Author: Farook

Hakim-7709

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7709. தன்னுடைய வயிற்றின் மீது (குப்புறப்) படுத்திருந்த ஒரு மனிதரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் அவரை தனது காலால் தட்டி, “இவ்வாறு படுப்பதை அல்லாஹ் விரும்ப மாட்டான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِرَجُلٍ مُضْطَجِعٍ عَلَى بَطْنِهِ فَضَرَبَهُ بِرِجْلِهِ وَقَالَ: «إِنَّهَا ضِجْعَةٌ لَا يُحِبُّهَا اللَّهُ عَزَّ وَجَلَّ»


Ibn-Hibban-5549

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

ஒருவர் குப்புறப் படுப்பதை அல்லாஹ் விரும்பமாட்டான் என்பதால் அதைப் பற்றி வந்துள்ள கண்டனம்.

5549. தன்னுடைய வயிற்றின் மீது (குப்புறப்) படுத்திருந்த ஒரு மனிதரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் அவரை தனது காலால் தட்டி, “இவ்வாறு படுப்பதை அல்லாஹ் விரும்ப மாட்டான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَجُلٍ مُضْطَجِعٍ عَلَى بَطْنِهِ، فَغَمَزَهُ بِرِجْلِهِ، وَقَالَ: «إِنَّ هَذِهِ ضِجْعَةٌ لَا يُحِبُّهَا اللَّهُ»


Bazzar-7982

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7982. தன்னுடைய வயிற்றின் மீது (குப்புறப்) படுத்திருந்த ஒரு மனிதரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள், “இவ்வாறு படுப்பதை அல்லாஹ் விரும்ப மாட்டான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم على رجل مضطجع على بطنه فقال: إن هذه ضجعة لا يحبها الله.


Musannaf-Ibn-Abi-Shaybah-26680

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

26680.


بَيْنَمَا أَنَا نَائِمٌ عَلَى بَطْنِي مِنَ السَّحَرِ، إِذْ دَفَعَنِي رَجُلٌ بِرِجْلِهِ، فَقَالَ: «هَذِهِ ضِجْعَةٌ يُبْغِضُهَا اللَّهُ»، فَرَفَعْتُ رَأْسِي، فَإِذَا هُوَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Musannaf-Abdur-Razzaq-20712

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

20712. …


دَعَانِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى مَنْزِلِهِ، وَرَهْطٌ مَعَهُ مِنْ أَهْلِ الصُّفَّةِ، فَدَخَلْنَا مَنْزِلَهُ، فَقَالَ: أَطْعِمِينَا يَا عَائِشَةُ، فَأَتَتْ بِشَيْءٍ فَأَكَلُوهُ، ثُمَّ قَالَ: زِيدِينَا يَا عَائِشَةُ، فَزَادَتْهُمْ شَيْئًا يَسِيرًا، أَقَلَّ مِنَ الأَوَّلِ، ثُمَّ قَالَ: اسْقِينَا يَا عَائِشَةُ، فَجَاءَتْ بِقَدَحٍ مِنْ لَبَنٍ، فَشَرِبُوا، ثُمَّ قَالَ: زِيدِينَا يَا عَائِشَةُ، فَجَاءَتْ بِقَعْبٍ مِنْ لَبَنٍ، ثُمَّ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنْ شِئْتُمْ رَقَدْتُمْ هَاهُنَا، وَإِنْ شِئْتُمْ فِي المَسْجِدِ، قَالُوا: بَلْ فِي المَسْجِدِ، قَالَ: فَخَرَجْنَا، فَنِمْنَا فِي المَسْجِدِ، حَتَّى إِذَا كَانَ السَّحَرُ، كَظَّنِي بَطْنِي، فَنِمْتُ عَلَى بَطْنِي، فَإِذَا رَجُلٌ يُحَرِّكُنِي بِرِجْلِهِ وَيَقُولُ: هَكَذَا، فَإِنَّ هَذِهِ ضِجْعَةٌ يُبْغِضُهَا اللهُ، قَالَ: فَرَفَعْتُ رَأْسِي، فَإِذَا هُوَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.


Musannaf-Ibn-Abi-Shaybah-26679

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

முகம் குப்புறப் படுத்திருந்த மனிதர் பற்றி வந்துள்ள செய்தி.

26679. தன்னுடைய முகத்தின் மீது (குப்புறப்) படுத்திருந்த ஒரு மனிதரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள், “இவ்வாறு படுப்பதை அல்லாஹ் விரும்ப மாட்டான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ مُنْبَطِحٍ عَلَى بَطْنِهِ، فَقَالَ: «إِنَّ هَذِهِ ضِجْعَةٌ لَا يُحِبُّهَا اللَّهُ»


Musannaf-Abdur-Razzaq-20713

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

20713. இப்னு ஸீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆண்கள் தன்னுடைய வயிற்றின் மீது (குப்புறப்) படுப்பதும், பெண்கள் தன்னுடைய பிடரியின் மீது (மல்லாந்து) படுப்பதும் வெறுப்பிற்குரிய செயலாகும்.

அறிவிப்பவர்: அய்யூப் அஸ்ஸிக்தியானீ (ரஹ்)

 


يُكْرَهُ لِلرَّجُلِ أَنْ يَضْطَجِعَ عَلَى بَطْنِهِ، وَالمَرْأَةِ عَلَى قَفَاهَا.


Musnad-Ahmad-19473

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

19473. அம்ர் பின் அஷ்ஷரீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முகம்குப்புற படுத்துக்கிடந்த ஒரு மனிதரைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள், “இவர் தான் தூங்குபவர்களில் அல்லாஹ்விடத்தில் மிகவும் வெறுப்பிற்குரியவர் ஆவார்” என்று கூறினார்கள் என்ற செய்தி நமக்கு கிடைத்தது.

அறிவிப்பவர்: இப்ராஹீம் பின் மைஸரா (ரஹ்)


 بَلَغَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى رَجُلٍ وَهُوَ رَاقِدٌ عَلَى وَجْهِهِ، فَقَالَ: «هَذَا أَبْغَضُ الرُّقَادِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ»


Musnad-Ahmad-19458

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

19458. அம்ர் பின் அஷ்ஷரீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், முகம்குப்புற படுத்துக்கிடக்கும்… ஒருவரைக் கண்டால் அவரை தன் காலால் தட்டி, “இந்தத் தூக்கம் அல்லாஹ்விடத்தில் மிகவும் வெறுப்பிற்குரிய தூக்கமாகும்” என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: இப்ராஹீம் பின் மைஸரா (ரஹ்)


أَنَّهُ كَانَ إِذَا وَجَدَ الرَّجُلَ رَاقِدًا عَلَى وَجْهِهِ لَيْسَ عَلَى عَجُزِهِ شَيْءٌ، رَكَضَهُ بِرِجْلِهِ، وَقَالَ: «هِيَ أَبْغَضُ الرِّقْدَةِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ»


Next Page » « Previous Page