Author: Farook

Bukhari-482

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

482. அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் மாலை நேரத் தொழுகைகளில் ஒன்றை இரண்டு ரக்அத்களாக எங்களுக்குத் தொழுகை நடத்திவிட்டு ஸலாம் கொடுத்துவிட்டார்கள். பள்ளியில் நாட்டப்பட்டுள்ள மரத்தினருகே சென்று கோபமுற்றவர்களைப் போல் அதில் சாய்ந்தார்கள். தங்களின் வலது கரத்தை இடது கரத்தின் மேல் வைத்துக் கை விரல்களைக் கோர்த்தார்கள். தம் வலது கன்னத்தை இடக்கையின் மீது வைத்தார்கள். அவசரக் காரர்கள் பள்ளியின் பல வாயில்கள் வழியாக வெளிப்பட்டுத் ‘தொழுகை குறைக்கப்பட்டுவிட்டது’ என்று பேசிக் கொண்டார்கள்.

அபூபக்ரு (ரலி), உமர் (ரலி) ஆகியோர் அக்கூட்டத்திலிருந்தனர். (இது பற்றி) நபி (ஸல்) அவர்களிடம் கேட்க அஞ்சினார்கள். அந்தக் கூட்டத்தில் இரண்டு கைகளும் நீளமான ஒருவர் இருந்தார். துல்யதைன் (இரண்டு கைகள் நீளமானவர்) என்று அவர் குறிப்பிடப்படுவார். அவர் ‘இறைத்தூதர் அவர்களே! தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதோ? அல்லது தாங்கள் மறந்து விட்டீர்களா? என்று கேட்டார். ‘குறைக்கப்படவும் இல்லை. நான் மறக்கவுமில்லை’ என்று நபி (ஸல்) கூறிவிட்டு (மக்களை நோக்கி) ‘துல்யதைன் கூறுவது சரிதானா?’ என்று கேட்க ‘ஆம்’ என்றனர் மக்கள்.

(தொழுமிடத்திற்குச்) சென்று விடுபட்டதைத் தொழுது ஸலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் கூறி (தொழுகையில்

صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَى صَلاَتَيِ العَشِيِّ – قَالَ ابْنُ سِيرِينَ: سَمَّاهَا أَبُو هُرَيْرَةَ وَلَكِنْ نَسِيتُ أَنَا – قَالَ: فَصَلَّى بِنَا رَكْعَتَيْنِ، ثُمَّ سَلَّمَ، فَقَامَ إِلَى خَشَبَةٍ مَعْرُوضَةٍ فِي المَسْجِدِ، فَاتَّكَأَ عَلَيْهَا كَأَنَّهُ غَضْبَانُ، وَوَضَعَ يَدَهُ اليُمْنَى عَلَى اليُسْرَى، وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ، وَوَضَعَ خَدَّهُ الأَيْمَنَ عَلَى ظَهْرِ كَفِّهِ اليُسْرَى، وَخَرَجَتِ السَّرَعَانُ مِنْ أَبْوَابِ المَسْجِدِ، فَقَالُوا: قَصُرَتِ الصَّلاَةُ؟ وَفِي القَوْمِ أَبُو بَكْرٍ وَعُمَرُ، فَهَابَا أَنْ يُكَلِّمَاهُ، وَفِي القَوْمِ رَجُلٌ فِي يَدَيْهِ طُولٌ، يُقَالُ لَهُ: ذُو اليَدَيْنِ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَنَسِيتَ أَمْ قَصُرَتِ الصَّلاَةُ؟ قَالَ: «لَمْ أَنْسَ وَلَمْ تُقْصَرْ» فَقَالَ: «أَكَمَا يَقُولُ ذُو اليَدَيْنِ» فَقَالُوا: نَعَمْ، فَتَقَدَّمَ فَصَلَّى مَا تَرَكَ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ كَبَّرَ وَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَكَبَّرَ، ثُمَّ كَبَّرَ وَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَكَبَّرَ، فَرُبَّمَا سَأَلُوهُ: ثُمَّ سَلَّمَ؟ فَيَقُولُ: نُبِّئْتُ أَنَّ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ، قَالَ: ثُمَّ سَلَّمَ


Bukhari-481

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

481. ‘ஒரு கட்டிடத்தின் ஒரு பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்திக் கொண்டிருக்கிறதோ அது போன்றே ஒரு இறைநம்பிக்கையாளர் இன்னொரு இறைநம்பிக்கையாளர் விஷயத்தில் நடக்க வேண்டும்’ என்று நபி (ஸல்) கூறிவிட்டுத் தம் விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)

அத்தியாயம்: 8


«إِنَّ المُؤْمِنَ لِلْمُؤْمِنِ كَالْبُنْيَانِ يَشُدُّ بَعْضُهُ بَعْضًا» وَشَبَّكَ أَصَابِعَهُ


Bukhari-480

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

480. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தம் கைகளைக் கோர்த்துக் காட்டி) ‘அப்துல்லாஹ் இப்னு அம்ரே! மக்களில் மகா மட்டமானவர்களுடன் இப்படி நீ வாழ நேர்ந்தால் உன் நிலை என்னாகும்?’ என்று கேட்டார்கள்.
Book :8


«يَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو كَيْفَ بِكَ إِذَا بَقِيتَ فِي حُثَالَةٍ مِنَ النَّاسِ بِهَذَا»


Bukhari-479

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

479. இப்னு அம்ர் (ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கைவிரல்களையும் கோர்த்தார்கள்.
Book :8


«شَبَكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصَابِعَهُ»


Bukhari-478

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 88 பள்ளிவாசல் முதலியவற்றில் இரு கைவிரல்களை (ஒன்றுடனொன்றை) கோத்துக் கொள்வது (குற்றமன்று). 

478. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் தங்களின் இரண்டு கை விரல்களையும் கோர்த்தார்கள்.
Book : 8


«شَبَكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصَابِعَهُ»


Bukhari-477

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 87

கடைத்தெருவிலுள்ள பள்ளிவாசலில் தொழுவது.

கதவு மூடப்படும் ஒரு வீட்டுக்குள் அமைந்திருந்த பள்ளிவாசலில் இப்னு அவ்ன் (ரலி) அவர்கள் தொழுதார்கள். 

477. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஒருவர் தன்னுடைய வீட்டில் தொழுவதை விடவும் கடை வீதியில் தொழுவதை விடவும் ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு மதிப்பில் அதிகமானதாகும். உங்களில் ஒருவர் உளூச் செய்து, அதை அழகுறச் செய்து, தொழுகிற ஒரே நோக்கத்தில் பள்ளிவாசலுக்கு வந்தால் அவர் பள்ளிவாசலுக்கு வரும் வரை எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் அவருக்குப் படித்தரத்தை அல்லாஹ் உயர்த்துகிறான்; ஒரு பாவத்தை அவரைவிட்டு நீக்குகிறான். தொழுகையை எதிர் பார்த்து அவர் பள்ளிவாசலில் அமர்ந்திருக்கும்போது அவர் தொழுது கொண்டிருப்பவராகவே கருதப் படுகிறார். தொழுத இடத்திலேயே அவர் இருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். சிறு தொடக்கு மூலம் வானவர்களுக்கத் தொல்லை அளிக்காத வரையில் ‘இறைவா! இவரை மன்னித்து விடு! இறைவா இவருக்கு அருள் புரி!’ என்று வானவர்கள் கூறுகின்றனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 8


« صَلاَةُ الجَمِيعِ تَزِيدُ عَلَى صَلاَتِهِ فِي بَيْتِهِ، وَصَلاَتِهِ فِي سُوقِهِ، خَمْسًا وَعِشْرِينَ دَرَجَةً، فَإِنَّ أَحَدَكُمْ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ، وَأَتَى المَسْجِدَ، لاَ يُرِيدُ إِلَّا الصَّلاَةَ، لَمْ يَخْطُ خَطْوَةً إِلَّا رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً، وَحَطَّ عَنْهُ خَطِيئَةً، حَتَّى يَدْخُلَ المَسْجِدَ، وَإِذَا دَخَلَ المَسْجِدَ، كَانَ فِي صَلاَةٍ مَا كَانَتْ تَحْبِسُهُ، وَتُصَلِّي – يَعْنِي عَلَيْهِ المَلاَئِكَةُ – مَا دَامَ فِي مَجْلِسِهِ الَّذِي يُصَلِّي فِيهِ: اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ، مَا لَمْ يُحْدِثْ فِيهِ »


Bukhari-476

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 86

மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பாதையில் பள்ளிவாசல் அமையவேண்டும்.

இதுவே ஹஸன் பஸரீ (ரஹ்), அய்யூப் அஸ்ஸக்தியானீ (ரஹ்), மாலிக் (ரஹ்) ஆகியோரின் கருத்தாகும்.

 476. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

என் தாய் தந்தையர் எனக்கு விபரம் தெரிந்தது முதல் இஸ்லாத்தைக் கடைபிடிப்பவர்களாகவே இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் காலையிலும் மாலையிலும் எங்களிடம் வராமல் இருந்ததில்லை. பின்னர் ஒரு பள்ளி கட்ட வேண்டும் என்று அபூ பக்ரு அவர்களுக்குத் தோன்றியபோது தம் வீட்டின் வெளிப்புறத்தில் பள்ளி ஒன்றைக் கட்டினார்கள். அதில் தொழுது கொண்டும் குர்ஆனை ஓதிக் கொண்டுமிருப்பார்கள். இணை வைப்பவர்களின் பெண்களும் குழந்தைகளும் அவரை வியப்புடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அபூ பக்ரு மிகுதியாக அழுபவராக இருந்தார். குர்ஆனை ஓதும்போது அவரால் தம் கண்களைக் கட்டுப் படுத்திக் கொள்ள இயலாது. இணை வைக்கும் குறைஷிப் பிரமுகர்களுக்கு இது கலக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.
Book : 8


” لَمْ أَعْقِلْ أَبَوَيَّ إِلَّا وَهُمَا يَدِينَانِ الدِّينَ، وَلَمْ يَمُرَّ عَلَيْنَا يَوْمٌ إِلَّا يَأْتِينَا فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، طَرَفَيِ النَّهَارِ: بُكْرَةً وَعَشِيَّةً، ثُمَّ بَدَا لِأَبِي بَكْرٍ، فَابْتَنَى مَسْجِدًا بِفِنَاءِ دَارِهِ، فَكَانَ يُصَلِّي فِيهِ وَيَقْرَأُ القُرْآنَ، فَيَقِفُ عَلَيْهِ نِسَاءُ المُشْرِكِينَ وَأَبْنَاؤُهُمْ، يَعْجَبُونَ مِنْهُ وَيَنْظُرُونَ إِلَيْهِ، وَكَانَ أَبُو بَكْرٍ رَجُلًا بَكَّاءً، لاَ يَمْلِكُ عَيْنَيْهِ إِذَا قَرَأَ القُرْآنَ ، فَأَفْزَعَ ذَلِكَ أَشْرَافَ قُرَيْشٍ مِنَ المُشْرِكِينَ “


Bukhari-475

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 85 பள்ளிவாசலில் (ஓய்வெடுக்கும் போது) மல்லாந்து படுப்பதும் கால்களை நீட்டுவதும்.

 475. அப்துல்லாஹ் இப்னு ஸைத் இப்னி ஆஸிம்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு காலின் மேல் இன்னொரு காலைப் போட்டுக் கொண்டு பள்ளிவாசலில் மல்லாந்து படுத்திருந்ததை கண்டேன்.

உமர்(ரலி), உஸ்மான்(ரலி) ஆகியோரும் இவ்வாறு செய்பவர்களாக இருந்ததை ஸயீத் இப்னு அல்முஸய்யப் குறிப்பிடுகிறார்.
Book : 8


«رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسْتَلْقِيًا فِي المَسْجِدِ، وَاضِعًا إِحْدَى رِجْلَيْهِ عَلَى الأُخْرَى» وَعَنْ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، قَالَ: «كَانَ عُمَرُ، وَعُثْمَانُ يَفْعَلاَنِ ذَلِكَ»


Bukhari-474

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

474. அபூ வாகித் அல்லைஸீ அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருக்கும்போது மூன்று நபர்கள் வந்தனர். அவர்களில் இருவர் நபி(ஸல்) அவர்களை நோக்கி வந்தனர். ஒருவர் சென்றார். அந்த இருவரில் ஒருவர் (சபையில்) சிறிது இடைவெளியைக் கண்டு அங்கே உட்கார்ந்தார். மற்றவர் சபையினரின் பின்னால் உட்கார்ந்தார். நபி(ஸல்) அவர்கள் (சொல்ல வேண்டியவற்றைச் சொல்லி) முடித்தபோது, ‘அந்த மூவரைப் பற்றியும் நான் உங்களுக்குக் கூறட்டுமா?’ என்று கேட்டுவிட்டு ‘ஒருவர் அல்லாஹ்வின் பக்கம் நெருங்கினார்; அல்லாஹ்வும் அவரை நெருக்கமாக ஆக்கிக் கொண்டான். மற்றவர் வெட்கப் பட்டார்; அல்லாஹ்வும் அவர் விஷயத்தில் வெட்கப் பட்டான் (அதாவது அவரைக் கருணைக் கண் கொண்டு பார்க்கவில்லை) இன்னொருவரோ அலட்சியமாகச் சென்றார்) அல்லாஹ்வும் அவரை அலட்சியம் செய்துவிட்டான்’ என்று கூறினார்கள்.
Book :8


بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي المَسْجِدِ فَأَقْبَلَ ثَلاَثَةُ نَفَرٍ، فَأَقْبَلَ اثْنَانِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَذَهَبَ وَاحِدٌ، فَأَمَّا أَحَدُهُمَا، فَرَأَى فُرْجَةً فِي الحَلْقَةِ، فَجَلَسَ وَأَمَّا الآخَرُ فَجَلَسَ خَلْفَهُمْ، فَلَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” أَلاَ أُخْبِرُكُمْ عَنِ النَّفَرِ الثَّلاَثَةِ؟ أَمَّا أَحَدُهُمْ: فَأَوَى إِلَى اللَّهِ، فَآوَاهُ اللَّهُ، وَأَمَّا الآخَرُ: فَاسْتَحْيَا فَاسْتَحْيَا اللَّهُ مِنْهُ، وَأَمَّا الآخَرُ: فَأَعْرَضَ فَأَعْرَضَ اللَّهُ عَنْهُ “


Bukhari-473

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

473. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது ‘இரவுத் தொழுகை எவ்வாறு?’ என்று ஒருவர் கேட்டார். ‘இரண்டிரண்டாகத் தொழ வேண்டும். ஸுப்ஹை (தொழ முடியாத என்று) அஞ்சினால் ஒரு ரக்அத் தொழலாம். நீர் தொழுதது உமக்கு வித்ராக அமையும்’ என்று நபி(ஸல்) கூறினார்கள்.
Book :8


أَنَّ رَجُلًا، جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَخْطُبُ، فَقَالَ: كَيْفَ صَلاَةُ اللَّيْلِ؟ فَقَالَ: «مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيتَ الصُّبْحَ فَأَوْتِرْ بِوَاحِدَةٍ، تُوتِرُ لَكَ مَا قَدْ صَلَّيْتَ»


Next Page » « Previous Page