Author: Farook

Bukhari-513

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 104 பெண்ணை நோக்கி உபரியான தொழுகைகளைத் தொழுவது (செல்லும்). 

513. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களுக்கு முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன். என் கால்களிரண்டும் அவர்களின் முகத்துக்கு நேராக இருக்கும். அவர்கள் ஸஜ்தா செய்யும்போது (விரலால் என் காலில்) குத்துவார்கள். நான் கால்களை மடக்கிக் கொள்வேன். அவர்கள் எழுந்ததும் கால்களை நீட்டிக் கொள்வேன். அன்றைய காலத்தில் (எங்கள்) வீடுகளில் விளக்குகள் கிடையாது.
Book : 8


«كُنْتُ أَنَامُ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرِجْلاَيَ فِي قِبْلَتِهِ، فَإِذَا سَجَدَ غَمَزَنِي، فَقَبَضْتُ رِجْلَيَّ، فَإِذَا قَامَ بَسَطْتُهُمَا»، قَالَتْ: وَالبُيُوتُ يَوْمَئِذٍ لَيْسَ فِيهَا مَصَابِيحُ


Bukhari-512

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 103 தூங்கிக் கொண்டிருப்பவரை நோக்கித் தொழுவது.

 512. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது நான் அவர்களின் விரிப்பில் அவர்களுக்குக் குறுக்கே உறங்கிக் கொண்டிருப்போன். அவர்கள் வித்ருத் தொழ எண்ணும்போது என்னை எழச் செய்வார்கள். அதன்பின்னர் வித்ருத் தொழுவேன்.
Book : 8


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي وَأَنَا رَاقِدَةٌ مُعْتَرِضَةٌ عَلَى فِرَاشِهِ، فَإِذَا أَرَادَ أَنْ يُوتِرَ أَيْقَظَنِي فَأَوْتَرْتُ»


Bukhari-511

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 102

தொழுது கொண்டிருக்கும் ஒருவரை முன்னோக்கி அமரலாமா?

தொழுது கொண்டிருக்கும் ஒருவரை முன்னோக்கி அமர்வதை உஸ்மான் (ரலி) அவர்கள் வெறுத்துள்ளார்கள். தம்மால் தொழுபவரின் கவனம் சிதறும் என்றால்தான் இந்த நிலை. கவனம் சிதறாது என்றால் அதனால் தவறில்லை.

ஏனெனில் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், இவ்வாறு முன்னோக்கினால் என்ன (தவறு)? ஒரு மனிதர் இன்னொரு மனிதரின் தொழுகையை முறித்து விடமுடியாது என்று கூறியுள்ளார்கள். 


511. மஸ்ருக் அறிவித்தார்.

ஆயிஷா(ரலி) அவர்களிடம் தொழுகையை முறிக்கும் காரியங்கள் பற்றிப் பேசப்பட்டது. சிலர் நாயும் கழுதையும் பெண்ணும் (தொழுபவருக்குக் குறுக்கே சென்றால்) தொழுகையை முறிப்பர் என்று கூறினர்.

அதைக் கேட்ட ஆயிஷா (ரலி) ‘எங்களை நாய்களோடு ஒப்பிட்டு விட்டீர்களே! நிச்சயமாக கிப்லாவுக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமிடையே கட்டிலில் நான் படுத்திருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் தொழுவார்கள். அப்போது எனக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால் நபி (ஸல்) அவர்களை (நேருக்கு நேர்) எதிர் கொள்வதை விரும்பாமல் நழுவி விடுவேன்’ என்றார்கள்.

அத்தியாயம்: 8


أَنَّهُ ذُكِرَ عِنْدَهَا مَا يَقْطَعُ الصَّلاَةَ، فَقَالُوا: يَقْطَعُهَا الكَلْبُ وَالحِمَارُ وَالمَرْأَةُ، قَالَتْ: لَقَدْ جَعَلْتُمُونَا كِلاَبًا، «لَقَدْ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي، وَإِنِّي لَبَيْنَهُ وَبَيْنَ القِبْلَةِ، وَأَنَا مُضْطَجِعَةٌ عَلَى السَّرِيرِ، فَتَكُونُ لِي الحَاجَةُ، فَأَكْرَهُ أَنْ أَسْتَقْبِلَهُ، فَأَنْسَلُّ انْسِلاَلًا»


Bukhari-510

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 101

தொழுது கொண்டிருப்பவருக்குக் குறுக்கே (அவர் சஜ்தா செய்யும் எல்லைக்குள்) நடந்து செல்வது பாவச்செயலாகும்.

 510. புஸ்ரு இப்னு ஸயீத் அறிவித்தார்.

தொழுபவரின் குறுக்கே செல்பவர் பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதை அறிந்து வருமாறு என்னை அபூஜுஹைம் (ரலி) அவர்களிடம் ஸைத் இப்னு காலித் (ரலி) அனுப்பி வைத்தார்.

‘தொழுபவருக்குக் குறுக்கே செல்பவர், அதனால் தமக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால் அவருக்குக் குறுக்கே செல்வதற்குப் பதில் நாற்பது நாள்கள் நின்று கொண்டிருப்பது அவருக்கு நல்லதாகத் தோன்றும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஜுஹைம் (ரலி) விடையளித்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுன் னழ்ரு என்பவர் ‘நாற்பது ஆண்டுகள்’ என்று கூறினார்களா? அல்லது ‘நாற்பது மாதங்கள்’ அல்லது ‘நாற்பது நாள்கள்’ என்று கூறினார்களா? என்பது சரியாக தமக்கு நினைவில்லை என்கிறார்.

அத்தியாயம்: 8


أَنَّ زَيْدَ بْنَ خَالِدٍ، أَرْسَلَهُ إِلَى أَبِي جُهَيْمٍ يَسْأَلُهُ: مَاذَا سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي المَارِّ بَيْنَ يَدَيِ المُصَلِّي؟ فَقَالَ أَبُو جُهَيْمٍ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ يَعْلَمُ المَارُّ بَيْنَ يَدَيِ المُصَلِّي مَاذَا عَلَيْهِ، لَكَانَ أَنْ يَقِفَ أَرْبَعِينَ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْهِ» قَالَ أَبُو النَّضْرِ: لاَ أَدْرِي، أَقَالَ أَرْبَعِينَ يَوْمًا، أَوْ شَهْرًا، أَوْ سَنَةً


Bukhari-509

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 100

தொழுது கொண்டிருப்பவர் தமக்கு முன்னால் குறுக்கே நடந்து செல்பவரைத் தடுப்பது.

தொழுகை இருப்பின் போதும் , (மக்கள் நடமாட்டம் நிறைந்த) கஅபாவிற்குள் தொழும் போதும் இப்னு உமர் (ரலி) அவர்கள் தமக்கு முன்னால் குறுக்கே சென்றவரைத் தடுத்திருக்கிறார்கள். சண்டையிட்டுத் தான் அ(வ்வாறு செல்ப)வரைத் தடுக்க முடியுமென்றால் அவ்வாறு செய்து கொள்! என்றும் கூறுவார்கள். 

509. அபூஸாலிஹ் அறிவித்தார்.

எவரும் குறுக்கே செல்லாமலிருக்கத் தடுப்பு வைத்துக் கொண்டு அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) ஒரு வெள்ளிக்கிழமையன்று தொழுது கொண்டிருந்தார்கள். பனூ அபூமுயீத் என்ற கூட்டத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் குறுக்கே செல்ல முயன்றார். உடனே அபூஸயீத் (ரலி) அவரின் நெஞ்சில் கையால் தள்ளினார்கள்.

வேறு வழியேதும் உள்ளதா என்று அந்த இளைஞர் கவனித்தபோது, அபூ ஸயீத் (ரலி)யின் குறுக்கே செல்வதைத் தவிர அவருக்கு வேறு வழிதென்படவில்லை. எனவே மீண்டும் அவர்களுக்குக் குறுக்கே செல்ல முயன்றார். முன்பை விடக் கடுமையாக அபூஸயீத் (ரலி) அவரைத் தள்ளினார்கள். அதனால் அவருக்குப் பாதிப்பு ஏற்பட்டது.

உடனே அவர் (ஆட்சித் தலைவராக இருந்த) மர்வானிடம் சென்று இது பற்றி முறையிட்டார். அவரைத் தொடர்ந்து அபூஸயீத் (ரலி) மர்வானிடம் சென்றார்கள்.

رَأَيْتُ أَبَا سَعِيدٍ الخُدْرِيَّ فِي يَوْمِ جُمُعَةٍ يُصَلِّي إِلَى شَيْءٍ يَسْتُرُهُ مِنَ النَّاسِ، فَأَرَادَ شَابٌّ مِنْ بَنِي أَبِي مُعَيْطٍ أَنْ يَجْتَازَ بَيْنَ يَدَيْهِ، فَدَفَعَ أَبُو سَعِيدٍ فِي صَدْرِهِ، فَنَظَرَ الشَّابُّ فَلَمْ يَجِدْ مَسَاغًا إِلَّا بَيْنَ يَدَيْهِ، فَعَادَ لِيَجْتَازَ، فَدَفَعَهُ أَبُو سَعِيدٍ أَشَدَّ مِنَ الأُولَى، فَنَالَ مِنْ أَبِي سَعِيدٍ، ثُمَّ دَخَلَ عَلَى مَرْوَانَ، فَشَكَا إِلَيْهِ مَا لَقِيَ مِنْ أَبِي سَعِيدٍ، وَدَخَلَ أَبُو سَعِيدٍ خَلْفَهُ عَلَى مَرْوَانَ، فَقَالَ: مَا لَكَ وَلِابْنِ أَخِيكَ يَا أَبَا سَعِيدٍ؟ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ إِلَى شَيْءٍ يَسْتُرُهُ مِنَ النَّاسِ فَأَرَادَ أَحَدٌ أَنْ يَجْتَازَ بَيْنَ يَدَيْهِ، فَلْيَدْفَعْهُ فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ»


Bukhari-508

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 99 கட்டிலை நோக்கித் தொழுவது.

 508. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(பெண்கள், நாய்கள், கழுதைகள் தொழுபவருக்குக் குறுக்கே சென்றால் தொழுகை முறிந்து விடும் என்று கூறுவதன் மூலம்) எங்களை நாய்களுக்கும் கழுதைகளுக்கும் சமமாக்கி விட்டீர்களே! நான் கட்டிலில் படுத்திருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் கட்டிலுக்கு நேராக நின்று தொழுவார்கள். அவர்களுக்கு நேராகக் கால்களை நீட்டுவது எனக்குப் பிடிக்காததால் கட்டிலின் கால்கள் வழியாக நழுவிச் சென்று விடுவேன்.
Book : 8


أَعَدَلْتُمُونَا بِالكَلْبِ وَالحِمَارِ «لَقَدْ رَأَيْتُنِي مُضْطَجِعَةً عَلَى السَّرِيرِ، فَيَجِيءُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَتَوَسَّطُ السَّرِيرَ، فَيُصَلِّي، فَأَكْرَهُ أَنْ أُسَنِّحَهُ، فَأَنْسَلُّ مِنْ قِبَلِ رِجْلَيِ السَّرِيرِ حَتَّى أَنْسَلَّ مِنْ لِحَافِي»


Bukhari-507

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 98

வாகன ஒட்டகம், சிவிகை (ஆகியவற்றை தடுப்பாக்கி தொழுவது போன்று) ஒட்டகம், மரம் ஆகியவற்றை(த் தடுப்பாக வைத்து அவற்றை) நோக்கித் தொழுவது. 

507. நாஃபிவு அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் தங்களின் ஒட்டகத்தைக் குறுக்கே நிறுத்தி அதை நோக்கித் தொழுவார்கள்’ என்று இப்னு உமர்(ரலி) கூறினார். ‘ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டால்…?’ என்று கேட்டேன். ‘ஒட்டகத்தின் மீது அமைக்கப்படும் சாய்மானத்தை எடுத்து அதை நோக்கித் தொழுவார்கள்’ என்று கூறியதுடன் அவரும் அவ்வாறே செய்வார்.

அத்தியாயம்: 8


«كَانَ يُعَرِّضُ رَاحِلَتَهُ، فَيُصَلِّي إِلَيْهَا»، قُلْتُ: أَفَرَأَيْتَ إِذَا هَبَّتِ الرِّكَابُ؟ قَالَ: «كَانَ يَأْخُذُ هَذَا الرَّحْلَ فَيُعَدِّلُهُ، فَيُصَلِّي إِلَى آخِرَتِهِ – أَوْ قَالَ مُؤَخَّرِهِ -» وَكَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَفْعَلُهُ “


Bukhari-506

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 97 

506. நாஃபிவு அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) கஅபாவுக்குள் நுழையும்போது கஅபாவின் உள்ளே நேராகச் சென்று வாசல் தம் முதுகுக்குப் பின் இருக்குமாறும் தமக்கும் எதிர் சுவற்றுக்குமிடையே மூன்று முழ இடைவெளி இருக்கும் விதமாகவும் நின்று தொழுவார்கள். அதாவது நபி(ஸல்) அவர்கள் எந்த இடத்தில் தொழுததாக பிலால்(ரலி) அறிவித்தார்களோ அந்த இடத்தைத் தேடித் தொழுவார்கள். ‘கஅபாவின் எந்தப் புறத்தில் நின்று தொழுதாலும் அதில் தவறில்லை’ என்றும் கூறுவார்கள்.
Book : 8


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، كَانَ «إِذَا دَخَلَ الكَعْبَةَ مَشَى قِبَلَ وَجْهِهِ حِينَ يَدْخُلُ، وَجَعَلَ البَابَ قِبَلَ ظَهْرِهِ، فَمَشَى حَتَّى يَكُونَ بَيْنَهُ وَبَيْنَ الجِدَارِ الَّذِي قِبَلَ وَجْهِهِ قَرِيبًا مِنْ ثَلاَثَةِ أَذْرُعٍ، صَلَّى يَتَوَخَّى المَكَانَ الَّذِي أَخْبَرَهُ بِهِ بِلاَلٌ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِيهِ»، قَالَ: وَلَيْسَ عَلَى أَحَدِنَا بَأْسٌ إِنْ صَلَّى فِي أَيِّ نَوَاحِي البَيْتِ شَاءَ


Bukhari-505

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

505. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களும் பிலால்(ரலி), உஸாமா இப்னு ஸைத்(ரலி) உஸ்மான்பின் தல்ஹா(ரலி) ஆகியோரும் கஅபாவுக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டு (நீண்ட நேரம்) உள்ளே இருந்தார்கள்.

வெளியே வந்த பிலால்(ரலி) அவர்களிடம் ‘நபி(ஸல்) அவர்கள் உள்ளே என்ன செய்தார்கள்?’ என்று கேட்டேன். ‘ஒரு தூண் தம் வலப்பக்கமும் மற்றொரு தூண் தம் இடப்பக்கமும் மூன்று தூண்கள் பின்புறமும் இருக்குமாறு தொழுதார்கள்’ என்று பிலால்(ரலி) விடையளித்தார்கள். அன்றைய தினம் கஅபாவுக்குள் ஆறு தூண்கள் இருந்தன.

மற்றோர் அறிவிப்பில் ‘வலப்பக்கம் இரண்டு தூண்கள்’ என்று கூறப்படுகிறது.
Book :8


” أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الكَعْبَةَ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ، وَبِلاَلٌ، وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ الحَجَبِيُّ فَأَغْلَقَهَا عَلَيْهِ، وَمَكَثَ فِيهَا، فَسَأَلْتُ بِلاَلًا حِينَ خَرَجَ: مَا صَنَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: جَعَلَ عَمُودًا عَنْ يَسَارِهِ، وَعَمُودًا عَنْ يَمِينِهِ، وَثَلاَثَةَ أَعْمِدَةٍ وَرَاءَهُ، وَكَانَ البَيْتُ يَوْمَئِذٍ عَلَى سِتَّةِ أَعْمِدَةٍ، ثُمَّ صَلَّى “

وَقَالَ لَنَا: إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، وَقَالَ: «عَمُودَيْنِ عَنْ يَمِينِهِ»


Bukhari-504

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 96 கூட்டுத் தொழுகை அல்லாதவற்றை தூண்களுக்கு இடையே தொழுவது. 

504. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களும் உஸாமா இப்னு ஸைத்(ரலி), பிலால்(ரலி), உஸ்மான் இப்னு தல்ஹா(ரலி) ஆகியோரும் கஅபாவுக்குள் நுழைந்தனர். நீண்ட நேரம் உள்ளிருந்துவிட்டு வெளியே வந்தனர். முதல் நபராக அவர்களைப் பின்தொடர்ந்து சென்று நபி(ஸல்) அவர்கள் எந்த இடத்தில் தொழுதனர்?’ என்று பிலால்(ரலி) அவர்களிடம் கேட்டேன். ‘முதலிலுள்ள இரண்டு தூண்களுக்கு இடையில்’ என்று பிலால்(ரலி) விடையளித்தார்கள்.
Book : 8


 دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ البَيْتَ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ، وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ، وَبِلاَلٌ فَأَطَالَ، ثُمَّ خَرَجَ وَكُنْتُ أَوَّلَ النَّاسِ دَخَلَ عَلَى أَثَرِهِ، فَسَأَلْتُ بِلاَلًا: أَيْنَ صَلَّى؟ قَالَ: بَيْنَ العَمُودَيْنِ المُقَدَّمَيْنِ


Next Page » « Previous Page