Author: Farook

Musnad-Ahmad-13638

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

13638. இணைவைப்போருடன் உங்களுடைய பொருட்களாலும் உயிராலும் நாவுகளாலும் ஜிஹாத் செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


«جَاهِدُوا الْمُشْرِكِينَ بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ وَأَلْسِنَتِكُمْ»


Musnad-Ahmad-12555

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12555. இணைவைப்போருடன் உங்களுடைய நாவுகளாலும், உயிராலும்,  பொருட்களாலும் கைகளாலும்  ஜிஹாத் செய்யுங்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


«جَاهِدُوا الْمُشْرِكِينَ بِأَلْسِنَتِكُمْ، وَأَنْفُسِكُمْ، وَأَمْوَالِكُمْ، وَأَيْدِيكُمْ»


Musnad-Ahmad-12246

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12246. இணைவைப்போருடன் உங்களுடைய பொருட்களாலும் உங்களுடைய கைகளாலும் நாவுகளாலும் ஜிஹாத் செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


«جَاهِدُوا الْمُشْرِكِينَ بِأَمْوَالِكُمْ، وَأَنْفُسِكُمْ، وَأَلْسِنَتِكُمْ»


Nasaayi-3096

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3096. இணைவைப்போருடன் உங்களுடைய பொருட்களாலும் உங்களுடைய கைகளாலும் நாவுகளாலும் ஜிஹாத் செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«جَاهِدُوا الْمُشْرِكِينَ بِأَمْوَالِكُمْ وَأَيْدِيكُمْ وَأَلْسِنَتِكُمْ»


Nasaayi-3192

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3192. உங்களுடைய கைகளாலும் நாவுகளாலும் உங்களுடைய பொருட்களாலும் ஜிஹாத் செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


«جَاهِدُوا بِأَيْدِيكُمْ وَأَلْسِنَتِكُمْ وَأَمْوَالِكُمْ»


Abu-Dawood-4344

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

4344. ஜிஹாதில் சிறந்தது அநியாயக்கார அரசனிடம் நீதியைச் சொல்வதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் அநியாயக்கார (ஸுல்தான்) அரசன், அல்லது அநியாயக்கார (அமீர்) ஆட்சியாளர் என்று சந்தேகமாக அறிவித்துள்ளார்.


«أَفْضَلُ الْجِهَادِ كَلِمَةُ عَدْلٍ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ، أَوْ أَمِيرٍ جَائِرٍ»


Musnad-Ahmad-18828

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

18828. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “ஜிஹாதில் சிறந்தது எது?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அநியாயக்கார ஆட்சியாளரிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி)


جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: أَيُّ الْجِهَادِ أَفْضَلُ؟ قَالَ: «كَلِمَةُ حَقٍّ عِنْدَ إِمَامٍ جَائِرٍ»


Shuabul-Iman-7175

ஹதீஸின் தரம்: More Info

7175. நபி (ஸல்) அவர்களிடம், “ஜிஹாதில் சிறந்தது எது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அநியாயக்கார ஆட்சியாளரிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி)


سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْجِهَادِ أَفْضَلُ؟ قَالَ: ” كَلِمَةُ عَدْلٍ عِنْدَ إِمَامٍ جَائِرٍ


Kubra-Nasaayi-7786

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7786. ஒருவர் தன்னுடைய காலை அங்கவடியில் (குதிரையில் ஏறுவதற்கு உதவும் வளையம்) வைத்துக் கொண்டு. “ஜிஹாதில் சிறந்தது எது?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அநியாயக்கார அரசனிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி)


أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ وَضَعَ رِجْلَهُ فِي الْغَرْزِ، أَيُّ الْجِهَادِ أَفْضَلُ؟ قَالَ: «كَلِمَةُ حَقٍّ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ»


Musnad-Ahmad-18830

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

18830. ஒருவர் தன்னுடைய காலை அங்கவடியில் (குதிரையில் ஏறுவதற்கு உதவும் வளையம்) வைத்துக் கொண்டு. “ஜிஹாதில் சிறந்தது எது?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அநியாயக்கார அரசனிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி)


أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَدْ وَضَعَ رِجْلَهُ فِي الْغَرْزِ: أَيُّ الْجِهَادِ أَفْضَلُ؟ قَالَ: «كَلِمَةُ حَقٍّ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ»


Next Page » « Previous Page