Author: Farook

Tirmidhi-1573

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1573.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆணவம், மோசடி, கடன் ஆகிய மூன்றும் நீங்கிய நிலையில் ஒருவரது உடலிலிருந்து உயிர் பிரிந்தால் அவர் சொர்க்கம் செல்வார்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)


مَنْ فَارَقَ الرُّوحُ الجَسَدَ وَهُوَ بَرِيءٌ مِنْ ثَلَاثٍ: الكَنْزِ، وَالغُلُولِ، وَالدَّيْنِ دَخَلَ الجَنَّةَ


Ibn-Majah-2412

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2412.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆணவம், மோசடி, கடன் ஆகிய மூன்றும் நீங்கிய நிலையில் ஒருவரது உடலிலிருந்து உயிர் பிரிந்தால் அவர் சொர்க்கம் செல்வார்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)


مَنْ فَارَقَ الرُّوحُ الْجَسَدَ وَهُوَ بَرِيءٌ مِنْ ثَلَاثٍ، دَخَلَ الْجَنَّةَ: مِنَ الْكَنْزِ، وَالْغُلُولِ، وَالدَّيْنِ


Darimi-2634

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2634. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆணவம், மோசடி, கடன் ஆகிய மூன்றும் நீங்கிய நிலையில் ஒருவரது உடலிலிருந்து உயிர் பிரிந்தால் அவர் சொர்க்கம் செல்வார்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)


مَنْ فَارَقَ الرُّوحُ الْجَسَدَ وَهُوَ بَرِيءٌ مِنْ ثَلَاثٍ، دَخَلَ الْجَنَّةَ: مِنَ الْكِبْرِ، وَالْغُلُولِ، وَالدَّيْنِ


Musnad-Ahmad-22434

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

22434. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆணவம், கடன், மோசடி ஆகிய மூன்றும் நீங்கிய நிலையில் ஒருவரது உடலிலிருந்து உயிர் பிரிந்தால் அவர் சொர்க்கம் செல்வார்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)


مَنْ فَارَقَ الرُّوحُ الْجَسَدَ وَهُوَ بَرِيءٌ مِنْ ثَلَاثٍ دَخَلَ الْجَنَّةَ: الْكِبْرِ وَالدَّيْنِ وَالْغُلُولِ


Musnad-Ahmad-22427

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

22427. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆணவம், மோசடி, கடன் ஆகிய மூன்றும் நீங்கிய நிலையில் ஒருவர் இறந்தால் அவர் சொர்க்கம் செல்வார்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)


مَنْ فَارَقَ الرُّوحُ الْجَسَدَ، وَهُوَ بَرِيءٌ مِنْ ثَلَاثٍ دَخَلَ الْجَنَّةَ: الْكِبْرِ وَالْغُلُولِ وَالدَّيْنِ


Musnad-Ahmad-22369

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

22369. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆணவம், கடன், மோசடி ஆகிய மூன்றும் நீங்கிய நிலையில் ஒருவரது உயிர் பிரிந்தால் அவர் சொர்க்கம் செல்வார்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)


مَنْ فَارَقَ الرُّوحُ الْجَسَدَ وَهُوَ بَرِيءٌ مِنْ ثَلَاثٍ دَخَلَ الْجَنَّةَ: الْكِبْرِ، وَالدَّيْنِ، وَالْغُلُولِ


Musnad-Ahmad-22755

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

22755.

யார் நம்மில் பெரியவருக்கு மரியாதை செய்யாமலும் சிறியவருக்கு இரக்கம் காட்டாமலும் அறிஞரின் தகுதியை அறிந்து (அதற்குத் தக்கவாறு அவரிடம் நடந்து) கொள்ளாமலும் இருக்கிறார்களோ அவர்கள் எனது சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் அல்லர்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)


«لَيْسَ مِنْ أُمَّتِي مَنْ لَمْ يُجِلَّ كَبِيرَنَا، وَيَرْحَمْ صَغِيرَنَا، وَيَعْرِفْ لِعَالِمِنَا»

قَالَ عَبْدُ اللَّهِ: وَسَمِعْتُهُ أَنَا مِنْ هَارُونَ


Musnad-Ahmad-12635

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

12635. …மக்கா வெற்றியின் போது அபூபக்கர் (ரலி) அவர்கள் தன்னுடைய தந்தையான அபூ குஹாஃபாவை நபி (ஸல்) அவர்களிடம் தூக்கிக் கொண்டு வந்தார்கள்.அப்போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்கர் (ரலி) அவர்களிடம் இந்த வயதானவரை நீங்கள் வீட்டிலே வைத்திருந்தால் நான் வந்து அவரைப் பார்த்திருப்பேன் என்று கூறினார்கள்…

பின்பு அபூகுஹாஃபா (ரலி) அவர்களின் முடி நரைத்திருந்ததால் அதனுடைய நிறத்தை மாற்றும் படி கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)


قَالَ : سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ عَنْ خِضَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ شَابَ إِلَّا يَسِيرًا، وَلَكِنَّ أَبَا بَكْرٍ وَعُمَرَ بَعْدَهُ خَضَبَا بِالْحِنَّاءِ وَالْكَتَمِ. قَالَ: وَجَاءَ أَبُو بَكْرٍ بِأَبِيهِ أَبِي قُحَافَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ فَتْحِ مَكَّةَ يَحْمِلُهُ حَتَّى وَضَعَهُ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي بَكْرٍ: «لَوْ أَقْرَرْتَ الشَّيْخَ فِي بَيْتِهِ، لَأَتَيْنَاهُ تَكْرُمَةً لِأَبِي بَكْرٍ» . فَأَسْلَمَ وَلِحْيَتُهُ وَرَأْسُهُ كَالثَّغَامَةِ بَيَاضًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «غَيِّرُوهُمَا، وَجَنِّبُوهُ السَّوَادَ»


Tirmidhi-70

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

சிறுநீர் கழிப்பதில் (கவனக்குறைவாக இருப்பது குறித்து) வந்துள்ள கண்டனம்.

70. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்றபோது, “நிச்சயமாக இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஆனால் இவர்கள் பெரிய விஷயத்திற்காக வேதனை செய்யப்படவில்லை.

அவ்விருவரில் ஒருவர், தமது சிறுநீரிலிருந்து தம்மை மறைத்துக் கொள்பவராக இருக்கவில்லை. மற்றவர், கோள் சொல்லித் திரிபவராக இருந்தார்” என்று கூறினார்கள்.


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப்பொருள் தொடர்பான செய்திகள் அபூஹுரைரா (ரலி), அபூமூஸா (ரலி), அப்துர்ரஹ்மான் பின் ஹஸனா (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), அபூபக்ரா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.

முஜாஹித் அவர்களிடமிருந்து அறிவிக்கும் மன்ஸூர் அவர்கள், முஜாஹித் —> இப்னு அப்பாஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார். இருவருக்கிடையில் தாஊஸ் அவர்களைக் குறிப்பிடவில்லை. அஃமஷ் அவர்கள் (இருவருக்கிடையில் தாஊஸ் அவர்களைக் கூறி) அறிவிக்கும் அறிவிப்புதான் மிகச் சரியானதாகும்.

வகீஃ (ரஹ்) அவர்களின் மாணவரான அபூபக்ர்-முஹம்மது பின் அபான்-அல்பல்கீ (ரஹ்) அவர்கள் கூறியதை

أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى قَبْرَيْنِ، فَقَالَ: ” إِنَّهُمَا يُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ: أَمَّا هَذَا فَكَانَ لَا يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ، وَأَمَّا هَذَا فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ


Ibn-Majah-347

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

347.


مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَبْرَيْنِ جَدِيدَيْنِ، فَقَالَ: «إِنَّهُمَا لَيُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ، أَمَّا أَحَدُهُمَا فَكَانَ لَا يَسْتَنْزِهُ مِنْ بَوْلِهِ، وَأَمَّا الْآخَرُ فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ»


Next Page » « Previous Page