Author: Farook

Bukhari-452

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 67 (அம்பின் முனையைப் பிடித்துக் கொண்டு) பள்ளிவாசலைக் கடந்து செல்லலாம்.

 452. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘அம்புடன் நம்முடைய பள்ளிவாயில்களிலோ கடை வீதிகளிலோ நடப்பவர்கள் அம்பின் முனைப் பகுதியைப் பிடித்துக் கொள்ள வேண்டும். தம் கையால் எந்த விசுவாசியையும் காயப்படுத்தலாகாது.’ என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
Book : 8


«مَنْ مَرَّ فِي شَيْءٍ مِنْ مَسَاجِدِنَا أَوْ أَسْوَاقِنَا بِنَبْلٍ، فَلْيَأْخُذْ عَلَى نِصَالِهَا، لاَ يَعْقِرْ بِكَفِّهِ مُسْلِمًا»


Bukhari-451

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 66 பள்ளியினுள் செல்லும் போது (கையில் அம்புகளை வைத்திருப்பவர்) அம்பின் முனைப் பகுதியை பிடித்துக் கொள்ள வேண்டும்.

 451. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
ஒருவர் அம்பை எடுத்துக் கொண்டு பள்ளியில் நடந்ததைப் பார்த்த நபி(ஸல்) அவர்கள் ‘அதன் (கூரான) முனைப் பகுதியைப் பிடித்துக் கொள்வீராக!’ என்று கூறினார்கள்.
Book : 8


مَرَّ رَجُلٌ فِي المَسْجِدِ وَمَعَهُ سِهَامٌ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمْسِكْ بِنِصَالِهَا»؟


Bukhari-450

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 65

பள்ளிவாசல் கட்டியவர் (அடையப் பெறும் வெகுமதிகள்).

 450. உபைதுல்லாஹ் அல் கவ்லானி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் (ரலி) அவர்கள் பள்ளியை விரிவுபடுத்தியபோது ‘நீங்கள் மிகவும் விரிவு படுத்தி விட்டீர்கள்’ என்று மக்கள் அவர்களிடம் ஆட்சேபனை செய்தார்கள். அதற்கு ‘அல்லாஹ்வின் திருமுகத்தை நாடி, பள்ளிவாசல் ஒன்றைக் கட்டியவர் அது போன்ற ஒன்றைச் சுவர்க்கத்தில் அவருக்காக அல்லாஹ் கட்டுகிறான்’ என்று நபி (ஸல்) கூற செவியுற்றுள்ளேன்’ என உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்.

அத்தியாயம்: 8


أَنَّهُ سَمِعَ عُثْمَانَ بْنَ عَفَّانَ، يَقُولُ عِنْدَ قَوْلِ النَّاسِ فِيهِ حِينَ بَنَى مَسْجِدَ الرَّسُولِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّكُمْ أَكْثَرْتُمْ، وَإِنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” مَنْ بَنَى مَسْجِدًا – قَالَ بُكَيْرٌ: حَسِبْتُ أَنَّهُ قَالَ: يَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ – بَنَى اللَّهُ لَهُ مِثْلَهُ  فِي الجَنَّةِ “


Bukhari-449

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

449. ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் உட்கார்ந்து கொள்வதற்காக ஒரு மேடையை உங்களுக்குச் செய்து தரட்டுமா? என்னிடம் தச்சு வேலை தெரிந்த ஊழியர் ஒருவர் இருக்கிறார்.’ என்று ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘நீ விரும்பினால் செய்து தா!’ என்றனர். அப்பெண் மேடை செய்து கொடுத்தார்.
Book :8


أَنَّ امْرَأَةً قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ أَلاَ أَجْعَلُ لَكَ شَيْئًا تَقْعُدُ عَلَيْهِ، فَإِنَّ لِي غُلاَمًا نَجَّارًا؟ قَالَ: «إِنْ شِئْتِ» فَعَمِلَتِ المِنْبَرَ


Bukhari-448

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 64 சொற்பொழிவு மேடை (மிம்பர்) செய்வதற்கும் பள்ளிவாசல் கட்டுவதற்கும் தச்சர்கள் மற்றும் (தொழிற்) கலைஞர்களின் உதவியை நாடுதல். 

448. ஸஹ்ல்(ரலி) அறிவித்தார்.

‘நான் உட்கார்ந்து கொள்வதற்காக எனக்கு மரத்தினால் மேடையைச் செய்து தருமாறு உன்னுடைய ஊழியரிடம் கூறு’ என்று ஒரு பெண்ணுக்கு நபி(ஸல்) அவர்கள் சொல்லியனுப்பினார்கள்.
Book : 8


بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى امْرَأَةٍ: «مُرِي غُلاَمَكِ النَّجَّارَ، يَعْمَلْ لِي أَعْوَادًا، أَجْلِسُ عَلَيْهِنَّ»


Bukhari-447

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 63 பள்ளிவாசல் கட்டும் பணியில் ஒருவருக் கொருவர் ஒத்துழைப்பது.

(அல்லாஹ் கூறுகின்றான்:) குஃப்ரின் மீது தாங்களே சாட்சியம் சொல்லிக் கொண்டிருக்கும், இந்த இணை வைப்பாளர்களுக்கு அல்லாஹ்வின் மஸ்ஜிது களைப் பரிபாலனம் செய்ய உரிமையில்லை; அவர்களுடைய (நற்) கருமங்கள் (யாவும் பலன் தராது) அழிந்து விட்டன – அவர்கள் என்றென்றும் நரகத்தில் தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக் கூடியவர்கள்; அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள்மீதும் நம்பிக்கை கொண்டு தொழுகையைக் கடைபிடித்து ஸகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம், இத்தகையவர்தாம் நிச்சயமாக நேர்வழி பெற்றவர்களில் ஆவார்கள். (9:17,18) 

447. இக்ரிமா அறிவித்தார்.
இப்னு அப்பாஸ்(ரலி) என்னிடமும் அவர் மகன் அலியிடமும் ‘நீங்களிருவரும் அபூ ஸயீத்(ரலி) அவர்களிடம் சென்று அவர் அறிவிக்கும் செய்தியைச் செவிமடுத்து வாருங்கள்!’ எனக் கூறினார்கள். நாங்கள் சென்றோம். அபூ ஸயீத்(ரலி) தங்களின் தோட்டத்தைச் சரி செய்து கொண்டிருந்தார்கள். (எங்களைக் கண்டதும் தங்களின் மேலாடையைப் போர்த்திக் கொண்டு (பல செய்திகளை) எங்களுக்குக் கூறலானார்கள். பள்ளிவாசல் கட்டப்பட்ட செய்தியைக் கூறும்போது ‘நாங்கள் ஒவ்வொரு

انْطَلِقَا إِلَى أَبِي سَعِيدٍ فَاسْمَعَا مِنْ حَدِيثِهِ، فَانْطَلَقْنَا فَإِذَا هُوَ فِي حَائِطٍ يُصْلِحُهُ، فَأَخَذَ رِدَاءَهُ فَاحْتَبَى، ثُمَّ أَنْشَأَ يُحَدِّثُنَا حَتَّى أَتَى ذِكْرُ بِنَاءِ المَسْجِدِ، فَقَالَ: كُنَّا نَحْمِلُ لَبِنَةً لَبِنَةً وَعَمَّارٌ لَبِنَتَيْنِ لَبِنَتَيْنِ، فَرَآهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَنْفُضُ التُّرَابَ عَنْهُ، وَيَقُولُ: «وَيْحَ عَمَّارٍ، تَقْتُلُهُ الفِئَةُ البَاغِيَةُ، يَدْعُوهُمْ إِلَى الجَنَّةِ، وَيَدْعُونَهُ إِلَى النَّارِ» قَالَ: يَقُولُ عَمَّارٌ: أَعُوذُ بِاللَّهِ مِنَ الفِتَنِ “


Bukhari-446

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 62 மஸ்ஜிதுந்நபவீ பள்ளிவாசலின் கட்டுமானம்.

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களது (காலத்தில் மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் மேற்கூரை பேரீச்சமர ஓலைகளால் (வேயப்பட்டதாக) இருந்தது.

உமர் (ரலி) அவர்களே (தமது ஆட்சிக் காலத்தில்) பள்ளிவாசலை (விரி வாக்கிக்) கட்டும்படி உத்தரவிட்டார்கள். (கட்டடப் பணி நடைபெறும் போது) மக்களை மழை நீரிலிருந்து பாதுகாக்கும் விதமாகக் கட்டுவீராக! சிவப்பு வர்ணமோ மஞ்சள் வர்ணமோ தீட்டவேண்டாமென உன்னை நான் எச்சரிக்கிறேன். அதனால் மக்களின் கவனம் திசை திரும்பிவிடக்கூடும் என்று (கட்டடப் பணியாளரிடம்) உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு காலம் வரும். அக்காலத்தில்) பள்ளி வாசல்களின் மூலம் மக்கள் பெருமையடித் துக் கொள்வார்கள். (வணக்க வழிபாடுகள் மூலம்) அவற்றை மிகக் குறைவாகவே புழங்குவார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: யூத, கிறிஸ்தவர்கள் (தங்கள் ஆலயங்களை) அலங்கரித்தது போன்றே நீங்கள் பள்ளிவாசல்களை அலங்கரிக்கிறீர்கள் என்பது மட்டும் உறுதி. 

446. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ‘மஸ்ஜிதுன்னபி’யுடைய சுவர்கள்

” أَنَّ المَسْجِدَ كَانَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَبْنِيًّا بِاللَّبِنِ، وَسَقْفُهُ الجَرِيدُ، وَعُمُدُهُ خَشَبُ النَّخْلِ، فَلَمْ يَزِدْ فِيهِ أَبُو بَكْرٍ شَيْئًا، وَزَادَ فِيهِ عُمَرُ: وَبَنَاهُ عَلَى بُنْيَانِهِ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّبِنِ وَالجَرِيدِ وَأَعَادَ عُمُدَهُ خَشَبًا، ثُمَّ غَيَّرَهُ عُثْمَانُ فَزَادَ فِيهِ زِيَادَةً كَثِيرَةً: وَبَنَى جِدَارَهُ بِالحِجَارَةِ المَنْقُوشَةِ، وَالقَصَّةِ وَجَعَلَ عُمُدَهُ مِنْ حِجَارَةٍ مَنْقُوشَةٍ وَسَقَفَهُ بِالسَّاجِ “


Bukhari-445

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 61 பள்ளி வாசலில் இருக்கும் போது (உளூவை முறிக்கக் கூடிய) சிறுதுடக்கு ஏற்படுதல். 

445. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘ஒருவர் எந்த இடத்தில் தொழுதாரோ அந்த இடத்திலேயே அமர்ந்திருக்கும்போது அவருக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால் உளூ முறிந்து விடாமலிருக்க வேண்டும். ‘இறைவா! இவரை மன்னித்து விடு! இறைவா! இவருக்கு அருள் புரி!’ என்று கூறுகிறார்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 8


« المَلاَئِكَةُ تُصَلِّي عَلَى أَحَدِكُمْ مَا دَامَ فِي مُصَلَّاهُ الَّذِي صَلَّى فِيهِ، مَا لَمْ يُحْدِثْ، تَقُولُ: اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ »


Bukhari-444

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 60 பள்ளிவாசலுக்குச் சென்றதும் இரண்டு ரக்அத்கள் தொழுவீராக.

 444. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘உங்களில் எவரும் பள்ளிவாசலுக்குச் சென்றால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்!’ என அபூ கதாதா(ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 8


«إِذَا دَخَلَ أَحَدُكُمُ المَسْجِدَ فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ قَبْلَ أَنْ يَجْلِسَ»


Bukhari-443

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 59 பயணத்திலிருந்து திரும்பியதும் தொழுவது.

நபி (ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து திரும்பியதும் முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுவது வழக்கம் என கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். 

443. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருக்கும்போது நான் அவர்களிடம் வந்தேன். ‘இரண்டு ரக்அத் தொழுவீராக!’ என்று கூறினார்கள். எனக்கு நபி(ஸல்) தர வேண்டிய கடன் ஒன்றும் இருந்தது. அந்தக் கடனை திருப்பி தந்ததுடன் மேலதிகமாகவும் தந்தார்கள்.

(இந்த ஹதீஸின் மூன்றாவது அறிவிப்பாளரான) மிஸ்அர் ‘முற்பகல் நேரத்தில் வந்தேன்’ என்று ஜாபிர்(ரலி) கூறினார் எனக் குறிப்பிடுகிறார்.
Book : 8


أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي المَسْجِدِ – قَالَ مِسْعَرٌ: أُرَاهُ قَالَ: ضُحًى – فَقَالَ: «صَلِّ رَكْعَتَيْنِ» وَكَانَ لِي عَلَيْهِ دَيْنٌ فَقَضَانِي وَزَادَنِي


Next Page » « Previous Page