Author: Farook

Almujam-Alawsat-858

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

858. விபச்சாரத்தில் பிறந்த குழந்தை சொர்க்கத்தில் நுழைய முடியாது. (ஏன்) அந்தக் குழந்தையின் சந்ததிகளில் ஏழு தந்தை வரை (பிறந்தவர்களில்) எவரும் நுழைய முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«لَا يَدْخُلُ وَلَدُ الزِّنَا الْجَنَّةَ وَلَا شَيْءٌ مِنْ نَسْلِهِ إِلَى سَبْعَةِ آبَاءٍ»


Kubra-Nasaayi-3920

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3920. ருக்னுல் யமானிக்கும், ஹஜருல் அஸ்வதுக்கும் இடையே “ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்” என்று நபி (ஸல்) கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸாயிப் (ரலி)


سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ بَيْنَ الرُّكْنِ الْيَمَانِيِّ وَالْحَجَرِ: {رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا} [البقرة: 201] عَذَابَ النَّارِ


Musannaf-Ibn-Abi-Shaybah-29632

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

29632. ருக்னுல் யமானிக்கும், ஹஜருல் அஸ்வதுக்கும் இடையே “ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்” என்று நபி (ஸல்) கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸாயிப் (ரலி)


قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ بَيْنَ الرُّكْنِ، وَالْحَجَرِ: ” {رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا} [البقرة: 201] عَذَابَ النَّارِ


Musannaf-Ibn-Abi-Shaybah-15815

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

15815. ருக்னுல் யமானிக்கும், ஹஜருல் அஸ்வதுக்கும் இடையே “ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்” என்று நபி (ஸல்) கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸாயிப் (ரலி)


سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الرُّكْنِ وَالْحَجَرِ يَقُولُ: «رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الْآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ»


Shuabul-Iman-3480

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3480. துல்ஹஜ் மாதத்தின் இந்தப் பத்து நாட்களில் நிறைவேற்றப்படும் வழிபாடுகள் மற்ற நாட்களில் நிறைவேற்றப்படும் வழிபாடுகளைவிட அல்லாஹ் வுக்கு மிகவும் விருப்பமானவை ஆகும். அவற்றில் நோற்கப்படும் ஒவ்வொரு நாளின் நோன்பும் ஓராண்டு நோன்புக்கு நிகரானதாகும். அவற்றில் ஒவ்வோர் இரவில் நின்று தொழுவதும் லைலத்துல் கத்ர் இரவில் நின்று தொழுவதற்கு நிகரானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),


مَا مِنْ أَيَّامٍ مِنْ أَيَّامِ الدُّنْيَا أَحَبُّ إِلَى اللهِ أَنْ يُتَعَبَّدَ لَهُ فِيهَا مِنْ أَيَّامِ الْعَشْرِ يَعْدِلُ صِيَامَ كُلَّ يَوْمٍ مِنْهَا بِصِيَامِ سَنَةٍ، وَقِيَامَ كُلَّ لَيْلَةٍ بِقِيَامِ لَيْلَةِ الْقَدْرِ


Musnad-Ahmad-23936

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

23936.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுடைய கப்ருகளை தரையோடு மட்டமாக ஆக்குங்கள்.

அறிவிப்பவர்: ஃபழாலா பின் உபைத் (ரலி)


غَزَوْنَا أَرْضَ الرُّومِ وَعَلَى ذَلِكَ الْجَيْشِ فَضَالَةُ بْنُ عُبَيْدٍ الْأَنْصَارِيُّ فَذَكَرَ الْحَدِيثَ فَقَالَ فَضَالَةُ: خَفِّفُوا، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَأْمُرُ بِتَسْوِيَةِ الْقُبُورِ»


Musnad-Ahmad-23934

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

23934.

…அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுடைய கப்ருகளை தரையோடு மட்டமாக ஆக்குங்கள்.

அறிவிப்பவர்: ஃபழாலா பின் உபைத் (ரலி)


خَرَجْنَا مَعَ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ إِلَى أَرْضِ الرُّومِ، وَكَانَ عَامِلًا لِمُعَاوِيَةَ عَلَى الدَّرْبِ، فَأُصِيبَ ابْنُ عَمٍّ لَنَا فَصَلَّى عَلَيْهِ فَضَالَةُ، وَقَامَ عَلَى حُفْرَتِهِ حَتَّى وَارَاهُ، فَلَمَّا سَوَّيْنَا عَلَيْهِ حُفْرَتَهُ قَالَ: أَخِفُّوا عَنْهُ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يَأْمُرُنَا بِتَسْوِيَةِ الْقُبُورِ»


Musnad-Ahmad-23959

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

23959. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுடைய கப்ருகளை தரையோடு மட்டமாக ஆக்குங்கள்.

அறிவிப்பவர்: ஃபழாலா பின் உபைத் (ரலி)


أَنَّهُ رَأَى فَضَالَةَ بْنَ عُبَيْدٍ أَمَرَ بِقُبُورِ الْمُسْلِمِينَ فَسُوِّيَتْ بِأَرْضِ الرُّومِ وَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «سَوُّوا قُبُورَكُمْ بِالْأَرْضِ»


Ibn-Hibban-1137

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1137.


«دَعَتِ امْرَأَةٌ مِنَ الْأَنْصَارِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى شَاةٍ، فَأَكَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ، فَحَضَرَتِ الصَّلَاةُ، فَتَوَضَّأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ عَادَ إِلَى بَقِيَّتِهَا فَأَكَلُوا، فَحَضَرَتِ الْعَصْرُ، فَلَمْ يَتَوَضَّأْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ».


Abi-Yala-2160

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2160. நபியவர்களுடன் நாங்களும் ஒரு அன்சாரித் தோழியரின் விருந்துக்காகச் சென்றோம். அப்போது அவர்கள் விரிப்பை விரித்து, அதைச் சுற்றி தண்ணீர் தெளித்தார்கள். எங்களுக்காக உணவு தயாரித்திருந்தார்கள். நபியவர்களுடன் நாங்களும் சாப்பிட்டோம். பின்னர் லுஹர் தொழுகைக்காக உளூச் செய்து தொழுதோம். அப்போது அந்தப் பெண்மணி, ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்காக அறுத்த ஆட்டின் இறைச்சி அதிகமாக இன்னும் மீதம் இருக்கிறது. தாங்கள் மாலை உணவுக்கும் வருவீர்களா?’’ என்று கேட்டதற்கு, நபியவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள். பிறகு நபியவர்களுடன் நாங்களும் சாப்பிட்டோம். பிறகு உளூவுச் செய்யாமலே அஸர் தொழுகையைத் தொழுதோம்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى امْرَأَةً مِنَ الْأَنْصَارِ فَبَسَطَتْ لَهُ عِنْدَ صُورٍ وَرَشَّتْ حَوْلَهُ، وَذَبَحَتْ شَاةً، وَصَنَعَتْ لَهُ طَعَامًا، فَأَكَلَ وَأَكَلْنَا مَعَهُ ثُمَّ تَوَضَّأَ لِصَلَاةِ الظُّهْرِ فَصَلَّى، فَقَالَتِ الْمَرْأَةُ: يَا رَسُولَ اللَّهِ، قَدْ فَضَلَتْ عِنْدَنَا مِنْ شَاتِنَا فَضْلَةً، فَهَلْ لَكَ فِي الْعَشَاءِ؟ قَالَ: «نَعَمْ» فَأَكَلَ وَأَكَلْنَا ثُمَّ صَلَّى الْعَصْرَ وَلَمْ يَتَوَضَّأْ


Next Page » « Previous Page