَفٍ، وَعُقْبَةَ بْنِ أَبِي مُعَيْطٍ وَعُمَارَةَ بْنِ الوَلِيدِ» قَالَ عَبْدُ اللَّهِ: فَوَاللَّهِ لَقَدْ رَأَيْتُهُمْ صَرْعَى يَوْمَ بَدْرٍ، ثُمَّ سُحِبُوا إِلَى القَلِيبِ، قَلِيبِ بَدْرٍ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَأُتْبِعَ أَصْحَابُ القَلِيبِ لَعْنَةً»


Bukhari-519

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 108

ஒருவர் சஜ்தா செய்யும் போது சஜ்தாச் செய்திட (இடம் விடுமாறு சமிக்ஞை செய்ய உறங்கிக் கொண்டிருக்கும்) தம் துணைவி யைத் தொட்டுணர்த்தலாமா? 

519. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

நான் நபி (ஸல்) அவர்களுக்கும் கிப்லாவுக்கும் இடையே உறங்கிக் கொண்டிருப்பேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும்போது (விரலால்) என் காலில் குத்துவார்கள். நான் கால்களை மடக்கிக் கொள்வேன். இவ்வாறிருக்க எங்களை நாய்களுக்கும் கழுதைகளுக்கும் சமமாக்கி விட்டீர்களே?

அத்தியாயம்: 8


بِئْسَمَا عَدَلْتُمُونَا بِالكَلْبِ وَالحِمَارِ «لَقَدْ رَأَيْتُنِي وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَأَنَا مُضْطَجِعَةٌ بَيْنَهُ وَبَيْنَ القِبْلَةِ، فَإِذَا أَرَادَ أَنْ يَسْجُدَ غَمَزَ رِجْلَيَّ، فَقَبَضْتُهُمَا»


Bukhari-518

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

518. மைமூனா(ரலி) அறிவித்தார்.

‘நான் மாதவிடாய்க்காரியாக இருக்கும் சமயத்தில் நபி(ஸல்) அவர்களின் அருகே படுத்துறங்குவேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும்போது அவர்களின் ஆடை என் மேல் படுவதுண்டு.
Book :8


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَأَنَا إِلَى جَنْبِهِ نَائِمَةٌ، فَإِذَا سَجَدَ أَصَابَنِي ثَوْبُهُ وَأَنَا حَائِضٌ» وَزَادَ مُسَدَّدٌ، عَنْ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ الشَّيْبَانِيُّ، وَأَنَا حَائِضٌ


Bukhari-517

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 107 மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் படுத்திருக்கும் படுக்கை அருகில் தொழுவதால்…? 

517. மைமூனா(ரலி) அறிவித்தார்.

என்னுடைய விரிப்பு நபி(ஸல்) அவர்கள் தொழும் விரிப்புடன் பட்டுக் கொண்டிருக்கும். சில சமயம் நான் விரிப்பில் இருக்கும்போது அவர்களின் ஆடை என் மேல் படுவதுண்டு.
Book : 8


«كَانَ فِرَاشِي حِيَالَ مُصَلَّى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَرُبَّمَا وَقَعَ ثَوْبُهُ عَلَيَّ وَأَنَا عَلَى فِرَاشِي»


Bukhari-516

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 106 தொழும் போது ஒரு சிறுமியை தமது தோளில் தூக்கி ஒருவர் சுமந்தால்…? 

516. அபூ கதாதா அல்அன்ஸாரி(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தங்களின் மகள் ஸைனப் அவர்களின் குழந்தை ‘உமாமா’வைத் (தோளில்) சுமந்த நிலையில் தொழுதிருக்கிறார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும்போது இறக்கி விடுவார்கள். நிற்கும்போது தூக்கிக் கொள்வார்கள்.
Book : 8


كَانَ يُصَلِّي وَهُوَ حَامِلٌ أُمَامَةَ بِنْتَ زَيْنَبَ بِنْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلِأَبِي العَاصِ بْنِ رَبِيعَةَ بْنِ عَبْدِ شَمْسٍ فَإِذَا سَجَدَ وَضَعَهَا، وَإِذَا قَامَ حَمَلَهَا»


Bukhari-515

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

515. ஸுஹ்ரி அறிவித்தார்.

நான் என் தந்தையின் உடன் பிறந்தாரிடம் எவை (குறுக்கே சென்றால்) தொழுகை முறிக்கும் என்று கேட்டேன். அதற்கவர் ‘எதுவும் முறிக்காது’ என்று கூறிவிட்டு, ‘நபி(ஸல்) அவர்களின் குடும்பத்திற்குரிய விரிப்பில், கிப்லாவுக்கும் நபி(ஸல்) அவர்களுக்கும் குறுக்கே நான் படுத்திருக்கும் போது நபி(ஸல்) இரவில் தொழுவார்கள்’ என்று ஆயிஷா(ரலி) கூறினார் என குறிப்பிட்டார்.
Book :8


«لَقَدْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُومُ فَيُصَلِّي مِنَ اللَّيْلِ، وَإِنِّي لَمُعْتَرِضَةٌ بَيْنَهُ وَبَيْنَ القِبْلَةِ عَلَى فِرَاشِ أَهْلِهِ»


Bukhari-514

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 105

தொழும் போது குறுக்கே செல்லும் எதுவும், தொழுகையை முறிக்காது எனும் கூற்று.

 514. மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களிடம் தொழுகையை முறிக்கும் காரியங்கள் பற்றிப் பேசப்பட்டது. சிலர் நாயும் கழுதையும் பெண்ணும் (தொழுபவருக்குக் குறுக்கே சென்றால்) தொழுகையை முறிப்பர் என்று கூறினர்.

அதைக் கேட்ட ஆயிஷா (ரலி) ‘எங்களை கழுதைகளுடனும் நாய்களுடனும் ஒப்பிட்டு விட்டீர்களே! நிச்சயமாக கிப்லாவுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமிடையே கட்டிலில் நான் படுத்திருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள். அப்போது எனக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால் எழுந்து அமர்ந்து,  நபி (ஸல்) அவர்களுக்குத் தொல்லை தராமல் அவர்களின் கால் வழியாக நழுவி விடுவேன்’ என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 8


ذُكِرَ عِنْدَهَا مَا يَقْطَعُ الصَّلاَةَ الكَلْبُ وَالحِمَارُ وَالمَرْأَةُ، فَقَالَتْ: شَبَّهْتُمُونَا بِالحُمُرِ وَالكِلاَبِ، وَاللَّهِ «لَقَدْ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَإِنِّي عَلَى السَّرِيرِ بَيْنَهُ وَبَيْنَ القِبْلَةِ مُضْطَجِعَةً، فَتَبْدُو لِي الحَاجَةُ، فَأَكْرَهُ أَنْ أَجْلِسَ، فَأُوذِيَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَنْسَلُّ مِنْ عِنْدِ رِجْلَيْهِ»


Next Page » « Previous Page