Author: Farook

Bukhari-392

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

392. ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை’ என்று மக்கள் (சான்று) கூறும் வரை அவர்களோடு போராட வேண்டுமென்று நான் ஏவப்பட்டுள்ளேன். அந்த (லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற) கலிமாவை அவர்கள் கூறி, நம்முடைய தொழுகையைத் தொழுது, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுப்பது போல் அறுத்து வருவார்களானால், தக்க காரணமின்றி அவர்களின் உயிர், பொருளுக்குச் சேதம் ஏற்படுத்துவது நமக்கு விலக்கப்பட்டுள்ளது. அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்தாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book :8


«أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، فَإِذَا قَالُوهَا، وَصَلَّوْا صَلاَتَنَا، وَاسْتَقْبَلُوا قِبْلَتَنَا، وَذَبَحُوا ذَبِيحَتَنَا، فَقَدْ حَرُمَتْ عَلَيْنَا دِمَاؤُهُمْ وَأَمْوَالُهُمْ، إِلَّا بِحَقِّهَا وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ»


Bukhari-391

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 28 (இறையில்லம் கஅபாவின் திசையான) கிப்லாவை முன்னோக்குவதன் சிறப்பு.

(சிரவணக்கம் செய்யும் போது) ஒருவர் தமது இருகால் (விரல்)களின் நுனிகளை கிப்லாவை முன்னோக்கி வைக்க வேண்டும். நபி (ஸல்) அவர்களின் தொழுகை முறை பற்றி அறிவிக்கையில் அபூஹுமைத் (ரலி) அவர்கள் இதைக் கூறினார்கள்.

391. ‘நம்முடைய தொழுகையைத் தொழுது, நம்முடைய கிப்லாவை முன்னோக்கி, நாம் அறுப்பதைப் புசித்து வருகிறவர்தாம் முஸ்லிம். அப்படிப்பட்டவர் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் பொறுப்பில் இருக்கிறார். எனவே அவரின் பொறுப்பு விஷயத்தில் அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை முறிக்காதீர்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
Book : 8


«مَنْ صَلَّى صَلاَتَنَا وَاسْتَقْبَلَ قِبْلَتَنَا، وَأَكَلَ ذَبِيحَتَنَا فَذَلِكَ المُسْلِمُ الَّذِي لَهُ ذِمَّةُ اللَّهِ وَذِمَّةُ رَسُولِهِ، فَلاَ تُخْفِرُوا اللَّهَ فِي ذِمَّتِهِ»


Bukhari-390

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 27 சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் போது இரு புஜங்களையும் (விலாவோடு சேர்க்காமல் அவற்றை) இடைவெளிவிட்டு வைக்க வேண்டும்.

 390. ‘நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் (ஸுஜுது செய்யும் போது) தங்களின் இரண்டு அக்குளின் வெண்மை தெரியும் அளவுக்குத் தங்களின் இரண்டு கைகளையும் விரித்து வைப்பார்கள்’ என மாலிக் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார்.
Book : 8


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا صَلَّى فَرَّجَ بَيْنَ يَدَيْهِ حَتَّى يَبْدُوَ بَيَاضُ إِبْطَيْهِ»


Bukhari-389

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26 (தொழுகையின் ஓர் அங்கமான) சிரவணக்கத்தை முழுமையாகச் செய்யாவிட்டால் (ஏற்படும் விளைவு).

 389. ‘தங்களின் தொழுகையில் ருகூவு ஸுஜுதைச் சரியாகச் செய்யாத ஒருவரைப் பார்த்த ஹுதைஃபா(ரலி) அவர் தொழுகையை முடித்த பின்னர், ‘நீர் தொழவில்லை; இந்த நிலையில் நீர் மரணித்தால் நபி(ஸல்) அவர்களின் ஸுன்னத்தின் மீது மரணித்தவராக மாட்டீர்’ என்று கூறினார்’ என அபூ வாயில் அறிவித்தார்.
Book : 8


رَأَى رَجُلًا لاَ يُتِمُّ رُكُوعَهُ وَلاَ سُجُودَهُ، فَلَمَّا قَضَى صَلاَتَهُ قَالَ لَهُ حُذَيْفَةُ: «مَا صَلَّيْتَ؟» قَالَ: وَأَحْسِبُهُ قَالَ: «لَوْ مُتَّ مُتَّ عَلَى غَيْرِ سُنَّةِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-388

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

388. ‘நான் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்வதற்காக தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் உளூச் செய்யும்போது (கால்களைக் கழுவாமல்) காலுறைகளின் மீது மஸஹ் செய்து தொழுதார்கள்’ என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.
Book :8


«وَضَّأْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَسَحَ عَلَى خُفَّيْهِ وَصَلَّى»


Bukhari-387

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 25

காலுறைகள் அணிந்து தொழுதல்.

 387. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) சிறுநீர் கழித்தப் பின்னர் உளூச் செய்து, தம் இரண்டு காலுறையின் மீது மஸஹ் செய்துவிட்டு எழுந்து தொழுததைக் கண்டேன். இது பற்றி ஜரீர் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு ‘நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்வதை பார்த்திருக்கிறேன்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹம்மாம் பின் ஹாரிஸ் (ரஹ்)


‘காலுறைகளின் மீது மஸஹ் செய்து தொழலாம் என்ற கருத்திலுள்ள அறிஞர்களுக்கு ஜரீர் (ரலி) அவர்களின் இச்செயல் மிகச் சிறந்த சான்றாகும். காரணம் ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் காலத்தில் கடைசியாக இஸ்லாத்தைத் தழுவியவராவார்’ என்று இப்ராஹீம் அன்னகஈ (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்.

அத்தியாயம்: 8


رَأَيْتُ جَرِيرَ بْنَ عَبْدِ اللَّهِ «بَالَ، ثُمَّ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ، ثُمَّ قَامَ فَصَلَّى» فَسُئِلَ، فَقَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَنَعَ مِثْلَ هَذَا»

قَالَ إِبْرَاهِيمُ: «فَكَانَ يُعْجِبُهُمْ لِأَنَّ جَرِيرًا كَانَ مِنْ آخِرِ مَنْ أَسْلَمَ»


Bukhari-386

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24 செருப்பணிந்து தொழுதல்.

 386. ‘நான் நபி(ஸல்) அவர்கள் செருப்பணிந்து தொழுதிருக்கிறார்களா? என்று அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு, ‘ஆம்’ என்றார்கள்’ என ஸயீது இப்னு யஸீத் அல் அஸ்தி அறிவித்தார்.
Book : 8


سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ: أَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي نَعْلَيْهِ؟ قَالَ: «نَعَمْ»


Bukhari-385

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 23 கடுமையான வெப்பநேரத்தில் (தாம் அணிந்திருக்கும்) துணியின் மீது சிரவணக்கம் செய்வது.

நபித்தோழர்கள் (தாம் அணிந்திருக்கும்) தலைப்பாகையின் (ஓர் ஓரத்தின்) மீதும் தொப்பியின் மீதும் (வெயில் நேரத்தில்) சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள்; இருகைகளையும் (நிலத்தில் ஊன்றும் போது) சட்டைக் கைக்குள்ளேயே வைத்துக் கொள்வார்கள் என ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

 385. ‘நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழும்போது எங்களில் சிலர் கடுமையான வெயிலின் காரணமாக ஆடையின் ஒரு பகுதியை ஸுஜுது செய்யுமிடத்தில் வைத்துக் கொள்வோம்’ என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
Book : 8


«كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَضَعُ أَحَدُنَا طَرَفَ الثَّوْبِ مِنْ شِدَّةِ الحَرِّ فِي مَكَانِ السُّجُودِ»


Bukhari-384

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

384. ‘நபி(ஸல்) அவர்கள் தங்களின் படுக்கை விரிப்பில் தொழும்போது அவர்களுக்கும் கிப்லாவுக்குமிடையில் குறுக்கே ஜனாஸா கிடப்பது போல் ஆயிஷா(ரலி) கிடப்பார்கள்’ என உர்வா அறிவித்தார்.
Book :8


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي وَعَائِشَةُ مُعْتَرِضَةٌ بَيْنَهُ وَبَيْنَ القِبْلَةِ عَلَى الفِرَاشِ الَّذِي يَنَامَانِ عَلَيْهِ»


Bukhari-383

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

383. ‘நபி (ஸல்) அவர்கள் என்னுடைய படுக்கை விரிப்பில் தொழுதபோது அவர்களுக்கும் கிப்லாவுக்குமிடையில் குறுக்கே ஜனாஸா கிடப்பது போல் நான் கிடப்பேன்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 8


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي وَهِيَ بَيْنَهُ وَبَيْنَ القِبْلَةِ عَلَى فِرَاشِ أَهْلِهِ اعْتِرَاضَ الجَنَازَةِ»


Next Page » « Previous Page