Author: Farook

Bukhari-362

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

362. ‘சில ஆண்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் சிறுவர்களைப் போன்று தங்களின் (சிறிய) வேஷ்டியை தங்களின் கழுத்திலிருந்தே கட்டியிருந்தனர். (இதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் ஆண்களின் பின்னால் தொழுது கொண்டிருந்த) பெண்களிடம், ‘ஆண்கள் ஸுஜுதிலிருந்து எழுந்து அமரும் வரை நீங்கள் உங்களுடைய தலைகளை ஸுஜுதிலிருந்து உயர்த்த வேண்டாம்’ என்று கூறினார்கள்’ என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
Book :8


كَانَ رِجَالٌ يُصَلُّونَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَاقِدِي أُزْرِهِمْ عَلَى أَعْنَاقِهِمْ، كَهَيْئَةِ الصِّبْيَانِ، وَيُقَالُ لِلنِّسَاءِ: «لاَ تَرْفَعْنَ رُءُوسَكُنَّ حَتَّى يَسْتَوِيَ الرِّجَالُ جُلُوسًا»


Bukhari-361

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6

ஆடை சிறியதாக இருந்தால் (என்ன செய்ய வேண்டும்?)

 361. ‘நாங்கள் ஓர் ஆடை மட்டும் அணிந்து தொழுவது பற்றி ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, ‘நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றிருந்தேன். ஒரு நாள் இரவு என்னுடைய ஒரு வேலைக்காக நபி (ஸல்) அவர்களை நான் சந்தித்தபோது அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். என் மீது ஒரே ஓர் ஆடை மட்டுமே இருந்தது. அதை நான் சேர்த்து நெருக்கமாகச் சுற்றிக் கொண்டு நபி (ஸல்) அவர்களின் அருகில் நின்று தொழுதேன்.

அவர்கள் தொழுகையை முடித்ததும், ‘ஜாபிரே! என்ன இரவு நேரத்தில் வந்திருக்கிறிர்?’ என்று கேட்டார்கள். நான் வந்த நோக்கத்தை அவர்களிடம் சொன்னேன். சொல்லி முடித்ததும் ‘இது என்ன? கை கால்கள் வெளியே தெரியாமல் (துணியால்) நெருக்கமாகச் சுற்றியிருப்பதைப் பார்க்கிறேன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் இது இறுக்கமான ஆடை என்று நான் கூறியதும் நபி (ஸல்) அவர்கள், ‘ஆடை விசாலமானதாக இருந்தால் அதன் ஓர் ஓரத்தை வலது தோளிலும் மற்றொரு ஒரத்தை இடது தோளிலுமாக அணிந்து கொள்ளுங்கள். ஆடை சிறிதாக இருந்தால் அதை இடுப்பில் அணிந்து கொள்ளுங்கள்’ என்றார்கள்’ என்று ஜாபிர் (ரலி) விடையளித்தார்கள்’ என ஸயீத் இப்னு அல்ஹாரிஸ் அறிவித்தார்.

سَأَلْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ عَنِ الصَّلاَةِ فِي الثَّوْبِ الوَاحِدِ، فَقَالَ: خَرَجْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ أَسْفَارِهِ، فَجِئْتُ لَيْلَةً لِبَعْضِ أَمْرِي، فَوَجَدْتُهُ يُصَلِّي، وَعَلَيَّ ثَوْبٌ وَاحِدٌ، فَاشْتَمَلْتُ بِهِ وَصَلَّيْتُ إِلَى جَانِبِهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «مَا السُّرَى يَا جَابِرُ» فَأَخْبَرْتُهُ بِحَاجَتِي، فَلَمَّا فَرَغْتُ قَالَ: «مَا هَذَا الِاشْتِمَالُ الَّذِي رَأَيْتُ»، قُلْتُ: كَانَ ثَوْبٌ – يَعْنِي ضَاقَ – قَالَ: «فَإِنْ كَانَ وَاسِعًا فَالْتَحِفْ بِهِ، وَإِنْ كَانَ ضَيِّقًا فَاتَّزِرْ بِهِ»


Bukhari-360

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

360. ‘ஓர் ஆடையை மட்டும் அணிந்து தொழுபவர் அந்த ஆடையின் இரண்டு ஓரத்தையும் மாற்றி அணியட்டும்’ (அதாவது வலப்புற ஓரத்தை இடது தோளிலும் அணியட்டும்)’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :8


«مَنْ صَلَّى فِي ثَوْبٍ وَاحِدٍ فَلْيُخَالِفْ بَيْنَ طَرَفَيْهِ»


Bukhari-359

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 5

ஒரே ஆடையை அணிந்து தொழும் போது அதன் இரு ஓரங்களையும் தோள்கள் மீது போட்டுக் கொள்ள வேண்டும். 

359. உங்களில் ஒருவர் தன்னுடைய தோளின் மீது எதுவும் இல்லாதிருக்க ஓர் ஆடையை மட்டும் அணிந்து தொழ வேண்டாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 8


«لاَ يُصَلِّي أَحَدُكُمْ فِي الثَّوْبِ الوَاحِدِ لَيْسَ عَلَى عَاتِقَيْهِ شَيْءٌ»


Bukhari-358

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

358. ‘ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் ஒரே ஆடையை அணிந்து தொழுவதைப் பற்றிக் கேட்டதற்கு, ‘உங்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஆடைகள் இருக்கின்றனவா?’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கேட்டார்கள்’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :8


أَنَّ سَائِلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصَّلاَةِ فِي ثَوْبٍ وَاحِدٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوَلِكُلِّكُمْ ثَوْبَانِ»


Bukhari-357

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

357. உம்முஹானி பின்த் அபூதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கா வெற்றிகொள்ளப்பட்ட ஆண்டில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். (வெற்றி கிட்டிய அந்த நாளில்) நபி (ஸல்) அவர்கள் குளித்துக்கொண்டிருப்பதைக் கண்டேன். அவர்களை, அவர்களுடைய புதல்வி ஃபாத்திமா (ரலி) அவர்கள் (ஒரு துணியால்) மறைத்துக்கொண்டிருந்தார்கள்.

அப்போது அவர்களுக்கு நான் ஸலாம் கூறினேன். (அதைக் கேட்ட) அவர்கள், “யார் அது?” என்று கேட்டார்கள். அதற்கு “நான் உம்மு ஹானீ பின்த் அபீதாலிப்” என்றேன். “உம்மு ஹானியே! வருக!” என்று சொன்னார்கள்.

அவர்கள் குளித்து முடித்ததும் ஒரே ஆடையை மாற்றிப் போட்டுக்கொண்டு எட்டு ரக்அத்கள் தொழுதார்கள்.

அவர்கள் தொழுது முடித்ததும், “அல்லாஹ்வின் தூதரே! என் தாயாரின் மகன் (என் சகோதரர் அலீ,) நான் புகலிடம் அளித்திருக்கும் ஒரு மனிதரை (ஹுபைராவின் மகன் இன்னாரை) தாம் கொல்லப் போவதாகக் கூறுகிறார்” என்று சொன்னேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உம்மு ஹானியே! நீ அபயம் அளித்தவருக்கு நாமும் அபயம் அளித்து விட்டோம் (ஆகவே கவலை வேண்டாம்)” என்று கூறினார்கள். (நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்ற) அந்த நேரம் முற்பகல் (ளுஹா) நேரமாக இருந்தது.

அத்தியாயம் : 8


ذَهَبْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الفَتْحِ، فَوَجَدْتُهُ يَغْتَسِلُ وَفَاطِمَةُ ابْنَتُهُ تَسْتُرُهُ، قَالَتْ: فَسَلَّمْتُ عَلَيْهِ، فَقَالَ: «مَنْ هَذِهِ» ، فَقُلْتُ: أَنَا أُمُّ هَانِئٍ بِنْتُ أَبِي طَالِبٍ فَقَالَ: «مَرْحَبًا بِأُمِّ هَانِئٍ»، فَلَمَّا فَرَغَ مِنْ غُسْلِهِ، قَامَ فَصَلَّى ثَمَانِيَ رَكَعَاتٍ مُلْتَحِفًا فِي ثَوْبٍ وَاحِدٍ، فَلَمَّا انْصَرَفَ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، زَعَمَ ابْنُ أُمِّي أَنَّهُ قَاتِلٌ رَجُلًا قَدْ أَجَرْتُهُ، فُلاَنَ ابْنَ هُبَيْرَةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ أَجَرْنَا مَنْ أَجَرْتِ يَا أُمَّ هَانِئٍ» قَالَتْ أُمُّ هَانِئٍ: وَذَاكَ ضُحًى


Bukhari-356

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

356. ‘உம்மு ஸலமா(ரலி) அவர்களின் வீட்டில் நபி(ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து, அதன் இரண்டு ஓரத்தையும் இரண்டு தோள்களின் மீது மாற்றிப் போட்டு தொழுததை பார்த்திருக்கிறேன்’ என உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) கூறினார்.
Book :8


«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ مُشْتَمِلًا بِهِ فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ وَاضِعًا طَرَفَيْهِ عَلَى عَاتِقَيْهِ»


Bukhari-355

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

355. ‘உம்மு ஸலமா(ரலி) அவர்களின் வீட்டில் நபி(ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து, அதன் இரண்டு ஓரத்தையும் இரண்டு தோள்களின் மீது மாற்றிப் போட்டு தொழுதார்கள்’ என உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) அறிவித்தார்.
Book :8


أَنَّهُ «رَأَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ قَدْ أَلْقَى طَرَفَيْهِ عَلَى عَاتِقَيْهِ»


Bukhari-354

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 (விசாலமான) ஒரே ஆடையில் அதன் இரு ஓரங்களையும் வல-இடத்தோள்கள் மீது மாற்றிப் போட்டு, (நெஞ்சில் முடிந்து கொண்டு) தொழுவது.

இது குறித்த தமது ஹதீஸில் முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் முல்தஹிஃப் என்பதற்கு முத்தவஷ்ஷிஹ் என்று பொருள் என்று கூறினார்கள். இதுவே முகாலிஃப் ஆகும்.. (அதாவது,) ஒருவர் தமது வேஷ்டியின் (வலப்பக்க ஓரத்தை இடது தோளின் மீதும் இடப்பக்க ஓரத்தை வலது தோளின் மீதும் இருக்கும் அமைப்பில்) இரு ஓரங்களையும் தமது தோள்கள் மீது போட்டுக் கொள்வது(ம், பிறகு வலத் தோள் மீது இட்ட ஓரத்தை இடக்கரத்திற்கு கீழேயும், இடத் தோள் மீது இட்டட ஓரத்தை வலக்கரத்திற்கு கீழே கொண்டுவந்து இரண்டையும் நெஞ்சின் மீது முடிந்து கொள்வது) ஆகும். இதற்கே அல்இஷ்திமாலு அலல் மன்கிபைனி எனப்படுகிறது.

உம்மு ஹானீ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை சுற்றிக் கொண்டு அதன் இரு ஓரங்களையும் தமது (வல-இடத்) தோள்கள் மீது மாற்றிப் போட்டுக் கொண்டார்கள்.. 

354. ‘நபி(ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து, அதன் இரண்டு ஓரத்தையும் இரண்டு தோள்களின் மீது மாற்றிப் போட்டு தொழுதார்கள்’ என உமர் இப்னு அபீ ஸலமா(ரலி) அறிவித்தார்.
Book : 8


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي ثَوْبٍ وَاحِدٍ قَدْ خَالَفَ بَيْنَ طَرَفَيْهِ»


Bukhari-353

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

353. ‘ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) ஒரே ஆடையை அணிந்தவர்களாகத் தொழுதுவிட்டு ‘நபி(ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து தொழுததைக் கண்டேன்’ என்று கூறினார்கள்’ என முஹம்மத் இப்னு அல் முன்கதிர் என்பவர் அறிவித்தார்.
Book :8


قَالَ: رَأَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ، وَقَالَ: «رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي ثَوْبٍ»


Next Page » « Previous Page