தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-5078

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி ✔

5078. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் காலையில், “அல்லாஹும்ம இன்னீ அஸ்பஹ்து, உஷ்ஹிதுக, வ உஷ்ஹிது ஹமலத அர்ஷிக்க, வ மலாஇகதிக, வ ஜமீஅ கல்கிக, அன்னக அன்தல்லாஹு, லா இலாஹ இல்லா அன்த, வஹ்தக, லா ஷரீக லக, வ அன்ன முஹம்மதன் அப்துக வ ரசூலுக்”

(பொருள்: ‘இறைவா! நான் காலைப் பொழுதை அடைந்துள்ளேன். உன்னையும், உனது அர்ஷைச் சுமப்பவர்களையும், உனது மலக்குகளையும், உனது படைப்புகள் அனைவரையும் சாட்சியாக்குகிறேன்; நிச்சயமாக நீயே அல்லாஹ், உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவருமில்லை, நீ தனித்தவன், உனக்கு நிகரானவர் யாருமில்லை; மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் உனது அடியாரும் தூதரும் ஆவார்கள்’)

என்று ஒருவர் கூறினால் அவர் அந்த நாளில் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். அவர் மாலை நேரத்தில் இதைக் கூறினால், அந்த இரவில் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.

அறிவிப்பவர்: (ரலி)

 

அனஸ் பின் மாலிக் (ரலி)

நபித்தோழர்.


حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ مُسْلِمٍ يَعْنِي ابْنَ زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

مَنْ قَالَ حِينَ يُصْبِحُ: اللَّهُمَّ إِنِّي أَصْبَحْتُ أُشْهِدُكَ، وَأُشْهِدُ حَمَلَةَ عَرْشِكَ، وَمَلَائِكَتَكَ وَجَمِيعَ خَلْقِكَ، أَنَّكَ أَنْتَ اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ، إِلَّا غُفِرَ لَهُ مَا أَصَابَ فِي يَوْمِهِ ذَلِكَ مِنْ ذَنْبٍ، وَإِنْ قَالَهَا حِينَ يُمْسِي غُفِرَ لَهُ مَا أَصَابَ تِلْكَ اللَّيْلَةَ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-5078.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.



1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்-ஸுலைமான் பின் அஷ்அஸ்
(3. பலமானவர்)
.

2 . அம்ர் பின் உஸ்மான்-அல்குரஷீ (3. பலமானவர்).

3 . பகிய்யது பின் வலீத் (5. சிறிது நடுத்தரமானவர்).

4 . முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் ஸியாத்
(4. நடுத்தரமானவர்)
.

5 . அனஸ் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 93
வயது: 103
நபித்தோழர், சுமார் 2286 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி)-அபூஹம்ஸா
(1. நபித்தோழர்)
.


 

 


ஆய்வின் சுருக்கம்:

இந்தக் கருத்தில் வரும் அறிவிப்பாளர்தொடர்களில் விமர்சனம் உள்ளது.

1 . பகிய்யது பின் வலீத் வழியாக வரும் செய்தியை சில அறிஞர்கள் ஹஸன் தரம் என்று கூறியுள்ளனர். காரணம் இவர் தத்லீஸ் செய்பவர் தான் என்றாலும் இதன் சில அறிவிப்பாளர்தொடர்களில் தனது ஆசிரியரான முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் ஸியாத் அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக கூறியுள்ளார்.

2 . ஆனால் வேறு சில அறிஞர்கள் இதில் பகிய்யது பின் வலீத் தனது ஆசிரியரிடம் நேரடியாக கேட்டதாக குறிப்பிட்டிருப்பது அறிவிப்பாளரின் தவறாகவோ அல்லது பிரதிகளின் தவறாகவோ இருக்கலாம் என்றும், முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
பின் ஸியாத் அறியப்படாதவர் என்று கூறியும் இதை பலவீனமான செய்தி என்று கூறியுள்ளனர்.


[نتائج الأفكار في تخريج أحاديث الأذكار 2/ 377:]
… وبقية صدوق، أخرج له مسلم، وإنما عابوا عليه التدليس والتسوية، وقد صرح بتحديث شيخه له وبسماع شيخه فانتفت الريبة، وشيخه روى عنه أيضًا إسماعيل بن عياش وغيره، وقد توقف فيه ابن القطان فقال: لا تعرف حاله، ورد بأنه وصف بأنه كان على خيل عمر بن عبد العزيز، فدل على أنه أمير، وذكره ابن حبان في الثقات.

…


1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • பகிய்யது பின் வலீத் —> முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    பின் ஸியாத் —> அனஸ் (ரலி) 

பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-1201, அபூதாவூத்-5078, திர்மிதீ-3501, குப்ரா நஸாயீ-9753, 9754, அல்முஃஜமுல் அவ்ஸத்-7205, …


  • மக்ஹூல் —> அனஸ் (ரலி) 

பார்க்க: அபூதாவூத்-5069, …


2 . ஸல்மான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-6062.


3 . அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


4 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க:


 

அபூதாவூத் இமாம்-ஸுலைமான் பின் அஷ்அஸ்

அபூதாவூத் இமாம்.


இமாம் அபூதாவூத்

முழுப்பெயர்: சுலைமான் இப்னு அஷ்அஸ் இப்னு இஸ்ஹாக் இப்னு பஷீர் இப்னு ஷதாதல் அஸ்தீல் ஸஜிஸ்தானீ (இதில் சில மாற்றங்களுடனும் பெயர் கூறப்படுகிறது) (சுனன் அபூதாவூத் என்ற ஹதீஸ் நூலைத் தொகுத்தவர்)

புனைப்பெயர்: அபூதாவூத் அல்ஹாஃபிழ்

இயற்பெயர்: சுலைமான்

தந்தை பெயர்: அஷ்அஸ்

பிறந்த ஊர்: சஜிஸ்தான் என்ற ஊரில் பிறந்தார்.

பிறப்பு: ஹிஜ்ரி 202ல் ஷஃபான் மாதம்

கல்விக்காகப் பயணம் செய்த ஊர்கள்: ஈரானில் உள்ள குராஸான், இராக்கின் கூஃபா போன்ற ஊர்களுக்கும் இன்னும் ஷாம், எகிப்து, ஸஜீரா, ஹிஜாஸ், திமிஷ்க், பல்ஹ் இன்னும் இது போன்ற உலகின் பல பாகங்களுக்குப் பயணம் சென்றுள்ளார்.

சுனன் அபூதாவூத்,

அல்மராஸீல்,

அஸ்ஸுஹ்த் போன்ற பல நூல்களை எழுதியிருக்கிறார்.

கஃனபீ, அஹ்மத், யஹ்யா இப்னுல்மதீனீ, சயீத் இப்னு சுலைமானுல் வாஸிதிய்யி, சுலைமான் இப்னு ஹர்ப், சுலைமான் இப்னு அப்துர்ரஹ்மானுத் திமிஷ்கீய்யி, யூசுப் இப்னு மூஸா அல்கதான், நஸாயீ போன்ற பல அறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாக உள்ளனர்.

திர்மிதி, அஹ்மத் இப்னு முஹம்மது இப்னு தாவூத் இப்னு சுலைம், ஹர்ப் இப்னு இஸ்மாயில் அல்கர்மானீ, ஜகரிய்யா இப்னு யஹ்யா அஸ்ஸாஜி, அப்துர்ரஹ்மான் இப்னு கல்லாது அர்ராமஹுர்முஸி போன்ற பல அறிஞர்கள் இவருக்கு மாணவர்களாக உள்ளனர்.

இறப்பு: ஹிஜ்ரி 275ல் ஷவ்வால் மாதம் 17ல்இறந்தார். அப்போது அவருக்கு 73 வயதாகும். (தகவல்: பயான் சைட்)

அம்ர் பின் உஸ்மான்-அல்குரஷீ

இந்த அறிவிப்பாளர் பற்றிய விபரம் இன்னும் இந்தத் தளத்தில் இல்லை.

பகிய்யது பின் வலீத்

بقية بن الوليد بن صائد بن كعب بن حريز

ஹி-110 - 197 சுமார் 87 வயது.

தரம்: ஸதூக்-நடுத்தரமானவர். தத்லீஸ் செய்பவர்.


இயற்பெயர்: பகிய்யது

தந்தை பெயர்: வலீத்

குறிப்புப் பெயர்: அபூயஹ்மத்

ஊர் பெயர்: பஃக்தாத், ஹிம்ஸ்

பிறப்பு: ஹிஜ்ரீ-110

இறப்பு: ஹிஜ்ரீ-197

கால கட்டம்: 8.


சுருக்கம்...

பகிய்யது பின் வலீத் பற்றி தத்லீஸ் செய்பவர் என்றும், பலவீனமானவர்கள், கைவிடப்பட்டவர்களை மறைத்து அறிவிப்பவர் என்றும், தன் ஊர்வாசிகள் அல்லாதவர்களிடமிருந்து அறிவிப்பதில் தவறு உள்ளது என்றும், தவறிழைப்பவர் என்றும் நான்கு வகையான விமர்சனம் உள்ளது. எனவே சில நிபந்தனைகளின் படி இருந்தால் மட்டுமே இவரின் செய்திகள் ஏற்கப்படும் என அப்துல்லாஹ் ஸஃத் என்ற ஹதீஸ்கலை அறிஞர் கூறியுள்ளார்.

1 . இவரின் ஆசிரியர் பலமானவராக இருக்க வேண்டும்.

2 . இவரின் ஆசிரியர் இவர் ஊரைச் சேர்ந்த ஷாம் வாசியாக இருக்க வேண்டும். (உதாரணமாக-பஹீர் பின் ஸஃத், முஹம்மது பின் ஸியாத் போன்றவர்கள்)

3 . தன் ஆசிரியரிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவித்திருக்க வேண்டும்.

4 . இவரின் ஆசிரியருக்கும், அவரின் ஆசிரியருக்கும் இடையில் நேரடியாக கேட்டதாக வார்த்தை அமைப்பு இருக்க வேண்டும்.

(இவர் தத்லீஸ் தஸ்வியத் செய்பவர் அல்ல என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதை செய்தவர்கள் இவரின் சில மாணவர்கள் என்று அபூஹாதிம் அவர்கள் கூறியுள்ளார். (அல்இக்மால்-3/6) எனவே இந்த நிபந்தனை தேவையில்லை)

5 . இவரிடமிருந்து அறிவிப்பவர்கள் ஷாம் வாசியாக இருக்க கூடாது. குறிப்பாக ஹிம்ஸ் பகுதியை சேரந்தவராக இருக்கக் கூடாது. அவர் பலமானவராக இருந்தால் போதும். (இந்த நிபந்தனை தேவையில்லை)

மேற்கண்ட ஐந்து நிபந்தனைகளில் ஒன்று குறைந்தாலும் சிலர் பலவீனம் என்றும், சிலர் இவரின் ஆசிரியர், இவரின் ஆசிரியரின் ஆசிரியர்களுக்கிடையில் நேரடியாக கேட்டதாக வார்த்தை அமைப்பு இருந்தால் போதும் என்றும் கூறியுள்ளனர்.

வேறு சிலர் முதலில் கூறப்பட்ட 3 நிபந்தனை இருந்தால் போதும் என்று கூறியுள்ளனர்.


இவர் தத்லீஸ் தஸ்வியத் செய்பவர் என்பதால் இவரின் செய்தியின் அனைத்து தலைமுறையிலும் (அதாவது இவரின் ஆசிரியர் முதல் இறுதிவரை) ஸிமாஃ-நேரடியாக கேட்டதாக வார்த்தை அமைப்பு இருக்க வேண்டும் என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர்...

இவர் தத்லீஸ் தஸ்வியத் செய்பவர் என்ற விமர்சனம் சரியானதல்ல என்று சிலர் கூறி இவர் தன் ஆசிரியரின் பெயரை தெளிவாக குறிப்பிட்டு, அவர் பலமானவராக இருந்து, அவரிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவித்தாலே போதும் என்று வேறு சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.


பகிய்யது பின் வலீத், பஹீர் பின் ஸஃத் வழியாக அறிவிக்கும் அறிவிப்பை ஷுஅபா அவர்கள் ஏற்றுள்ளார்.

الكامل في ضعفاء الرجال (2/ 264)

حَدَّثَنَا الفضل بن عَبد اللَّه بْنِ سُلَيْمَانَ، حَدَّثَنا سُلَيْمَانُ بْنُ عَبد الحميد، حَدَّثَنا حيوة، قَالَ: سَمِعْتُ بَقِيَّة يَقُولُ لما قرأت عَلَى شُعْبَة كتاب بحير بْن سعد، قَال: قَال لي يا أبا يحمد لو لم أسمع هَذَا منك لطرت.

பகிய்யா அவர்கள், ஷுஅபா அவர்களிடம் பஹீர் பின் ஸஃத் அவர்களின் ஹதீஸ் நூலை வாசித்துக் காட்டியபோது, இதை நான் கேட்டிராவிட்டால் உன்னை விரட்டியிருப்பேன் அபூயஹ்மதே! என்று ஷுஅபா அவர்கள் கூறினார். (இதை பகிய்யாவே அறிவிக்கிறார்)

(நூல்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-2/264)


யஹ்யா பின் ஸயீத்

அவ்ஸாஈ

முஹம்மத் பின் வலீத் அஸ்ஸுபைதீ

இப்னு ஜுரைஜ்

மாலிக் இமாம்...


ஷுஅபா

ஹம்மாத் பின் ஸைத்

இப்னுல் முபாரக்

இஸ்ஹாக் பின் ராஹவைஹி

இப்னு உயைனா

வகீஃ பின் ஜர்ராஹ்....


இப்னு ஸஃத், அஹ்மத், இப்னு மயீன், அபூஹாதிம், அபூஸுர்ஆ, யஃகூப் பின் ஷைப், இஜ்லீ, நஸாயீ போன்ற அதிகமான அறிஞர்கள் இவர் பலமானவர்களிடமிருந்து அறிவித்தால் ஏற்கலாம். பலவீனமானவர்களிடமிருந்து அறிவித்தால் ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளனர்.

காரணம் இவர் தத்லீஸ் செய்பவர். தத்லீஸ் செய்யாத செய்திகளையும், குறிப்பிட்ட சிலரின் வழியாக வரும் செய்திகளையும் ஏற்கலாம் என்று....


தத்லீஸு ஷுயூகு பகிய்யது பின் வலீத்..

1 . தத்லீஸு ஷுயூகு விளக்கம்

2 . மஜ்ஹூல் விளக்கம்

3 . பகிய்யது பின் வலீத் பற்றிய குறிப்பு


தத்லீஸு ஷுயூகு

فَأَمَّا ‌التَّدْلِيسُ ‌لِلشُّيُوخِ فَمِثْلُ أَنْ يُغَيِّرَ اسْمَ شَيْخِهِ لِعِلْمِهِ بِأَنَّ النَّاسَ يَرْغَبُونَ عَنِ الرِّوَايَةِ عَنْهُ ، أَوْ يُكَنِّيَهُ بِغَيْرِ كُنْيَتِهِ ، أَوْ يَنْسُبَهُ إِلَى غَيْرِ نِسْبَتِهِ الْمَعْرُوفَةِ مِنْ أَمْرِهِ.

وَأَمَّا الضَّرْبُ الثَّانِي مِنَ التَّدْلِيسِ فَهُوَ أَنْ يَرْوِيَ الْمُحَدِّثُ عَنْ شَيْخٍ سَمِعَ مِنْهُ حَدِيثًا يُغَيِّرُ فِيهِ اسْمَهُ أَوْ كُنْيَتَهُ أَوْ نَسَبَهُ أَوْ حَالَهُ الْمَشْهُورَ مِنْ أَمْرِهِ لِئَلَّا يُعْرَفَ وَالْعِلَّةُ فِي فِعْلِهِ ذَلِكَ كَوْنُ شَيْخِهِ غَيْرَ ثِقَةٍ فِي اعْتِقَادِهِ أَوْ فِي أَمَانَتِهِ أَوْ يَكُونَ مُتَأَخِّرَ الْوَفَاةِ قَدْ شَارَكَ الرَّاوِيَ عَنْهُ جَمَاعَةٌ دُونَهُ فِي السَّمَاعِ مِنْهُ أَوْ يَكُونَ أَصْغَرَ مِنَ الرَّاوِي عَنْهُ سِنًّا أَوْ تَكُونَ أَحَادِيثُهُ الَّتِي عِنْدَهُ عَنْهُ كَثِيرَةً فَلَا يُحِبُّ تَكْرَارَ الرِّوَايَةِ عَنْهُ فَيُغَيِّرُ حَالَهُ لِبَعْضِ هَذِهِ الْأُمُورِ

தத்லீஸ் ஷுயூக் என்றால் தனது ஆசிரியரின் செய்திகளை மற்றவர்கள் ஏற்கமாட்டார்கள் என்பதால் அவரின் பெயரை வெளிப்படையில் தெரியாதவாறு வேறுபெயரை கூறுவது. (அதாவது ஆசிரியரின் பிரபலமில்லாத பெயரை அல்லது பிரபலமில்லாத புனைப் பெயரைக் கூறுவது)


இப்னு ஹிப்பான், ஹாகிம், இராகீ...

وَالْجِنْسُ الرَّابِعُ مِنَ الْمُدَلِّسِينَ قَوْمٌ دَلَّسُوا أَحَادِيثَ رَوَوْهَا عَنِ الْمَجْرُوحِينَ فَغَيَّرُوا أَسَامِيَهُمْ وَكُنَاهُمْ، كَيْ لَا يُعْرَفُوا


இந்த வரைவிலக்கணத்தை இப்னுஸ் ஸலாஹ் அவர்கள் சிறிது மாற்றி மற்றவர்கள் அறிய முடியாத வர்ணனைகளைக் கூறி அறிவிப்பது என்று கூறியுள்ளார்.

الْقِسْمُ الثَّانِي: تَدْلِيسُ الشُّيُوخِ، وَهُوَ: أَنْ يَرْوِيَ ‌عَنْ ‌شَيْخٍ ‌حَدِيثًا ‌سَمِعَهُ مِنْهُ، فَيُسَمِّيَهُ أَوْ يُكَنِّيَهُ، أَوْ يَنْسُبَهُ، أَوْ يَصِفَهُ بِمَا لَا يُعْرَفُ بِهِ، كَيْ لَا يُعْرَفَ.

மற்றவர்கள் அறியாத வகையில் ஆசிரியரின் தன்மையைக் குறிப்பிடுவது என்ற நிபந்தனை தேவையில்லை என்று இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் சில தன்மைகள் மூலம் சில ஆசிரியர்கள் அறியப்படுவார்கள் என்ற நிலை உள்ளது.


தத்லீஸ் ஷுயூக் செய்பவரால் தத்லீஸ் செய்பவரின் ஆசிரியர் அறியப்படாதவர் என்ற நிலைக்கு சென்றுவிடுவார். காரணம் தத்லீஸ் செய்யும் ஒருவர் மட்டுமே அவரிடமிருந்து அறிவிக்கிறார் என்பதால் இவர் மஜ்ஹூல் ஐன் என்ற நிலையை அடைந்து விடுகிறார்.

தத்லீஸ் செய்தவரின் ஆசிரியர் (சில அடையாளங்களைக் கொண்டு) அடையாளம் காணப்பட்டால் அவர் அறியப்பட்டவர் ஆகிவிடுவார்.


1 . خُلَيْدِ بْنِ أَبِي خُلَيْدٍ - குலைத் பின் அபூகுலைத்

இவரை அறியப்படாதவர் என்பதால் இவர் இடம்பெறும் செய்தியை பலவீனமானது என்று சிலர் கூறியுள்ளனர்.

ஆனால் இவர் خُلَيْدُ بنُ دَعْلَجَ أَبُو حَلْبَسٍ السَّدُوْسِيُّ - குலைத் பின் தஃலஜ் என்ற பலவீனமானவர் ஆவார் என்ற கருத்தில் மிஸ்ஸீ இமாம், தஹபீ இமாம் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். பகிய்யது பின் வலீத் இவரின் பெயரை குலைத் பின் அபூகுலைத் என்று குறிப்பிட்டுள்ளார்.


2 . سَعِيد بْن أبي سَعِيد الزُّبيدي - ஸயீத் பின் அபூஸயீத் அஸ்ஸுபைதீ.

இவரை சிலர் அறியப்படாதவர் என்றும்; வேறுசிலர் பலவீனமானவர் என்றும்; வேறு சிலர் பலமானவர் என்றும் கூறியுள்ளனர்.

இவரை அபூஹாதிம், அபூஸுர்ஆ ஆகியோர் سعيد بن عبد الجبار الزبيدي الحمصي - ஸயீத் பின் அப்துல்ஜப்பார் என்பவர் ஆவார் என்று முடிவு செய்து இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

இப்னு அதீ, பைஹகீ, தஹபீ, இப்னுல் ஜவ்ஸீ ஆகியோரும் இவ்வாறே முடிவு செய்துள்ளனர். (அஸ்ஸுபைதீ என்ற பெயருடைய முஹம்மத் பின் வலீத் என்ற பலமானவர் உள்ளார். ஸயீத் பின் அப்துல்ஜப்பாரை சில அறிவிப்புகளில் அஸ்ஸுபைதீ என்று கூறப்பட்டுள்ளது. சிலர் இவர் முஹம்மத் பின் வலீத் என்ற அடிப்படையில் முடிவு செய்திருப்பதை இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் தவறு என்று குறிப்பிட்டுள்ளார்).


3 . அப்துல்லாஹ் பின் உமர் (அல்உமரீ)

இவர் பற்றி இப்னு அதீ, தாரகுத்னீ ஆகியோர் பகிய்யது பின் வலீத் இவரிடமிருந்து அறிவித்துள்ளார். இவர் அறியப்படாதவர் என்று கூறியுள்ளனர்.

அபூஹாதிம் அவர்கள் இவர் யார் என்று தெளிவுப்படுத்தியுள்ளார்.

1242 - وسألتُ أَبِي عَنْ حديثٍ رواه بَقِيَّة ، عن عبد الله بْنِ عُمَرَ العُمَري ، عَنْ أَبِي الزِّنَاد، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ؛ قَالَ: قَالَ رسولُ الله (ص) : ‌لَا ‌نِكَاحَ ‌إِلاَّ بِإذْن ِ ‌الرَّجُلِ وَالمَرْأَةِ؟

فَقَالَ أَبِي: هَذَا حديثٌ مُنكَرٌ.


4 . உமர் பின் அபூஉமர்

5 . அபுல்ஹஜ்ஜாஜ் அல்மஹ்ரீ

6 . அபுல்ஃபள்ல்-பஹ்ர் பின் கனீஸ்

7 . அபூபக்ர் அல்அன்ஸீ

முஸ்லிம் பின் ஸியாத்

مسلم بن زياد الشامي

[التاريخ الكبير للبخاري 7/ 261 ت المعلمي اليماني:]

1101 - مُسْلِم بْن زياد مَوْلَى أُمَّ حَبِيبَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم، الْقُرَشِيّ

صاحب خيل عُمَر بْن عَبْد العزيز يعد فِي الشاميين،

قَالَ (لنا - 4) إِسْحَاق نا بقية قَالَ نا مُسْلِم بْن زياد قَالَ رأيت على أنس خفين أَبْيَضَيْن،

فقلت لبقية إن ابْن المبارك روى عَنْك عَنْ مُحَمَّد بْن زياد فجعل يعجب وقَالَ إنما هو مُسْلِم بْن زياد.


[نتائج الأفكار في تخريج أحاديث الأذكار 2/ 377:]

... وبقية صدوق، أخرج له مسلم، وإنما عابوا عليه التدليس والتسوية، وقد صرح بتحديث شيخه له وبسماع شيخه فانتفت الريبة، وشيخه روى عنه أيضًا إسماعيل بن عياش وغيره، وقد توقف فيه ابن القطان فقال: لا تعرف حاله، ورد بأنه وصف بأنه كان على خيل عمر بن عبد العزيز، فدل على أنه أمير، وذكره ابن حبان في الثقات.


[تقريب تقريب التهذيب 3/ 215:]

* [6626] مسلم بن زياد الحمصي مقبول من الرابعة بخ د ت س

قلت: حسن الحديث: ذكره البخاري في التاريخ الكبير (7/ 261) وابن حبان في الثقات وروى عنه ابن لهيعة وإسماعيل بن عياش وبقية بن الوليد (تهذيب التهذيب 10/ 130). وأخرج له أيضاً البيهقي في شعب الإيمان (8/ 296) ولم يتعقبه. وقال ابن حجر "توقف فيه ابن القطان فقال فيه "لا يعرف"، ورد بأنه وصف بأنه كان على خيل عمر ابن عبد العزيز فدل على أنه أمير وذكره ابن حبان في "الثقات" (نتائج الأفكار 2/ 377).

அனஸ் பின் மாலிக் (ரலி)-அபூஹம்ஸா

நபித்தோழர்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.