Author: Farook

Almujam-Alawsat-8030

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8030. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்கள் வீடுகளை அடக்கத் தலங்களாக ஆக்காதீர்கள். மேலும் எனது அடக்கத் தலத்தில் விழா எடுக்காதீர்கள். என் மீது சலவாத்துச் சொல்லுங்கள். ஏனென்றால் நீங்கள் கூறும் சலவாத்து நீங்கள் எங்கிருந்தாலும் என்னை வந்தடையும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ قُبُورًا، وَلَا تَجْعَلُوا قَبْرِي عِيدًا، وَصَلَّوْا عَلَيَّ، فَإِنَّ صَلَاتَكُمْ تَبْلُغُنِي حَيْثُ مَا كُنْتُمْ»


Abu-Dawood-229

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

229. நானும் இன்னும் இருவரும் அலீ (ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம். (அவ்விருவரில்) ஒருவர் எங்களைச் சார்ந்தவர். இன்னொருவர் பனூ அசத் கிளையைச் சார்ந்தவர் என்று கருதுகிறேன். அவ்விருவரையும் அலீ (ரலி) அவர்கள் ஒரு (முக்கிய) பணி நிமித்தமாக அனுப்பினார்கள். அப்போது (அவ்விருவரையும் நோக்கி) நீங்கள் இருவரும் செயலாற்றுவதில் திறம் படைத்தவர்கள். உங்கள் மார்க்கப் பணியை திறம்படச் செய்யுங்கள் என்று அறிவுரை பகர்ந்தார்கள்.

பிறகு கழிப்பிடம் சென்று வெளியே வந்து தண்ணீர் கொண்டு வரச் செய்து அதில் ஒரு கையளவு நீரள்ளி அதை (கைகளில் அல்லது வேறு உறுப்பில்) தடவிக் கொண்டார்கள். பிறகு குர்ஆன் ஓதத் துவங்கினார்கள். இதை அவர்கள் (தோழர்கள்) ஆட்சேபித்தார்கள். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திலிருந்து வெளிவந்து எங்களுக்கு குர்ஆனைக் கற்றுத் தருவார்கள். எங்களுடன் இறைச்சியைச் சாப்பிடுவார்கள். கடமையான குளிப்பைத் தவிர வேறு எதுவும் குர்ஆன் ஓதுவதை விட்டும் அவர்களைத் தடுக்காது.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் சலமா


دَخَلْتُ عَلَى عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَا وَرَجُلَانِ، رَجُلٌ مِنَّا وَرَجُلٌ مِنْ بَنِي أَسَدٍ أَحْسَبُ، فَبَعَثَهُمَا عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ وَجْهًا، وَقَالَ: إِنَّكُمَا عِلْجَانِ، فَعَالِجَا عَنْ دِينِكُمَا، ثُمَّ قَامَ فَدَخَلَ الْمَخْرَجَ ثُمَّ خَرَجَ، فَدَعَا بِمَاءٍ فَأَخَذَ مِنْهُ حَفْنَةً فَتَمَسَّحَ بِهَا، ثُمَّ جَعَلَ يَقْرَأُ الْقُرْآنَ، فَأَنْكَرُوا ذَلِكَ، فَقَالَ: ” إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يَخْرُجُ مِنَ الخَلَاءِ فَيُقْرِئُنَا الْقُرْآنَ، وَيَأْكُلُ مَعَنَا اللَّحْمَ وَلَمْ يَكُنْ يَحْجُبُهُ – أَوْ قَالَ: يَحْجِزُهُ – عَنِ الْقُرْآنِ شَيْءٌ لَيْسَ الْجَنَابَةَ


Tirmidhi-3476

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3476. ஒரு மனிதர் தனது தொழுகையில் அல்லாஹ்வை (புகழ்ந்து) கண்ணியப்படுத்தாமலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்லாமலும் பிரார்த்தனை செய்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். இவர் அவசரப்பட்டு விட்டார் என்று கூறி அம்மனிதரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அவரிடம் அல்லது மற்றவரிடம் உங்களில் ஒருவர் தொழு(கையில் பிரார்த்தித்)தால் முதலில் மாண்பும் வலிமையும் மிக்க தனது இறைவனை அவர் புகழ்ந்து கண்ணியப்படுத்தட்டும். பிறகு (உங்கள்) நபியின் மீது ஸலவாத்துச் சொல்லட்டும். இதற்குப் பிறகு அவர் விரும்பியதை வேண்டலாம் என்று கூறினார்கள்….

அறிவிப்பவர் : ஃபளாலா பின் உபைத் (ரலி)


بَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدٌ إِذْ دَخَلَ رَجُلٌ فَصَلَّى فَقَالَ: اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَجِلْتَ أَيُّهَا المُصَلِّي، إِذَا صَلَّيْتَ فَقَعَدْتَ فَاحْمَدِ اللَّهَ بِمَا هُوَ أَهْلُهُ، وَصَلِّ عَلَيَّ ثُمَّ ادْعُهُ». قَالَ: ثُمَّ صَلَّى رَجُلٌ آخَرُ بَعْدَ ذَلِكَ فَحَمِدَ اللَّهَ وَصَلَّى عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّهَا المُصَلِّي ادْعُ تُجَبْ»


Tirmidhi-3477

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3477. ஒரு மனிதர் தனது தொழுகையில் அல்லாஹ்வை (புகழ்ந்து) கண்ணியப்படுத்தாமலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்லாமலும் பிரார்த்தனை செய்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். இவர் அவசரப்பட்டு விட்டார் என்று கூறி அம்மனிதரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அவரிடம் அல்லது மற்றவரிடம் உங்களில் ஒருவர் தொழு(கையில் பிரார்த்தித்)தால் முதலில் மாண்பும் வலிமையும் மிக்க தனது இறைவனை அவர் புகழ்ந்து கண்ணியப்படுத்தட்டும். பிறகு (உங்கள்) நபியின் மீது ஸலவாத்துச் சொல்லட்டும். இதற்குப் பிறகு அவர் விரும்பியதை வேண்டலாம் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஃபளாலா பின் உபைத் (ரலி)


سَمِعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَدْعُو فِي صَلَاتِهِ فَلَمْ يُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَجِلَ هَذَا»، ثُمَّ دَعَاهُ فَقَالَ لَهُ أَوْ لِغَيْرِهِ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِتَحْمِيدِ اللَّهِ وَالثَّنَاءِ عَلَيْهِ، ثُمَّ لْيُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ لْيَدْعُ بَعْدُ بِمَا شَاءَ»


Abu-Dawood-1481

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1481. ஒரு மனிதர் தனது தொழுகையில் அல்லாஹ்வை (புகழ்ந்து) கண்ணியப்படுத்தாமலும், நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்லாமலும் பிரார்த்தனை செய்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். இவர் அவசரப்பட்டு விட்டார் என்று கூறி அம்மனிதரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து அவருக்கோ, அல்லது மற்றவர்களுக்கோ “உங்களில் ஒருவர் தொழுதால் முதலில் தனது இறைவனை அவர் புகழ்ந்து கண்ணியப்படுத்தட்டும். பிறகு நபியின் மீது ஸலவாத்துச் சொல்லட்டும். இதற்குப் பிறகு அவர் விரும்பியதை கேட்கட்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஃபளாலா பின் உபைத் (ரலி)


سَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَدْعُو فِي صَلَاتِهِ لَمْ يُمَجِّدِ اللَّهَ تَعَالَى، وَلَمْ يُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَجِلَ هَذَا»، ثُمَّ دَعَاهُ فَقَالَ لَهُ: – أَوْ لِغَيْرِهِ – «إِذَا صَلَّى أَحَدُكُمْ، فَلْيَبْدَأْ بِتَمْجِيدِ رَبِّهِ جَلَّ وَعَزَّ، وَالثَّنَاءِ عَلَيْهِ، ثُمَّ يُصَلِّي عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يَدْعُو بَعْدُ بِمَا شَاءَ»


Abi-Yala-4764

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4764. நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரவிலும் அலிஃப் லாம் மீம் தன்ஸீல் (என்று துவங்கும் 32 ஆவது) அத்தியாயத்தையும் ஸுமர் என்ற (39 ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَقْرَأُ كُلَّ لَيْلَةٍ تَنْزِيلَ السَّجْدَةِ وَالزُّمَرَ»


Abi-Yala-4643

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4643. நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரவிலும் அலிஃப் லாம் மீம் தன்ஸீல் (என்று துவங்கும் 32 ஆவது) அத்தியாயத்தையும் ஸுமர் என்ற (39 ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَقْرَأُ كُلَّ لَيْلَةٍ تَنْزِيلَ السَّجْدَةِ، وَالزُّمَرَ»


Almujam-Assaghir-953

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

953. நபி (ஸல்) அவர்கள் அலிஃப் லாம் மீம் தன்ஸீல் (என்று துவங்கும் 32 ஆவது) அத்தியாயத்தையும் தபாரகல்லதீ (என்று துவங்கும் 67 ஆவது) அத்தியாயத்தையும் ஓதாமல் உறங்கமாட்டார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)


كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ لَا يَنَامُ حَتَّى يَقْرَأَ: الم تَنْزِيلُ السَّجْدَةَ وَتَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ


Almujam-Alawsat-1483

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1483. நபி (ஸல்) அவர்கள் அலிஃப் லாம் மீம் தன்ஸீல் (என்று துவங்கும் 32 ஆவது) அத்தியாயத்தையும் தபாரகல்லதீ (என்று துவங்கும் 67 ஆவது) அத்தியாயத்தையும் ஓதாமல் உறங்கமாட்டார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يَنَامُ حَتَّى يَقْرَأَ: الم تَنْزِيلُ السَّجْدَةَ، وتَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ»


Darimi-3454

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3454. நபி (ஸல்) அவர்கள் அலிஃப் லாம் மீம் தன்ஸீல் (என்று துவங்கும் 32 ஆவது) அத்தியாயத்தையும் தபாரகல்லதீ (என்று துவங்கும் 67 ஆவது) அத்தியாயத்தையும் ஓதாமல் உறங்கமாட்டார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَا يَنَامُ حَتَّى يَقْرَأَ الم وَتَبَارَكَ»


Next Page » « Previous Page