بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
ஹதீஸ்கலை பாடத்தில் ஹதீஸை அறிவித்துவிட்டு மறந்தவர் – مَنْ حَدَّثَ فَنَسِيَ என்ற ஒரு பகுதியும் உள்ளது. அதாவது சிலர் ஹதீஸை அறிவித்திருப்பார்கள். அவரிடம் ஏற்கனவே கேட்டவரோ அல்லது மற்றவரோ அந்த ஹதீஸ் பற்றி திரும்ப கேட்கும் போது அதை மறந்துவிட்டு தான் அறிவிக்கவில்லை என்று கூறுவார்கள்.
இதன் விரிவான விளக்கம்:
ஒரு நம்பகமான ஆசிரியர் மூலம் ஒரு ஹதீஸைக் கேட்டு, அதை ஒரு நம்பகமான மாணவர் அறிவிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். பிறகு அந்த ஆசிரியரிடம் சென்று இந்த ஹதீஸ் குறித்துக் கேட்கப்படும்போது, அவர் அதை மறுத்தால் என்ன செய்வது?
இதில் சரியான நிலைப்பாடு கீழ்க்கண்டவாறு அமையும்:
1 . அந்த ஆசிரியர், “நான் இப்படி ஒரு ஹதீஸை அறிவிக்கவே இல்லை” என்றோ, அல்லது “அந்த மாணவர் என் மீது பொய் சொல்கிறார்” என்றோ உறுதியாக மறுத்தால், ஆசிரியரின் சொல்லே அடிப்படையாகக் கொள்ளப்படும்.
எனவே, மாணவர் அறிவித்த அந்த ஹதீஸ் நிராகரிக்கப்படும். அதற்காக, அந்த மாணவரைப் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று முடிவுகட்டி, அவருடைய மற்ற ஹதீஸ்களையும் நிராகரிக்கக் கூடாது. ஏனென்றால், இந்த விஷயத்தில் மாணவரும் தன் ஆசிரியரை பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றே கருதுகிறார். இருவரில் யாரை நம்புவது என்பதில் சமநிலை இருப்பதால், இருவரின் குற்றச்சாட்டுகளும் ரத்தாகிவிடும்.
2 . ஆனால் அந்த ஆசிரியர், “எனக்கு இந்த ஹதீஸ் தெரியாது” அல்லது “எனக்கு நினைவில் இல்லை” என்று கூறினால், அதற்காக மாணவர் அறிவித்த ஹதீஸை நிராகரிக்கக் கூடாது.
- எனவே ஒருவர் ஒரு ஹதீஸை அறிவித்துவிட்டுப் பின்னர் அதை மறந்துவிட்டு இப்படி கூறினால், அதனால் அந்த ஹதீஸின் அடிப்படையில் செயல்படுவது ரத்து செய்யப்பட்டதாக ஆகாது. இதுவே பெரும்பான்மையான ஹதீஸ்கலை அறிஞர்கள், சட்டக்கலை அறிஞர்கள், இறையியல்-தர்க்கவியல் அறிஞர்கள் ஆகியோரின் கருத்தாகும்.
- ஆனால், அபூஹனீஃபா பிறப்பு ஹிஜ்ரி 80
இறப்பு ஹிஜ்ரி 150
வயது: 70
அவர்களின் மாணவர்களில் ஒரு தரப்பினர், ‘ஆசிரியர் மறந்துவிட்டால் அந்த ஹதீஸ் நிராகரிக்கப்படும்’ என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். இதன் அடிப்படையில்தான் அவர்கள், ஸுலைமான் பின் மூஸா —> ஸுஹ்ரீ —> உர்வா —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் வரும் “எந்தப் பெண் தனது பொறுப்பாளரின் அனுமதியின்றித் திருமணம் செய்துகொள்கிறாளோ, அவளது திருமணம் செல்லாது” என்ற ஹதீஸை மறுக்கின்றனர்.
இவர்கள் இந்த ஹதீஸை மறுத்ததற்குக் காரணம், இப்னு ஜுரைஜ் அவர்கள் கூறும்போது, “நான் ஸுஹ்ரீ அவர்களைச் சந்தித்து இந்த ஹதீஸ் பற்றிக் கேட்டபோது, அவருக்கு இந்த ஹதீஸ் தெரிந்திருக்கவில்லை” என்று அறிவித்தார் என்பதால் ஆகும்.
அதேபோன்று ரபீஆ அர்ரஃயி —> ஸுஹைல் பின் அபூஸாலிஹ் —> அவருடைய தந்தை —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் வரும் “நபி (ஸல்) அவர்கள் ஒரு சாட்சி மற்றும் ஒரு சத்தியத்தின் அடிப்படையில் தீர்ப்பளித்தார்கள்” என்ற ஹதீஸையும் மறுக்கின்றனர்.
இதற்குக் காரணம், அப்துல்அஸீஸ் பின் முஹம்மத் அத்தராவர்தீ அவர்கள் கூறும்போது, “நான் ஸுஹைலைச் சந்தித்து இதுகுறித்துக் கேட்டேன். அவருக்கு இந்த ஹதீஸ் தெரிந்திருக்கவில்லை” என்று அறிவித்தார் என்பதால் ஆகும்.
என்றாலும் இந்த விசயத்தில் முதல் கருத்தான, பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தே சரியானதாகும். மனிதன் என்ற அடிப்படையில் சில ஆசிரியர்களுக்கு மறதி ஏற்பட வாய்ப்புள்ளது. அதேசமயம், அவரிடமிருந்து அந்த ஹதீஸைக் கேட்ட மாணவர் நம்பகமானவராகவும், தான் கேட்டதில் உறுதியானவராகவும் இருக்கிறார். எனவே, ஆசிரியர் மறந்திருக்கலாம் என்ற சாத்தியக்கூறை மட்டும் வைத்து மாணவரின் அறிவிப்பை நிராகரிக்கக் கூடாது. இதனால்தான், இதற்குப் பிறகு ஸுஹைல் அவர்கள், “என் தந்தை வழியாக என்னிடமிருந்து ரபீஆ எனக்கு அறிவித்தார்” என்று கூறிவிட்டு அந்த ஹதீஸை முழுமையாக அறிவிப்பார்கள்.
பல பெரிய அறிஞர்களே தாங்கள் அறிவித்த ஹதீஸ்களை மறந்துவிட்டு, பின்னர் தங்களிடமிருந்து அதைக் கேட்டுப் பதிவு செய்த மாணவர்களிடமிருந்தே அந்த ஹதீஸ்களைக் கேட்டு அறிவித்துள்ளனர். அவர்களில் ஒருவர், “இன்னார் வழியாக என்னிடமிருந்து இன்னார் இப்படி எனக்கு அறிவித்தார்” என்று கூறுவார்.
கதீப் பஃக்தாதீ அவர்கள் இந்த வகைச் செய்திகளை குறிப்பிட “அக்பாரு மன் ஹத்தஸ வ நஸிய” என்ற பெயரில் ஒரு தனி நூலையே எழுதியுள்ளார்.
மனிதன் மறதிக்கு உள்ளாகக்கூடியவன் என்பதால் தான் என்னவோ, “உயிருடன் இருப்பவர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று சில அறிஞர்கள் விரும்பியுள்ளனர். இமாம் ஷாஃபிஈ அவர்களும் இக்கருத்தைக் கொண்டிருந்தார். அவர் இப்னு அப்துல்ஹகம் என்பவரிடம், “உயிருடன் இருப்பவர்களிடமிருந்து ஹதீஸ் அறிவிப்பதைக் குறித்து எச்சரிக்கையாக இரு” என்று கூறினார். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
(நூல்: முகத்திமது இப்னுஸ் ஸலாஹ்-1/233)
[مقدمة ابن الصلاح معرفة أنواع علم الحديث – ت الفحل والهميم ص233:]
الحادِيَةَ عَشْرَةَ: إذا رَوَى ثقةٌ عَنْ ثِقَةٍ حدِيثاً ورُوْجِعَ المروِيُّ عنهُ فَنَفَاهُ، فالمختارُ: أنَّهُ إنْ كَانَ جازِماً بنفْيهِ بأنْ قالَ: ما رَويتُهُ، أو كَذَبَ عَلَيَّ، أو نَحْو ذَلِكَ فَقَدْ تَعَارَضَ الجزْمَانِ، والجاحِدُ هُوَ الأصْلُ، فَوَجَبَ رَدُّ حدِيْثِ فَرْعِهِ ذَلِكَ، ثُمَّ لَا يَكُونُ ذَلِكَ جَرْحاً لهُ يُوجِبُ ردَّ باقِي حديثِهِ؛ لأنَّهُ مُكَذِّبٌ لشَيْخِهِ أيضاً في ذلكَ، وليسَ قَبُولُ جَرْحِ شَيْخِهِ لهُ بأوْلَى مِنْ قَبُولِ جَرْحِهِ لشَيْخِهِ، فتَسَاقَطا.
أمَّا إذا قالَ المروِيُّ عنهُ: لَا أعرِفُهُ، أو لَا أذْكُرُهُ، أوْ نحوَ ذلكَ، فذلكَ لَا يُوجِبُ رَدَّ روايَةِ الراوي عنهُ.
ومَنْ رَوَى حَدِيثاً ثُمَّ نَسِيَهُ لَمْ يَكُنْ ذلكَ مُسْقِطاً للعَمَلِ بهِ عندَ جُمْهُورِ أهلِ الحديثِ وجمهورِ الفقهاءِ والمتكلِّمينَ، خلافاً لقَومٍ مِنْ أصحَابِ أبي حَنيْفَةَ صَارُوا إلى إسْقَاطِهِ بذلِكَ، وبَنَوَا عليهِ رَدَّهُمْ حديثَ سُليمانَ بنِ موسَى، عَنِ الزُّهريِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائشَةَ، عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم: ((إذا نُكِحَتِ المرْأَةُ بغَيْرِ إذْنِ وَلِيِّها فَنِكَاحُها باطِلٌ الحديثَ)) ، مِنْ أجْلِ أنَّ ابنَ جُرَيْجٍ، قالَ: ((لقِيْتُ الزهريَّ فسَألْتُهُ عَنْ هذا الحديثِ فَلَمْ يَعرِفْهُ)) .
وكذا حديثُ ربيعَةَ الرأي، عَنْ سُهَيْلِ بنِ أبي صالِحٍ، عَنْ أبيهِ، عَنْ أبي هُرَيْرَةَ: ((أنَّ النبيَّ صلى الله عليه وسلم قَضَى بشَاهِدٍ ويَمِيْنٍ)) ، فإنَّ عَبْدَ العزيزِ بنَ محمدٍ الدَّرَاوَرْدِيَّ قالَ: ((لقِيْتُ سُهَيْلاً فسَألْتُهُ عَنْهُ فَلَمْ يَعرِفْهُ)). والصحيحُ ما عليهِ الجمهُورُ؛ لأنَّ المروِيَّ عنهُ بصَدَدِ السَّهْوِ والنِّسْيَانِ والرَّاوي عنهُ ثقةٌ جازِمٌ فلَا يُرَدُّ بالاحتمالِ روايتُهُ، ولهذا كانَ سُهَيْلٌ بَعْدَ ذَلِكَ يَقُولُ: حَدَّثَنِي رَبيْعَةُ عَنِّي عَنْ أبي، ويسُوقُ الحديثَ.
وَقَدْ رَوَى كَثيرٌ مِنَ الأكَابِرِ أحادِيْثَ نَسَوْها بعدَ ما حُدِّثُوا بها عَمَّنْ سَمِعَها منهُمْ، فكَانَ أحَدُهُمْ يقُولُ: حدَّثَنِي فلَانٌ عَنِّي عَنْ فلانٍ بكذا وكذا. وجَمَعَ الحافِظُ الخطيبُ ذلكَ في كِتَابِ “أخْبَارِ مَنْ حَدَّثَ ونَسِيَ”. ولأجْلِ أنَّ الإنْسانَ مُعَرَّضٌ للنِسْيانِ؛ كَرِهَ مَنْ كَرِهَ مِنَ العُلَماءِ الروَايةَ عَنِ الأحْيَاءِ، منْهُمُ الشَّافِعِيُّ رضي الله عنه قالَ لابنِ عَبدِ الحكمِ :
((إيَّاكَ والروايةَ عَنِ الأحياءِ)) (5)، واللهُ أعلمُ.
….
[تدريب الراوي في شرح تقريب النواوي 1/ 395:]
[التاسعة إِذَا رَوَى ثِقَةٌ عَنْ ثِقَةٍ حَدِيثًا ثُمَّ نَفَاهُ الْمُسْمَعُ وأقوال العلماء في ذلك]
(التَّاسِعَةُ: إِذَا رَوَى) ثِقَةٌ عَنْ ثِقَةٍ (حَدِيثًا ثُمَّ نَفَاهُ الْمُسْمَعُ) لَمَّا رُوجِعَ فِيهِ (فَالْمُخْتَارُ) عِنْدَ الْمُتَأَخِّرِينَ (أَنَّهُ إِنْ كَانَ جَازِمًا بِنَفْيِهِ بِأَنْ قَالَ مَا رَوَيْتُهُ) أَوْ كَذَبَ عَلَيَّ (وَنَحْوُهُ وَجَبَ رَدُّهُ) لِتَعَارُضِ قَوْلِهِمَا مَعَ أَنَّ الْجَاحِدَ هُوَ الْأَصْلُ (وَ) لَكِنْ (لَا يَقْدَحُ) ذَلِكَ (فِي بَاقِي رِوَايَاتِ الرَّاوِي عَنْهُ) وَلَا يَثْبُتْ بِهِ جَرْحُهُ لِأَنَّهُ أَيْضًا مُكَذِّبٌ لِشَيْخِهِ فِي نَفْيِهِ لِذَلِكَ، وَلَيْسَ قَبُولُ جَرْحِ كُلٍّ مِنْهُمَا أَوْلَى مِنَ الْآخَرِ فَتَسَاقَطَا، فَإِنْ عَادَ الْأَصْلُ وَحَدَّثَ بِهِ أَوْ حَدَّثَ فَرْعٌ آخَرُ ثِقَةٌ عَنْهُ وَلَمْ يُكَذِّبْهُ فَهُوَ مَقْبُولٌ، صَرَّحَ بِهِ الْقَاضِي أَبُو بَكْرٍ وَالْخَطِيبُ وَغَيْرُهُمَا، وَمُقَابِلُ الْمُخْتَارِ فِي الْأَوَّلِ عَدَمُ رَدِّ الْمَرْوِيِّ.
وَاخْتَارَهُ السَّمْعَانِيُّ وَعَزَاهُ الشَّاشِيُّ لِلشَّافِعِيِّ، وَحَكَى الْهِنْدِيُّ الْإِجْمَاعَ عَلَيْهِ، وَجَزَمَ الْمَاوَرْدِيُّ وَالرُّويَانِيُّ بِأَنَّ ذَلِكَ لَا يَقْدَحُ فِي صِحَّةِ الْحَدِيثِ إِلَّا أَنَّهُ لَا يَجُوزُ لِلْفَرْعِ أَنْ يَرْوِيَهُ عَنِ الْأَصْلِ، فَحَصَلَ ثَلَاثَةُ أَقْوَالٍ.
وَثَمَّ قَوْلٌ رَابِعٌ: أَنَّهُمَا يَتَعَارَضَانِ وَيُرَجَّحُ أَحَدُهُمَا بِطَرِيقِهِ، وَصَارَ إِلَيْهِ إِمَامُ الْحَرَمَيْنِ.
وَمِنْ شَوَاهِدِ الْقَبُولِ مَا رَوَاهُ الشَّافِعِيُّ عَنْ سُفْيَانَ بْنِ عُيَيْنَةَ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ عَنْ أَبِي مَعْبَدٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: «كُنْتُ أَعْرِفُ انْقِضَاءَ صَلَاةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالتَّكْبِيرِ» .
قَالَ عَمْرُو بْنُ دِينَارٍ ثُمَّ ذَكَرْتُهُ لِأَبِي مَعْبَدٍ فَقَالَ: لَمْ أُحَدِّثْكَهُ، قَالَ عَمْرٌو: قَدْ حَدَّثْتَنِيهِ.
قَالَ الشَّافِعِيُّ: كَأَنَّهُ نَسِيَهُ بَعْدَ مَا حَدَّثَهُ إِيَّاهُ، وَالْحَدِيثُ أَخْرَجَهُ الشَّيْخَانِ مِنْ حَدِيثِ ابْنِ عُيَيْنَةَ.
….
[تذكرة المؤتسي فيمن حدث ونسي ص19:]
وَأخرج الشَّافِعِي ثَنَا ابْن عُيَيْنَة عَن عَمْرو بن دِينَار عَن أبي معبد عَن ابْن عَبَّاس قَالَ كنت أعرف إنقضاء صَلَاة رَسُول الله صلى الله عليه وسلم بِالتَّكْبِيرِ
قَالَ عَمْرو بن دِينَار ثمَّ ذكرته لأبي معبد فَقَالَ لم أحدثكه قَالَ عَمْرو قد حدثتنيه وَكَانَ من أصدق موَالِي ابْن عَبَّاس قَالَ الشَّافِعِي كَأَنَّهُ نَسيَه بَعْدَمَا قد حَدثهُ إِيَّاه
பார்க்க: முஸ்லிம்-1024,
சமீப விமர்சனங்கள்