16466. “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மழை வேண்டித் தொழும் திடலுக்குச் சென்றார்கள். (திடலில்) கிப்லாவை நோக்கித் திரும்பி நின்ற போது, தமது மேல்துண்டை மாற்றிப் போட்டுக் கொண்டார்கள்” என்று அப்துல்லாஹ் பின் ஸைத் அல்மாஸினீ (ரலி) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: அப்பாத் பின் தமீம் (ரஹ்)
இமாம் அஹ்மத் கூறுகிறார்:
அறிவிப்பாளர் இஸ்ஹாக் அவர்களின் அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாற்றுவதற்கு (பிரார்த்தனை செய்வதற்கு) முன்பு தொழுகையைத் துவங்கினார்கள். பிறகு கிப்லாவை முன்னோக்கிப் பிரார்த்தனை செய்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.
«خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمُصَلَّى وَاسْتَسْقَى، وَحَوَّلَ رِدَاءَهُ حِينَ اسْتَقْبَلَ الْقِبْلَةَ» ،
قَالَ إِسْحَاقُ فِي حَدِيثِهِ: وَبَدَأَ بِالصَّلَاةِ قَبْلَ الْخُطْبَةِ، ثُمَّ اسْتَقْبَلَ الْقِبْلَةَ فَدَعَا
சமீப விமர்சனங்கள்