Author: Farook

Bukhari-402

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 32 கிப்லா குறித்து வந்துள்ள இன்ன பிற தகவல்களும், மறதியாகக் கிப்லா அல்லாத திசை நோக்கித் தொழுதவர் (தமது தவறை அறியும் போது) அந்தத் தொழுகையைத் திருப்பித் தொழவேண்டியதில்லை என்பதும்.

நபி(ஸல்) அவர்கள் லுஹர் தொழுகையில் (மறதியாக) இரண்டு ரக்அத்களில் ஸலாம் கொடுத்து விட்டு மக்களை நோக்கி அமர்ந்த (நபித் தோழர்களால் நினைவூட்டப்பட்டதும்) எஞ்சிய (இரண்டு) ரக்அத்களைத் தொழுதிருக்கிறார்கள்.

 402. ‘மூன்று விஷயங்களில் இறைவன் என் கருத்துக்கேற்ப ‘வஹீ’ அருளியுள்ளான். அவை,

‘இறைத்தூதர் அவர்களே! மகாமு இப்ராஹீம் என்ற இடத்தில் தொழுமிடத்தை நாம் ஆக்கிக் கொள்ளலாமே!’ என்று நான் கூறியபோது, ‘மகாமு இப்ராஹீமில் நீங்கள் தொழுமிடத்தை ஆக்கிக் கொள்ளுங்கள்!’ (திருக்குர்ஆன் 02:125) என்ற வசனம் அருளப்பட்டது.

‘இறைத்தூதர் அவர்களே! தங்களின் மனைவியருடன் உரையாட வருபவர்களில் நல்லவர்களும் கெட்டவர்களும் உள்ளனர். எனவே தங்களை அன்னிய ஆண்களிடமிருந்து மறைத்துக் கொள்ளுமாறு தங்களின் மனைவியருக்கு தாங்கள் உத்திரவிடலாமே!’ என்றேன். அப்போது ஹிஜாப் (பர்தா) பற்றிய வசனம் அருளப்பட்டது.

நபி(ஸல்) அவர்களின் மனைவியர் அனைவரும் சேர்ந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஆத்திரமூட்டும் விதமாக நடந்தபோது நபி(ஸல்)

” وَافَقْتُ رَبِّي فِي ثَلاَثٍ: فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، لَوِ اتَّخَذْنَا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى، فَنَزَلَتْ: {وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى} [البقرة: 125] وَآيَةُ الحِجَابِ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، لَوْ أَمَرْتَ نِسَاءَكَ أَنْ يَحْتَجِبْنَ، فَإِنَّهُ يُكَلِّمُهُنَّ البَرُّ وَالفَاجِرُ، فَنَزَلَتْ آيَةُ الحِجَابِ، وَاجْتَمَعَ نِسَاءُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الغَيْرَةِ عَلَيْهِ، فَقُلْتُ لَهُنَّ: (عَسَى رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ أَنْ يُبَدِّلَهُ أَزْوَاجًا خَيْرًا مِنْكُنَّ)، فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ


Bukhari-401

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

401. ‘நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை தொழுதார்கள் – கூட்டினார்களா குறைத்தார்களா என்பது எனக்குத் தெரியாது’ என இப்ராஹீம் கூறுகிறார் – தொழுகையை முடித்து ஸலாம் கூறியதும் ‘இறைத்தூதர் அவர்களே! தொழுகையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா?’ என்று கேட்கப்பட்டது. ‘அது என்ன (அப்படியென்றால் என்ன)?’ என்று நபி(ஸல்) கேட்டதும், ‘

நீங்கள் இப்படியல்லவா தொழுதீர்கள்’ என அங்கிருந்தவர்கள் கூறினார்கள். (நீட்டியிருந்த) தங்களின் கால்களை நபி(ஸல்) மடக்கி, கிப்லாவை முன்னோக்கி இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டுப் பின்னர் ஸலாம் கூறினார்கள். அதன் பின்னர் அவர்கள் எங்களை முன்னோக்கித் திரும்பியமர்ந்து,

‘தொழுகையில் ஏதாவது மாற்றங்கள் செய்யப்படுமானால் அதை உங்களுக்குத் தெரிவித்து விடுவேன். என்றாலும் நானும் உங்களைப் போன்ற மனிதன்தான். நீங்கள் மறந்து விடுவதைப் போன்று நானும் மறந்து விடுவேன். நான் (எதையாவது) மறந்துவிட்டால் எனக்கு ஞாபகப்படுத்துங்கள். உங்களில் ஒருவர் தங்களின் தொழுகையில் சந்தேகித்தால் உறுதியானதை அவர் தீர்மானிக்கட்டும். அத்தீர்மானத்தின் அடிப்படையில் தொழுகையைப் பூர்த்தி செய்து ஸலாம் சொல்லிய பின்னர் இரண்டு ஸஜ்தாக்கள் செய்யட்டும்’ என்று கூறினார்கள்’ என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – قَالَ إِبْرَاهِيمُ: لاَ أَدْرِي زَادَ أَوْ نَقَصَ – فَلَمَّا سَلَّمَ قِيلَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، أَحَدَثَ فِي الصَّلاَةِ شَيْءٌ؟ قَالَ: «وَمَا ذَاكَ»، قَالُوا: صَلَّيْتَ كَذَا وَكَذَا، فَثَنَى رِجْلَيْهِ، وَاسْتَقْبَلَ القِبْلَةَ، وَسَجَدَ سَجْدَتَيْنِ، ثُمَّ سَلَّمَ، فَلَمَّا أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ، قَالَ: «إِنَّهُ لَوْ حَدَثَ فِي الصَّلاَةِ شَيْءٌ لَنَبَّأْتُكُمْ بِهِ، وَلَكِنْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ، أَنْسَى كَمَا تَنْسَوْنَ، فَإِذَا نَسِيتُ فَذَكِّرُونِي، وَإِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلاَتِهِ، فَلْيَتَحَرَّ الصَّوَابَ فَلْيُتِمَّ عَلَيْهِ، ثُمَّ لِيُسَلِّمْ، ثُمَّ يَسْجُدُ سَجْدَتَيْنِ»


Bukhari-400

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

400. ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களுடைய வாகனத்தின் மீது அமர்ந்து, அது செல்கிற திசையை நோக்கித் தொழுபவர்களாக இருந்தார்கள். கடமையான தொழுகையைத் தொழ விரும்பினால் வாகனத்திலிருந்து கீழே இறங்கி கிப்லாவை முன்னோக்கித் தொழுவார்கள்’ என ஜாபிர்(ரலி) அறிவித்தார்.
Book :8


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي عَلَى رَاحِلَتِهِ، حَيْثُ تَوَجَّهَتْ فَإِذَا أَرَادَ الفَرِيضَةَ نَزَلَ فَاسْتَقْبَلَ القِبْلَةَ»


Bukhari-399

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 31 எங்கிருந்தாலும் (தொழும் போது) கிப்லா (-கஅபாவின்) திசையையே முன்னோக்க வேண்டும்.

நீங்கள் கிப்லாவை முன்னோக்கித் (தொழுகையில்) தக்பீர் (தஹ்ரீமா) சொல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

 399. ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுதார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஅபாவை நோக்கித் தொழ வேண்டுமென ஆசைப்பட்டார்கள். அப்போது ‘நீர் வானத்தை நோக்கி உம்முடைய முகத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருப்பதை அறிவோம்’ (திருக்குர்ஆன் 02:144) என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான். உடனே கஅபாவை முன்னோக்கித் தொழ ஆரம்பித்தார்கள்.

‘(யூதர்களின் சில அறிவீனர்கள்) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவைவிட்டுத் திருப்பிவிட்டது எது? என்று கேட்கின்றனர். ‘கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. தான் நாடியோரை அவன் நேர்வழியில் நடத்துவான்’ என்று (நபியே!) கூறும்!’ (திருக்குர்ஆன் 02:142) என்ற வசனம் அருளப்பட்டதும்

ஒருவர் நபி(ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டு வெளியே வந்து அன்ஸாரிக் கூட்டத்தாரிடம் சென்றார். அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி அஸர் தொழுது கொண்டிருந்தபோது, ‘நான்

كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى نَحْوَ بَيْتِ المَقْدِسِ، سِتَّةَ عَشَرَ أَوْ سَبْعَةَ عَشَرَ شَهْرًا، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ أَنْ يُوَجَّهَ إِلَى الكَعْبَةِ، فَأَنْزَلَ اللَّهُ: {قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ} [البقرة: 144]، فَتَوَجَّهَ نَحْوَ الكَعْبَةِ “، وَقَالَ السُّفَهَاءُ مِنَ النَّاسِ، وَهُمُ اليَهُودُ: {مَا وَلَّاهُمْ} [البقرة: 142] عَنْ قِبْلَتِهِمُ الَّتِي كَانُوا عَلَيْهَا، قُلْ لِلَّهِ المَشْرِقُ  وَالمَغْرِبُ يَهْدِي مَنْ يَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ فَصَلَّى مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، ثُمَّ خَرَجَ بَعْدَ مَا صَلَّى، فَمَرَّ عَلَى قَوْمٍ مِنَ الأَنْصَارِ فِي صَلاَةِ العَصْرِ نَحْوَ بَيْتِ المَقْدِسِ، فَقَالَ: هُوَ يَشْهَدُ: أَنَّهُ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَّهُ تَوَجَّهَ نَحْوَ الكَعْبَةِ، فَتَحَرَّفَ القَوْمُ، حَتَّى تَوَجَّهُوا نَحْوَ الكَعْبَةِ


Bukhari-398

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

398. ‘நபி(ஸல்) அவர்கள் கஅபாவின் உள்ளே நுழைந்ததும் அதன் எல்லா ஓரங்களிலும் நின்று பிரார்த்தித்தார்கள். அதிலிருந்து வெளியாகும் வரை அவர்கள் தொழவில்லை. வெளியே வந்தபின்பு கஅபாவின் முன்பாக நின்று இரண்டு ரக்அத்துகள் தொழுதுவிட்டு ‘இதுதான் கிப்லா’ என்று கூறினார்கள்’ என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Book :8


لَمَّا دَخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ البَيْتَ، دَعَا فِي نَوَاحِيهِ كُلِّهَا، وَلَمْ يُصَلِّ حَتَّى خَرَجَ مِنْهُ، فَلَمَّا خَرَجَ رَكَعَ رَكْعَتَيْنِ فِي قُبُلِ الكَعْبَةِ، وَقَالَ: «هَذِهِ القِبْلَةُ»


Bukhari-397

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

397. ‘சிலர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வந்து, ‘இதோ இறைத்தூதர் கஅபாவில் நுழைந்துவிட்டார்கள்’ என்று கூறினார்கள். இப்னு உமர் முன்னோக்கி வந்தபோது நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்துவிட்டார்கள். அப்போது பிலால் (ரலி) இரண்டு வாசல்களுக்கிடையில் நின்றிருந்தார்.

‘கஅபாவின் உள்ளே நபி (ஸல்) அவர்கள் தொழுதார்களா?’ என அவரிடம் கேட்டதற்கு, ‘ஆம்’ என்று சொல்லிவிட்டு, ‘நீர் கஅபாவின் உள்ளே நுழையும்போது இடப்பக்கம் இருக்கிற இரண்டு தூண்களுக்கிடையில் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர் வெளியே வந்து கஅபாவின் வாசலுக்கு முன்பாக நின்று இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்’ என்று பிலால் (ரலி) கூறினார்’ என முஜாஹித் அறிவித்தார்.

அத்தியாயம்: 8


أُتِيَ ابْنُ عُمَرَ فَقِيلَ لَهُ: هَذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الكَعْبَةَ، فَقَالَ ابْنُ عُمَرَ: فَأَقْبَلْتُ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ خَرَجَ وَأَجِدُ بِلاَلًا قَائِمًا بَيْنَ البَابَيْنِ، فَسَأَلْتُ بِلاَلًا، فَقُلْتُ: أَصَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الكَعْبَةِ؟ قَالَ: «نَعَمْ، رَكْعَتَيْنِ، بَيْنَ السَّارِيَتَيْنِ اللَّتَيْنِ عَلَى يَسَارِهِ إِذَا دَخَلْتَ، ثُمَّ خَرَجَ، فَصَلَّى فِي وَجْهِ الكَعْبَةِ رَكْعَتَيْنِ»


Bukhari-396

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

396. ‘ஜாபிர் இப்னு அப்தில்லா(ரலி) அவர்களிடம் இது பற்றிக் நாங்கள் கேட்டதற்கு, ‘ஸஃபா, மர்வாவிற்கிடையில் ‘ஸயீ’ செய்து முடிக்கும் வரை தங்களின் மனைவியை நெருங்கக் கூடாது’ என்று கூறினார்கள்’ என அம்ர் இப்னு தினார் என்பவர் அறிவித்தார்.
Book :8


«لاَ يَقْرَبَنَّهَا حَتَّى يَطُوفَ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ»


Bukhari-395

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 30 இப்ராஹீம் (அலை) அவர்கள் நின்ற இடத்தை நீங்கள் தொழும் இடமாக (கிப்லாவாக) வைத்துக் கொள்ளுங்கள் எனும் (2:125ஆவது) இறைவசனத் தொடர்.

 395. ‘உம்ராவிற்காக (இஹ்ராம் அணிந்து) வந்த ஒருவர் கஅபாவைச் சுற்றி வந்தார். ஸஃபா, மர்வாவிற்கிடையில் ‘ஸயீ’ செய்யவில்லை. இவர் தன்னுடைய மனைவியிடம் உடலுறவு கொள்ளலாமா?’ என இப்னு உமர்(ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டதற்கு, ‘நபி(ஸல்) அவர்கள் மக்கா வந்தபோது ஏழு முறை கஅபாவை வலம்வந்தார்கள். மகாம் இப்ராஹீம் எனும் இடத்தில் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். ஸஃபா, மர்வாவிற்கிடையில் ‘ஸயீ’ செய்தார்கள். உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது’ என இப்னு உமர்(ரலி) கூறினார்’ என அம்ர் இப்னு தீனார் அறிவித்தார்.
Book : 8


سَأَلْنَا ابْنَ عُمَرَ عَنْ رَجُلٍ طَافَ بِالْبَيْتِ العُمْرَةَ، وَلَمْ يَطُفْ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ، أَيَأْتِي امْرَأَتَهُ؟ فَقَالَ: قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «فَطَافَ بِالْبَيْتِ سَبْعًا، وَصَلَّى خَلْفَ المَقَامِ رَكْعَتَيْنِ، وَطَافَ بَيْنَ الصَّفَا وَالمَرْوَةِ»، وَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ


Bukhari-394

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 29 மதீனா வாசிகள், ஷாம்வாசிகள், கிழக்கில் வசிப்பவர்கள் ஆகியோரின் தொழும்திசை (கிப்லா).

கிழக்கிலோ மேற்கிலோ (மதீனா வாசிகளுக்கும் ஷாம் வாசிகளுக்கும்) கிப்லா இல்லை. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள், (மதீனாவாசிகளிடம்), மலஜலம் கழிக்கும் போது கிப்லா (கஅபா) திசையை முன்னோக்காதீர்கள். அப்போது கிழக்கு நோக்கியோ அல்லது மேற்கு நோக்கியோ, திரும்பிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்கள்.

(குறிப்பு: இந்தியா போன்ற நாடுகளுக்கு மேற்குத் திசையில் தான் கிப்லா அமைந்துள்ளது. இது மதீனாவாசிகளைக் கருத்தில் கொண்டு சொல்லப்பட்டதாகும் என்பதை நினைவில் கொள்க!) 

394. ‘நீங்கள் மலம் கழிக்கச் சென்றால் கிப்லாவை முன்பக்கமாகவோ பின்பக்கமோ ஆக்கி உட்காராதீர்கள். கிழக்குத் திசையையோ மேற்குத் திசையையோ முன்னோக்குங்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ அய்யூபுல் அன்சாரி(ரலி) அறிவித்துவிட்டுத் தொடர்ந்து, ‘நாங்கள் ஷாம் நாட்டிற்குச் சென்றிருந்தபோது அங்கே கிப்லாவுக்கு எதிரில் அமரும் விதத்தில் கழிப்பறைகள் கட்டப்பட்டிருந்ததைக் கண்டோம். அதைவிட்டு நாங்கள் திரும்பி அமர்ந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் தேடினோம்’ எனக் கூறினார்.
Book : 8


«إِذَا أَتَيْتُمُ الغَائِطَ فَلاَ تَسْتَقْبِلُوا القِبْلَةَ، وَلاَ تَسْتَدْبِرُوهَا وَلَكِنْ شَرِّقُوا أَوْ غَرِّبُوا» قَالَ أَبُو أَيُّوبَ: «فَقَدِمْنَا الشَّأْمَ فَوَجَدْنَا مَرَاحِيضَ بُنِيَتْ قِبَلَ القِبْلَةِ فَنَنْحَرِفُ، وَنَسْتَغْفِرُ اللَّهَ تَعَالَى»


Bukhari-393

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

393. ‘ஹம்ஸாவின் தந்தையே! ஓர் அடியானுடைய உயிருக்கும் பொருளுக்கும் சேதம் ஏற்படுத்துவதைத் தடை செய்வது எது?’ என நான் அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை’ என்று சான்று கூறி, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நம்முடைய தொழுகையைத் தொழுது, நாம் அறுத்தவற்றை சாப்பிட்டு வருகிறவர் முஸ்லிம். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உரிய உரிமைகள் அவருக்கும் உண்டு. ஒவ்வொரு முஸ்லிமுக்கும் (குற்றம் புரிவதால்) என்ன தண்டனை உண்டோ அது அவருக்கும் உண்டு’ என்று அனஸ் (ரலி) கூறினார்’ என மைமூன் இப்னு ஸியாஹ் அறிவித்தார்.
Book :8


سَأَلَ مَيْمُونُ بْنُ سِيَاهٍ، أَنَسَ بْنَ مَالِكٍ، قَالَ: يَا أَبَا حَمْزَةَ، مَا يُحَرِّمُ دَمَ العَبْدِ وَمَالَهُ؟ فَقَالَ: «مَنْ شَهِدَ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَاسْتَقْبَلَ قِبْلَتَنَا، وَصَلَّى صَلاَتَنَا، وَأَكَلَ ذَبِيحَتَنَا، فَهُوَ المُسْلِمُ، لَهُ مَا لِلْمُسْلِمِ، وَعَلَيْهِ  مَا عَلَى المُسْلِمِ»


Next Page » « Previous Page