Author: Farook

Bukhari-382

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 22

படுக்கை விரிப்பில் தொழுவது.

அனஸ் (ரலி) அவர்கள் தமது படுக்கை விரிப்பின் மீது தொழுதார்கள். நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழும் போது எங்களில் சிலர் தமது ஆடையின் மீதே சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

 382. ‘நான் நபி (ஸல்) அவர்களுக்கு முன்பாகத் தூங்கிக் கொண்டிருப்பேன். என்னுடைய இரண்டு கால்களும் அவர்களை முன்னோக்கியிருக்கும். அவர்கள் ஸுஜுது செய்யும்போது என்னை விரலால் குத்துவார்கள். அப்போது நான் என்னுடைய இரண்டு கால்களையும் மடக்கிக் கொள்வேன். அவர்கள் நிலைக்கு வந்துவிட்டால் இரண்டு கால்களையும் (மறுபடியும்) நீட்டிக் கொள்வேன். அந்த நாள்களில் (எங்களின்) வீடுகளில் விளக்குகள் கிடையாது’ என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 8


«كُنْتُ أَنَامُ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرِجْلاَيَ، فِي قِبْلَتِهِ فَإِذَا سَجَدَ غَمَزَنِي، فَقَبَضْتُ رِجْلَيَّ، فَإِذَا قَامَ بَسَطْتُهُمَا»، قَالَتْ: وَالبُيُوتُ يَوْمَئِذٍ لَيْسَ فِيهَا مَصَابِيحُ


Bukhari-381

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 21 பேரீச்சங் கீற்றினால் வேயப்பட்ட தொழுகை விரிப்பில் தொழுவது.

 381. ‘நபி(ஸல்) அவர்கள் (சிறு) விரிப்பின் மீது தொழுதார்கள்’ என மைமூனா(ரலி) அறிவித்தார்.
Book : 8


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي عَلَى الخُمْرَةِ»


Bukhari-380

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 20

பாயில் தொழுதல்.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி) ஆகியோர் கப்பலில் நின்ற வண்ணம் தொழுதார்கள்.

(நீ கப்பலில் செல்லும் போது) உன் சகாக்களுக்கு சிரமம் ஏற்படாமலிருக்குமானால் நின்ற நிலையில் கப்பல் செல்லும் திசையிலேயே தொழுது கொள்; அவர்களுக்கு சிரமம் ஏற்படுமாயின் உட்கார்ந்து தொழு! என்று ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். 


380. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

என்னுடைய பாட்டியார் முலைக்கா, நபி (ஸல்) அவர்களுக்காக உணவைச் சமைத்து அவர்களை அழைத்தார். நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்ட பின்னர் ‘எழுந்திருங்கள்! உங்களுக்கு நான் தொழுகை நடத்துகிறேன்’ என்று கூறினார்கள்.

நான் புழக்கத்தினால் கறுத்திருந்த எங்களின் ஒரு பாயை எடுத்து அதில் சிறிது தண்ணீர் தெளித்து விரித்தேன். அப்பாயில் நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றார்கள். அவர்களுக்குப் பின்னால் நானும் (எங்களுடன் வாழும்) அனாதையும் நின்றோம். எங்களுக்குப் பின்னால் பாட்டி (முலைக்கா) நிற்குமாறு வரிசைகளை ஒழுங்குபடுத்தினேன். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு இரண்டு ரக்அத் தொழுகை நடத்திவிட்டுச் சென்றார்கள்.

அத்தியாயம்: 8


أَنَّ جَدَّتَهُ مُلَيْكَةَ دَعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ صَنَعَتْهُ لَهُ، فَأَكَلَ مِنْهُ، ثُمَّ قَالَ: «قُومُوا فَلِأُصَلِّ لَكُمْ» قَالَ أَنَسٌ: فَقُمْتُ إِلَى حَصِيرٍ لَنَا، قَدِ اسْوَدَّ مِنْ طُولِ مَا لُبِسَ، فَنَضَحْتُهُ بِمَاءٍ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَصَفَفْتُ وَاليَتِيمَ وَرَاءَهُ، وَالعَجُوزُ مِنْ وَرَائِنَا، فَصَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ، ثُمَّ انْصَرَفَ


Bukhari-379

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 19 சஜ்தா செய்யும் போது தொழுது கொண்டிருப்பவரின் ஆடை அவருடைய மனைவியின் மேல் பட்டுவிட்டால் (அவருடைய தொழுகை பாழாகிவிடுமா?)

 379. ‘நபி(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது நான் அவர்களுக்கு எதிரில் படுத்திருந்தேன். அப்போது நான் மாதவிடாயுடன் இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் ஸுஜுது செய்யும்போது, சில வேளை அவர்களின் ஆடை என் மீது படும். அவர்கள் ஒரு விரிப்பின் மீது தொழுதார்கள்’ என மைமூனா(ரலி) அறிவித்தார்.
Book : 8


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” يُصَلِّي وَأَنَا حِذَاءَهُ، وَأَنَا حَائِضٌ، وَرُبَّمَا أَصَابَنِي ثَوْبُهُ إِذَا سَجَدَ، قَالَتْ: وَكَانَ يُصَلِّي عَلَى الخُمْرَةِ “


Bukhari-378

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

378. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பயணம் செய்துகொண்டிருந்தபோது) தமது குதிரையிலிருந்து கீழே விழுந்துவிட்டார்கள். இதனால் அவர்களது ‘கணைக்கால்’ அல்லது ‘தோள்பட்டை’யில் சிராய்ப்பு ஏற்பட்டு விட்டது.

மேலும், (இந்தக் காலகட்டத்தில்) நபி (ஸல்) அவர்கள் ‘தம் துணைவியரை ஒரு மாத காலத்திற்கு நெருங்கமாட்டேன்’ என்று சத்தியமும் செய்திருந்தார்கள். அப்போது அவர்கள் தமக்குரிய மாடி அறையொன்றில் ஏறி அமர்ந்தார்கள். அதன் படிகள் பேரீச்சங்கட்டையால் ஆனவை.

ஆகவே, அவர்களுடைய தோழர்கள் அவர்களிடம் உடல்நலம் விசாரிக்க வந்தார்கள். அப்போது அவர்களுக்கு அமர்ந்தவாறே தொழுவித்தார்கள்; தோழர்கள் நின்றவாறு தொழுதார்கள். நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்(து தொழுகையை முடித்)தபோது, “பின்பற்றப்படுவதற்காகவே இமாம் ஏற்படுத்தப்பட்டுள்ளார். எனவே, அவர் தக்பீர் சொன்னால் நீங்களும் தக்பீர் சொல்லுங்கள்; அவர் ருகூஉ செய்தால் ருகூஉ செய்யுங்கள்; அவர் சஜ்தா செய்தால் நீங்களும் சஜ்தா செய்யுங்கள்; அவர் நின்றவராகத் தொழுதால் நீங்களும் நின்றவாறு தொழுங்கள்” என்று சொன்னார்கள்.

(அந்த அறையிலிருந்து) அவர்கள் இருபத்தொன்பதாம் நாள் இறங்கிவந்தார்கள். அப்போது மக்கள், “ஒரு மாத காலம் தங்கள் துணைவியரை நெருங்கமாட்டேன்

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَقَطَ عَنْ فَرَسِهِ فَجُحِشَتْ سَاقُهُ – أَوْ كَتِفُهُ – وَآلَى مِنْ نِسَائِهِ شَهْرًا، فَجَلَسَ فِي مَشْرُبَةٍ لَهُ دَرَجَتُهَا مِنْ جُذُوعٍ، فَأَتَاهُ أَصْحَابُهُ يَعُودُونَهُ، فَصَلَّى بِهِمْ جَالِسًا وَهُمْ قِيَامٌ، فَلَمَّا سَلَّمَ قَالَ: «إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا، وَإِنْ صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا» وَنَزَلَ لِتِسْعٍ وَعِشْرِينَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ آلَيْتَ شَهْرًا، فَقَالَ: «إِنَّ الشَّهْرَ تِسْعٌ وَعِشْرُونَ»


Bukhari-377

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 18 மாடியிலும் மேடையிலும் மரப்பலகையிலும் தொழுவது.

அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்: பனிக்கட்டியின் மீதும் பாலத்தின் மீதும் தொழுவது தவறில்லை; அதற்குக் கீழே அல்லது மேலே அல்லது முன்பக்கத்தில் மூத்திரம் (போன்றவை) இருந்தாலும் சரியே! ஆனால், தொழுபவருக்கும் அந்த பாலத்திற் கும் இடையில் (அசுத்தம் சேராதபடி) தடுப்பு ஏதேனும் இருக்க வேண்டும் என ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கருதினார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் இமாமைப் பின்தொடர்ந்து பள்ளிவாசலின் கூரை (மாடி)யில் நின்று தொழுதார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் பனிக் கட்டியின் மேல் நின்று தொழுதார்கள்.

 377. ஸஹ்ல் இப்னு ஸஅதிடம் ‘(நபி(ஸல்) அவர்களின் பிரசங்க) மேடை எதனால் செய்யப்பட்டது?’ என்று (மக்கள்) கேட்டார்கள். அவர், ‘(இப்போது வாழும்) மனிதர்களில் இது பற்றி என்னை விட அதிகம் தெரிந்தவர்கள் எவருமில்லை. அது ஒரு வகைக் காட்டு மரத்தினால் செய்யப்பட்டது. இன்னாருடைய அடிமையான இன்னார்தாம் அதை நபி(ஸல்) அவர்களுக்குச் செய்து கொடுத்தார். அது செய்யப்பட்டு அதற்குரிய இடத்தில் வைக்கப்பட்டதும் அதன் மீது நபி(ஸல்) அவர்கள் நின்று கிப்லாவை முன்னோக்கி(த் தொழுகைக்குத்) தக்பீர் கூறினார்கள். அவர்களுக்குப்

سَأَلُوا سَهْلَ بْنَ سَعْدٍ: مِنْ أَيِّ شَيْءٍ المِنْبَرُ؟ فَقَالَ: مَا بَقِيَ بِالنَّاسِ أَعْلَمُ مِنِّي، هُوَ مِنْ أَثْلِ الغَابَةِ عَمِلَهُ فُلاَنٌ مَوْلَى فُلاَنَةَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «وَقَامَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ عُمِلَ وَوُضِعَ، فَاسْتَقْبَلَ القِبْلَةَ، كَبَّرَ وَقَامَ النَّاسُ خَلْفَهُ، فَقَرَأَ وَرَكَعَ وَرَكَعَ النَّاسُ، خَلْفَهُ ثُمَّ رَفَعَ رَأْسَهُ ثُمَّ رَجَعَ القَهْقَرَى، فَسَجَدَ عَلَى الأَرْضِ، ثُمَّ عَادَ إِلَى المِنْبَرِ، ثُمَّ رَكَعَ ثُمَّ رَفَعَ رَأْسَهُ، ثُمَّ رَجَعَ القَهْقَرَى حَتَّى سَجَدَ بِالأَرْضِ»، فَهَذَا شَأْنُهُ، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: قَالَ عَلِيُّ بْنُ المَدِينِيِّ: ” سَأَلَنِي أَحْمَدُ بْنُ حَنْبَلٍ رَحِمَهُ اللَّهُ عَنْ هَذَا الحَدِيثِ، قَالَ: فَإِنَّمَا أَرَدْتُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ أَعْلَى مِنَ النَّاسِ فَلاَ بَأْسَ أَنْ يَكُونَ الإِمَامُ أَعْلَى مِنَ النَّاسِ بِهَذَا الحَدِيثِ، قَالَ: فَقُلْتُ: إِنَّ سُفْيَانَ بْنَ عُيَيْنَةَ كَانَ يُسْأَلُ عَنْ هَذَا كَثِيرًا فَلَمْ تَسْمَعْهُ مِنْهُ قَالَ: لاَ “


Bukhari-376

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 17

சிவப்பு நிற ஆடையணிந்து தொழுவது (செல்லும்).

 376. தோலினால் செய்யப்பட்ட சிவப்பு நிற மேலங்கியை நபி (ஸல்) அவர்கள் அணிந்திருக்கப் பார்த்தேன். மேலும் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்த தண்ணீரை பிலால்(ரலி) எடுத்துச் செல்வதையும் அந்தத் தண்ணீரை எடுப்பதில் மனிதர்கள் போட்டி போட்டுக் கொள்வதையும் கண்டேன். அந்தத் தண்ணீரைப் பெற்றவர் அதைத் தங்களின் உடம்பில் தடவினார். அந்தத் தண்ணீர் பெறாதவர் தண்ணீரைப் பெற்ற தம் நண்பரின் கையில் உள்ள ஈரத்தைத் தொட்டு(த் தடவி)க் கொண்டார்.

பிலால் (ரலி) ஒரு கைத்தடியை எடுத்து நாட்டினார். நபி (ஸல்) அவர்கள் ஒரு சிவப்பு நிற மேல் அங்கியை அணிந்து ஆயத்தமாம் அந்தத் தடியை(த் தடுப்பாக) வைத்து இரண்டு ரக்அத் ஜமாஅத்தாகத் தொழுதார்கள். அந்தக் கம்பிற்கு அப்பால் மனிதர்களும் ஆடு மாடுகளும் குறுக்கே செல்வதைப் பார்த்தேன்’ என அபூ ஜுஹைஃபா (ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 8


«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي قُبَّةٍ حَمْرَاءَ مِنْ أَدَمٍ، وَرَأَيْتُ بِلاَلًا أَخَذَ وَضُوءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرَأَيْتُ النَّاسَ يَبْتَدِرُونَ ذَاكَ الوَضُوءَ، فَمَنْ أَصَابَ مِنْهُ شَيْئًا تَمَسَّحَ بِهِ، وَمَنْ لَمْ يُصِبْ مِنْهُ شَيْئًا أَخَذَ مِنْ بَلَلِ يَدِ صَاحِبِهِ، ثُمَّ رَأَيْتُ بِلاَلًا أَخَذَ عَنَزَةً، فَرَكَزَهَا وَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حُلَّةٍ حَمْرَاءَ، مُشَمِّرًا  صَلَّى إِلَى العَنَزَةِ بِالنَّاسِ رَكْعَتَيْنِ، وَرَأَيْتُ النَّاسَ وَالدَّوَابَّ يَمُرُّونَ مِنْ بَيْنِ يَدَيِ العَنَزَةِ»


Bukhari-375

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16 ஒருவர் நீண்ட பட்டு உடுப்பை அணிந்து தொழுது விட்டுப் பின்னர் அதைக் கழற்றி விடுவது.

 375. ‘நபி(ஸல்) அவர்களுக்குப் பட்டினாலான மேல் அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதை அவர்கள் அணிந்து தொழுதார்கள். தொழுகையை முடித்த பின்னர் அந்த அங்கியில் வெறுப்புற்றவர்களைப் போன்று வேகமாக அதைக் கழற்றி எறிந்துவிட்டுப் ‘பயபக்தியுடையவர்களுக்கு இந்த ஆடை உகந்ததன்று’ என்று கூறினார்கள்’ என உக்பா இப்னு ஆமிர்(ரலி) கூறினார்.
Book : 8


أُهْدِيَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرُّوجُ حَرِيرٍ، فَلَبِسَهُ، فَصَلَّى فِيهِ، ثُمَّ انْصَرَفَ، فَنَزَعَهُ نَزْعًا شَدِيدًا كَالكَارِهِ لَهُ، وَقَالَ: «لاَ يَنْبَغِي هَذَا لِلْمُتَّقِينَ»


Bukhari-374

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 15

சிலுவை பொறிக்கப்பட்ட அல்லது (உயிரினங்களின்) உருவப் படம் வரையப்பட்ட ஆடையுடன் தொழுதால் தொழுகை பாழாகிவிடுமா? என்பது பற்றியும், இவற்றுக்கு வந்துள்ள தடை பற்றியும்.

 374. ஆயிஷா(ரலி) அவர்களிடம் (உருவப் படங்கள் நிறைந்த) ஒரு திரை இருந்தது. அதனால் தங்களின் வீட்டின் ஓர் ஓரத்தை மறைத்திருந்தார்கள். இதைக் கண்ட நபி (ஸல்) ஆயிஷா (ரலி) அவர்களிடம் ‘உன்னுடைய இந்தத் திரையை நம்மைவிட்டும் அகற்றி விடு. அதிலுள்ள படங்கள் நான் தொழுது கொண்டிருக்கும்போது (என் எண்ணத்தில்) குறுக்கிடுகின்றன’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

அத்தியாயம்: 8


كَانَ قِرَامٌ لِعَائِشَةَ سَتَرَتْ بِهِ جَانِبَ بَيْتِهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمِيطِي عَنَّا قِرَامَكِ هَذَا، فَإِنَّهُ لاَ تَزَالُ تَصَاوِيرُهُ تَعْرِضُ فِي صَلاَتِي»


Bukhari-373

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 14 வேலைப்பாடு மிக்க ஆடையணிந்து தொழும் போது அதன் வேலைப்பாடு கவனத்தை ஈர்த்தால் (என்ன செய்வது?) 

373. நபி(ஸல்) அவர்கள் பல வண்ணங்கள் உள்ள ஓர் ஆடையை அணிந்து தொழுதபோது அந்த வண்ணங்களின் பக்கம் பார்வையைச் செலுத்தினார்கள். அவர்கள் தொழுகையை முடித்ததும், ‘என்னுடைய இந்த ஆடையை எடுத்துச் சென்று அபூ ஜஹ்மிடம் கொடுத்துவிட்டு, அவரின் (வண்ணங்கள் இல்லாத) ஆடையைக் கொண்டு வாருங்கள். இந்த ஆடை சிறிது நேரத்திற்கு முன்னர் என்னுடைய தொழுகையைவிட்டு என் கவனத்தைத் திருப்பிவிட்டது’ என்று கூறினார்கள்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

மற்றோர் அறிவிப்பின்படி, ‘நான் தொழுகையில் நிற்கும்போது அந்த ஆடையின் வண்ணங்களைப் பார்ப்பதால் அது என்னைக் குழப்பி விடுமோ என அஞ்சினேன்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று உள்ளது.
Book : 8


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي خَمِيصَةٍ لَهَا أَعْلاَمٌ، فَنَظَرَ إِلَى أَعْلاَمِهَا نَظْرَةً، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «اذْهَبُوا بِخَمِيصَتِي هَذِهِ إِلَى أَبِي جَهْمٍ وَأْتُونِي بِأَنْبِجَانِيَّةِ أَبِي جَهْمٍ، فَإِنَّهَا أَلْهَتْنِي آنِفًا عَنْ صَلاَتِي»

وَقَالَ هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُنْتُ أَنْظُرُ إِلَى عَلَمِهَا، وَأَنَا فِي الصَّلاَةِ فَأَخَافُ أَنْ تَفْتِنَنِي»


Next Page » « Previous Page