Author: Farook

Bukhari-462

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 76 இஸ்லாத்தைத் தழுவும் போது குளிப்பதும், பள்ளிவாசலில் கைதியைக் கட்டிவைப்பதும்.

(கூஃபாவின் நீதிபதியாயிருந்த) ஷுரைஹ் பின் ஹர்ஸ் அல்கிந்தீ (ரஹ்) அவர்கள், குற்றவாளியைப் பள்ளிவாசலின் தூணில் கட்டிவைக்குமாறு ஆணையிடுவார்கள். 

462. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

‘நஜ்து’ பிரதேசத்தை நோக்கிச் சிறிய குதிரைப் படை ஒன்றை நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் பனூ ஹனீஃபா என்ற கூட்டத்தைச் சேர்ந்த ஸுமாமா இப்னு அஸால் என்பவரைப் பிடித்து வந்து பள்ளிவாசலிலுள்ள ஒரு தூணில் கட்டி வைத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி வந்து ‘ஸுமாமாவை அவிழ்த்து விடுங்கள்!’ என்றனர். அவர் பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த குட்டைக்குச் சென்று குளித்தார். பின்னர் பள்ளிவாசலுக்கு வந்து ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்று கூறினார்.
Book : 8


بَعَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْلًا قِبَلَ نَجْدٍ، فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ: ثُمَامَةُ بْنُ أُثَالٍ، فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي المَسْجِدِ، فَخَرَجَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَطْلِقُوا ثُمَامَةَ»، فَانْطَلَقَ إِلَى نَخْلٍ قَرِيبٍ مِنَ  المَسْجِدِ، فَاغْتَسَلَ، ثُمَّ دَخَلَ المَسْجِدَ، فَقَالَ: أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ


Bukhari-461

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 75 கைதிகளையும் குற்றவாளிகளையும் பள்ளிவாசலில் கட்டிவைப்பது.

 461. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘இஃப்ரீத் என்ற ஜின் நேற்றிரவு என் முன் திடீரெனத் தோன்றி என்தொழுகையைக் கெடுக்க முயன்றது. அதைப் பிடிப்பதற்கான சக்தியை இறைவன் எனக்கு வழங்கினான். காலையில் நீங்கள் அனைவரும் அதைக் காண வேண்டுமென இந்தப் பள்ளிவாசலிலுள்ள ஒரு தூணில் அதைக் கட்டி வைக்க எண்ணினேன். ‘இறைவா! எனக்குப் பின் வேறு எவருக்கும் நீ வழங்காத ஓர் ஆட்சியை எனக்கு நீ வழங்குவாயாக’ (திருக்குர்ஆன் 38:35) என்ற என் சகோதரர் ஸுலைமான் (அலை) அவர்களின் பிரார்த்தனை எனக்கு நினைவு வந்தால் அதை விரட்டி அடித்து விட்டேன்.’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 8


” إِنَّ عِفْرِيتًا مِنَ الجِنِّ تَفَلَّتَ عَلَيَّ البَارِحَةَ – أَوْ كَلِمَةً نَحْوَهَا – لِيَقْطَعَ عَلَيَّ الصَّلاَةَ، فَأَمْكَنَنِي اللَّهُ مِنْهُ، فَأَرَدْتُ أَنْ أَرْبِطَهُ إِلَى سَارِيَةٍ مِنْ سَوَارِي المَسْجِدِ حَتَّى تُصْبِحُوا وَتَنْظُرُوا إِلَيْهِ كُلُّكُمْ، فَذَكَرْتُ قَوْلَ أَخِي سُلَيْمَانَ: رَبِّ هَبْ لِي مُلْكًا لاَ يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي “


Bukhari-460

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 74

பள்ளிவாசலுக்கென சேவகர்கள் இருப்பது.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நேர்ந்து கொள்கிறேன் எனும் (3:35 ஆவது) வசனத்தி(ற்கு விளக்கமளிக்கையி)ல் இந்த மஸ்ஜிது (ல் அக்ஸா பள்ளிவாலு)க்கு சேவகம் செய்வதற்காக (நேர்ந்து கொள்கிறேன்) என்று கூறினார்கள்.

 460. அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

ஓர் ஆண் அல்லது பெண்மணி பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்தார். அவர் பெண்ணாகத்தான் இருக்க வேண்டும் என்று மேற்கூறிய செய்தியை அபூ ஹுரைரா (ரலி) குறிப்பிட்டார்கள்.
Book : 8


أَنَّ امْرَأَةً – أَوْ رَجُلًا – كَانَتْ تَقُمُّ المَسْجِدَ – وَلاَ أُرَاهُ إِلَّا امْرَأَةً – فَذَكَرَ حَدِيثَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَنَّهُ صَلَّى عَلَى قَبْرِهَا»


Bukhari-459

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 73 மதுபானங்கள் விற்பது விலக்கப்பட்டது (ஹராம்) என்று பள்ளிவாசலில் அறிவிப்பது. 

459. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

‘பகரா’ அத்தியாயத்தில் வட்டி (விலக்கப்பட்டது என்பது) பற்றிய வசனங்கள் இறங்கியபோது நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குச் சென்று மக்களுக்கு அவ்வசனங்களை ஓதிக் காட்டினார்கள். மதுபானங்கள் விற்பதும் விலக்கப்பட்டது என அறிவித்தார்கள்.
Book : 8


لَمَّا أُنْزِلَتِ الآيَاتُ مِنْ سُورَةِ البَقَرَةِ فِي الرِّبَا، «خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى المَسْجِدِ فَقَرَأَهُنَّ عَلَى النَّاسِ، ثُمَّ حَرَّمَ تِجَارَةَ الخَمْرِ»


Bukhari-458

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 72

பள்ளிவாசலைப் பெருக்குவதும் துண்டுத் துணிகள், குப்பை, குச்சிகள் (கிடந்தால் அவற்றைப்) பொறுக்கியெடுத்து (அப்புறப்படுத்தி)விடுவதும்.

 458. அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த ஒரு கறுத்த ஆண் அல்லது கறுத்த பெண்மணி இறந்துவிட்டார். அவரைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் விசாரித்தபோது அவர் இறந்துவிட்டதாகக் கூறினார்கள். ‘இதை (முன்பே) என்னிடம் நீங்கள் சொல்லியிருக்க வேண்டாமா? அவரின் அடக்கத் தலத்தை எனக்குக் காட்டுங்கள்! என்று நபி (ஸல்) கூறிவிட்டு அவரின் அடக்கத்தலத்துக்கு வந்து அவருக்கு (ஜனாஸா) தொழுகை நடத்தினார்கள்.
Book : 8


أَنَّ رَجُلًا أَسْوَدَ أَوِ امْرَأَةً سَوْدَاءَ كَانَ يَقُمُّ المَسْجِدَ فَمَاتَ، فَسَأَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْهُ، فَقَالُوا: مَاتَ، قَالَ: «أَفَلاَ كُنْتُمْ آذَنْتُمُونِي بِهِ دُلُّونِي عَلَى قَبْرِهِ – أَوْ قَالَ قَبْرِهَا – فَأَتَى قَبْرَهَا فَصَلَّى عَلَيْهَا»


Bukhari-457

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 71 (பள்ளி வாசலுக்குள் கடனாளியிடம்) கடனைக் கேட்பதும், அதைத் திருப்பித் தருமாறு கட்டாயப்படுத்துவதும்.

 457. கஃபு இப்னு மாலிக்ரலி) அறிவித்தார்.

இப்னு அபீ ஹத்ரத்(ரலி) அவர்களிடம் கொடுத்திருந்த கடனை நான் பள்ளிவாசலில் வைத்துக் கேட்டேன். எங்களிருவரின் குரல்கள் உயர்ந்தன. தங்களின் வீட்டில் இருந்த நபி(ஸல்) அவர்களும் இந்தச் சப்தத்தைக் கேட்டார்கள். உடனே தம் அறையின் திரையை விலக்கிக் கொண்டு வெளியே வந்து ‘கஃபே!’ என்று கூப்பிட்டார்கள். ‘இதோ வந்தேன்; இறைத்தூதர் அவர்களே!’ என்றேன். ‘பாதி’ என்பதைக் காட்டும் விதமாகச் சைகை மூலம் காட்டி ‘உம்முடைய கடனில் இவ்வளவைத் தள்ளுபடி செய்வீராக!’ என்று கூறினார்கள். ‘அவ்வாறே செய்கிறேன்; அல்லாஹ்வின்தூதரே!’ என்று கூறினேன். (கடன் பெற்ற) இப்னு அபீ ஹத்ரத்(ரலி) அவர்களிடம் ‘எழுவிராக! பாதியை நிறைவேற்றுவீராக!’ என்று நபி(ஸல்) கூறினார்கள்.
Book : 8


أَنَّهُ تَقَاضَى ابْنَ أَبِي حَدْرَدٍ دَيْنًا كَانَ لَهُ عَلَيْهِ فِي المَسْجِدِ، فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا حَتَّى سَمِعَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي بَيْتِهِ، فَخَرَجَ إِلَيْهِمَا حَتَّى كَشَفَ سِجْفَ حُجْرَتِهِ، فَنَادَى: «يَا كَعْبُ» قَالَ: لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «ضَعْ مِنْ دَيْنِكَ هَذَا» وَأَوْمَأَ إِلَيْهِ: أَيِ الشَّطْرَ، قَالَ: لَقَدْ فَعَلْتُ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «قُمْ فَاقْضِهِ»


Bukhari-456

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 70 பள்ளிவாசலில் உள்ள சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி விற்பது வாங்குவது பற்றிப் பேசுவது.

 456. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

அடிமையாக இருந்த பரீரா(ரலி) என்ற பெண்மணி, (தங்களின் எஜமானர்களுக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து) விடுதலைப் பத்திரம் எழுதிக் கொள்வதற்காக என் உதவியை நாடினார். அதற்கு ‘நீ விரும்பினால் உன் எஜமானருக்குரியதை நானே கொடுத்து விடுகிறேன் (உன் மரணத்திற்குப் பின் வாரிசாவது போன்ற) உரிமை எனக்கு வர வேண்டும்’ என்று கூறினேன்.

ஆனால் அப்பெண்ணின் எஜமானர்கள் என்னிடம ‘நீங்கள் விரும்பினால் பரீரா தர வேண்டியதைத்தந்து (நீங்கள் விடுதலை செய்து) கொள்ளலாம். ஆனால் உரிமை எங்களுக்கு வர வேண்டும்’ என்று கூறினார்கள்.

இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் நான் கூறியபோது ‘நீ அவளை விலை கொடுத்து வாங்கி விடுதலை செய்து விடு! விடுதலை செய்தவருக்கே உரிமையுண்டு’ என்று கூறிவிட்டு மேடை மீது ஏறி ‘அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிப்பவர்களுக்கு என்ன வந்துவிட்டது?’ அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கிறவர், நூறு முறை அந்த நிபந்தனையை வலியுறுத்தினாலும் அதற்கான உரிமை அவருக்கு இல்லை’ என்று கூறினார்கள்.
Book : 8


أَتَتْهَا بَرِيرَةُ تَسْأَلُهَا فِي كِتَابَتِهَا، فَقَالَتْ: إِنْ شِئْتِ أَعْطَيْتُ أَهْلَكِ وَيَكُونُ الوَلاَءُ لِي، وَقَالَ أَهْلُهَا: إِنْ شِئْتِ أَعْطَيْتِهَا مَا بَقِيَ – وَقَالَ سُفْيَانُ مَرَّةً: إِنْ شِئْتِ أَعْتَقْتِهَا، وَيَكُونُ الوَلاَءُ لَنَا – فَلَمَّا جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَّرَتْهُ ذَلِكَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ابْتَاعِيهَا فَأَعْتِقِيهَا، فَإِنَّ الوَلاَءَ لِمَنْ أَعْتَقَ» ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى المِنْبَرِ – وَقَالَ سُفْيَانُ مَرَّةً: فَصَعِدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى المِنْبَرِ – فَقَالَ: «مَا بَالُ أَقْوَامٍ يَشْتَرِطُونَ شُرُوطًا، لَيْسَ فِي كِتَابِ اللَّهِ مَنِ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ، فَلَيْسَ لَهُ، وَإِنِ اشْتَرَطَ مِائَةَ مَرَّةٍ»،


Bukhari-455

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

455. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

அபீ ஸீனியர்கள் தங்கள் ஈட்டிகளின் மூலம் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது அதனருகில் நபி(ஸல்) அவர்கள் இருக்க பார்த்திருக்கிறேன்.
Book :8


«رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالحَبَشَةُ يَلْعَبُونَ بِحِرَابِهِمْ»


Bukhari-454

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 69 பள்ளிவாசலில் ஈட்டி வீரர்கள் (வீர விளையாட்டுகளில் ஈடுபடுவது). 

454. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

அபூ ஸீனிய(வீர)ர்கள் பள்ளியில் (வீர) விளையாட்டு விளையாடும்போது, என் அறை வாசலில் நபி(ஸல்) அவர்கள் தங்களின் மேலாடையால் என்னை மறைத்த நிலையில் (வீர) விளையாட்டை பார்த்துக் கொண்டிருந்தேன்.
Book : 8


«لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا عَلَى بَابِ حُجْرَتِي وَالحَبَشَةُ يَلْعَبُونَ فِي المَسْجِدِ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتُرُنِي بِرِدَائِهِ، أَنْظُرُ إِلَى لَعِبِهِمْ»


Bukhari-453

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 68 பள்ளிவாச-ல் கவிபாடுதல்.

 453. அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்பின் அவ்ஃப் அறிவித்தார்.

ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடம் ‘அபூ ஹுரைராவே! அல்லாஹ்வை முன்னிறுத்தி நான் உம்மிடம் கேட்கிறேன். நபியவர்கள், ‘ஹஸ்ஸானே! இறைத்தூதர் சார்பாக நீர் அவர்களுக்கு (உம் கவிதை மூலம்) பதிலளிப்பீராக!’ என்றும் (இறைவா! ஹஸ்ஸானை ஜிப்ரீல்(அலை) மூலம் வலுப்படுத்துவாயாக!’ என்றும் கூறியதை நீர் செவியுற்றீர் அல்லவா?’ என்று கேட்டபோது அபூ ஹுரைரா(ரலி) ‘ஆம்’ என்றனர்.
Book : 8


أَنَّهُ سَمِعَ حَسَّانَ بْنَ ثَابِتٍ الأَنْصَارِيَّ، يَسْتَشْهِدُ أَبَا هُرَيْرَةَ: أَنْشُدُكَ اللَّهَ، هَلْ سَمِعْتَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «يَا حَسَّانُ، أَجِبْ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، اللَّهُمَّ أَيِّدْهُ بِرُوحِ القُدُسِ» قَالَ أَبُو هُرَيْرَةَ: نَعَمْ


Next Page » « Previous Page