அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், அல்லாஹும்ம இன்னீ உஷ்ஹிதுக, வ உஷ்ஹிது மலாஇகதக, வ ஹமலத அர்ஷிக, வ உஷ்ஹிது மன் ஃபிஸ்ஸமாவாதி வமன் ஃபில்அர்ளி, அன்னக அன்தல்லாஹு லாயிலாஹ இல்லா அன்த, வஹ்தக, லா ஷரீக லக, வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துக வரஸூலுக
(பொருள்: அல்லாஹ்வே! நீயே அல்லாஹ். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை. நீ தனித்தவன். உனக்கு இணையாக எவருமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் உன்னுடைய அடியாரும், தூதரும் ஆவார் என்று நான் உறுதி கூறுகிறேன். இதற்கு உன்னையும், உன்னுடைய வானவர்களையும், உன் அர்ஷை சுமக்கும் வானவர்களையும், வானங்கள் மற்றும் பூமியில் இருப்போரையும் சாட்சியாக ஆக்குகின்றேன்.)
என்று ஒரு தடவை ஒருவர் கூறினால் அவர் உடலின் மூன்றில் ஒரு பகுதியை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்கிறான். அவர் இரண்டு தடவை கூறினால் மூன்றில் இருபகுதியை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்கிறான். அவர் மூன்று தடவை கூறினால் அவரின் முழு உடலையும் நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்கிறான்.
அறிவிப்பவர்: ஸல்மான் அல்ஃபாரிஸீ (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 6062)حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى السَّاجِيُّ، ثنا أَحْمَدُ بْنُ يَحْيَى الصُّوفِيُّ، ثنا زَيْدُ بْنُ الْحُبَابِ، حَدَّثَنِي حُمَيْدٌ، مَوْلَى آلِ عَلْقَمَةَ الْمَكِّيِّ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ سَلْمَانَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
مَنْ قَالَ: اللهُمَّ إِنِّي أُشْهِدُكَ، وَأُشْهِدُ مَلَائِكَتَكَ، وَحَمَلَةَ عَرْشِكَ، وَأُشْهِدُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنَّكَ أَنْتَ اللهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ، مَنْ قَالَهَا مَرَّةً أَعْتَقَ اللهُ ثُلُثَهُ مِنَ النَّارِ، وَمَنْ قَالَهَا مَرَّتَيْنِ أَعْتَقَ اللهُ ثُلُثَيْهِ مِنَ النَّارِ، وَمَنْ قَالَهَا ثَلَاثًا أَعْتَقَ كُلَّهُ مِنَ النَّارِ
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-6062.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-5933.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-14194-அல்கமா குடும்பத்தாரின் அடிமையான ஹுமைத் என்பவர் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்….
2 . இந்தக் கருத்தில் ஸல்மான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அல்கமா குடும்பத்தாரின் அடிமையான ஹுமைத் —> அதாஉ பின் அபூரபாஹ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) —> ஸல்மான் (ரலி)
பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-2531, அல்முஃஜமுல் கபீர்-6062, ஹாகிம்-1920, …
மேலும் பார்க்க: அபூதாவூத்-5069.
சமீப விமர்சனங்கள்