Author: Farook

Bukhari-503

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

503. அனஸ்(ரலி) அறிவித்தார்.

மஃரிபு(க்கு பாங்கு சொன்னது) முதல் நபி(ஸல்) அவர்கள் வெளியே வரும் வரை முதிய நபித்தோழர்கள் (இரண்டு ரக்அத்கள் முன் ஸுன்னத் தொழுவதற்காகத்) தூண்களை நோக்கி விரைவார்கள்.
Book :8


«لَقَدْ  رَأَيْتُ كِبَارَ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْتَدِرُونَ السَّوَارِيَ عِنْدَ المَغْرِبِ»


Bukhari-502

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 95 தூண்களை நோக்கித் தொழுவது.

(பள்ளிவாசலில் உள்ள) தூண்களில் சாய்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களைவிட தொழுபவர்களே அத(னைத் தடுப்பாக வைத்துத் தொழுவ)தற்கு அதிக உரிமை படைத்தவர்கள் என்று உமர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். இரண்டு தூண்களுக்கு நடுவில் தொழுது கொண்டிருந்த ஒருவரை உமர் (ரலி) அவர்கள் கண்ட போது அவரை ஒரு தூணை நோக்கி நிறுத்தி, இதை நோக்கித் தொழுவீராக! என்று கூறினார்கள்.

 502. யஸீத் இப்னு ஆபீ உபைத் கூறினார்.

நான் ஸலமா பனீ அல் அக்வஃ(ரலி) உடன் (பள்ளிக்கு) செல்பவர்களாக இருந்தேன். ஸலமா(ரலி) குர்ஆன் வைக்கப்படும் இடத்தில் அமைந்த தூணருகே தொழுவார்கள். அபூ முஸ்லிம் அவர்களே! இந்தத் தூணை தேர்ந்தெடுத்துத் தொழுகிறீர்களே?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இந்த இடத்தில் தொழுவதற்குச் சிரத்தை எடுப்பவர்களாக இருந்ததை பார்த்திருக்கிறேன்’ என்று பதிலளித்தார்கள்.
Book : 8


كُنْتُ آتِي مَعَ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ فَيُصَلِّي عِنْدَ الأُسْطُوَانَةِ الَّتِي عِنْدَ المُصْحَفِ، فَقُلْتُ: يَا أَبَا مُسْلِمٍ، أَرَاكَ تَتَحَرَّى الصَّلاَةَ عِنْدَ هَذِهِ الأُسْطُوَانَةِ، قَالَ: فَإِنِّي «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى الصَّلاَةَ عِنْدَهَا»


Bukhari-501

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 94 மக்கா உட்பட எல்லா இடங்களிலும் (திறந்தவெளியில் தொழும் போது) தடுப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

 501. அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் நண்பகலில் புறப்பட்டு, தமக்கு முன்னால் கைத்தடியைத் தடுப்பாக வைத்து ‘பத்ஹா’ என்ற இடத்தில் லுஹரையும் அஸரையும் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுகை நடத்தினார்கள். (தொழுகைக்காக) அவர்கள் உளூச் செய்தபோது அவர்களின் மீதம் வைத்த தண்ணீரை மக்கள் (தம்மேனியில்) தடவினார்கள்.
Book : 8


«خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالهَاجِرَةِ، فَصَلَّى بِالْبَطْحَاءِ الظُّهْرَ وَالعَصْرَ رَكْعَتَيْنِ، وَنَصَبَ بَيْنَ يَدَيْهِ عَنَزَةً وَتَوَضَّأَ»، فَجَعَلَ النَّاسُ يَتَمَسَّحُونَ بِوَضُوئِهِ


Bukhari-500

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

500. அனஸ் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடம் செல்லும்போது நானும் மற்றொரு சிறுவரும் கைத்தடியையும் தண்ணீர்ப் பாத்திரத்தையும் எடுத்துக் கொள்வோம். அவர்கள் தம் தேவையை முடித்ததும் (உளூச் செய்வதற்காக) தண்ணீர் ஊற்றுவோம்.
Book :8


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَرَجَ لِحَاجَتِهِ، تَبِعْتُهُ أَنَا وَغُلاَمٌ وَمَعَنَا عُكَّازَةٌ أَوْ عَصًا أَوْ عَنَزَةٌ، وَمَعَنَا إِدَاوَةٌ، فَإِذَا فَرَغَ مِنْ حَاجَتِهِ نَاوَلْنَاهُ الإِدَاوَةَ»


Bukhari-498

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 92 (தொழுபவர் தமக்கு முன் தடுப்பாக நட்டுவைக்கப்பட்டுள்ள) ஈட்டியை நோக்கித் தொழுவது. 

498. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தொழுவதற்காக ஈட்டி நாட்டப்படும். அவர்கள் அதை நோக்கித் தொழுவார்கள்.
Book : 8


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُرْكَزُ لَهُ الحَرْبَةُ فَيُصَلِّي إِلَيْهَا»


Bukhari-497

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

497. ஸலமா இப்னு அல் அக்வஃ(ரலி) கூறினார்.

மேடைப் பகுதியிலுள்ள சுவர் பக்கம் (நபி(ஸல்) தொழும் போது) ஓர் ஆடு கடந்து செல்ல முடியாத அளவு இடைவெளியே இருந்தது.
Book :8


«كَانَ جِدَارُ المَسْجِدِ عِنْدَ المِنْبَرِ مَا كَادَتِ الشَّاةُ تَجُوزُهَا»


Bukhari-496

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 91

தொழுபவருக்கும் தடுப்புக்கும் இடையே எந்த அளவு இடைவெளி இருக்க வேண்டும்?

496. ஸஹ்ல் இப்னு ஸஃது (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் தொழுமிடத்துக்கும் சுவற்றுக்குமிடையே ஓர் ஆடு நடக்குமளவுக்கு இடைவெளி இருக்கும்.

அத்தியாயம்: 8


«كَانَ بَيْنَ مُصَلَّى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَيْنَ الجِدَارِ مَمَرُّ الشَّاةِ»


Bukhari-495

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

495. அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ‘பத்ஹா’ எனுமிடத்தில் லுஹரையும் அஸரையும் இரண்டிரண்டு ரக்அத்களாக தொழுகை நடத்தினார்கள்.. அவர்களுக்கு முன்பு கைத்தடி ஒன்றுஇருந்தது. அதற்கு முன்னால் கழுதையும் பெண்களும் நடப்பவர்களாக இருந்தனர்.
Book :8


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِهِمْ بِالْبَطْحَاءِ وَبَيْنَ يَدَيْهِ عَنَزَةٌ، الظُّهْرَ رَكْعَتَيْنِ، وَالعَصْرَ رَكْعَتَيْنِ، تَمُرُّ بَيْنَ يَدَيْهِ المَرْأَةُ وَالحِمَارُ»


Bukhari-494

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

494. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பெருநாள் அன்று (தொழுகை நடத்துவதற்காகத் திடல் நோக்கிச்) செல்லும்போது ஈட்டியை எடுத்து வருமாறு கூறுவார்கள். அவர்களுக்கு முன்னால் அது நாட்டப்பட்டதும் அதை நோக்கித் தொழுவார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னே இருப்பார்கள். பயணத்தின் போதும் இவ்வாறு செய்பவர்களாக இருந்தனர். இதனால்தான் (நம்முடைய) தலைவர்களும் அவ்வாறு செய்கின்றனர்.
Book :8


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ يَوْمَ العِيدِ أَمَرَ بِالحَرْبَةِ، فَتُوضَعُ بَيْنَ يَدَيْهِ، فَيُصَلِّي إِلَيْهَا وَالنَّاسُ وَرَاءَهُ، وَكَانَ يَفْعَلُ ذَلِكَ فِي السَّفَرِ»، فَمِنْ ثَمَّ اتَّخَذَهَا الْأُمَرَاءُ


Bukhari-493

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 90

(கூட்டுத் தொழுகையின் போது) இமாம் வைத்துக் கொள்ளும் (சுத்ரா) தடுப்பே பின்னாலிருப்போருக்கும் போதுமானதாகும். 

493. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ‘மினா’ எனுமிடத்தில் சுவர் (போன்ற தடுப்பு) எதுவுமின்றித் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும்போது பெட்டைக் கழுதையின் மீது ஏறிக் கொண்டு அங்கே நான் வந்தேன். அந்தச் சந்தர்ப்பத்தில் பருவ வயதை நெருங்கி இருந்தேன். மேய்வதற்காகக் கழுதையை அவிழ்த்துவிட்டுவிட்டு சில வரிசைகளுக்கு முன்னே நடந்து சென்று வரிசையில் சேர்ந்து கொண்டேன். இதனை எவரும் ஆட்சேபிக்க வில்லை.

அத்தியாயம்: 8


أَقْبَلْتُ رَاكِبًا عَلَى حِمَارٍ أَتَانٍ، وَأَنَا يَوْمَئِذٍ قَدْ نَاهَزْتُ الِاحْتِلاَمَ، «وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِالنَّاسِ بِمِنًى إِلَى غَيْرِ جِدَارٍ، فَمَرَرْتُ بَيْنَ يَدَيْ بَعْضِ الصَّفِّ فَنَزَلْتُ، وَأَرْسَلْتُ الأَتَانَ تَرْتَعُ، وَدَخَلْتُ فِي الصَّفِّ، فَلَمْ يُنْكِرْ ذَلِكَ عَلَيَّ أَحَدٌ»


Next Page » « Previous Page