Author: Farook

Bukhari-302

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

302. ‘எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அணைத்துக் கொள்ள நபி(ஸல்) அவர்கள் விரும்பினால் மாதவிடாய் போகும் இடத்தைத் துணியால் கட்டிக் கொள்ளுமாறு கட்டளையிட்டுவிட்டு அவரை அணைத்துக் கொள்வார்கள். நபி(ஸல்) அவர்கள் தங்களின் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்வது போன்று உங்களில் யார் தன்னுடைய மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ளமுடியும்?’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book :6


كَانَتْ إِحْدَانَا إِذَا كَانَتْ حَائِضًا، فَأَرَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُبَاشِرَهَا ” أَمَرَهَا أَنْ تَتَّزِرَ فِي فَوْرِ حَيْضَتِهَا، ثُمَّ يُبَاشِرُهَا، قَالَتْ: وَأَيُّكُمْ يَمْلِكُ إِرْبَهُ، كَمَا كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْلِكُ إِرْبَهُ “


Bukhari-301

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

301. ‘நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் ‘இஃதிகாஃப்’ இருக்கும்போது அங்கிருந்தவாறே என் (அறையின்) பக்கம் தலையைக் காட்டுவார்கள். நான் மாதவிடாய்க் காரியாக இருக்கும் நிலையில் அவர்களின் தலையைக் கழுவுவேன்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book :6


« وَكَانَ يُخْرِجُ رَأْسَهُ إِلَيَّ وَهُوَ مُعْتَكِفٌ فَأَغْسِلُهُ وَأَنَا حَائِضٌ»


Bukhari-300

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

300. ‘எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது என் இடுப்பில் ஆடையைக் கட்டிக் கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறுவார்கள். (நான் அவ்வாறே செய்வேன்) அவர்கள் என்னை அணைத்துக் கொள்வார்கள்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book :6


« وَكَانَ يَأْمُرُنِي، فَأَتَّزِرُ، فَيُبَاشِرُنِي وَأَنَا حَائِضٌ »


Bukhari-299

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 மாதவிடாய் ஏற்பட்டுள்ள மனைவியை அணைத்துக் கொள்ளுதல்.

 299. ‘நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் (ஒன்றாக நீரள்ளி) கடமையான குளிப்பைக் குளித்தோம்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 6


«كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ كِلاَنَا جُنُبٌ»


Bukhari-298

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 பிரசவத் தீட்டைக் குறிக்கும் நிஃபாஸ் எனும் சொல்லை மாதவிடாய் (-ஹைள்)க்கும் பயன்படுத்துவது.

 298. ‘நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப் படுத்துக் கொண்டிருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். ‘உனக்கு நிஃபாஸ் (மாதவிடாய்) ஏற்பட்டுவிட்டதா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘ஆம்’ என்றேன். ஆயினும் அவர்கள் என்னை அருகில் வரக் கூறினார்கள். நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்’ என உம்முஸலமா(ரலி) அறிவித்தார்.
Book : 6


بَيْنَا أَنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مُضْطَجِعَةٌ فِي خَمِيصَةٍ، إِذْ حِضْتُ، فَانْسَلَلْتُ، فَأَخَذْتُ ثِيَابَ حِيضَتِي، قَالَ: «أَنُفِسْتِ» قُلْتُ: نَعَمْ، فَدَعَانِي، فَاضْطَجَعْتُ مَعَهُ فِي الخَمِيلَةِ


Bukhari-297

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3 மாதவிடாய் நிலையிலுள்ள தம் மனைவியின் மடியில் தலைவைத்த வண்ணம் ஒருவர் திருக்குர்ஆன் ஓதுவது. அபூவாயில் (ஷகீக் பின் சலமா-ரஹ்) அவர்கள் மாதவிடாய் நிலையிலிருக்கும் தம் பணிப் பெண்ணை (தம் முன்னாள் அடிமையான) அபூரஸீன் (மஸ்ஊத்பின் மாலிக் – ரஹ்) அவர்களிடம் அனுப்பிவைத்து, திருக்குர்ஆனை வாங்கி வரச் சொல்வார்கள். அவள் அந்தக் குர்ஆனைக் கட்டியிருக்கும் கயிற்றைப் பிடித்துக் கொண்டு அவர்களிடம் வருவாள்.

 297. ‘எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book : 6


«كَانَ يَتَّكِئُ فِي حَجْرِي وَأَنَا حَائِضٌ، ثُمَّ يَقْرَأُ القُرْآنَ»


Bukhari-296

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

296. ‘ஒருவர் ‘தம் மனைவி குளிப்புக் கடமையான நிலையில் தம்முடன் நெருங்கலாமா? மாதவிடாய்க்காரி தமக்குப் பணிவிடை செய்யலாமா?’ என்று உர்வாவிடம் கேட்டதற்கு உர்வா ‘அது எல்லாமே என்னிடம் சிறிய விஷயம்தான். (என் மனைவியர்) எல்லோருமே எனக்குப் பணிவிடை செய்வார்கள். அவ்வாறு செய்வதில் யார் மீதும் எந்தக் குற்றமுமில்லை. ஆயிஷா(ரலி)வுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் தலை முடியைச் சீவி விடுவார்கள். என ஆயிஷா(ரலி) என்னிடம் கூறினார்’ என்றார்’ என ஹிஷாம் அறிவித்தார்.
Book :6


أَنَّهُ سُئِلَ أَتَخْدُمُنِي الحَائِضُ أَوْ تَدْنُو مِنِّي المَرْأَةُ وَهِيَ جُنُبٌ؟ فَقَالَ عُرْوَةُ: كُلُّ ذَلِكَ عَلَيَّ هَيِّنٌ، وَكُلُّ ذَلِكَ تَخْدُمُنِي وَلَيْسَ عَلَى أَحَدٍ فِي ذَلِكَ بَأْسٌ أَخْبَرَتْنِي عَائِشَةُ: «أَنَّهَا كَانَتْ تُرَجِّلُ، تَعْنِي رَأْسَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهِيَ حَائِضٌ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَئِذٍ مُجَاوِرٌ فِي المَسْجِدِ، يُدْنِي لَهَا رَأْسَهُ، وَهِيَ فِي حُجْرَتِهَا، فَتُرَجِّلُهُ وَهِيَ حَائِضٌ»


Bukhari-295

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 2

மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் தன் கணவரின் தலையைக் கழுவுவதும் அவரது தலைமுடியை வாரிவிடுவதும். 

295. நான் மாதவிடாயுடன் இருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்களின் தலை முடியைச் சீவி விடுவேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 6


«كُنْتُ أُرَجِّلُ رَأْسَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا حَائِضٌ»


Bukhari-294

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அத்தியாயம்: 6

மாதவிடாய்

பாடம் : 1

மாதவிடாய் எப்படி ஆரம்பமானது?

நபி (ஸல்) அவர்கள், “இ(ந்த மாத விடாயான)து, ஆதமுடைய பெண் மக்கள்மீது அல்லாஹ் எழுதிவிட்ட ஒன்றாகும்” என்று சொன்னார்கள். சிலர், “பனூ இஸ்ராயீல் சமுதாயப் பெண்களிருந்தே முதன் முதலில் மாதவிடாய் ஆரம்பமானது” என்று கூறுகின்றனர். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகின்றேன்: நபி (ஸல்) அவர்களின் மேற்கண்ட பொன்மொழி பொதுவானது ஆகும்.

294. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (‘விடைபெறும்’ ஹஜ்ஜுக்காகப்) புறப்பட்டுச் சென்றோம். ஹஜ்ஜைத் தவிர வேறெதையும் நாங்கள் எண்ணியிருக்கவில்லை. (மக்காவுக்கு அருகிலுள்ள) ‘சரிஃப்’ எனும் இடத்தில் நாங்கள் இருந்தபோது, எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அழுதுகொண்டிருக்கவே, “உனக்கு என்ன நேர்ந்தது? உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்றேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது (மாதவிடாய்), அல்லாஹ் ஆதமின் பெண் மக்களுக்கு எழுதிவிட்ட விதியாகும். ஆகவே, ஹஜ் செய்பவர் நிறைவேற்றும் (கிரியைகள்) அனைத்தையும் நீயும் நிறைவேற்று. ஆனால், இறையில்லம் கஅபாவை மட்டும் சுற்றி (தவாஃப்) வராதே” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்த

خَرَجْنَا لاَ نَرَى إِلَّا الحَجَّ، فَلَمَّا كُنَّا بِسَرِفَ حِضْتُ، فَدَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَبْكِي، قَالَ: «مَا لَكِ أَنُفِسْتِ؟». قُلْتُ: نَعَمْ، قَالَ: «إِنَّ هَذَا أَمْرٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ، فَاقْضِي مَا يَقْضِي الحَاجُّ، غَيْرَ أَنْ لاَ تَطُوفِي بِالْبَيْتِ» قَالَتْ: وَضَحَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نِسَائِهِ بِالْبَقَرِ


Bukhari-293

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

293. நபி(ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தங்களின் மனைவியிடம் உறவு கொண்ட பின்னரும் இந்திரியம் வெளியாகாமலிருந்தால் அவரின் மீது குளிப்புக் கடமையாகுமா? என நான் கேட்டதற்கு, ‘மனைவியிடமிருந்து பட்ட இடத்தைக் கழுவ வேண்டும்; பின்னர் உளூச் செய்து தொழுது கொள்ளலாம்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உபை இப்னு கஅப்(ரலி) அறிவித்தார்.

‘குளிப்பதுதான் சிறந்தது. ஆனால் இந்த ஹதீஸ் கடைசிக் கட்டளையாக இருந்தது. இதில் கருத்து வேறுபாடு உள்ளது என்பதற்காகத்தான் இந்த ஹதீஸை இங்கு குறிப்பிட்டேன்’ என்று அபூ அப்தில்லாஹ் (புகாரி) ஆகிய நான் கூறுகிறேன்.
Book :5


يَا رَسُولَ اللَّهِ: إِذَا جَامَعَ الرَّجُلُ المَرْأَةَ فَلَمْ يُنْزِلْ؟ قَالَ: «يَغْسِلُ مَا مَسَّ المَرْأَةَ مِنْهُ، ثُمَّ يَتَوَضَّأُ وَيُصَلِّي»


Next Page » « Previous Page