தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-1284

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

தொழுகையில் அல்லாஹ்வை (புகழ்ந்து) கண்ணியப்படுத்துவதும், நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்வதும்.

ஒரு மனிதர் தனது தொழுகையில் அல்லாஹ்வை (புகழ்ந்து) கண்ணியப்படுத்தாமலும், நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்லாமலும் பிரார்த்தனை செய்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்று, தொழுகையாளியே! நீ அவசரப்பட்டு விட்டாய் என்று கூறி அம்மனிதருக்கு அல்லாஹ்வை புகழ்வது பற்றியும், நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்வது பற்றியும் கற்றுக் கொடுத்தார்கள்.

பின்பு அந்த மனிதர் தொழுகையில் அல்லாஹ்வை புகழ்ந்து, நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொன்னபோது, (இப்போது) பிரார்த்தனை செய்! பதிலளிக்கப்படும். கேள்! கொடுக்கப்படும்” என்று அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஃபளாலா பின் உபைத் (ரலி)

(நஸாயி: 1284)

بَابُ التَّمْجِيدِ وَالصَّلَاةِ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلَاةِ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ أَبِي هَانِئٍ، أَنَّ أَبَا عَلِيٍّ الْجَنْبِيَّ حَدَّثَهُ، أَنَّهُ سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ، يَقُولُ:

سَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَدْعُو فِي صَلَاتِهِ لَمْ يُمَجِّدِ اللَّهَ، وَلَمْ يُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَجِلْتَ أَيُّهَا الْمُصَلِّي»، ثُمَّ عَلَّمَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَسَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يُصَلِّي، فَمَجَّدَ اللَّهَ وَحَمِدَهُ، وَصَلَّى عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ادْعُ تُجَبْ، وَسَلْ تُعْطَ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-1284.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-1268.




ஸலவாத் கூறிவிட்டுத் தான் துஆ கேட்கவேண்டுமா?

  • இந்த ஹதீஸின் வாசகங்களைக் கவனித்தால் தொழுகையில் அத்தஹிய்யாத்தில் கேட்கப்படும் பிரார்த்தனைக்கு மட்டுமே இந்த ஒழுங்கு முறையைக் கடைபிடிக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதை அறியலாம்.

1 . நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்கு வெளியில் எத்தனையோ பிரார்த்தனைகளைச் செய்துள்ளார்கள். நமக்கும் பல பிரார்த்தனைகளைக் கற்றுக் கொடுத்துள்ளார்கள். உதாரணமாக கழிவறைக்குள் நுழையும் முன்பு இறைவா ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்குகளிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் என்றும், கழிவறையிலிருந்து வெளியேறும் போது இறைவா உன் மன்னிப்பை வேண்டுகிறேன் என்றும் கூறியுள்ளார்கள்.

மேற்கண்ட பிரார்த்தனையை அல்லாஹ்வைப் போற்றி, நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துக் கூறிய பிறகு தான் சொல்ல வேண்டும் என்று மார்க்கம் கூறவில்லை.

2 . மேலும் நபி (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் நேரடியாகவே அல்லாஹ்விடம் கோரிக்கை வைத்துள்ளார்கள். இதற்கும் ஹதீஸ்களில் எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. எனவே அல்லாஹ்வைப் புகழ்ந்து நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்லிய பிறகு தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று மார்க்கம் நிபந்தனையிடவில்லை.

3 . ஒவ்வொரு துஆவின் போதும் ஒருவர் அல்லாஹ்வைப் புகழ்ந்து பின்னர் ஸலவாத்து ஓதி அதன் பின்னர் கோரிக்கையைக் கேட்டால் அது தடுக்கப்பட்டதல்ல. ஆனால் துஆவுக்கான நிபந்தனைகளில் ஒன்றாக அதை மார்க்கம் கூறவில்லை.

இந்தக் கருத்தில் ஃபளாலா பின் உபைத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க : அஹ்மத்-23937 , அபூதாவூத்-1481 , திர்மிதீ-3476 , 3477 , நஸாயீ-1284 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.