Author: Farook

Bukhari-491

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

491. நாஃபிவு அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து) மக்கா செல்லும் ‘தூத்துவா’ என்ற இடத்தில் இரவு நேரம் தங்கிவிட்டு அங்கேயே காலையில் ஸுபுஹ் தொழுவார்கள்’ என இப்னு உமர்(ரலி) கூறினார்.

நபி(ஸல்) அவர்கள் தொழாத இடம் அங்குள்ள கெட்டியான மேட்டின் மேல் அமைந்துள்ளது. அது, தற்போது பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ள இடமன்று, அது அந்தப் பள்ளிக்குக் கீழ்ப்புறமாக அமைந்த இடமாகும்.
Book :8


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَنْزِلُ بِذِي طُوًى، وَيَبِيتُ حَتَّى يُصْبِحَ، يُصَلِّي الصُّبْحَ حِينَ يَقْدَمُ مَكَّةَ، وَمُصَلَّى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَلِكَ عَلَى أَكَمَةٍ غَلِيظَةٍ، لَيْسَ فِي المَسْجِدِ الَّذِي بُنِيَ ثَمَّ، وَلَكِنْ أَسْفَلَ مِنْ ذَلِكَ عَلَى أَكَمَةٍ غَلِيظَةٍ»


Bukhari-490

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

490. நாஃபிவு அறிவித்தார்.

‘மர்ருள்ளஹ்ரான்’ எனும் இடத்திற்கரும்லுள்ள ஓடையில் நபி(ஸல்) அவர்கள் இளைப்பாறுவார்கள். அந்த ஓடை (மக்காவிலிருந்து) மதீனா செல்லும் வழியிலுள்ளது. நீ மக்கா செல்லும் வழியிலுள்ளது. நீ மக்கா செல்லுமபோது ‘ஸப்ராவாத்’ என்ற இடத்தைக் கடந்ததும் சாலையின் இடப்புறம் அது உள்ளது. அந்தச் சாலைக்கும் நபி(ஸல்) அவர்கள் இளைப்பாறிய இடத்திற்கும் ஒரு கல்லெறியும் தூரமே உண்டு’ என இப்னு உமர்(ரலி) என்னிடம் கூறினார்கள்.
Book :8


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَنْزِلُ فِي المَسِيلِ الَّذِي فِي أَدْنَى مَرِّ الظَّهْرَانِ، قِبَلَ المَدِينَةِ حِينَ يَهْبِطُ مِنَ الصَّفْرَاوَاتِ يَنْزِلُ فِي بَطْنِ ذَلِكَ المَسِيلِ عَنْ يَسَارِ الطَّرِيقِ، وَأَنْتَ ذَاهِبٌ إِلَى مَكَّةَ، لَيْسَ بَيْنَ مَنْزِلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَيْنَ الطَّرِيقِ إِلَّا رَمْيَةٌ بِحَجَرٍ»


Bukhari-489

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

489. நாஃபிவு அறிவித்தார்.

‘ஹர்ஷா’ எனும் மலைக்கருகில் (மதீனாவிலிருந்து செல்லும்) பாதையின் இடப்புறம் அமைந்த (ஓடையின் அருகிலுள்ள) மரங்களின் கீழ் இளைப்பாறுவார்கள். அந்த ஓடை ‘ஹர்ஷா’ எனும் மலையை ஒட்டிச் செல்கிறது. அந்த மலைக்கும் நபி(ஸல்) தங்கிய இடத்திற்குமிடையே அம்பு எய்யும் தூரமிருக்கும். இப்னு உமர்(ரலி) அம்மரங்களிலேயே மிகப் பெரிய மரத்தினருகில் தொழும் வழக்கமுடையவர்களாயிருந்தார்கள்.
Book :8


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَزَلَ عِنْدَ سَرَحَاتٍ عَنْ يَسَارِ الطَّرِيقِ فِي مَسِيلٍ دُونَ هَرْشَى، ذَلِكَ المَسِيلُ لاَصِقٌ بِكُرَاعِ هَرْشَى، بَيْنَهُ وَبَيْنَ الطَّرِيقِ قَرِيبٌ مِنْ غَلْوَةٍ»
وَكَانَ عَبْدُ اللَّهِ «يُصَلِّي إِلَى سَرْحَةٍ هِيَ أَقْرَبُ السَّرَحَاتِ إِلَى الطَّرِيقِ، وَهِيَ أَطْوَلُهُنَّ»


Bukhari-488

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

488. நாஃபிவு அறிவித்தார்.

‘அர்ஜ் எனும் ஊருக்குப் பின் புறத்திலுள்ள நீரோடையின் ஓரத்தில் (உள்ள பள்ளிவாயிலில்) நபி(ஸல்) அவர்கள் தொழுவார்கள்’ என இப்னு உமர்(ரலி) என்னிடம் கூறினார்.

அர்ஜ் எனுமிடம் (மதீனாவிலிருந்து) ஹல்பா செல்லும் வழியில் அமைந்துள்ளது. பாதையின் வலப்புறம் அமைந்துள்ள அப்பள்ளிவாயிலினருகில் கற்கள் நாட்டப்பட்ட இரண்டு மூன்று அடக்கத்தலங்கள் உள்ளன. அப்பாதையிலிருந்து பல கிளைப் பாதைகளும் பிரிகின்றன. அக்கிளைப் பாதைகளில் ஒன்றில் அர்ஜ் எனும் ஊருக்குள் நுழைந்து (ஓடைக் கரையில் அமைந்துள்ள) அப்பள்ளி வாயிலில் சூரியன் சாய்ந்து நண்பகலானதும் இப்னு உமர்(ரலி) லுஹர் தொழுவார்கள்.
Book :8


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي طَرَفِ تَلْعَةٍ مِنْ وَرَاءِ العَرْجِ، وَأَنْتَ ذَاهِبٌ إِلَى هَضْبَةٍ عِنْدَ ذَلِكَ المَسْجِدِ قَبْرَانِ أَوْ ثَلاَثَةٌ، عَلَى القُبُورِ رَضَمٌ مِنْ حِجَارَةٍ، عَنْ يَمِينِ الطَّرِيقِ عِنْدَ سَلَمَاتِ الطَّرِيقِ بَيْنَ أُولَئِكَ السَّلَمَاتِ»
كَانَ عَبْدُ اللَّهِ يَرُوحُ مِنَ العَرْجِ، بَعْدَ أَنْ تَمِيلَ الشَّمْسُ بِالهَاجِرَةِ، فَيُصَلِّي الظُّهْرَ فِي ذَلِكَ المَسْجِدِ


Bukhari-487

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

487. நாஃபிவு அறிவித்தார்.

(மதீனாவிலிருந்து மக்கா) செல்லும் வழியில் வலப்புறம் அமைந்த ‘ருவைஸா’ எனும் சிற்றூருக்கு அருகிலுள்ள பெரிய மரத்தடியில் நபி(ஸல்) அவர்கள் இளைப்பாறுவார்கள். அவ்வூரினி எல்லையிலிருந்து இரண்டு மைல் தொலைவில் அம்மரம் இருந்தது. அம்மரத்தின் கிளைகள் முறிந்து போய் அடிமரம் மட்டும் உள்ளதுழூ அதன் நடுவில் பொந்து ஏற்பட்டிருந்தது. அதனருகே மணல் திட்டுக்கள் அனேகம் இருக்கின்றன. அந்த இடத்திலுள்ள மிருதுவான, விசாலமான திடலில்தான் நபி(ஸல்) அவர்கள் பயணத்தின்போது இளைப்பாறுவார்கள் என்று இப்னு உமர்(ரலி) என்னிடம் கூறினார்கள்.
Book :8


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَنْزِلُ تَحْتَ سَرْحَةٍ ضَخْمَةٍ دُونَ الرُّوَيْثَةِ، عَنْ يَمِينِ الطَّرِيقِ، وَوِجَاهَ الطَّرِيقِ فِي مَكَانٍ بَطْحٍ سَهْلٍ، حَتَّى يُفْضِيَ مِنْ أَكَمَةٍ دُوَيْنَ بَرِيدِ الرُّوَيْثَةِ بِمِيلَيْنِ، وَقَدِ انْكَسَرَ أَعْلاَهَا، فَانْثَنَى فِي جَوْفِهَا وَهِيَ قَائِمَةٌ عَلَى سَاقٍ، وَفِي سَاقِهَا كُثُبٌ كَثِيرَةٌ»


Bukhari-486

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

486. நாஃபிவு அறிவித்தார்.

(மதீனாவிலிருந்து மக்கா செல்லும் வழியில்) ரவ்ஹா எனுமிடம் உள்ளது. அவ்விடத்தில் ஒரு பள்ளிவாயில் இருக்கிறது. அப்பள்ளியிலிருந்து பாதையோரமாகப் பார்வை எட்டும் தொலைவின் இறுதியில் ‘இரக்’ எனும் பகுதி உள்ளது. அப்பகுதியில் இப்னு உமர்(ரலி) தொழுவார்கள். அந்த இடத்தில் பள்ளி ஒன்றும் கட்டப்பட்டிருந்தது. ஆயினும் அந்தப் பள்ளியில் இப்னு உமர்(ரலி) தொழுவதில்லை. தம் இடது புறத்தில் அந்தப் பள்ளிவாசல் இருக்குமாறும் அந்தப் பள்ளியை விட சற்று முன்னால் நின்றும் தொழுவார்கள். நபி(ஸல்) அவர்கள் அந்த இடத்தில் தொழுததால் இப்னு உமர்(ரலி) அவ்வாறு தொழுவார்கள்.

‘ரவ்ஹா’ எனும் இடத்திலிருந்து அவர்கள் புறப்பட்டு (மக்காவுக்கு) வரும்போது இரக்கை அடையுமுன் லுஹா தொழ மாட்டார்கள். இரக்குக்கு வந்து லுஹர் தொழுவார்கள். மக்காவிலிருந்து (மதினாவுக்குத்) திரும்பி வரும்போது ஸுபுஹுக்குச் சற்று முன்னதாக, அல்லது ஸஹர் நேரத்தின் கடைசியில் இரக்கைக் கடக்க நேர்ந்தால் அங்கேயே ஓய்வெடுத்துவிட்டு ஸுபுஹ் தொழுவார்கள்.
Book :8


كَانَ يُصَلِّي إِلَى العِرْقِ الَّذِي عِنْدَ مُنْصَرَفِ الرَّوْحَاءِ، وَذَلِكَ العِرْقُ انْتِهَاءُ طَرَفِهِ عَلَى حَافَةِ الطَّرِيقِ دُونَ المَسْجِدِ الَّذِي بَيْنَهُ وَبَيْنَ المُنْصَرَفِ، وَأَنْتَ ذَاهِبٌ إِلَى مَكَّةَ وَقَدِ ابْتُنِيَ ثَمَّ مَسْجِدٌ، فَلَمْ يَكُنْ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ يُصَلِّي فِي ذَلِكَ المَسْجِدِ، كَانَ يَتْرُكُهُ عَنْ يَسَارِهِ وَوَرَاءَهُ، وَيُصَلِّي أَمَامَهُ إِلَى العِرْقِ نَفْسِهِ، وَكَانَ عَبْدُ اللَّهِ يَرُوحُ مِنَ الرَّوْحَاءِ فَلاَ يُصَلِّي الظُّهْرَ حَتَّى يَأْتِيَ ذَلِكَ المَكَانَ، فَيُصَلِّي فِيهِ الظُّهْرَ، وَإِذَا أَقْبَلَ مِنْ مَكَّةَ، فَإِنْ مَرَّ بِهِ قَبْلَ الصُّبْحِ بِسَاعَةٍ أَوْ مِنْ آخِرِ السَّحَرِ عَرَّسَ حَتَّى يُصَلِّيَ بِهَا الصُّبْحَ


Bukhari-485

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

485. நாஃபிவு அறிவித்தார்.

‘நபி(ஸல்) அவர்கள் ஷரபுர்ரவ்ஹா எனும் இடத்திலுள்ள பெரிய பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள சின்னப் பள்ளிவாசல் இருக்கும் இடத்தில் தொழுதிருக்கிறார்கள்.’ என்று இப்னு உமர்(ரலி) என்னிடம் கூறிவிட்டு, அந்த இடத்தை அடையாளம் கூறும்போது ‘(நீ மதீனாவிலிருந்து) மக்கா செல்லும வழியில் பாதையின் வலப்புறம் அமைந்த பெரிய பள்ளியில் நீ கிப்லா பக்கம் நோக்கி நின்றால் அந்த இடம், உன் வலப்புறத்தில் இருக்கும். அந்த இடத்திற்கும் நபி(ஸல்) அவர்கள் தொழுத இடத்திற்கும் தூரம் உள்ளது என்று குறிப்பிட்டார்கள்.
Book :8


« أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى حَيْثُ المَسْجِدُ الصَّغِيرُ الَّذِي دُونَ المَسْجِدِ الَّذِي بِشَرَفِ الرَّوْحَاءِ، وَقَدْ كَانَ عَبْدُ اللَّهِ يَعْلَمُ المَكَانَ الَّذِي كَانَ صَلَّى فِيهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ثَمَّ عَنْ يَمِينِكَ حِينَ تَقُومُ فِي المَسْجِدِ تُصَلِّي، وَذَلِكَ المَسْجِدُ عَلَى حَافَةِ الطَّرِيقِ اليُمْنَى، وَأَنْتَ ذَاهِبٌ إِلَى مَكَّةَ بَيْنَهُ وَبَيْنَ المَسْجِدِ الأَكْبَرِ رَمْيَةٌ بِحَجَرٍ أَوْ نَحْوُ ذَلِكَ »


Bukhari-484

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

484. நாஃபிவு அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஹஜ், உம்ராவுக்காக மக்கள் செல்லும்போது ‘துல்ஹுலைஃபா’வில் பள்ளிவாசல் ஒன்று அமைந்துள்ள இடத்தில் இருந்த முள் மரத்தினடியில் இளைப்பாறுவார்கள். அந்த வழியாக ஹஜ்ஜு, உம்ரா மற்றும் போரிடுதல் போன்றவற்றுக்காகச் செல்லும்போது ‘பத்னுல்வாதீ’ என்ற பள்ளத்தாக்கு வழியாகப் புறப்பட்டு வந்து அந்தப் பள்ளதாக்கின் மேற்குப் புறஓரத்தில் ஒட்டகையைப் படுக்கச் செய்து ஸுபுஹ் வரை ஓய்வெடுப்பார்கள். ஓய்வெடுக்கும் அந்த இடம் பாறையில் அமைந்துள்ள பள்ளிவாசலும் இல்லை; பள்ளியின் அருகிலுள்ள மணற்குன்றுமில்லை என்று இப்னு உமர்(ரலி) குறிப்பிட்டார்கள்.

அங்கு பெரிய பள்ளம் ஒன்று இருந்தது. அவ்விடத்தில் இப்னு உமர்(ரலி) தொழுவார்கள். அதன் உட்புறத்தில் மணற் திட்டு இருந்தது. அங்கு நபி(ஸல்) அவர்கள் தொழுதிருக்கிறார்கள். தற்போது அந்தப் பள்ளத்திற்கு அருகிலிருந்த மணல் மேட்டைத் தண்ணீர் அரித்துக் கொண்டு வந்ததால் அது மூடப்பட்டுவிட்டது.
Book :8


كَانَ يَنْزِلُ بِذِي الحُلَيْفَةِ حِينَ يَعْتَمِرُ، وَفِي حَجَّتِهِ حِينَ حَجَّ تَحْتَ سَمُرَةٍ فِي مَوْضِعِ المَسْجِدِ الَّذِي بِذِي الحُلَيْفَةِ، وَكَانَ إِذَا رَجَعَ مِنْ غَزْوٍ كَانَ فِي تِلْكَ الطَّرِيقِ أَوْ حَجٍّ أَوْ عُمْرَةٍ هَبَطَ مِنْ بَطْنِ وَادٍ، فَإِذَا ظَهَرَ مِنْ بَطْنِ وَادٍ أَنَاخَ بِالْبَطْحَاءِ الَّتِي عَلَى شَفِيرِ الوَادِي الشَّرْقِيَّةِ، فَعَرَّسَ ثَمَّ حَتَّى يُصْبِحَ لَيْسَ عِنْدَ المَسْجِدِ الَّذِي بِحِجَارَةٍ وَلاَ عَلَى الأَكَمَةِ الَّتِي عَلَيْهَا المَسْجِدُ»، كَانَ ثَمَّ خَلِيجٌ يُصَلِّي عَبْدُ اللَّهِ عِنْدَهُ فِي بَطْنِهِ كُثُبٌ، كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَمَّ يُصَلِّي، فَدَحَا السَّيْلُ فِيهِ بِالْبَطْحَاءِ، حَتَّى دَفَنَ ذَلِكَ المَكَانَ، الَّذِي كَانَ عَبْدُ اللَّهِ يُصَلِّي فِيهِ


Bukhari-483

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 89

(மக்காவிலிருந்து) மதீனாவின் சாலைகளில் அமைந்துள்ள பள்ளிவாசல்களும், நபி (ஸல்) அவர்கள் தொழுத பல்வேறு இடங்களும்.

 483. மூஸா பின் உக்பா (ரஹ்) அறிவித்தார்.

ஸாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள், பாதையோரத்தில் அமைந்த சில இடங்களைத் தேர்ந்தெடுத்து அங்கே தொழுவார்கள். தம் தந்தை இப்னு உமர் (ரலி) அவ்விடங்களில் தொழுததாகவும், அவ்விடங்களில் நபி (ஸல்) தொழுததை அவரின் தந்தை பார்த்திருப்பதாகவும் குறிப்பிடுவார்கள்.

இப்னு உமர் (ரலி) அவ்விடங்களில் தொழுததாக நாஃபிஉ (ரஹ்) அவர்களும் என்னிடம் கூறினார்.

ஸாலிம் (ரஹ்), நாஃபி (ரஹ்) ஆகிய இருவரும் அனைத்து இடங்களைப் பற்றியும் ஒரே கருத்தைக் கூறினார்கள். என்றாலும் அவ்விருவரும் “ஷரஃபுர் ரவ்ஹா” என்ற இடத்தில் அமைந்த பள்ளி விஷயத்தில் மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தார்கள்.

அத்தியாயம்: 8


رَأَيْتُ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ يَتَحَرَّى أَمَاكِنَ مِنَ الطَّرِيقِ فَيُصَلِّي فِيهَا، وَيُحَدِّثُ أَنَّ أَبَاهُ كَانَ يُصَلِّي فِيهَا «وَأَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي تِلْكَ الأَمْكِنَةِ».

وَحَدَّثَنِي نَافِعٌ، عَنْ ابْنِ عُمَرَ أَنَّهُ كَانَ يُصَلِّي فِي تِلْكَ الأَمْكِنَةِ،

وَسَأَلْتُ سَالِمًا، فَلاَ أَعْلَمُهُ إِلَّا وَافَقَ نَافِعًا فِي الأَمْكِنَةِ كُلِّهَا إِلَّا أَنَّهُمَا اخْتَلَفَا فِي مَسْجِدٍ بِشَرَفِ الرَّوْحَاءِ


Next Page » « Previous Page