Author: Farook

Bukhari-472

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 84

பள்ளிவாசலில் அமர்வதும் வட்டமாக வீற்றிருப்பதும்.

 472. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் மேடை மீது இருக்கும்போது ‘இரவுத் தொழுகை பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று ஒருவர் கேட்டார். ‘இரண்டிரண்டாகத் தொழ வேண்டும். ஸுப்ஹை தொழ முடியாது என்று அஞ்சினால் ஒரு ரக்அத் தொழலாம். அவர் தொழுதது அவருக்கு வித்ராக அமையும். உங்களின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்! என்று நபி (ஸல்) கூறினார்கள்.
Book : 8


سَأَلَ رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى المِنْبَرِ، مَا تَرَى فِي صَلاَةِ اللَّيْلِ، قَالَ: «مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيَ الصُّبْحَ صَلَّى وَاحِدَةً، فَأَوْتَرَتْ لَهُ مَا صَلَّى» وَإِنَّهُ كَانَ يَقُولُ: اجْعَلُوا آخِرَ صَلاَتِكُمْ وِتْرًا، فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِهِ


Bukhari-471

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

471. கஃபு இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

இப்னு அபீ ஹத்ரத்(ரலி) அவர்களிடம் கொடுத்திருந்த கடனை நான் பள்ளி வாசலில் வைத்துக் கேட்டேன். எங்களிருவரின் குரல்கள் உயர்ந்தன. தங்களின் வீட்டில் இருந்த நபி(ஸல்) அவர்களும் இந்த சப்தத்தைக் கேட்டார்கள். உடனே தம் அறையின் திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்து ‘கஃப் இப்னு மாலிக்! கஃபே’ என்று கூப்பிட்டார்கள். இதோ வந்தேன்; இறைத்தூதர் அவர்களே! என்றேன். ‘பாதியைத் தள்ளுபடி செய்வீராக! என்பதைக் காட்டும் விதமாகச் சைகை செய்தார்கள். அவ்வாறே செய்கிறேன்; இறைத்தூதர் அவர்களே! என்று கூறினேன். (கடன் பெற்ற) இப்னு அபீ ஹத்ரத்(ரலி)யை நோக்கி ‘எழுவீராக! பாதியை நிறைவேற்றுவீராக!’ என்று நபி(ஸல்) கூறினார்கள்.
Book :8


أَنَّهُ تَقَاضَى ابْنَ أَبِي حَدْرَدٍ دَيْنًا لَهُ عَلَيْهِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي المَسْجِدِ، فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا حَتَّى سَمِعَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي بَيْتِهِ، فَخَرَجَ إِلَيْهِمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى كَشَفَ سِجْفَ حُجْرَتِهِ، وَنَادَى كَعْبَ بْنَ مَالِكٍ قَالَ: «يَا كَعْبُ» قَالَ: لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ، فَأَشَارَ بِيَدِهِ أَنْ ضَعِ الشَّطْرَ مِنْ دَيْنِكَ، قَالَ كَعْبٌ: قَدْ فَعَلْتُ يَا رَسُولَ اللَّهِ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قُمْ فَاقْضِهِ»


Bukhari-470

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 83 பள்ளிவாசலில் உரத்த குரலில் (வீண்பேச்சு) பேசுவது.

 470. ஸாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.

நான் பள்ளி வாசலில் நின்றிருந்தபோது ஒருவர் என் மீது சிறு கல்லை எறிந்தார். நான் திரும்பிப் பார்த்தபோது உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) நின்றிருந்தார்கள். ‘நீ சென்று (அதோ) அந்த இருவரையும் என்னிடம் அழைத்து வா!’ என்றார்கள். அவ்விருவரையும் அவர்களிடம் கூட்டிக் கொண்டு வந்தேன். நீங்கள் இருவரும் எங்கிருந்து வருகிறீர்கள்?’ என்று உமர்(ரலி) கேட்க, ‘நாங்கள் தாயிஃப் வாசிகள்’ என்று அவர்கள் கூறினர். ‘அல்லாஹ்வின் தூதருடைய பள்ளி வாசலில் சப்தங்களை நீங்கள் உயர்த்தியதற்காக நீங்கள் இவ்வூரைச் சேர்ந்தவர்களாக இருந்தால் உங்களிருவரையும் (சவுக்கால்) அடித்திருப்பேன்’ என்று உமர்(ரலி) கூறினார்.
Book : 8


كُنْتُ قَائِمًا فِي المَسْجِدِ فَحَصَبَنِي رَجُلٌ، فَنَظَرْتُ فَإِذَا عُمَرُ بْنُ الخَطَّابِ، فَقَالَ: اذْهَبْ فَأْتِنِي بِهَذَيْنِ، فَجِئْتُهُ بِهِمَا، قَالَ: مَنْ أَنْتُمَا – أَوْ مِنْ أَيْنَ أَنْتُمَا؟ – قَالاَ: مِنْ أَهْلِ الطَّائِفِ، قَالَ: «لَوْ كُنْتُمَا مِنْ أَهْلِ البَلَدِ لَأَوْجَعْتُكُمَا، تَرْفَعَانِ أَصْوَاتَكُمَا فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-469

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 82 இணைவைப்பாளர் பள்ளிவாசலில் நுழைவது.

 469. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

‘நஜ்து’ பிரதேசத்தை நோக்கிச் சிறிய குதிரைப் படை ஒன்றை நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் பனூ ஹனீஃபா என்ற கூட்டத்தைச் சேர்ந்த ஸுமாமா இப்னு அஸால் என்பவரைப் பிடித்து வந்து பள்ளிவாசலிலுள்ள ஒரு தூணில் கட்டி வைத்தார்கள்.
Book : 8


” بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْلًا قِبَلَ نَجْدٍ، فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ: ثُمَامَةُ بْنُ أُثَالٍ، فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي المَسْجِدِ “


Bukhari-468

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 81 கஅபாவுக்கும் இதர இறையாலயங்களுக்கும் கதவுகள் பூட்டுகள் அமைத்தல்.

இப்னு ஜுரைஜ் (அப்துல் மலிக் பின் அப்தில் அஸீஸ்-ரஹ்) அவர்கள் கூறியதாவது: என்னிடம் இப்னு அபீ முலைக்கா ஸுபைர் பின் அப்தில்லாஹ் அத்தைமீ (ரஹ்) அவர்கள், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களது பள்ளிவாசல்களையும் அவற்றின் கதவுகளையும் நீங்கள் பார்த்திருக்க வேண்டுமே! (அவற்றின் தூய்மையையும் உறுதியையும் கண்டு வியந்து போயிருப்பீர்கள்) என்றார்கள். 

468. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) (மக்காவை வெற்றி கொண்டு) மக்காவிற்கு வந்தபோது (கஅபாவின் சாவியை வைத்திருந்த உஸ்மான் இப்னு தல்ஹா(ரலி)வை அழைத்தனர். அவர் (கஅபாவின்) வாசலைத் திறந்தார். நபி(ஸல்) அவர்களும் பிலால்(ரலி), உஸாமாபின் ஸைத்(ரலி), உஸ்மான் இப்னு தல்ஹா(ரலி) ஆகியோரும் (உள்ளே) சென்று கதவை மூடிவிட்டனர். சிறிது நேரம் கழித்து வெளியே வந்தனர். நான்விரைந்து சென்று பிலால்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் அதில் தொழுதார்களா? என்று கேட்டேன். ‘தொழுதார்கள்’ என்று பிலால் கூறினார். எந்த இடத்தில்? என்று கேட்டதற்கு ‘இரண்டு தூண்களுக்கிடையே’ என்று கூறினார். எத்தனை ரக்அத்கள் தொழுதார்கள் என்று கேட்கத் தவறி விட்டேன்.
Book : 8


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدِمَ مَكَّةَ فَدَعَا عُثْمَانَ بْنَ طَلْحَةَ فَفَتَحَ البَابَ فَدَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِلاَلٌ وَأُسَامَةُ بْنُ زَيْدٍ وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ، ثُمَّ أَغْلَقَ البَابَ، فَلَبِثَ فِيهِ سَاعَةً، ثُمَّ خَرَجُوا» قَالَ ابْنُ عُمَرَ: فَبَدَرْتُ فَسَأَلْتُ بِلاَلًا فَقَالَ: صَلَّى فِيهِ، فَقُلْتُ: فِي أَيٍّ؟ قَالَ: بَيْنَ الأُسْطُوَانَتَيْنِ، قَالَ: ابْنُ عُمَرَ: فَذَهَبَ عَلَيَّ أَنْ أَسْأَلَهُ كَمْ صَلَّى


Bukhari-467

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

467. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் எந்த நோயினால் மரணமடைந்தார்களோ அந்த நோயின்போது தம் தலையில் ஒரு துணியால் கட்டுப் போட்டவர்களாக வெளியே வந்து மேடை மீது அமர்ந்து அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள். பின்பு ‘தம் உயிராலும் பொருளாலும் எனக்கு அபூ குஹாஃபாவின் மகன் அபூ பக்ரை விட வேறெவரும் பேருதவியாக இருக்கவில்லை.

எவரையேனும் உற்ற நண்பராக நான் ஏற்படுத்திக் கொள்வதென்றால் அபூ பக்ரையே ஏற்படுத்திக் கொள்வேன். என்றாலும் (தனிப்பட்ட உதவிகளுக்காக நேசிப்பதை விட) இஸ்லாமிய அடிப்படையிலான நேசமே சிறந்தது. அபூ பக்ரின் வழியைத் தவிர என்னிடம் வருவதற்காகப் பள்ளிவாசலிலுள்ள எல்லா வழிகளையும் அடைத்து விடுங்கள்!’ என்று கூறினார்கள்.
Book :8


خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ، عَاصِبٌ رَأْسَهُ بِخِرْقَةٍ، فَقَعَدَ عَلَى المِنْبَرِ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: «إِنَّهُ لَيْسَ مِنَ النَّاسِ أَحَدٌ أَمَنَّ عَلَيَّ فِي نَفْسِهِ وَمَالِهِ مِنْ أَبِي بكْرِ بْنِ أَبِي قُحَافَةَ، وَلَوْ كُنْتُ مُتَّخِذًا مِنَ النَّاسِ خَلِيلًا لاَتَّخَذْتُ أَبَا بَكْرٍ خَلِيلًا، وَلَكِنْ خُلَّةُ الإِسْلاَمِ أَفْضَلُ، سُدُّوا عَنِّي كُلَّ خَوْخَةٍ فِي هَذَا المَسْجِدِ، غَيْرَ خَوْخَةِ أَبِي بَكْرٍ»


Bukhari-466

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 80 பள்ளிவாசலில் நுழைவாயில் அமைப்பதும் நடைபாதை ஏற்படுத்துவதும்.

 466. அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு சொற்பொழிவில் ‘அல்லாஹ், தன்னிடம் உள்ளவை வேண்டுமா? இவ்வுலகம் வேண்டுமா? எனத் தேர்ந்ததெடுக்க ஓர் அடியாருக்குச் சுதந்திரம் அளித்தான். அந்த அடியார் அல்லாஹ்விடம் உள்ளதையே தேர்ந்தெடுத்தார்’ என்றார்கள்.

(இதைக் கேட்ட) அபூ பக்ரு(ரலி) அழலானார்கள். ‘இந்த பெரியவர் ஏன் அழுகிறார்? தன்னிடம் உள்ளது வேண்டுமா? இவ்வுலகம் வேண்டுமா என்று ஓர் அடியாருக்குச் சுதந்திரம் அளித்தபோது அந்த அடியார் இறைவனிடம் உள்ளதைத் தேர்ந்தெடுத்தால் அதற்காக அழ வேண்டுமா என்ன?’ என்று நான் மனதிற்குள் கூறிக் கொண்டேன். அந்த அடியார் நபி(ஸல்) அவர்கள் தாம். (தங்களின் மரணத்தையே அவ்வாறு குறிப்பிட்டார்கள் என்பதைப் பிறகு அறிந்து கொண்டேன்) அபூ பக்ரு(ரலி) எங்களை விட அறிவில் சிறந்தவராக இருந்தார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘அபூ பக்ரே! அழ வேண்டாம்! நட்பின் மூலமும் செல்வத்தின் மூலமும் மனிதர்களிலேயே எனக்குப் பேருதவியாக இருந்தவர் அபூ பக்ரு தான். என் உம்மத்தில் யாரையேனும் நான் உற்ற நண்பராக ஏற்றுக் கொள்வதென்றால் அபூ பக்ரையே ஏற்றிருப்பேன். என்றாலும் இஸ்லாம்

خَطَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ اللَّهَ خَيَّرَ عَبْدًا بَيْنَ الدُّنْيَا وَبَيْنَ مَا عِنْدَهُ فَاخْتَارَ مَا عِنْدَ اللَّهِ»، فَبَكَى أَبُو بَكْرٍ الصِّدِّيقُ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقُلْتُ فِي نَفْسِي مَا يُبْكِي هَذَا الشَّيْخَ؟ إِنْ يَكُنِ اللَّهُ خَيَّرَ عَبْدًا بَيْنَ الدُّنْيَا وَبَيْنَ مَا عِنْدَهُ، فَاخْتَارَ مَا عِنْدَ اللَّهِ، فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ العَبْدَ، وَكَانَ أَبُو بَكْرٍ أَعْلَمَنَا، قَالَ: «يَا أَبَا بَكْرٍ لاَ تَبْكِ، إِنَّ أَمَنَّ النَّاسِ عَلَيَّ فِي صُحْبَتِهِ وَمَالِهِ أَبُو بَكْرٍ، وَلَوْ كُنْتُ مُتَّخِذًا خَلِيلًا مِنْ أُمَّتِي لاَتَّخَذْتُ أَبَا بَكْرٍ، وَلَكِنْ أُخُوَّةُ الإِسْلاَمِ وَمَوَدَّتُهُ، لاَ يَبْقَيَنَّ فِي المَسْجِدِ بَابٌ إِلَّا سُدَّ، إِلَّا بَابُ أَبِي بَكْرٍ»


Bukhari-465

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 79 

465. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபித்தோழர்களில் இரண்டு மனிதர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து (பள்ளிவாசலைவிட்டும்) இருள் சூழ்ந்த இரவில் (தங்கள் இல்லங்களுக்கு) புறப்பட்டார்கள். அவ்விருவருக்கும் முன்னால் இரண்டு விளக்குகள் போன்று எதுவோ ஒளி வீசிக் கொண்டிருந்தது. (அவ்விருவரும் தத்தம் வழியில் பிரிந்து சென்ற போது) ஒவ்வொருவருடனும் விளக்குபோன்ற ஒன்று அவர்கள் தம் இல்லங்களை அடையும் வரை ஒளி வீசிக் கொண்டிருந்தது.
Book : 8


«أَنَّ رَجُلَيْنِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَا مِنْ عِنْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي لَيْلَةٍ مُظْلِمَةٍ، وَمَعَهُمَا مِثْلُ المِصْبَاحَيْنِ يُضِيئَانِ بَيْنَ أَيْدِيهِمَا، فَلَمَّا افْتَرَقَا صَارَ مَعَ كُلِّ وَاحِدٍ، مِنْهُمَا وَاحِدٌ حَتَّى أَتَى أَهْلَهُ»


Bukhari-464

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 78 தேவை நிமித்தம் ஒட்டகத்தை பள்ளிவாசலுக்குள் கொண்டுவருவது.

நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது (அமர்ந்தபடி இறையில்லம் கஅபாவைச்) சுற்றி (தவாஃப்) வந்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். 

464. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்.

என் உடல் நலக்குறைவு பற்றி நபி(ஸல்) அவர்களிடம நான் முறையிட்டபோது ‘ஜனங்களுக்குப் பின்னால் வாகனத்தில அமர்ந்து கொண்டு நீ தவாஃப் செய்து கொள்!’ என்று கூறினார்கள். நான் அவ்வாறு தவாஃப் செய்யும்போது நபி(ஸல்) அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமின் ஒரு பகுதியில் ‘தூர்’ என்ற அத்தியாயத்தை ஓதித் தொழுது கொண்டிருந்தார்கள்.
Book : 8


شَكَوْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي أَشْتَكِي قَالَ: «طُوفِي مِنْ وَرَاءِ النَّاسِ وَأَنْتِ رَاكِبَةٌ» فَطُفْتُ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي إِلَى جَنْبِ البَيْتِ يَقْرَأُ بِالطُّورِ وَكِتَابٍ مَسْطُورٍ


Bukhari-463

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 77 நோயாளிகளுக்காகவும் மற்றவர்களுக்காகவும் பள்ளிவாசலில் கூடாரம் அமைப்பது. 

463. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

அகழ்ப் போரின்போது ஸஃது இப்னு முஆத்(ரலி) கை நரம்பில் தாக்கப் பட்டார். அவரை அருகிலிருந்து நோய் விசாரிப்பதற்கு ஏற்பப் பள்ளிலேயே அவருக்குக் கூடாரம் ஒன்றை நபி(ஸல்) ஏற்படுத்தினார்கள். அதற்கு அருகில் கூடாரம் அமைந்திருந்த பனூ கிஃபார் குலத்தினருக்கு ஸஃதுடைய கூடாரத்திலிருந்து பாயும் இரத்தம் அச்சத்தை ஏற்படுத்தியது. ‘கூடார வாசிகளே! உங்கள் தரப்பிலிருந்து எங்களை நோக்கிப் பாய்கின்றதென்ன?’ என்று கேட்டுக் கொண்டு அங்கே பார்த்தபோது காயத்திலிருந்து இரத்தம் வடிய ஸஃது(ரலி) இருந்தார்கள். அந்தக் காயத்தினாலேயே மரணமும் அடைந்தார்கள்.
Book : 7


أُصِيبَ سَعْدٌ يَوْمَ الخَنْدَقِ فِي الأَكْحَلِ، «فَضَرَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْمَةً فِي المَسْجِدِ، لِيَعُودَهُ مِنْ قَرِيبٍ فَلَمْ يَرُعْهُمْ» وَفِي المَسْجِدِ خَيْمَةٌ مِنْ بَنِي غِفَارٍ، إِلَّا الدَّمُ يَسِيلُ إِلَيْهِمْ، فَقَالُوا: يَا أَهْلَ الخَيْمَةِ، مَا هَذَا الَّذِي يَأْتِينَا مِنْ قِبَلِكُمْ؟ فَإِذَا سَعْدٌ يَغْذُو جُرْحُهُ دَمًا، فَمَاتَ فِيهَا


Next Page » « Previous Page