தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-1481

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

1481. ஒரு மனிதர் தனது தொழுகையில் அல்லாஹ்வை (புகழ்ந்து) கண்ணியப்படுத்தாமலும், நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்லாமலும் பிரார்த்தனை செய்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். இவர் அவசரப்பட்டு விட்டார் என்று கூறி அம்மனிதரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து அவருக்கோ, அல்லது மற்றவர்களுக்கோ “உங்களில் ஒருவர் தொழுதால் முதலில் தனது இறைவனை அவர் புகழ்ந்து கண்ணியப்படுத்தட்டும். பிறகு நபியின் மீது ஸலவாத்துச் சொல்லட்டும். இதற்குப் பிறகு அவர் விரும்பியதை கேட்கட்டும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : (ரலி)

ஃபளாலா பின் உபைத் (ரலி)

فضالة بن عبيد بن ناقد

இறப்பு: ஹிஜ்ரி 53, டமாஸ்கஸ், ஷாம்

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: ஃபளாலா பின் உபைத் பின் நாகித்

தந்தை பெயர்: உபைத் பின் நாகித்

வம்சம்: அன்ஸாரீ, அவ்ஸ்

புனைப்பெயர்: அபூ முஹம்மத்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, எகிப்து, ஷாம், டமாஸ்கஸ்

பிறப்பு: மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 53, டமாஸ்கஸ், ஷாம்

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

ஃபளாலா பின் உபைத் (ரலி) அவர்கள் ஒரு நபித்தோழர் (ஸஹாபி) ஆவார். உஹது, அகழ் மற்றும் அனைத்துப் போர்களிலும் நபி (ஸல்) அவர்களுடன் கலந்துகொண்டார். மதீனா, எகிப்து மற்றும் ஷாம் (டமாஸ்கஸ்) ஆகிய இடங்களில் வசித்தார்.

டமாஸ்கஸில் நீதிபதியாக (காழி) பணியாற்றினார். ஹிஜ்ரி 53 ஆம் ஆண்டு டமாஸ்கஸில் காலமானார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்), உமர் பின் கத்தாப் (ரலி), அபூ தர்ரா

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): தமாமா பின் ஷஃபீ, ஹன்ஷ் பின் அப்துல்லாஹ், அப்துர்ரஹ்மான் பின் முஹைரிஸ், அப்துல்லாஹ் பின் ஆமிர், சல்மான் பின் ஸுமைர், அலீ பின் ரபாஹ் பின் கஸாயிர், அம்ர் பின் மாலிக் அல்ஜன்பீ அல்ஹம்தானீ, மைஸரா மவ்லாஹ், முஹம்மத் பின் கஅப் பின் ஸுலைம் அல்குரழீ, அபூ யஸீத் அல்கவ்லானீ அல்மிஸ்ரீ

வேறு பெயர்கள்: ஃபளாலா பின் உபைத் பின் நாகித்


ஆதாரம்: muslimscholars.info (1935) · Should verify


حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا حَيْوَةُ، أَخْبَرَنِي أَبُو هَانِئٍ حُمَيْدُ بْنُ هَانِئٍ، أَنَّ أَبَا عَلِيٍّ عَمْرَو بْنَ مَالِكٍ، حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ، صَاحِبَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ:

سَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَدْعُو فِي صَلَاتِهِ لَمْ يُمَجِّدِ اللَّهَ تَعَالَى، وَلَمْ يُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَجِلَ هَذَا»، ثُمَّ دَعَاهُ فَقَالَ لَهُ: – أَوْ لِغَيْرِهِ – «إِذَا صَلَّى أَحَدُكُمْ، فَلْيَبْدَأْ بِتَمْجِيدِ رَبِّهِ جَلَّ وَعَزَّ، وَالثَّنَاءِ عَلَيْهِ، ثُمَّ يُصَلِّي عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يَدْعُو بَعْدُ بِمَا شَاءَ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-1266.
Abu-Dawood-Shamila-1481.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-1268.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹுமைத் பின் ஹானீ அவர்களைப் பற்றி சிலர் பலமானவர் என்றும் சிலர் சுமாரானவர் என்றும் கூறியுள்ளனர். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1 / 276 )

மேலும் பார்க்க: நஸாயீ-1284 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.