Author: Farook

Bukhari-422

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 43 பள்ளிவாசலுக்குள் வைத்து ஒருவர் (மற்றவரை) விருந்துக்கு அழைப்பதும், பள்ளிவாசலிலேயே அதை ஏற்றுக் கொள்வதும் (குற்றமல்ல).

 422. அனஸ்(ரலி) அறிவித்தார்.

பள்ளிவாசலில் சில மக்களுடன் நபி(ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தனர். நான் (அவர்களை நோக்கி) எழுந்து சென்றேன். ‘உம்மை அபூ தல்ஹா அனுப்பினாரா?’ என்று நபி(ஸல்) கேட்க நான் ‘ஆம்’ என்றேன். ‘விருந்துக்கா?’ என்று அவர்கள் கேட்க நான் ‘ஆம்’ என்றேன். தம்முடன் இருந்தவர்களை நோக்கி ‘எழுந்திருங்கள்!’ என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்கள் நடந்தார்கள். நானும் அவர்களுடன் நடந்தேன்.
Book : 8


وَجَدْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي المَسْجِدِ مَعَهُ نَاسٌ، فَقُمْتُ فَقَالَ لِي: «آرْسَلَكَ أَبُو طَلْحَةَ؟»، قُلْتُ: نَعَمْ، فَقَالَ: «لِطَعَامٍ»، قُلْتُ: نَعَمْ، فَقَالَ: «لِمَنْ مَعَهُ قُومُوا، فَانْطَلَقَ وَانْطَلَقْتُ بَيْنَ أَيْدِيهِمْ»


Bukhari-421

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 42 பள்ளிவாசலுக்குள் காசு பணங்களைப் பங்கீடு (தானம்) செய்வதும், பழக்குலை களைப் தொங்கவிடுவதும் (செல்லும்).

அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்: அல்கின்வு எனும் சொல்லுக்கு, பழக் குலை என்று பொருள். இருமை : கின்வானி. இதன் பன்மை கின்வான் என்பதேயாகும். (வாய்பாட்டில்) ஸின்வ், ஸின்வானி எனும் சொற்களைப் போன்றே (இதுவும் அமைந்துள்ளது). 

421. அனஸ்(ரலி) அறிவித்தார்.

பஹ்ரைன் நாட்டிலிருந்து சில பொருள்கள் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டன. ‘அவற்றைப் பள்ளிவாசலிலேயே கொட்டுங்கள்!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்ட பொருட்களிலேயே அதுதான் மிக அதிக அளவாக இருந்தது. அதற்கு எந்த மதிப்புமளிக்காமல் நபி(ஸல்) அவர்கள் தொழச் சென்றார்கள். தொழுது முடிந்ததும் அப்பொருட்களின் அருகில் அமர்ந்து கொண்டு காண்பவர்களுக்கெல்லாம் வழங்கி கொண்டிருந்தார்கள்.

அப்போது நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தை அப்பாஸ்(ரலி) வந்து ‘இறைத்தூதர் அவர்களே! (பத்ருப் போரில் முஸ்லிம்களால் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட) நானும் (என் சகோதரர் அபூ தாலிபுடைய மகன்) அகீலும் விடுதலை பெறுவதற்காக (நான் பெறும் தொகையை)ப் பணயமாக வழங்கியுள்ளேன். எனவே எனக்கு (தாராளமாக) வழங்குங்கள்!’

أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَالٍ مِنَ البَحْرَيْنِ، فَقَالَ: «انْثُرُوهُ فِي المَسْجِدِ» وَكَانَ أَكْثَرَ مَالٍ أُتِيَ بِهِ رَسُولُ اللَّهِ  صلّى الله عليه وسلم، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الصَّلاَةِ وَلَمْ يَلْتَفِتْ إِلَيْهِ، فَلَمَّا قَضَى الصَّلاَةَ جَاءَ فَجَلَسَ إِلَيْهِ، فَمَا كَانَ يَرَى أَحَدًا إِلَّا أَعْطَاهُ، إِذْ جَاءَهُ العَبَّاسُ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ: أَعْطِنِي، فَإِنِّي فَادَيْتُ نَفْسِي وَفَادَيْتُ عَقِيلًا، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُذْ» فَحَثَا فِي ثَوْبِهِ، ثُمَّ ذَهَبَ يُقِلُّهُ فَلَمْ يَسْتَطِعْ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، اؤْمُرْ بَعْضَهُمْ يَرْفَعْهُ إِلَيَّ، قَالَ: «لاَ» قَالَ: فَارْفَعْهُ أَنْتَ عَلَيَّ، قَالَ: «لاَ» فَنَثَرَ مِنْهُ، ثُمَّ ذَهَبَ يُقِلُّهُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، اؤْمُرْ بَعْضَهُمْ يَرْفَعْهُ عَلَيَّ، قَالَ: «لاَ» قَالَ: فَارْفَعْهُ أَنْتَ عَلَيَّ، قَالَ: «لاَ» فَنَثَرَ مِنْهُ، ثُمَّ احْتَمَلَهُ، فَأَلْقَاهُ عَلَى كَاهِلِهِ، ثُمَّ انْطَلَقَ، فَمَا زَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُتْبِعُهُ بَصَرَهُ حَتَّى خَفِيَ عَلَيْنَا – عَجَبًا مِنْ حِرْصِهِ – فَمَا قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَثَمَّ مِنْهَا دِرْهَمٌ


Bukhari-420

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 41 (ஒரு பள்ளிவாசல் குறித்து இது) இன்ன குலத்தாரின் பள்ளிவாசல் என்று கூறலாமா?

 420. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் குதிரைகளுக்கிடையே போட்டி நடத்தியபோது, பயிற்சி பெற்ற குதிரைகள் ‘ஹஃப்யா’ என்ற இடத்திலிருந்து ‘ஸனிய்யதுல் வதா’ என்ற இடம் வரை ஓட வேண்டும் என்றும் பயிற்சியளிக்கப்படாத குதிரைகள் ‘ஸனியதுல் வதா’ என்ற இடத்திலிருந்து பனூ ஸுரைக் கூட்டத்தினரின் பள்ளிவாசல் வரை ஓட வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயித்தார்கள். அப்போட்டியில் நானும் பங்கெடுத்துக் கொண்டேன்.
Book : 8


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَابَقَ بَيْنَ الخَيْلِ الَّتِي أُضْمِرَتْ مِنَ الحَفْيَاءِ، وَأَمَدُهَا ثَنِيَّةُ الوَدَاعِ، وَسَابَقَ بَيْنَ الخَيْلِ الَّتِي لَمْ تُضْمَرْ مِنَ الثَّنِيَّةِ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ»، وَأَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ فِيمَنْ سَابَقَ بِهَا


Bukhari-419

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

419. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு ஒரு தொழுகை நடத்தினார்கள்! பிறகு மேடை மீது ஏறித் தொழுகையைப் பற்றியும் ருகூவும் பற்றியும் போதித்தார்கள். (உங்களை முன் புறமாக) நான் காண்பது போன்றே என்னுடைய பின்புறமாகவும் உங்களைக் காணுகிறேன்’ என்று கூறினார்கள்.
Book :8


صَلَّى بِنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلاَةً، ثُمَّ رَقِيَ المِنْبَرَ، فَقَالَ فِي الصَّلاَةِ وَفِي الرُّكُوعِ: «إِنِّي لَأَرَاكُمْ مِنْ وَرَائِي كَمَا أَرَاكُمْ»


Bukhari-418

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 40 (தொழுகையை முழுமையாக நிறைவேற்றா) மக்களிடம் இமாம், தொழுகையை குறைவின்றிப் பூர்த்தி செய்யுமாறு அறிவுரை கூறுவதும், கிப்லா பற்றிய குறிப்பும். 

418. இறைத்தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘நான் கிப்லாத் திசையில் மட்டும் பார்க்கிறேன் என்று நீங்கள் கருதுகிறீர்களா? அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் அடக்கமாக இருப்பதும் உங்களின் ருகூவும் எனக்குத் தெரியாமலிருப்பதில்லை. நிச்சயமாக என்னுடைய முதுகுக்குப் பின் புறம் உங்களை நான் பார்க்கிறேன்.’
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 8


«هَلْ تَرَوْنَ قِبْلَتِي هَا هُنَا، فَوَاللَّهِ مَا يَخْفَى عَلَيَّ خُشُوعُكُمْ وَلاَ رُكُوعُكُمْ، إِنِّي لَأَرَاكُمْ مِنْ وَرَاءِ ظَهْرِي»


Bukhari-417

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 39 (தொழுது கொண்டிருக்கும்) ஒருவரை எச்சில் முந்திக் கொள்ளும் போது அவர் தமது ஆடையின் ஓர் ஓரத்தைப் பிடித்து (அதில் உமிழ்ந்து)கொள்ளலாம்.

 417. அனஸ்(ரலி) அறிவித்தார்.

கிப்லா திசையில் (உள்ள சுவற்றில்) நபி(ஸல்) அவர்கள் சளியைக் கண்டார்கள். அவர்களின் முகத்தில் அதிருப்தி காணப்பட்டது. அவர்கள் எழுந்து தம் கையால் அதைச் சுரண்டினார்கள். ‘நிச்சயமாக உங்களில் ஒருவர் தொழுகையில் நிற்கும்போது அவர் தம் இறைவனிடம் அந்தரங்கமாக உரையாடுகிறார். அவருக்கும் கிப்லாவுக்கும் இடையே அவரின் இறைவன் இருக்கிறான்.

எனவே எவரும் கிப்லாத் திசை நோக்கி உமிழக் கூடாது! தங்களின் இடப்புறமோ தம் பாதங்களுக்கு அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும்!’ என்று நபி(ஸல்) கூறிவிட்டுத் தம் மேலங்கியின் ஒரு பகுதியைப் பிடித்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மறு பகுதியுடன் கசக்கிவிட்டு ‘அல்லது இவ்வாறு அவர் செய்து கொள்ளட்டும்’ என்று கூறினார்கள்.
Book : 8


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى نُخَامَةً فِي القِبْلَةِ، فَحَكَّهَا بِيَدِهِ وَرُئِيَ مِنْهُ كَرَاهِيَةٌ، أَوْ رُئِيَ كَرَاهِيَتُهُ لِذَلِكَ وَشِدَّتُهُ عَلَيْهِ، وَقَالَ: «إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ فِي صَلاَتِهِ، فَإِنَّمَا يُنَاجِي رَبَّهُ أَوْ رَبُّهُ بَيْنَهُ وَبَيْنَ قِبْلَتِهِ، فَلاَ يَبْزُقَنَّ فِي قِبْلَتِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ»، ثُمَّ أَخَذَ طَرَفَ رِدَائِهِ، فَبَزَقَ فِيهِ وَرَدَّ بَعْضَهُ عَلَى بَعْضٍ، قَالَ: «أَوْ يَفْعَلُ هَكَذَا»


Bukhari-416

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 38

பள்ளிவாசலில் (உமிழப்பட்ட) சளியை மண்ணுக்குள் புதைத்து விட வேண்டும். 

416. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தொழுகைக்காக நிற்கும்போது தமக்கு முன்புறம் உமிழலாகாது. ஏனெனில் அவர் தொழுது கொண்டிருக்கும் வரை தம் இறைவனிடம் அந்தரங்கமாக உரையாடிக் கொண்டிருக்கிறார். (அது போல்) தம் வலப்புறமும் உமிழலாகாது. ஏனெனில் அவரின் வலப்புறத்தில் வானவர் ஒருவர் இருக்கிறார். தம் இடப்புறம் உமிழட்டும். அல்லது தம் பாதங்களுக்கடியில் உமிழ்ந்து அதை மண்ணுக்கடியில் மறைக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 8


«إِذَا قَامَ أَحَدُكُمْ إِلَى الصَّلاَةِ، فَلاَ يَبْصُقْ أَمَامَهُ، فَإِنَّمَا يُنَاجِي اللَّهَ مَا دَامَ فِي مُصَلَّاهُ، وَلاَ عَنْ يَمِينِهِ، فَإِنَّ عَنْ يَمِينِهِ مَلَكًا، وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ، أَوْ تَحْتَ قَدَمِهِ، فَيَدْفِنُهَا»


Bukhari-415

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 37

பள்ளிவாசலினுள் உமிழ்ந்த குற்றத்திற்குரிய பரிகாரம்.

 415. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பள்ளிவாசலில் உமிழ்வது குற்றமாகும். அதை மண்ணுக்கடியில் மறைப்பது அதற்குரிய பரிகாரமாகும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 8


«البُزَاقُ فِي المَسْجِدِ خَطِيئَةٌ وَكَفَّارَتُهَا دَفْنُهَا»


Bukhari-414

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

414. அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் சுவற்றில் (உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டு சிறு கல்லை எடுத்து அதைச் சுரண்டினார்கள். பின்னர் ‘உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தம் முகத்துக்கு நேராகவோ தம் வலப்புறமாகவோ உமிழலாகாது. தம் இடப்புறமோ தம் இடது பாதத்தின் அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும்!’ என்று கூறினார்கள்.
Book :8


أَنَّ النَّبِيَّ صلّى الله عليه وسلم أَبْصَرَ نُخَامَةً فِي قِبْلَةِ المَسْجِدِ، فَحَكَّهَا بِحَصَاةٍ ثُمَّ «نَهَى أَنْ يَبْزُقَ الرَّجُلُ بَيْنَ يَدَيْهِ، أَوْ عَنْ يَمِينِهِ وَلَكِنْ عَنْ يَسَارِهِ، أَوْ تَحْتَ قَدَمِهِ اليُسْرَى»


Bukhari-413

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 36 இடப் புறமோ அல்லது இடப் பாதத்திற்குக் கீழேயோ உமிழலாம்.

 413. இறைத்தூதர் ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘நிச்சயமாக ஒரு இறைநம்பிக்கையாளர் தொழுகையில் இருக்கும்போது தம் இறைவனிடம் அந்தரங்கமாக உரையாடுகிறார். எனவே தங்களின் முன்புறமோ வலப்புறமோ அவர் உமிழ வேண்டாம். எனினும் இடப்புறமோ தம் காலுக்கடியிலோ உமிழலாம்.’ என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book : 8


«إِنَّ المُؤْمِنَ إِذَا كَانَ فِي الصَّلاَةِ، فَإِنَّمَا يُنَاجِي رَبَّهُ، فَلاَ يَبْزُقَنَّ بَيْنَ يَدَيْهِ، وَلاَ عَنْ يَمِينِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ، أَوْ تَحْتَ قَدَمِهِ»


Next Page » « Previous Page