Author: Farook

Bukhari-412

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

412. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘தமக்கு முன் புறமோ தம் வலப் புறமோ உங்களில் எவரும் உமிழலாகாது. எனினும் தம் இடப்புறமோ தம் காலுக்கடியிலோ உமிழலாம்.’ என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book :8


«لاَ يَتْفِلَنَّ أَحَدُكُمْ بَيْنَ يَدَيْهِ، وَلاَ عَنْ يَمِينِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ، أَوْ تَحْتَ رِجْلِهِ»


Bukhari-411

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

411. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் சுவற்றில் (உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டு சிறு கல்லை எடுத்து அதைச் சுரண்டினார்கள். பின்னர் ‘உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தம் முகத்துககு நேராகவோ தம் வலப் புறமாகவோ உமிழலாகாது; தம் இடப்புறமோ தம் இடது பாதத்தின் அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும்!’ என்று கூறினார்கள்.
Book :8


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى نُخَامَةً فِي حَائِطِ المَسْجِدِ، فَتَنَاوَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَصَاةً، فَحَتَّهَا، ثُمَّ قَالَ: «إِذَا تَنَخَّمَ أَحَدُكُمْ، فَلاَ يَتَنَخَّمْ قِبَلَ وَجْهِهِ، وَلاَ عَنْ يَمِينِهِ، وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ، أَوْ تَحْتَ قَدَمِهِ اليُسْرَى»


Bukhari-410

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

410. அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் சுவற்றில் (உமிழப் பட்டிருந்த) சளியைக் கண்டு சிறு கல்லை எடுத்து அதைச் சுரண்டினார்கள்.

பின்னர் ‘உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தம் முகத்துக்கு நேராகவோ தம் வலப் புறமாகவோ உமிழலாகாது; தம் இடப்புறமோ தம் இடது பாதத்தின் அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும்!’ என்று கூறினார்கள்.
Book :8


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى نُخَامَةً فِي حَائِطِ المَسْجِدِ، فَتَنَاوَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَصَاةً، فَحَتَّهَا، ثُمَّ قَالَ: «إِذَا تَنَخَّمَ أَحَدُكُمْ، فَلاَ يَتَنَخَّمْ قِبَلَ وَجْهِهِ، وَلاَ عَنْ يَمِينِهِ، وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ، أَوْ تَحْتَ قَدَمِهِ اليُسْرَى»


Bukhari-409

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 35 தொழும் போது (எச்சில் வந்து விட்டால்) வலப் புறம் துப்பலாகாது. 

409. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலின் சுவற்றில் (உமிழப் பட்டிருந்த) சளியைக் கண்டு சிறு கல்லை எடுத்து அதைச் சுரண்டினார்கள். பின்னர் ‘உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தம் முகத்துக்கு நேராகவோ தம் வலப்புறமாகவோ உமிழலாகாது. தம் இடப்புறமோ தம் இடது பாதத்தின் அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும்!’ என்று கூறினார்கள்.
Book : 8


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى نُخَامَةً فِي جِدَارِ المَسْجِدِ، فَتَنَاوَلَ حَصَاةً فَحَكَّهَا، فَقَالَ: «إِذَا تَنَخَّمَ أَحَدُكُمْ فَلاَ يَتَنَخَّمَنَّ قِبَلَ وَجْهِهِ، وَلاَ عَنْ يَمِينِهِ وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ، أَوْ تَحْتَ قَدَمِهِ اليُسْرَى»


Bukhari-408

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 34 பள்ளியில் (சிந்தப்பட்ட) மூக்குச் சளியை சிறுகற்களால் சுரண்டி (அப்புறப்படுத்தி) விடுதல்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அருவருப்பானவற்றை நீ மிதித்து விட்டால் அது பச்சையாக இருந்தால் உடனே அதை கழுவிக் கொள்! அது காய்ந்து இருந்தால் (கழுவ) வேண்டியதில்லை என்றார்கள். 

408. ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பள்ளி வாசலின் சுவற்றில் (உமிழப்பட்டிருந்த) சளியைக் கண்டு சிறு கல்லை எடுத்து அதைச் சுரண்டினார்கள். பின்னர் ‘உங்களில் எவருக்கேனும் சளி உமிழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தம் முகத்துக்கு நேராகவோ தம் வலப் புறமாகவோ உமிழலாகாது; தம் இடப்புறமோ தம் இடது பாதத்தின் அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும்!’ என்று கூறினார்கள்.
Book : 8


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى نُخَامَةً فِي جِدَارِ المَسْجِدِ، فَتَنَاوَلَ حَصَاةً فَحَكَّهَا، فَقَالَ: «إِذَا تَنَخَّمَ أَحَدُكُمْ فَلاَ يَتَنَخَّمَنَّ قِبَلَ وَجْهِهِ، وَلاَ عَنْ يَمِينِهِ وَلْيَبْصُقْ عَنْ يَسَارِهِ، أَوْ تَحْتَ قَدَمِهِ اليُسْرَى»


Bukhari-407

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

407. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கிப்லாத் திசையில் உள்ள சுவற்றில் எச்சிலையோ சளியையோ கண்டுவிட்டு அதைச் சுரண்டி (அப்புறப்படுத்தி)னார்கள்.

அத்தியாயம்: 8


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «رَأَى فِي جِدَارِ القِبْلَةِ مُخَاطًا أَوْ بُصَاقًا أَوْ نُخَامَةً، فَحَكَّهُ»


Bukhari-406

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

406. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் கிப்லாத் திசையில் உள்ள சுவற்றில் எச்சிலைக் கண்டார்கள். அதைச் சுரண்டிவிட்டு மக்களை நோக்கி ‘உங்களில் ஒருவர் தொழுது கொண்டிருக்கும்போது தம் முகத்துக்கு எதிராக உமிழலாகாது; ஏனெனில் அவர் தொழும்போது இறைவன் அவருக்கு முன்னிலையில் இருக்கிறான்’ என்று கூறினார்கள்.
Book :8


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى بُصَاقًا فِي جِدَارِ القِبْلَةِ، فَحَكَّهُ، ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ، فَقَالَ: «إِذَا كَانَ أَحَدُكُمْ يُصَلِّي، فَلاَ يَبْصُقُ قِبَلَ وَجْهِهِ، فَإِنَّ اللَّهَ قِبَلَ وَجْهِهِ إِذَا صَلَّى»


Bukhari-405

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 33 பள்ளி வாசலில் (உமிழப்பட்ட) எச்சிலைக் கையால் சுரண்டி அப்புறப்படுத்துவது.

 405. அனஸ்(ரலி) அறிவித்தார்.

கிப்லாத் திசையில் (உள்ள சுவற்றில்) நபி(ஸல்) அவர்கள் சளியைக் கண்டார்கள். இது அவர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. அதன் பிரதிபலிப்பு அவர்களின் முகத்திலும் காணப்பட்டது. அவர்கள் எழுந்து தம் கையால் அதைச் சுரண்டினார்கள்.

‘நிச்சயமாக உங்களில் ஒருவர் தொழுகையில் நிற்கும்போது அவர் தம் இறைவனிடம் அந்தரங்கமாக உரையாடுகிறார். அவருக்கும் கிப்லாவுக்கும் இடையே அவரின் இறைவன் இருக்கிறான். எனவே எவரும் கிப்லாத் திசை நோக்கி உமிழக் கூடாது! தங்களின் இடப்புறமோ, தம் பாதங்களுக்கு அடியிலோ அவர் உமிழ்ந்து கொள்ளட்டும்!’ என்று நபி(ஸல்) கூறிவிட்டுத் தம் மேலங்கியின் ஒரு பகுதியைப் பிடித்து அதில் உமிழ்ந்து அதன் ஒரு பகுதியை மறுபகுதியுடன் கசக்கிவிட்டு ‘அல்லது இவ்வாறு அவர் செய்து கொள்ளட்டும்’ என்று கூறினார்கள்.
Book : 8


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى نُخَامَةً فِي القِبْلَةِ، فَشَقَّ ذَلِكَ عَلَيْهِ حَتَّى رُئِيَ فِي وَجْهِهِ، فَقَامَ فَحَكَّهُ بِيَدِهِ، فَقَالَ: «إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ فِي صَلاَتِهِ فَإِنَّهُ يُنَاجِي رَبَّهُ، أَوْ إِنَّ رَبَّهُ بَيْنَهُ وَبَيْنَ القِبْلَةِ، فَلاَ يَبْزُقَنَّ أَحَدُكُمْ قِبَلَ قِبْلَتِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمَيْهِ» ثُمَّ أَخَذَ طَرَفَ رِدَائِهِ، فَبَصَقَ فِيهِ ثُمَّ رَدَّ بَعْضَهُ عَلَى بَعْضٍ، فَقَالَ: «أَوْ يَفْعَلُ هَكَذَا»


Bukhari-404

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

404. ‘நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை) லுஹர் தொழுகையை ஐந்து ரக்அத்களாகத் தொழுதார்கள். அப்போது, ‘இறைத்தூதர் அவர்களே! தொழுகை(யின் ரக்அத்கள்) அதிகமாக்கப்பட்டுவிட்டனவா?’ என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு, ‘ஏன் இவ்வாறு (வினவுகிறீர்கள்?)’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுதுவிட்டீர்கள்’ என்று நபித்தோழர்கள் கூறினார்கள். (மக்களை நோக்கி அமர்ந்திருந்த) நபி(ஸல்) அவர்கள் தங்களின் கால்களை மடக்கி (கிப்லாவை நோக்கி) இரண்டு ஸஜ்தாக்கள் செய்தார்கள்’ என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்.
Book :8


صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: الظُّهْرَ خَمْسًا، فَقَالُوا: أَزِيدَ فِي الصَّلاَةِ؟ قَالَ: «وَمَا ذَاكَ» قَالُوا: صَلَّيْتَ خَمْسًا ، فَثَنَى رِجْلَيْهِ وَسَجَدَ سَجْدَتَيْنِ


Bukhari-403

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

403. ‘குபா பள்ளி வாசலில் மக்கள் ஸுபுஹ் தொழுது கொண்டிருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, ‘சென்ற இரவில் கஅபாவை முன்னோக்கித் தொழுமாறு நபி(ஸல்) அவர்களுக்கு இறைவசனம் அருளப்பட்டது’ என்று கூறினார்.

(பைத்துல் முகத்தஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கித் தொழுது கொண்டிருந்த அவர்கள் அப்படியே கஅபாவை நோக்கித் திரும்பினார்கள்’ என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book :8


بَيْنَا النَّاسُ بِقُبَاءٍ فِي صَلاَةِ الصُّبْحِ، إِذْ جَاءَهُمْ آتٍ، فَقَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ قُرْآنٌ، وَقَدْ أُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الكَعْبَةَ، فَاسْتَقْبِلُوهَا، وَكَانَتْ وُجُوهُهُمْ إِلَى الشَّأْمِ، فَاسْتَدَارُوا إِلَى الكَعْبَةِ»


Next Page » « Previous Page