Author: Farook

Musnad-Ahmad-412

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

412.


«إِنَّ خَيْرَكُمْ مَنْ عَلَّمَ الْقُرْآنَ أَوْ تَعَلَّمَهُ» ، قَالَ مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ وَحَجَّاجٌ: قال: فَقَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: فَذَاكَ الَّذِي أَقْعَدَنِي هَذَا الْمَقْعَدَ، قَالَ حَجَّاجٌ: قَالَ شُعْبَةُ: وَلَمْ يَسْمَعْ أَبُو عَبْدِ الرَّحْمَنِ مِنْ عُثْمَانَ وَلَا مِنْ عَبْدِ اللَّهِ، وَلَكِنْ قَدْ سَمِعَ مِنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ أَبِي: وَقَالَ بَهْزٌ: عَنْ شُعْبَةَ: قَالَ عَلْقَمَةُ بْنُ مَرْثَدٍ: أَخْبَرَنِي، وَقَالَ: «خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ»


Abu-Dawood-1452

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1452. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதனைக் கற்பித்தவரே உங்களில் சிறந்தவர்.

அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி)


«خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ»


Ibn-Majah-212

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

212. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதனைக் கற்பித்தவரே உங்களில் சிறந்தவர்.

அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி)


«أَفْضَلُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ»


Darimi-3381

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3381. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதனைக் கற்பித்தவரே உங்களில் சிறந்தவர்.

இதை உஸ்மான் (ரலி) அவர்களிடமிருந்து அபூ அப்திர் ரஹ்மான் வழியாக ஸஅத் இப்னு உபைதா (ரஹ்) அறிவித்தார்.

உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் அபூ அப்திர்ரஹ்மான் (ரஹ்) (மக்களுக்கு) குர்ஆனைக் கற்றுக் கொடுத்து வந்தார்கள். ஹஜ்ஜாஜ் இப்னு யூஸுஃப் (இராக்கின் ஆட்சியாளராக) ஆகும் வரையில் இது தொடர்ந்தது. அபூ அப்திர்ரஹ்மான் அவர்கள், ‘(குர்ஆனின் சிறப்பு குறித்துக் கூறப்பட்ட) இந்த நபிமொழியே என்னை (மக்களுக்குக் கற்றுத்தரும்) இந்த இடத்தில் உட்காரவைத்தது’ என்று கூறினார்கள்.


«إِنَّ خَيْرَكُمْ مَنْ عَلَّمَ الْقُرْآنَ أَوْ تَعَلَّمَهُ» قَالَ: «أَقْرَأَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ فِي إِمْرَةِ عُثْمَانَ حَتَّى كَانَ الْحَجَّاجُ» قَالَ: «ذَلكَ أَقْعَدَنِي مَقْعَدِي هَذَا»


Abu-Dawood-5170

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

அடிமையிடம் எஜமானுக்கு எதிரான கருத்துக்களை கூறுதல்.

5170. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதரின் மனைவியிடம் அவனுக்கு எதிரான கருத்துக்களை  கூறி பிரச்சனையை ஏற்படுத்துபவனும், (இவ்வாறே) அவனுக்கு எதிரான கருத்துக்களை அவனது அடிமையிடம் கூறி பிரச்சனையை ஏற்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ خَبَّبَ زَوْجَةَ امْرِئٍ، أَوْ مَمْلُوكَهُ فَلَيْسَ مِنَّا»


Musnad-Ahmad-9157

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

9157. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு வீட்டாரின் பணியாளரிடம், அவர்களுக்கு எதிரான கருத்துக்களை கூறி பிரச்சனையை ஏற்படுத்துபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். (இவ்வாறே) கணவனுக்கு எதிரான கருத்துக்களை மனைவியிடம் கூறி பிரச்சனையை ஏற்படுத்துபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ خَبَّبَ خَادِمًا عَلَى أَهْلِهَا فَلَيْسَ مِنَّا، وَمَنْ أَفْسَدَ امْرَأَةً عَلَى زَوْجِهَا فَلَيْسَ مِنَّا»


Abu-Dawood-2175

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2175. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கணவனுக்கு எதிரான கருத்துக்களை மனைவியிடம் கூறி பிரச்சனையை ஏற்படுத்துபவனும், (இவ்வாறே) எஜமானுக்கு எதிரான கருத்துக்களை அடிமையிடம் கூறி பிரச்சனையை ஏற்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَيْسَ مِنَّا مَنْ خَبَّبَ امْرَأَةً عَلَى زَوْجِهَا، أَوْ عَبْدًا عَلَى سَيِّدِهِ»


Nasaayi-5047

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5047. யார் மீசையை எடுக்கவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: ஸைத் பின் அர்கம் (ரலி)


«مَنْ لَمْ يَأْخُذْ شَارِبَهُ فَلَيْسَ مِنَّا»


Next Page » « Previous Page